விற்பனையாளர் தகவல்களை நிர்வகித்தல்
நீங்கள் விற்கும் தயாரிப்புகளின் தொடக்கப் புள்ளி அல்லது மூல இடத்தை விற்பனையாளர்கள் குறிக்கின்றனர். உங்களின் எல்லாத் தயாரிப்புகளையும் நீங்களே உருவாக்கினால், நீங்கள் மட்டுமே விற்பனையாளராக இருப்பீர்கள். இருப்பினும், பல்வேறு மூல இடங்களிலிருந்து வரும் தயாரிப்புகளை நீங்கள் விற்றால், விற்பனையாளர் தகவல்களை நிர்வகிப்பதன் மூலம் உங்களின் செயல்பாடுகளை ஒழுங்கமைக்கவும், சரக்கு இருப்பு மூல இடங்களைத் தடமறியவும், உங்களின் ஒட்டுமொத்த விற்பனை உத்தியை மேம்படுத்தவும் முடியும்.
உங்களின் தயாரிப்புகளுடன் தொடர்புடைய விற்பனையாளர் நீங்களாகவோ அல்லது மற்றொரு வணிகராகவோ இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் தேனை விற்று உங்களின் சொந்தத் தேன் தயாரிப்புகளைக் கையால் தயாரித்தால், எல்லாப் பொருட்களுக்கும் நீங்களே விற்பனையாளராகச் செயல்படுவீர்கள். எனினும், நீங்கள் பல விவசாயப் பண்ணைகளிலிருந்து தேனை வாங்கினால், நீங்கள் தேன் வாங்கும் ஒவ்வொரு விவசாயப் பண்ணையும் உங்கள் சிஸ்டத்தில் ஒரு தனித்துவமான விற்பனையாளராக மாறும்.
தயாரிப்புகளை ஒழுங்கமைத்தல், வரிசைப்படுத்துதல், வடிகட்டுதல் மற்றும் விற்பனையாளர்களின் அடிப்படையில் அறிக்கைகளை உருவாக்குதல் போன்ற பணிகளை ஒழுங்கமைக்க, உங்களின் Shopify நிர்வாகிக்குள் உள்ள விற்பனையாளர் தகவல்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் தயாரிப்பு உருவாக்கத்தைத் தனிப்பட்ட முறையில் கையாண்டாலும் அல்லது பல்வேறு சப்ளையர்களுடன் இணைந்து செயல்பட்டாலும், விற்பனையாளர் விவரங்களை ஒழுங்கமைப்பது உங்களின் வணிகச் செயல்பாடுகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது.
இந்தப் பக்கத்தில்
விற்பனையாளர் தகவல்களை நிர்வகிப்பதன் பலன்கள்
Shopify-இல் உங்கள் தயாரிப்புத் தரவை முடிந்தவரை முழுமையாகவும் விரிவாகவும் வைத்திருப்பது மட்டுமின்றி, விற்பனையாளர் தகவலைச் சேர்ப்பது பின்வரும் பலன்களையும் வழங்கும்:
- சரக்கு இருப்பைத் தடமறிதல்: குறிப்பிட்ட தயாரிப்புகளுடன் விற்பனையாளர்களை இணைப்பதன் மூலம், ஒவ்வொரு உருப்படியையும் எந்த விற்பனையாளர் சப்ளை செய்கிறார் என்பதை உங்களால் தடமறிய முடியும். பிரபலமாக விற்பனையாகும் சரக்கு உருப்படிகளை மீண்டும் இருப்பு வைக்கவும் சப்ளையர் உறவுகளைச் சிறப்பாக நிர்வகிக்கவும் இந்தத் தகவல் மிகவும் அவசியமாகும்.
- செயல்திறன் மதிப்பீடு: தயாரிப்புகளுக்கு விற்பனையாளர்களை ஒதுக்குவது, விற்பனைப் போக்குகளைப் பகுப்பாய்வு செய்யவும் ஒவ்வொரு விற்பனையாளரின் செயல்திறனை மதிப்பீடு செய்யவும் உங்களை அனுமதிக்கிறது. தயாரிப்பு விற்பனையின் அடிப்படையில் கமிஷன்கள் அல்லது ஊக்கத்தொகைகள் குறித்துச் சரியான முடிவுகளை எடுக்க இந்தத் தரவு உங்களுக்கு உதவும்.
நிர்வாகியில் தயாரிப்பு விற்பனையாளர்களைப் பயன்படுத்துதல்
உங்கள் Shopify நிர்வாகியில், ஒவ்வொரு தயாரிப்பு விவரப் பக்கத்தின் தயாரிப்பு அமைப்பு (Product organization) பிரிவிலும் நீங்கள் விற்பனையாளர்களை உருவாக்கி அவர்களைத் தயாரிப்புகளுக்கு ஒதுக்கலாம். விற்பனையாளர் தகவல்களை நீங்கள் எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- விற்பனையாளர்களை ஒதுக்குதல்: ஒவ்வொரு தயாரிப்பையும் ஒரு விற்பனையாளருக்கு ஒதுக்க முடியும். ஒரு புதிய தயாரிப்புக்கு விற்பனையாளர் ஒதுக்கப்படாவிட்டால், விற்பனையாளர் புலம் இயல்புநிலையாக உங்கள் ஸ்டோர் பெயருக்கு மாறிவிடும்.
- வரிசைப்படுத்துதல் மற்றும் வடிகட்டுதல்: உங்களின் தயாரிப்புப் பட்டியலை வரிசைப்படுத்தவும் வடிகட்டவும், அதேபோல் விற்பனையாளர்களின் அடிப்படையில் பிரத்தியேக அறிக்கைகளை உருவாக்கவும் தயாரிப்பு விற்பனையாளர் மதிப்பை நீங்கள் பயன்படுத்தலாம்.
- வாடிக்கையாளர்களுக்கு விற்பனையாளர்களைக் காட்டுதல்: விற்பனையாளர் புலத்துடன் ஓர் இயங்குநிலை மூலமாக இணைக்கப்பட்டுள்ள உரை பிளாக்கைக் கொண்டு உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் விற்பனையாளர் புலத்தைக் காட்டலாம்.
விற்பனையாளர் அடிப்படையில் தயாரிப்புகளை வரிசைப்படுத்துங்கள்
உங்கள் Shopify நிர்வாகித் தயாரிப்புப் பட்டியலில் உள்ள தயாரிப்புகளை அகரவரிசையிலோ எதிர் அகரவரிசையிலோ ஒழுங்கமைக்க உதவ, விற்பனையாளர் வரிசைப்படுத்தல் விருப்பத்தைப் பயன்படுத்தித் தயாரிப்புப் பட்டியலை நீங்கள் வரிசைப்படுத்தலாம். இந்த வரிசைப்படுத்தும் அம்சம் உங்களின் ஆன்லைன் ஸ்டோரில் தயாரிப்புகளைக் காட்டும் வரிசையைப் பாதிக்காது. தயாரிப்புகளைத் தேடுவது மற்றும் உங்கள் தயாரிப்புப் பட்டியலை வடிகட்டுவது குறித்து மேலும் அறிக.
படிகள்:
உங்களின் Shopify நிர்வாகியில், தயாரிப்புகளுக்குச் செல்லவும்.
விற்பனையாளர் நெடுவரிசைத் தலைப்பைக் கிளிக் செய்யவும்.
விற்பனையாளர் அடிப்படையில் தயாரிப்புகளை வடிகட்டுங்கள்
இயல்புநிலையாக, உங்களின் எல்லாத் தயாரிப்புகளும் தயாரிப்புகள் பட்டியலில் காட்டப்படும். உங்கள் தயாரிப்புப் பட்டியலில் உள்ள குறிப்பிட்ட விற்பனையாளருடன் தொடர்புடைய தயாரிப்புகளை மட்டும் காட்ட, தயாரிப்பு விற்பனையாளர் வடிப்பானை நீங்கள் பயன்படுத்தலாம். தயாரிப்புகளைத் தேடுவது மற்றும் உங்கள் தயாரிப்புப் பட்டியலை வடிகட்டுவது குறித்து மேலும் அறிக.
படிகள்:
உங்களின் Shopify நிர்வாகியில், தயாரிப்புகளுக்குச் செல்லவும்.
ஐகானைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்பு விற்பனையாளர் மெனுவைக் கிளிக் செய்யவும்.
பட்டியலில் நீங்கள் காட்ட விரும்பும் விற்பனையாளர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்திற்குரியது: உங்கள் விற்பனையாளர்களை அகரவரிசை அல்லது எதிர் அகரவரிசையில் வரிசைப்படுத்த, விற்பனையாளர் நெடுவரிசைத் தலைப்பைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: இந்தக் காட்சியைச் சேமிக்க, இவ்வாறு சேமி என்பதைக் கிளிக் செய்து, சேமிக்கப்பட்ட காட்சிக்கான பெயரை உள்ளிட்டு, காட்சியைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விற்பனையாளர் அடிப்படையில் உங்கள் அறிக்கைகளை வரிசைப்படுத்தி, வடிகட்டவும்
Shopify நிர்வாகியில் விற்பனையாளர் அடிப்படையில் உங்கள் அறிக்கைகளை நீங்கள் வரிசைப்படுத்தலாம் மற்றும் வடிகட்டலாம். எல்லா வகையான அறிக்கைகளிலும் தயாரிப்பை மையமாகக் கொண்ட தரவு காட்டப்படுவதில்லை என்பதால், கிடைக்கக்கூடிய வடிப்பானாகத் தயாரிப்பு விற்பனையாளர் எல்லா அறிக்கைகளிலும் இடம்பெற்றிருக்காது. எடுத்துக்காட்டாக, பெறுதல் மற்றும் நடத்தை அறிக்கைகளை விற்பனையாளர் அடிப்படையில் வரிசைப்படுத்தவோ வடிகட்டவோ முடியாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, பகுப்பாய்வு > அறிக்கைகள் என்பதற்குச் செல்லவும்.
விற்பனையாளர் அடிப்படையில் நீங்கள் வடிகட்ட விரும்பும் அறிக்கையைக் கிளிக் செய்யவும்.
நெடுவரிசைகள் ஐகானைக் கிளிக் செய்து, அறிக்கையில் அதை ஒரு நெடுவரிசையாகக் காட்ட தயாரிப்பு விற்பனையாளர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்திற்குரியது: உங்கள் அறிக்கை தரவை விற்பனையாளர் அடிப்படையில் அகரவரிசை அல்லது எதிர் அகரவரிசையில் வரிசைப்படுத்த, தயாரிப்பு விற்பனையாளர் நெடுவரிசைத் தலைப்பைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: உங்கள் அறிக்கை தரவை விற்பனையாளர் அடிப்படையில் வடிகட்ட, வடிப்பான்கள் ஐகானைக் கிளிக் செய்து, வடிப்பானாகத் தயாரிப்பு விற்பனையாளர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு குறிப்பிட்ட விற்பனையாளரைச் சேர்க்க அல்லது தவிர்க்க வடிப்பானை மாற்றி, வடிப்பான்களைச் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
விற்பனையாளர்களை மொத்தமாகத் திருத்து
பிற தயாரிப்புத் தகவல்களைப் போலவே, மொத்தத் திருத்தி அல்லது CSV கோப்பை பயன்படுத்தி, உங்கள் தயாரிப்புகளுக்கான விற்பனையாளர் தகவலை நீங்கள் மொத்தமாகத் திருத்தலாம்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் தயாரிப்பு விற்பனையாளர்களைக் காட்டுதல்
உங்கள் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட விற்பனையாளர் அல்லது நீங்கள் விற்கும் பிராண்டிலிருந்து தயாரிப்புகளைத் தேட விரும்பும்போது, உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் காட்டப்படும் தயாரிப்பு விற்பனையாளர் தகவல்கள் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
Shopify உருவாக்கிய எல்லாத் தீம்களிலும், பின்வரும் வழிகளில் பிரிவுகள் அல்லது பிளாக்குகளைப் பயன்படுத்தி, பல்வேறு பக்க வார்ப்புருக்களில் விற்பனையாளர் தகவலை நீங்கள் காட்டலாம்:
- சிறப்புத் தொகுப்பு பிரிவில், தயாரிப்புகளின் கட்டத்தில் உள்ள ஒவ்வொரு தயாரிப்புக்குமான விற்பனையாளர் தகவலைக் காட்ட, விற்பனையாளரைக் காட்டு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- சிறப்புத் தயாரிப்பு பிரிவில், ஒரு உரை பிளாக்கைச் சேர்த்து, இயங்குநிலை மூலத்தை இணை ஐகானைக் கிளிக் செய்யவும். சிறப்புத் தயாரிப்பிற்கான விற்பனையாளரை இயங்குநிலையில் காட்ட, விற்பனையாளர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
மூன்றாம் தரப்புத் தீம்களுக்கு, உங்களது தீமுக்கான ஆதரவு ஆவணங்களை நீங்கள் பார்க்க வேண்டும் அல்லது தீம் டெவலப்பரைத் தொடர்புகொள்ள வேண்டும். உங்கள் தீமுக்கான ஆதரவை எங்கே பெறுவது என்பது குறித்து மேலும் அறிக.
பிற Shopify அம்சங்களில் உள்ள விற்பனையாளர்கள்
விற்பனையாளர் என்ற சொல் பிற Shopify அம்சங்களிலும் பயன்படுத்தப்படுகிறது, மேலும் அது உங்கள் தயாரிப்பு விவரங்களில் உள்ள விற்பனையாளர் புலத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விற்பனையாளர்களைக் குறிப்பிடும் வேறு சில Shopify அம்சங்கள் பின்வருமாறு:
- Shopify Bill Pay: சில பிராந்தியங்களில் உள்ள ஸ்டோர்கள், Shopify நிர்வாகியிலேயே தாங்கள் சரக்கு இருப்பு அல்லது சேவைகளை வாங்கும் விற்பனையாளர்களுக்கு விலைப்பட்டியல்களைச் சேமித்து, கட்டணம் செலுத்தலாம். இந்த விற்பனையாளர்கள் உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள உங்களின் தயாரிப்புப் பட்டியலுடன் தொடர்புடையவர்கள் அல்ல. Shopify Bill Pay மூலம் விற்பனையாளர்களை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.
- Stocky: Shopify POS-க்கான Stocky செயலி, உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து தயாரிப்பு விற்பனையாளர்களைத் தானாகவே இறக்குமதி செய்கிறது, ஆனால் சப்ளையர்கள் எனப்படும் இன்னும் விரிவான விற்பனையாளர் சுயவிவரங்களை உருவாக்க நீங்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். ஒரு தயாரிப்பிற்குப் பல சப்ளையர்களை ஒதுக்க முடியும் என்பதால், Stocky-இல் சப்ளையர்களை உருவாக்குவது, உங்கள் சரக்கு இருப்பின் மீது உங்களுக்குச் சிறந்த கட்டுப்பாட்டை அளிக்கிறது. Stocky-இல் உள்ள விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்கள் குறித்து மேலும் அறிக.
- Shopify B2B: நீங்கள் ஒரு மொத்த விற்பனையாளராக இருந்து, உங்கள் வாடிக்கையாளர்கள் விற்பனையாளர்களாக இருந்தால், நீங்கள் அவர்களை நிறுவனங்களாக அமைத்து, அவர்களுக்கு உங்கள் தயாரிப்புகளுக்கான தனித்துவமான விலைப் பட்டியல்களை ஒதுக்கலாம். Basic, Grow, Advanced மற்றும் Plus திட்டங்களில் Shopify B2B கிடைக்கிறது. B2B நிறுவனங்கள் குறித்து மேலும் அறிக.