உங்கள் தயாரிப்பு வரிசையைத் தற்காலிகமாக மாற்றுதல்

விற்கும் உங்கள் திறனைப் பாதிக்கும் சூழ்நிலைகள் ஏற்படும்போது, அந்தச் சூழ்நிலையின் புதிய தேவைகள் மற்றும் நிதர்சனங்களுக்கு ஏற்ப உங்கள் தயாரிப்பு வரிசையை மாற்றியமைப்பதைக் கருத்தில் கொள்ளவும்.

புதிய தேவைகளை நிறைவேற்றுதல்

பலரும் தாங்கள் பழகியதை விட மிகவும் மாறுபட்ட சூழ்நிலையில் இருப்பதோடு, புதிய சவால்களையும் எதிர்கொள்கின்றனர். வாடிக்கையாளர்களின் புதிய தேவைகளுக்கு ஏற்ப உங்கள் தயாரிப்புகளை எப்படி மாற்றியமைக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்:

  • திறன்களை வளர்க்க அல்லது பொழுதுபோக்கை வழங்க உதவும் வகையில் உங்கள் தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றை மாற்றியமைக்க முடியுமா?
  • வாடகை அல்லது மலிவான ஷிப்பிங் கட்டணங்கள் போன்றவற்றின் மூலம் உங்களின் தயாரிப்புகளை மலிவானதாக மாற்ற முடியுமா?
  • குடும்பச் செயல்பாடுகளுக்கு ஏற்ப உங்கள் தயாரிப்புகளை மாற்றியமைக்க முடியுமா அல்லது குழந்தைகளுக்கான பொழுதுபோக்கை வழங்க முடியுமா?
  • வீட்டில் அலுவலகத்தை உருவாக்க அல்லது வீட்டிலிருந்து வேலை செய்வதை இன்னும் சுவாரஸ்யமாக்க உங்களின் தயாரிப்புகளைப் பயன்படுத்த முடியுமா?
  • மக்களிடையே இணைப்பை உருவாக்க உங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்த முடியுமா?

புதிய தேவையைத் தீர்க்கும் நோக்கத்துடன் புதிய தயாரிப்பு வரிசையை உருவாக்குதல்

வாடிக்கையாளர்களின் புதிய தேவைகளைத் தீர்க்கும் நோக்கத்திலான முற்றிலும் புதிய தயாரிப்புகளை உருவாக்குவது குறித்துக் கருத்தில் கொள்ளவும். பின்வரும் எடுத்துக்காட்டுகளில் ஏதேனும் உங்கள் பிசினஸுக்கு ஏற்றதாக இருக்குமா என்பதைச் சரிபார்க்க, அவற்றை மதிப்பாய்வு செய்யவும்:

  • நீங்கள் ஒரு ஆடை பிசினஸ் செய்பவர் எனில், வீட்டிலேயே இருப்பவர்களுக்கான ஒரு புதிய ஆடை வரிசையை நீங்கள் உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, வீடியோ மீட்டிங்குகளுக்குத் தொழில்முறையான தோற்றத்தில் இருக்க வேண்டிய அதே நேரத்தில், வசதியாகவும் உணர விரும்பும் நபர்களுக்குப் புதிய ஆடை வரிசையை உருவாக்கவும்.
  • நீங்கள் ஒரு தோட்ட மையம் வைத்துள்ளீர்கள் எனில், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை நோக்கமாகக் கொண்ட புதிய தயாரிப்பு வரிசைகளை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளவும்:
    • குழந்தைகள் வளர்க்க அல்லது பராமரிக்க ஏற்ற தாவரங்கள்
    • வீட்டு அலுவலகங்களுக்கு ஏற்ற மற்றும் செல்லப்பிராணிகளுக்குப் பாதுகாப்பான தாவரங்கள்
    • எளிதாக வளர்க்கக்கூடிய மூலிகைகள் அல்லது காய்கறிகள் போன்று, வீட்டுச் சமையலறைக்கு உதவக்கூடிய தாவரங்கள்
  • நீங்கள் ஒரு வீட்டுப் பொழுதுபோக்குத் தயாரிப்பை விற்கிறீர்கள் எனில், இரண்டாவது தயாரிப்பைப் பெற ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வகையிலான, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற தயாரிப்புகளின் வரிசையை நீங்கள் வழங்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் புதிர்களை விற்கிறீர்கள் எனில், வாடிக்கையாளர் தங்களுக்கு ஒன்றை வாங்கவும், நண்பருக்கு ஒன்றை அனுப்பவும் அனுமதியுங்கள், இதன் மூலம் அவர்கள் இருவரும் நட்புரீதியான போட்டிக்காக அந்தப் புதிரைத் தீர்க்க முடியும்.

உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாடகைக்கு வழங்குதல்

முடிந்தால், உங்களின் சில உபகரணங்கள் அல்லது தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாடகைக்கு எடுக்க அனுமதியுங்கள். பின்வரும் எடுத்துக்காட்டுகளில் ஏதேனும் உங்கள் பிசினஸுக்கு ஏற்றதாக இருக்குமா என்பதைச் சரிபார்க்க, அவற்றை மதிப்பாய்வு செய்யவும்:

  • நீங்கள் ஓய்வுநேரப் பொருட்கள் விற்கும் கடையின் உரிமையாளராக இருந்தால், உங்களின் சில உபகரணங்களை தினசரி, வாராந்திர அல்லது மாதாந்திர அடிப்படையில் வாடகைக்கு விடலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் சைக்கிள்களை விற்கிறீர்கள் என்றால், தற்காலிகமாக ஓய்வுநேரச் செயல்பாடுகளுக்கு அதிக நேரம் உள்ள, அதேசமயம் புதிய சைக்கிள் வாங்கப் போதிய பணமில்லாத நபர்களுக்கு, சைக்கிள்களை வாடகைக்கு விடலாம்.
  • நீங்கள் ஃபர்னிச்சர் ஸ்டோரை நடத்துகிறீர்கள் எனில், வாடிக்கையாளர்கள் புதிய பொருட்களை முயற்சிக்கவோ, தற்காலிகமாகப் புதிய இடங்களை உருவாக்கவோ தயாரிப்புகளை வாடகைக்கு வழங்குவதைக் கவனியுங்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் அலுவலக ஃபர்னிச்சர்களை விற்பனை செய்கிறீர்கள் எனில், தற்காலிகமாக வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டியவர்களுக்கு ஹோம் ஆஃபீஸ் செட்களை வாடகைக்கு வழங்குவதைக் கருத்தில் கொள்ளவும்.
  • வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பிரத்தியேகத் தயாரிப்புகளைச் சேவையாக வழங்கும் பிசினஸை நீங்கள் நடத்துகிறீர்கள் எனில், அந்தத் தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாடகைக்கு எடுக்க அனுமதிக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் போர்டு கேம் கஃபே நடத்துகிறீர்கள் எனில், போர்டு கேம்களை மக்கள் வாடகைக்கு எடுக்க அனுமதிக்கலாம், அத்துடன் போர்டு கேமை நேரில் பெறும்போது அல்லது டெலிவரி செய்யும்போது பானங்கள் அல்லது உணவையும் வழங்கலாம்.

உங்கள் தயாரிப்புகள் சிலவற்றை உருவாக்க அல்லது மீண்டும் வடிவமைக்கத் தொகுப்புகளை வழங்குங்கள்

தயாரிப்புத் தொகுப்புகளையும் டுடோரியல்களையும் வழங்குங்கள். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உங்கள் சில தயாரிப்புகளை வீட்டிலேயே மீண்டும் உருவாக்கலாம். உங்கள் பிசினஸுக்கு ஏற்றதா என்பதைச் சரிபார்க்க, பின்வரும் எடுத்துக்காட்டுகளை மதிப்பாய்வு செய்யவும்:

  • நீங்கள் உணவகம் அல்லது உணவு பிசினஸின் உரிமையாளராக இருந்தால், வாடிக்கையாளர்கள் உங்கள் நேரடிக் கடைக்கு வர முடியாத சூழலில், வீட்டிலேயே பிரத்தியேக பானங்கள், டெசர்ட்டுகள், பசியைத் தூண்டும் உணவுகள் அல்லது முக்கிய உணவுகளைத் தயாரிப்பதற்கான இலவச அல்லது மலிவான செய்முறைகளை வழங்கலாம். எடுத்துக்காட்டாக, உங்களிடம் பிரபலமான பாஸ்தா உணவு இருந்தால், அதை வீட்டிலேயே எப்படிச் செய்வது என்பதற்கான செய்முறையுடன் பாஸ்தா சாஸை டெலிவரி செய்யலாம், மேலும் குழந்தைகள் உதவி செய்வதற்கான விருப்பத்தேர்வுப் படிகளையும் வழங்கலாம்.
  • நீங்கள் ஒரு கலைஞர் எனில், வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த கலைப்படைப்புகளை உருவாக்க வீடியோக்கள் அல்லது படிப்படியான டுடோரியல்களைத் தொகுப்புகளாக விற்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஓவியங்களை விற்கிறீர்கள் எனில், பெயிண்ட்டுகள் நிரப்பப்பட்ட சிறிய கொள்கலன்கள், ஓரிரு பெயிண்ட்பிரஷ்கள், உங்கள் பாணியில் பெயிண்ட் செய்வது குறித்த வீடியோ டுடோரியல் ஆகியவை அடங்கிய தொகுப்பை விற்கலாம்.
  • பிரத்தியேக அனுபவத்தை வழங்கும் பிசினஸை நீங்கள் நடத்துகிறீர்கள் எனில், மக்கள் அந்த அனுபவத்தை வீட்டிலேயே மீண்டும் பெறுவதற்கான தொகுப்பை விற்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் மினியேச்சர் கோல்ஃப் பிசினஸை நடத்துகிறீர்கள் எனில், மக்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய சில வழிகளை வடிவமைத்து, உட்புறம் அல்லது வெளிப்புறத்தில் விளையாடுவதற்கான வேடிக்கையான தடைகள், மலிவான கோல்ஃப் பந்துகள், மலிவான கோல்ஃப் கிளப்புகள் ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பை விற்கலாம்.