கிஃப்ட் கார்டு தயாரிப்புகளைச் சேர்த்தல் அல்லது புதுப்பித்தல்

உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் பலவிதமான மதிப்புகளில் கிஃப்ட் கார்டுகளை விற்க, கிஃப்ட் கார்டு தயாரிப்பு ஒன்றை நீங்கள் சேர்க்கலாம். நீங்கள் கிஃப்ட் கார்டு தயாரிப்பை உருவாக்கிய பிறகு, உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தயாரிப்புகள் பக்கத்திலிருந்து தற்போதைய கிஃப்ட் கார்டு தயாரிப்புகளின் விவரங்களை நிர்வகிக்கலாம். வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான பரிசளிப்பு விருப்பத்தைக் கிஃப்ட் கார்டு தயாரிப்புகள் வழங்குகின்றன. மேலும், பரிசைப் பெறுபவர்கள் கார்டுகளை மீட்டுக்கொள்ளும்போது உங்கள் ஸ்டோருக்குப் புதிய வாங்குபவர்கள் வருகிறார்கள்.

Shopify POS உடன் செயல்படும் பிசிக்கல் கிஃப்ட் கார்டுகள் உங்களுக்கு வேண்டுமென்றால், ஆதரவளிக்கப்படும் நாடுகளில் உள்ள Shopify Hardware Store இலிருந்து அவற்றை ஆர்டர் செய்யலாம்.

கிஃப்ட் கார்டு தயாரிப்புப் பணமதிப்புகள்

கிஃப்ட் கார்டு தயாரிப்பு மதிப்புகள் பணமதிப்புகள் என அழைக்கப்படுகின்றன. ஒரு கிஃப்ட் கார்டு தயாரிப்பின் பணமதிப்பை, பூஜ்யத்தைவிட அதிகமானது முதல் அதிகபட்சமாக $10,000 USD வரை அல்லது உங்கள் உள்ளூர் நாணயத்தில் அதற்கு நிகரான மதிப்பு வரை எந்தத் தொகையாகவும் அமைக்கலாம். இந்த வரம்பை அதிகரிக்க முடியாது.

கிஃப்ட் கார்டு பணமதிப்புகளைக் காலியான மதிப்பாக அமைக்க முடியாது, மேலும் வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோர்ஃபிரண்டிலிருந்து கிஃப்ட் கார்டுக்குத் தனிப்பயன் தொகையை உள்ளிட முடியாது. உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு இல்லாத ஒரு மதிப்புக்கு வாடிக்கையாளர் ஆன்லைனில் கிஃப்ட் கார்டை வாங்க விரும்பினால், அந்தத் தனிப்பயன் தொகைக்கு நீங்கள் வரைவு ஆர்டரை உருவாக்கலாம். வாடிக்கையாளர் இன்வாய்ஸைச் செலுத்திய பிறகு, அந்தத் தனிப்பயன் தொகையுடன் ஒரு கிஃப்ட் கார்டை உருவாக்கி அதை வாடிக்கையாளருக்கு அனுப்பலாம்.

நீங்கள் முதன்முதலில் கிஃப்ட் கார்டு தயாரிப்பை உருவாக்கும்போது, உங்கள் ஸ்டோர் நாணயத்தில் பல இயல்புநிலைப் பணமதிப்புகள் உருவாக்கப்படும். அந்த இயல்புநிலைப் பணமதிப்புத் தொகைகளுக்குப் பதிலாக வேறு ஏதேனும் செல்லுபடியாகும் தொகையை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். கிடைக்கும் பணமதிப்புகளின் எண்ணிக்கையை மாற்ற, கூடுதல் பணமதிப்பைச் சேர்க்க பணமதிப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது பணமதிப்பை நீக்க குப்பைத்தொட்டி ஐகானைக் கிளிக் செய்யவும். கிஃப்ட் கார்டு தயாரிப்பில் குறைந்தபட்சம் ஒரு பணமதிப்பாவது இருக்க வேண்டும்.

உள்ளூர் நாணயக் கிஃப்ட் கார்டுகளுக்கு, பணமதிப்புகள் உங்கள் ஸ்டோர் நாணயத்தில் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாணயத்தில் அமைக்கப்படும். உள்ளூர் நாணயக் கிஃப்ட் கார்டுகள் குறித்து மேலும் அறிக.

புதிய கிஃப்ட் கார்டு தயாரிப்பைச் சேர்த்தல்

கிஃப்ட் கார்டு தயாரிப்பை உருவாக்கிய பிறகு, அது உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தயாரிப்புகள் பிரிவில் சேர்க்கப்படும். கிஃப்ட் கார்டுகள் டிஜிட்டல் தயாரிப்புகள் ஆகும், மேலும் அவை கிஃப்ட் கார்டு அல்லாத தயாரிப்புகளுடனான தயாரிப்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > பரிசு கார்டுகள் என்பதற்குச் செல்லவும்.

  2. கிஃப்ட் கார்டு தயாரிப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பின்வரும் புலங்களில் கிஃப்ட் கார்டு தயாரிப்புத் தகவலை உள்ளிடவும்:

    • தலைப்பு: இந்தக் கிஃப்ட் கார்டு தயாரிப்புக்கான பெயரை உள்ளிடவும். எடுத்துக்காட்டாக: பிறந்தநாள் கிஃப்ட் கார்டு.
    • விளக்கம்: உங்கள் ஸ்டோரில் காட்டுவதற்கு இந்தக் கிஃப்ட் கார்டு தயாரிப்பு குறித்த விளக்கத்தை உள்ளிடவும்.
    • மீடியா: படம் போன்ற தயாரிப்பு மீடியாவைப் பதிவேற்றவும். தயாரிப்பு மீடியா உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தயாரிப்புப் பக்கத்தில் காட்டப்படும்.
    • நாணயம்: கிஃப்ட் கார்டுக்கான நாணயத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்களின் ஸ்டோர் நாணயம் இயல்புநிலையாக இருக்கும். வேறு நாணயத்தில் உள்ளூர் நாணயக் கிஃப்ட் கார்டை உருவாக்க, உங்கள் சந்தை மற்றும் கேட்டலாக் உள்ளமைவில் கிடைக்கும் நாணயங்களில் இருந்து தேர்ந்தெடுக்கவும். உள்ளூர் நாணயக் கிஃப்ட் கார்டுகள் குறித்து மேலும் அறிக.
    • குறுக்கு-நாணய மீட்பு: கிஃப்ட் கார்டு வழங்கப்பட்ட நாணயத்தைத் தவிர, வேறு நாணயத்தில் செக்அவுட்டின் போது வாடிக்கையாளர்கள் அதை மீட்டுக்கொள்ள முடியுமா என்பதைத் தேர்வுசெய்யவும். கிஃப்ட் கார்டு தயாரிப்பை உருவாக்கிய பிறகு, இந்த அமைப்பை உங்களால் மாற்ற முடியாது. குறுக்கு-நாணய மீட்பு மற்றும் பரிமாற்ற விகித அபாயம் குறித்து மேலும் அறிக.
    • தேடுபொறிப் பட்டியல் முன்னோட்டம்: தேடுபொறி முடிவுகளில் உங்கள் கிஃப்ட் கார்டு தயாரிப்பு எப்படிக் காட்டப்படும் என்பதற்கான முன்னோட்டம் இதுவாகும்.
    • விற்பனைச் சேனல்களும் செயலிகளும்: கிஃப்ட் கார்டை வெளியிடுவதற்கும் உங்கள் விற்பனைச் சேனல்கள் மூலம் அதை விற்பனை செய்வதற்கும் கிடைக்கும் தன்மை அமைப்புகளைப் பார்த்து மாற்றவும். ஒரு குறிப்பிட்ட வெளியீட்டுத் தேதியை அமைக்க, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குப் பக்கத்தில் உள்ள காலண்டர் ஐகானைக் கிளிக் செய்யலாம்.
    • நிறுவனம்: தயாரிப்பு வகை மற்றும் விற்பனையாளர் குறித்த விருப்பத் தகவலை நீங்கள் சேர்க்கலாம், கிஃப்ட் கார்டு தயாரிப்பைச் சேகரிப்புகளில் சேர்க்கலாம், மேலும் டேக்குகளைச் சேர்க்கலாம்.
  4. விருப்பத்திற்குரியது: கிஃப்ட் கார்டு பணமதிப்புகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மதிப்புகளில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யுங்கள்.

  5. முடித்ததும், புதிய கிஃப்ட் கார்டு தயாரிப்பை உருவாக்க, கிஃப்ட் கார்டு தயாரிப்பைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் உள்ளூர் நாணயக் கிஃப்ட் கார்டை உருவாக்கினால், அது இயல்புநிலையாக எந்தக் கேட்டலாக்குகளிலும் வெளியிடப்படாது. பொருந்துக்கூடிய நாணயத்தைக் கொண்ட அனைத்துக் கேட்டலாக்குகள் முழுவதும் நிலையான விலைகள் தானாகவே அமைக்கப்படும். கிஃப்ட் கார்டு வாடிக்கையாளர்களுக்குக் கிடைப்பதற்குப் பொருத்தமான கேட்டலாக்கில் அதை நீங்கள் வெளியிட வேண்டும்.

உங்கள் கிஃப்ட் கார்டு தயாரிப்பு சேமிக்கப்பட்ட பிறகு, கிஃப்ட் கார்டின் தயாரிப்பு விவரங்கள் பக்கத்திற்கு நீங்கள் திருப்பிவிடப்படுவீர்கள். கூடுதல் தயாரிப்பு விவரங்கள் எதையும் நீங்கள் சேர்க்கலாம் அல்லது கிஃப்ட் கார்டு தயாரிப்பில் மாற்றங்களைச் செய்யலாம்.

கிஃப்ட் கார்டு தயாரிப்புடன் உள்ள ஆர்டரை நீங்கள் நிறைவேற்றிய பிறகு, வாங்கப்பட்ட கிஃப்ட் கார்டின் மதிப்புடன் ஒரு கிஃப்ட் கார்டு உருவாக்கப்படும். இந்தக் கிஃப்ட் கார்டு உங்கள் Shopify நிர்வாகியின் பரிசு கார்டுகள் பிரிவில் பட்டியலிடப்படும். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள பரிசு கார்டுகள் பக்கத்தில் இருந்து, உருவாக்கப்பட்ட கிஃப்ட் கார்டுகளைப் பார்க்கலாம், ஒழுங்கமைக்கலாம் அல்லது திருத்தலாம்.

கிஃப்ட் கார்டு தயாரிப்பைப் புதுப்பித்தல்

ஏற்கனவே உள்ள கிஃப்ட் கார்டு தயாரிப்புகள் உங்கள் நிர்வாகியின் தயாரிப்புகள் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளன. பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, உங்கள் Shopify நிர்வாகியில் உங்கள் கிஃப்ட் கார்டு தயாரிப்புகளைக் கண்டறியலாம்:

கிஃப்ட் கார்டு தயாரிப்பின் எந்தவொரு விவரத்தையும் அதன் தயாரிப்பு விவரங்கள் பக்கத்தில் இருந்து நீங்கள் திருத்தலாம். தயாரிப்பு விவரங்களைத் திருத்துவது குறித்து மேலும் அறிக.

கிஃப்ட் கார்டு தயாரிப்பைத் திருத்துவது, காப்பகப்படுத்துவது அல்லது நீக்குவது என்பது ஏற்கனவே வழங்கப்பட்ட எந்தக் கிஃப்ட் கார்டுகளையும் பாதிக்காது. வாடிக்கையாளர்கள் தற்போதைய தம் வசமுள்ள கிஃப்ட் கார்டுகளைத் தொடர்ந்து மீட்டுக்கொள்ளலாம்.

தனிப்பட்ட கிஃப்ட் கார்டின் காலாவதித் தேதியைப் புதுப்பித்தல்

ஏற்கனவே காலாவதியான கிஃப்ட் கார்டுகள் உட்பட ஏற்கனவே உள்ள கிஃப்ட் கார்டின் காலாவதித் தேதியைப் புதுப்பிக்க விரும்பினால், கிஃப்ட் கார்டு தயாரிப்பிலேயே காலாவதித் தேதியை நேரடியாகப் புதுப்பிக்கலாம்.

அனைத்துக் கிஃப்ட் கார்டுகளுக்குமான இயல்புநிலைக் காலாவதி அமைப்புகளைப் புதுப்பிக்க நீங்கள் விரும்பினால், உங்கள் கிஃப்ட் கார்டு காலாவதி அமைப்புகளை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > பரிசு கார்டுகள் என்பதற்குச் செல்லவும்.
  2. நீங்கள் புதுப்பிக்க விரும்பும் கிஃப்ட் கார்டிற்கான கிஃப்ட் கார்டு பட்டியலைக் கிளிக் செய்யவும்.
  3. கிஃப்ட் கார்டு குறியீடு மற்றும் காலாவதித் தேதி உள்ள பிரிவில், பென்சில் ஐகானைக் கிளிக் செய்யவும்.
  4. கிஃப்ட் கார்டுகள் காலாவதியாகும் என்பதைத் தேர்ந்தெடுத்து, கிஃப்ட் கார்டுக்கான புதிய காலாவதி விவரங்களை அமைக்கவும்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

கிஃப்ட் கார்டு தயாரிப்பு மதிப்புகளைப் புதுப்பிக்கவும்

ஒவ்வொரு கிஃப்ட் கார்டு மதிப்பும் கிஃப்ட் கார்டு தயாரிப்பின் தனித்துவமான மாறுபாடாகச் சேமிக்கப்படும். புதிய மாறுபாட்டைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் உங்கள் கிஃப்ட் கார்டில் மதிப்புகளைச் சேர்க்கலாம். உங்களின் Shopify நிர்வாகியில் உள்ள தயாரிப்பு விவரங்கள் பக்கம் அல்லது மாறுபாடு விவரங்கள் பக்கத்திலிருந்து, ஒவ்வொரு மதிப்பிற்கும் SKU-கள், பார்கோடுகள் மற்றும் மாறுபாடுப் படங்கள் போன்ற கூடுதல் தயாரிப்பு மாறுபாடு விவரங்களை நீங்கள் சேர்க்கலாம் அல்லது திருத்தலாம்.

உள்ளூர் நாணயக் கிஃப்ட் கார்டுகளுக்கு, ஸ்டோர் நாணயக் கிஃப்ட் கார்டுகளைப் போலவே நீங்கள் மதிப்புகளைச் சேர்க்கலாம். தயாரிப்புப் பக்கத்தில் அடிப்படை விலையை அமைப்பதற்குப் பதிலாக, உங்கள் பட்டியலின் விலைப்பட்டியல்கள் மூலம் நிலையான விலைகளை அமைக்கலாம். உள்ளூர் நாணயக் கிஃப்ட் கார்டுக்கான மதிப்பு விலையைச் சேர்க்க அல்லது புதுப்பிக்க, உங்கள் பட்டியலில் உள்ள நிலையான விலைகளைப் புதுப்பிக்கவும்.

மாறுபாடுகளைச் சேர்ப்பது மற்றும் மாறுபாடுகளைத் திருத்துவது குறித்து மேலும் அறிக.

கிஃப்ட் கார்டு தயாரிப்பை ஒரு சேகரிப்பில் சேர்க்கவும்

கிஃப்ட் கார்டு தயாரிப்புகளை நீங்கள் ஒரு சேகரிப்பில் சேர்க்கலாம். தயாரிப்பு விவரங்கள் பக்கத்தில் இருந்தும், முன்பே உள்ள சேகரிப்பில் நீங்கள் ஒரு கிஃப்ட் கார்டு தயாரிப்பைச் சேர்க்கலாம்.