3D மாடல்களை உருவாக்க Shopify பார்ட்னரைப் பணியமர்த்துதல்

Shopify பார்ட்னர்கள் என்பவர்கள் Shopify ஸ்டோர்களை உருவாக்குவதிலும் புதுப்பிப்பதிலும் விரிவான அறிவைக் கொண்ட அனுபவமிக்கத் துறை வல்லுநர்கள் ஆவர். உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான 3D மாடல்களை உருவாக்க உதவ, நீங்கள் Shopify பார்ட்னர்களைப் பணியமர்த்தலாம். Shopify பார்ட்னரைப் பணியமர்த்துவது குறித்து மேலும் அறிக.

3D மாடல்களை உருவாக்க Shopify பார்ட்னரைப் பணியமர்த்தவும்

உங்கள் தயாரிப்புகளின் 3D மாடல்களை உருவாக்க உதவ, நீங்கள் Shopify பார்ட்னரைப் பணியமர்த்தலாம். Shopify Partner Directory இல், 3D மாடல் உருவாக்கச் சேவைகளை வழங்கும் பார்ட்னர்களை உலாவிப் பார்த்து, ஒரு பார்ட்னரைத் தேர்ந்தெடுத்து, அவர்களைத் தொடர்புகொள்ளவும்.

பார்ட்னர் தொடர்புப் படிவத்தைப் பயன்படுத்தி, உங்கள் திட்டப்பணி குறித்த விவரங்களை வழங்கவும். நீங்கள் இப்போதே தயாரிப்புப் படங்களையும் தயாரிப்புப் பரிமாணங்களையும் வழங்க விரும்பினால், இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும்.

நீங்கள் ஒரு பார்ட்னரைத் தொடர்புகொள்ளும்போது, கட்டாயம் Shopify பார்ட்னரைப் பணியமர்த்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் படிநிலையானது பார்ட்னருக்கு ஒரு கோரிக்கையை மட்டுமே சமர்ப்பிக்கிறது, அதைத் தொடர்ந்து அவர் உங்கள் கோரிக்கையை மதிப்பாய்வு செய்வார். உங்களுடன் இணைந்து பணியாற்ற ஒரு பார்ட்னர் முடிவுசெய்தால், அவர்களின் கட்டணங்கள் மற்றும் நீங்கள் எப்படி இணைந்து பணியாற்றத் தொடங்கலாம் என்பது குறித்த கூடுதல் தகவல்களுடன் அவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

உங்கள் பணிக் கோரிக்கையின் ஒரு பகுதியாக தயாரிப்புப் புகைப்படங்கள் மற்றும் தயாரிப்புப் பரிமாணங்களை நீங்கள் ஏற்கனவே வழங்கவில்லை எனில், பார்ட்னர் அவற்றை உங்களிடம் கேட்பார். புகைப்படங்களை எடுக்கும்போதும் அளவுகளைக் குறிப்பிடும்போதும் கீழேயுள்ள விவரக்குறிப்புகளைப் பின்பற்றவும்.

தயாரிப்புப் புகைப்படங்கள்

புகைப்படங்களைப் பயன்படுத்தி 3D மாடல்கள் உருவாக்கப்படுகின்றன. 3D மாடலை உருவாக்க, Shopify பார்ட்னருக்கு உங்கள் தயாரிப்புகளின் பல்வேறு கோணங்களிலான புகைப்படங்கள் தேவை:

தயாரிப்புப் புகைப்படக் கோணங்கள்

உங்கள் தயாரிப்பைப் புகைப்படம் எடுக்கும்போது, இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்:

  • உங்கள் தயாரிப்புக்கு நல்ல வெளிச்சம் இருப்பதை உறுதிசெய்யவும்.
  • உங்கள் தயாரிப்பு முழுமையாக ஃபோகஸ் செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.
  • முடிந்தால், மொபைல் ஃபோன் கேமராவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஃபர்னிச்சர் போன்ற பெரிய தயாரிப்புகளுக்கு, 50 மிமீ லென்ஸ் உள்ள கேமராவைப் பயன்படுத்தவும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தயாரிப்புகளுக்கு, 70 மிமீ அல்லது 100 மிமீ லென்ஸைப் பயன்படுத்தவும்.
  • தனித்துவமான நுணுக்கங்கள் அல்லது தோற்றமைப்புகளைக் கூடுதலாகப் புகைப்படம் எடுக்கவும்.
  • blue vase - top அல்லது blue vase - left போன்ற தெளிவான தலைப்புகளைப் புகைப்படக் கோப்புகளுக்கு வழங்கி, தெளிவாகப் பெயரிடப்பட்ட ஃபோல்டரில் அவற்றைச் சேமிக்கவும்.

தயாரிப்புப் பரிமாணங்கள்

துல்லியமான 3D மாடல்களை உருவாக்க, Shopify பார்ட்னருக்கு உங்கள் தயாரிப்பின் விரிவான அளவீடுகள் தேவை. அளவீடுகளை வழங்கும்போது, இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்:

  • உங்கள் தயாரிப்பின் ஒவ்வொரு பரிமாணத்தையும் தெளிவாகவும் எளிமையாகவும் விவரிக்கவும்.
  • அளவீடுகளை mm இல் வழங்கவும்.
  • அளவீடுகள் எந்தப் பரிமாணங்களுக்குப் பொருந்தும் என்பதைக் காட்டும் வரைபடத்தைச் சேர்க்கவும்.
  • உங்கள் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப வரைபடங்கள் அல்லது CAD கோப்புகள் இருந்தால், அவற்றையும் சேர்க்கவும்.

3D மாடல்களை உருவாக்குவதற்கான உதாரணம்

நவோமி இந்த நீல நிறப் பூச்சாடியை விற்கிறார்:

கீழேயுள்ள அளவீடுகளைக் காட்ட வரைபடத்தில் குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன

பூச்சாடியின் 3D மாடலை உருவாக்க ஒரு Shopify பார்ட்னரைக் கண்டறிய, அவர் Shopify Partner Directory-ஐப் பயன்படுத்துகிறார். 70 மிமீ லென்ஸ் கேமரா மூலம் எடுக்கப்பட்ட ஆறு உயர்தரப் புகைப்படங்களை பார்ட்னருக்கு நவோமி வழங்குகிறார்:

பூச்சாடியை முன், பின், இடது, வலது, மேல் மற்றும் கீழ்ப் புறங்களில் இருந்து இந்தப் புகைப்படங்கள் காட்டுகின்றன

பொருத்தமான தயாரிப்புப் பரிமாணங்கள் மில்லிமீட்டரில் குறிக்கப்பட்ட ஒரு அளவீட்டு வரைபடத்தை பார்ட்னருக்கு நவோமி வழங்குகிறார்:

பூச்சாடி

  • பூச்சாடியின் உயரம் (1) ____mm
  • பூச்சாடியின் மேற்புறத்திலிருந்து கழுத்துப் பகுதியின் அடிப்பகுதி வரை (2) ____mm
  • கழுத்துப் பகுதியின் அடிப்பகுதியிலிருந்து பூச்சாடியின் அடிப்பகுதி வரை (3) ____mm
  • பூச்சாடியின் வாய்ப்பகுதியின் விட்டம் (4) ____mm
  • வாய்ப்பகுதியின் விளிம்பு அகலம் (5) ____mm
  • கழுத்துப் பகுதியின் அடிப்பகுதி விட்டம் (6) ____mm
  • பூச்சாடியில் 8 அறுகோண முகங்கள் உள்ளன
  • அறுகோண முகங்களின் உயரம் (8) ____mm
  • அறுகோண முகங்களின் அகலம் (9) ____mm
  • பூச்சாடியின் மிகவும் அகலமான பகுதியின் விட்டம் (10) ____mm
  • பூச்சாடியின் அடிப்பகுதி விட்டம் (11) ____mm
  • ஃபோம் தாங்கிகளின் விட்டம் ____mm

Shopify பார்ட்னர் இந்தப் புகைப்படங்கள் மற்றும் பரிமாணங்களைப் பயன்படுத்தி நீல நிறப் பூச்சாடியின் 3D மாடலை உருவாக்குகிறார். தனது ஆன்லைன் ஸ்டோரில் சேர்ப்பதற்காக, GLB கோப்பை நவோமிக்கு பார்ட்னர் அனுப்புகிறார்.

உங்கள் 3D மாடல்களின் தரத்தைச் சரிபார்க்கவும்

Shopify பார்ட்னர் உங்களுக்கு ஒரு 3D மாடலை வழங்கும்போது, அதன் தரத்தில் உங்களுக்குத் திருப்தி உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும். மாடலை முன்கூட்டியே பார்ப்பதற்கான வழிமுறைகளை பார்ட்னர் உங்களுக்கு வழங்க வேண்டும்.

மாடலை எல்லாக் கோணங்களிலிருந்தும் சரிபார்க்கவும். உங்களின் 3D மாடல்களை முன்கூட்டியே பார்க்க glTF Viewer-ஐ நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் மாடலைச் சரிபார்க்கும்போது, பின்வரும் கேள்விகளைக் கருத்தில் கொள்ளவும்:

  • பார்ட்னருக்கு நீங்கள் வழங்கிய தயாரிப்புக் குறிப்புப் புகைப்படங்களுடன் மாடலின் வடிவம் பொருந்துகிறதா?
  • மாடலின் அனைத்துப் பகுதிகளும் மற்றவற்றுக்கு ஏற்ற விகிதத்தில் உள்ளதா?
  • உங்களால் ஆக்மென்டட் ரியாலிட்டியில் மாடலை முன்கூட்டியே பார்க்க முடிந்தால், காட்சியின் மற்றவற்றுடன் ஒப்பிடும்போது மாடலின் அளவு சரியாகக் காட்டப்படுகிறதா?
  • தயாரிப்பை உருவாக்கிய அதே மூலப்பொருள்களைக் கொண்டு மாடலும் உருவாக்கப்பட்டது போல் தோன்றுகிறதா?
  • மாடலின் மூலப்பொருள்கள் நீட்டப்பட்டதாகவோ, மங்கலாகவோ, சிதைந்ததாகவோ காட்டப்படுகிறதா?
  • மாடலின் மூலப்பொருள்களை மிகவும் இயல்பானதாகக் காட்ட, தேய்மானங்கள் அல்லது கீறல்கள் போன்ற நுணுக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா?
  • தயாரிப்பின் பகுதிகள் ஒளிபுகக்கூடியதாகவோ, ஒளியைப் பிரதிபலிக்கக்கூடியதாகவோ அல்லது ஒளியை வெளிப்படுத்துவதாகவோ இருந்தால், அவை சரியாகக் காட்டப்படுகின்றனவா?
  • விளிம்புகள் அனைத்தும் இயல்பாகத் தோன்றுகின்றனவா? ஏதேனும் மிகவும் கூர்மையாக இருப்பதால், அவற்றை மென்மையாக்க வேண்டுமா?
  • லோகோ அல்லது சில உரை போன்ற ஏதேனும் அலங்கார நுணுக்கங்கள் இருந்தால், அவை பார்ப்பதற்கு எளிதாக உள்ளதா?
  • இடைவெளிகள் அல்லது துளைகள் இருக்கக் கூடாத இடங்களில் அவை ஏதேனும் உள்ளனவா?
  • Shopify தளத்தின் தொழில்நுட்பத் தேவைகளை 3D மாடல் பூர்த்தி செய்கிறதா?
    • 3D மாடல் ஒரு GLB கோப்பாக இருக்க வேண்டும்.
    • GLB கோப்பு தோராயமாக 4 MB அளவில் இருக்க வேண்டும்.
    • GLB கோப்பு 15 MB-ஐத் தாண்டக்கூடாது.

Shopify பார்ட்னர் சில தரநிலைகளின்படி 3D மாடலை உருவாக்க வேண்டும். மாடலை நீங்கள் சிறப்பாகச் சரிபார்ப்பதற்கு, அந்தத் தரநிலைகளைப் பற்றி மேலும் அறிய, வணிகர்களுக்கான 3D மாடல்களை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

மாடலின் தரம் போதுமானதாக இல்லை என நீங்கள் நினைத்தால், Shopify பார்ட்னரைத் தொடர்புகொண்டு அதில் உள்ள குறையை விளக்கவும்.