தயாரிப்புப் புகைப்படங்களை எடுத்தல்

உங்கள் ஸ்டோரில் உயர்தரத் தயாரிப்புப் புகைப்படங்களைப் பயன்படுத்துவது, வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகளை வாங்கினால் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. நல்ல தரமான தயாரிப்புப் புகைப்படம் எடுத்தல் மூலம் உங்கள் ஆன்லைன் ஸ்டோர் இன்னும் தொழில்முறையானதாகத் தோன்றும், மேலும் இது உங்கள் பிராண்டின் மீது வாடிக்கையாளரின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

உங்கள் வீட்டில் நல்ல தரமான புகைப்படங்களை எடுக்க விரும்பினால், சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில கருவிகள் மற்றும் நீங்கள் எடுக்க வேண்டிய சில படிகள் உள்ளன.

புகைப்படம் எடுத்தல் தொடர்பான வரையறைகள்

  • அப்பரேச்சர் - அப்பரேச்சர் என்பது கேமராவில் நுழைவதற்காக ஒளி கடந்து செல்லும் கேமரா லென்ஸின் துளை ஆகும். சென்சார் அல்லது ஃபிலிமை எவ்வளவு ஒளி சென்றடைகிறது என்பதைக் கட்டுப்படுத்த இதன் அளவை மாற்றலாம். எஃப்-ஸ்டாப் என்றும் அழைக்கப்படும் அப்பரேச்சரின் விட்டம் எக்ஸ்போசர் மற்றும் டெப்த் ஆஃப் ஃபீல்டைப் பாதிக்கிறது.
  • அப்பரேச்சர் முன்னுரிமை - அப்பரேச்சர் முன்னுரிமை என்பது ஒரு கேமரா பயன்முறையாகும், இதில் உங்கள் அப்பரேச்சரை நீங்களே அமைத்துக்கொள்ளலாம் மற்றும் கேமராவானது ஷட்டர் வேகத்தைத் தானாகவே தேர்ந்தெடுக்கும்.
  • டெப்த் ஆஃப் ஃபீல்டு - கூர்மையாக ஃபோகஸ் செய்யப்படும் பகுதியையே டெப்த் ஆஃப் ஃபீல்டு குறிக்கிறது. குறைந்த எஃப்-ஸ்டாப் ஆனது மிகக் குறைந்த அளவிலான டெப்த் ஆஃப் ஃபீல்டு அல்லது ஃபோகஸ் செய்யப்பட்ட பகுதியை உருவாக்கும்.
  • எக்ஸ்போசர் - படம் எடுக்கும்போது ஃபிலிம் அல்லது கேமரா சென்சாரை அடையும் ஒட்டுமொத்த ஒளியின் அளவே கேமரா எக்ஸ்போசர் ஆகும். இது ஒரு புகைப்படத்தின் ஒட்டுமொத்தப் பிரகாசம் அல்லது இருளைத் தீர்மானிக்கிறது.
  • எஃப்-ஸ்டாப் - எஃப்-ஸ்டாப் என்பது லென்ஸின் குவிய நீளம் (focal length) ஆகும். கேமராவின் அப்பரேச்சர் துளை வழியாக எவ்வளவு ஒளியைச் சென்சாரில் பட அனுமதிக்கிறீர்கள் என்பதை எஃப்-ஸ்டாப் தீர்மானிக்கிறது.
  • ISO - ISO ஆனது சென்சாரின் உணர்திறனைக் கட்டுப்படுத்துகிறது. ISO அதிகமாக இருந்தால், இரைச்சல் (noise) அதிகமாக இருக்கும். பெரும்பாலான நேரங்களில் உங்கள் கேமராவில் நீங்கள் அமைக்கக்கூடிய மிகக் குறைந்த ISO என்பது ISO 100 ஆகும், எனவே உங்களால் முடிந்தால் அதிலேயே அமைக்கவும்.
  • ஷட்டர் வேகம் - புகைப்படம் எடுக்கும்போது லென்ஸ் திறந்து இருக்கும் மற்றும் கேமரா சென்சார் ஒளியில் வெளிப்படும் நேர அளவே ஷட்டர் வேகம் ஆகும். மெதுவான ஷட்டர் வேகங்கள் இயங்கும் நிலையில் உள்ள பொருள்களை மங்கலாகப் படம்பிடிக்கும். அதிக ஷட்டர் வேகங்கள் ஒரு மில்லிசெகண்டிற்குள் காட்சியைப் படம்பிடிக்க உங்களை அனுமதிக்கின்றன.
  • ஒயிட் பேலன்ஸ் - காட்சியொளிரும் ஒளியின் வெப்பநிலையை ஈடுசெய்யப் படத்தில் செய்யப்படும் சரிசெய்தலே ஒயிட் பேலன்ஸ் ஆகும். கேமராக்கள் பொதுவான ஒளி வகைகளின் அடிப்படையில் சில முன்பே அமைக்கப்பட்ட மதிப்புகளை வழங்குகின்றன, ஆனால் புகைப்படம் எடுக்கும்போதோ அல்லது எடுத்த பிறகோ இதைக் கைமுறையாகவும் அமைக்கலாம்.

தயாரிப்புப் புகைப்படம் எடுத்தலுக்கான கருவிகள்

சிறந்த புகைப்படம் என்பது லைட்டிங், எக்ஸ்போசர், ஸ்டைலிங் மற்றும் போஸ்ட்-பிராசஸிங் முடிவுகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான தேர்வுகளால் உருவாகிறது.

உங்கள் வீட்டிலிருந்தபடியே அதிகபட்சத் தொழில்முறைத் தோற்றமுடைய புகைப்படங்களை எடுக்க விரும்பினால், பின்வரும் சில அல்லது அனைத்து உபகரணங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்:

  • சரியான இடம் (ஜன்னல் உள்ள ஒரு அறை)
  • ஒரு கேமரா
  • ஒரு ட்ரைபாட்
  • ஒரு மேஜை
  • வெள்ளை நிறப் பின்னணி
  • டேப்
  • ஃபோம் போர்டு அல்லது பேப்பரால் செய்யப்பட்ட வெள்ளை நிறப் பிரதிபலிப்பான் கார்டுகள்

1. ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தல்

நீங்கள் ஒரு புகைப்படக்கலை நிபுணராக இல்லாமலும், புகைப்படக்கலைக்கான விளக்குகள் உங்களிடம் இல்லாமலும் இருந்தால், அதன் அருகில் உங்கள் புகைப்படங்களை எடுப்பதற்கு ஜன்னல் கொண்ட ஓர் அறை உங்களுக்குத் தேவை. உள்ளரங்க மின்விளக்குகள் மற்றும் கேமராவிலேயே உள்ள ஃப்ளாஷ்கள் உங்கள் புகைப்படங்களில் கடுமையான முரண்பாடு, ஒளிப் பிரதிபலிப்புகள் மற்றும் தேவையற்ற நிற மாற்றங்களை உருவாக்கக்கூடும்.

கருமையான, மென்மையான நிழல்களுடன் கூடிய மென்மையான ஒளியை உருவாக்க, உங்கள் அமைவை ஜன்னலுக்கு அருகில் வைக்கலாம். கூர்மையான, வெளிர்நிற நிழல்களுடன் கூடிய சீரான ஒளியை வழங்க உங்கள் அமைவைச் சற்றே தள்ளியும் வைக்கலாம்.

2. கேமராவைத் தேர்ந்தெடுத்தல்

உங்களிடம் உள்ள சிறந்த கேமராவைக் கொண்டு நீங்கள் தயாரிப்புப் புகைப்படங்களை எடுக்க வேண்டும்.

அதிகத் தரமுள்ள கேமரா மூலம் அதிகத் தரமுள்ள படங்களை உருவாக்க முடியும் என்றாலும், நல்ல முடிவுகளைப் பெறுவதற்கு உங்களுக்குத் தொழில்முறை அளவிலான உபகரணங்கள் தேவையில்லை. மிதமான விலையுள்ள ஒரு DSLR, பாயின்ட் அண்ட் ஷூட் கேமரா அல்லது உங்கள் ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் பயன்படுத்தலாம்.

3. ட்ரைபாடைத் தேர்ந்தெடுத்தல்

உங்கள் கேமராவை நிலையாக வைத்திருக்க உங்களுக்கு ஒரு ட்ரைபாட் தேவைப்படலாம். நீங்கள் மேனுவல் கேமரா அமைப்புகளைப் பயன்படுத்தும்போது, குறிப்பாகக் குறைந்த வெளிச்சம் உள்ள சூழ்நிலைகளில் ட்ரைபாடுகள் மிகவும் முக்கியமானவை.

எடுத்துக்காட்டாக, நீங்கள் மிகப் பெரிய ஜன்னலுக்கு முன்னால் ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களுக்கு ட்ரைபாட் தேவைப்படாமல் போகலாம், இருந்தாலும் நிலைத்தன்மைக்கு அது உதவியாக இருக்கும்.

நீங்கள் மேனுவல் DSLR-ஐப் பயன்படுத்தினால், மிகச் சிறிய அப்பர்ச்சர் (aperture) மற்றும் குறைவான ஷட்டர் வேகத்தைப் பயன்படுத்த, உங்கள் கேமராவை நிலையாக வைத்திருக்க ட்ரைபாடைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். நீங்கள் இந்த அமைப்புகளைப் பயன்படுத்தும்போது, அதிக டெப்த் ஆஃப் ஃபீல்டைப் (depth of field) பெறுவதோடு அதிக ஒளியையும் அனுமதிக்கிறீர்கள், ஆனால் கேமராவில் மங்கலான படங்கள் உருவாகும் வாய்ப்பையும் உருவாக்குகிறீர்கள்.

4. உங்கள் பரப்பைத் தேர்ந்தெடுத்தல்

உங்களிடம் உள்ள எந்த மேஜையையும் ஜன்னலுக்கு அருகில் வைத்து நீங்கள் பயன்படுத்தலாம். தயாரிப்புப் புகைப்படம் எடுப்பதற்கான நிலையான மேஜை அகலம் 24 மற்றும் 27 அங்குலங்களுக்கு இடையில் அமைவது சிறந்ததாகும்.

5. வெள்ளை நிறப் பின்னணியை உருவாக்குதல்

பார்வையைத் திசைதிருப்பக்கூடியவற்றைக் குறைப்பதன் மூலம் புகைப்படத்தில் உங்களின் தயாரிப்புகளே பிரதான கவனத்தில் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். உங்கள் தயாரிப்பிற்குப் பின்னால் முற்றிலும் வெள்ளை நிறத்திலான பின்னணியைப் பயன்படுத்துவது, உங்கள் தயாரிப்பு பிரதான கவனத்தில் இருப்பதை உறுதிசெய்கிறது.

உங்கள் பட்ஜெட்டைப் பொறுத்து பல்வேறு பின்னணி விருப்பங்கள் உள்ளன. வெள்ளை நிறப் போஸ்டர் போர்டுக்காக உங்கள் உள்ளூர் பல்பொருள் அங்காடி அல்லது அலுவலகப் பொருட்கள் விற்கும் கடைகளில் பார்க்கவும் அல்லது ஆன்லைனில் தேடவும்.

நீங்கள் ரோலரில் சுற்றப்பட்ட பேப்பரான ஸ்வீப் (sweep) எனப்படும் மிகவும் தொழில்முறையான புகைப்படப் பின்னணியையும் வாங்கலாம். நீங்கள் அதிகளவில் தயாரிப்புப் புகைப்படங்களை எடுக்கத் திட்டமிட்டால், பயன்படுத்திய பகுதி அழுக்காகும்போது, அதை வெட்டிவிட்டுப் புதிய பகுதியை இழுத்துப் பயன்படுத்த முடியும் என்பதால், ஸ்வீப்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

6. டேப்பைக் கொண்டு உங்கள் அமைவை நிலையாகப் பொருத்துதல்

நீங்கள் எந்த மாதிரியான மேஜையைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் போர்டு அல்லது பேப்பரின் ஸ்வீப்பைக் கீழே நிலையாகப் பொருத்துவதற்கு நீங்கள் டேப் அல்லது கிளாம்புகளைப் (clamps) பயன்படுத்தலாம், இதன் மூலம் உங்கள் போர்டு அல்லது பேப்பர் 90 டிகிரி சரிவில் சரியான முறையில் ஸ்வீப் ஆகும்.

7. பிரதிபலிப்பான் கார்டைப் பயன்படுத்துதல்

உங்கள் புகைப்படத்தில் உள்ள ஒளியின் மீது உங்களுக்கு அதிகக் கட்டுப்பாடு தேவைப்பட்டால், ஒளியைப் பிரதிபலிப்பதற்கு வெள்ளை நிற ஃபோம் போர்டையோ, ஒளியை உறிஞ்சுவதற்குக் கருப்பு நிற ஃபோம் போர்டையோ நீங்கள் பயன்படுத்தலாம்.

நீங்கள் இயற்கையான ஒளியில் உங்கள் தயாரிப்பைப் படமெடுக்கும்போது, ​​ஒளி படும் பக்கம் பிரகாசமாகவும், மறுபக்கம் நிழலாகவும் இருக்கும். நிழல் இருக்கும் பக்கம் சில நேரங்களில் மிகவும் இருட்டாக இருக்கலாம், எனவே நிழல்களை மேலும் பிரகாசமாக்க, நிழல்களுக்குள் ஒளியைப் பிரதிபலிக்க நீங்கள் வெள்ளை நிறத்திலான எதையாவது பயன்படுத்தலாம்.

இதற்கு மாற்றாக, நிழல்களை இன்னும் அடர்த்தியாக்குவதற்குக் கருப்பு நிற ஃபோம் போர்டை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் வெள்ளை நிறப் பின்னணியில் ஒரு வெள்ளை நிறத் தயாரிப்பைப் படமெடுக்கும்போது இது உதவியாக இருக்கும். வெள்ளை நிறத் தயாரிப்பில் ஓர் இருண்ட விளிம்பை உருவாக்க, புகைப்படத்திற்குச் சற்று வெளியேயும், தயாரிப்பின் பின்புறமுமாகப் பக்கவாட்டில் கருப்பு நிற ஃபோம் போர்டைச் சேர்க்கலாம்.

நீங்கள் ஃபோம் போர்டுகளை ஒரு பல்பொருள் அங்காடி அல்லது கலைப்பொருட்கள் விற்கும் கடையில் வாங்க முடியும். நீங்கள் ஒரு வெள்ளை நிறப் பிரிண்டர் பேப்பரை வைத்து சமன்செய்யவோ அல்லது ஒரு போஸ்டர் போர்டைப் பயன்படுத்தவோ முடியும்.

புகைப்படக்கலை அமைப்புகள் மற்றும் உத்திகள்

உங்கள் புகைப்படக்கலை அமைப்பை உருவாக்கவும், உங்கள் கேமரா அமைப்புகளைச் சரிசெய்யவும் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய படிகளின் பட்டியல் பின்வருமாறு:

  1. உங்கள் மேஜையை அமைத்தல்
  2. உங்கள் ஸ்வீப்பை அமைத்தல்
  3. உங்கள் கேமரா அமைப்புகளைச் சரிசெய்தல்
  4. உங்கள் தயாரிப்பை அமைத்தல்
  5. உங்கள் பிரதிபலிப்பான் கார்டை அமைத்தல்
  6. படமெடுத்தல் மற்றும் மதிப்பிடுதல்
  7. உங்கள் படங்களை ரீடச் செய்தல்
  8. உங்கள் இணையதளத்திற்கு ஏற்பப் படங்களை உகப்பாக்குதல்

1. உங்கள் மேஜையை அமைத்தல்

ஜன்னல் படியிலிருந்து வரும் நிழல் விழாதபடி, உங்கள் மேஜையை முடிந்தவரை ஜன்னலுக்கு அருகில் வைக்கவும். உங்கள் அமைப்பிற்கு வலது அல்லது இடதுபுறத்தில் 90 டிகிரியில் ஜன்னல் இருக்குமாறு தொடங்கவும். கடுமையான நேரடி சூரிய ஒளி உங்கள் அமைப்பின் மீது படவில்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.

அமைப்பிற்கு 45 டிகிரி கோணத்தில் ஜன்னல் இருக்குமாறு அதைத் திருப்பிப் பார்க்கலாம் அல்லது வேறுபட்ட பாணியிலான இயற்கையான ஒளியமைப்பைப் பெற, அமைப்பிற்கு நேராக ஜன்னல் இருக்கும்படியும் நீங்கள் முயன்று பார்க்கலாம்.

மற்ற ஒளிகள் அமைப்பைக் கெடுக்கும் என்பதால், நீங்கள் படமெடுக்கும் அறையின் உள்ளே உள்ள மற்ற அனைத்து விளக்குகளையும் அணைத்துவிடவும்.

2. உங்கள் ஸ்வீப்பை அமைத்தல்

எவ்விதக் குறைபாடுமற்ற ஒரு வெள்ளை நிறப் பின்னணியை நீங்கள் விரும்பினால், உங்கள் அமைப்பை ஸ்வீப் செய்ய வேண்டியிருக்கலாம். தயாரிப்புப் புகைப்படம் எடுப்பதில், ஸ்வீப்பிங் (sweeping) என்பது உங்கள் மேட் போர்டு அல்லது பேப்பரை உங்கள் மேஜையில் தட்டையாக இருப்பதிலிருந்து செங்குத்தாகச் செல்லும் வகையில் ஸ்வீப் செய்ய அல்லது வளைக்க அமைப்பதாகும். அது அந்த வடிவத்தை அடைவதற்கு நீங்கள் போர்டைச் சுருட்ட வேண்டியிருக்கலாம்.

மேஜையைச் சுவருக்கு எதிராக வைப்பதுடன், சுவரிலும் மேஜையிலும் ஸ்வீப்பை டேப் மூலம் ஒட்டுவது ஓர் எடுத்துக்காட்டு அமைப்பாகும். உங்களுக்குச் சுவர் இல்லை என்றால், ஸ்வீப்பின் பின்புறத்தைப் பாதுகாப்பாகப் பொருத்துவதற்கு நீங்கள் எதையாவது உருவாக்கிக்கொள்ளலாம்.

ஸ்வீப்பின் தட்டையான பகுதியில் உங்கள் தயாரிப்பை மையத்தில் வைக்கவும், பிறகு உங்களின் வெள்ளை நிறப் பிரதிபலிப்பான் கார்டைச் சேர்ப்பதற்குப் போதுமான இடைவெளியை விடவும்.

3. உங்கள் கேமரா அமைப்புகளைச் சரிசெய்தல்

உங்கள் கேமராவில் எக்ஸ்போஸர் அமைப்புகளைச் சரிசெய்யத் தொடங்கும் முன், உங்கள் கேமரா பின்வரும் அமைப்புகளுடன் உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ளவும்:

  1. உங்கள் வொயிட் பேலன்ஸை (WB) ஆட்டோமேட்டிக்கிற்கு அமைக்கவும்.
  2. உங்களின் ஃப்ளாஷ் அமைப்பை முடக்கவும்.
  3. உங்கள் பட அமைப்புகளை அதிகபட்சத் தரத்திற்கு அமைக்கவும். லார்ஜ் (Large) அளவிற்கு L என்பதையும், சூப்பர்ஃபைன் (Superfine) தரத்தையும் தேடிக் கண்டறியவும்.
  4. உங்கள் ISO-ஐ 100 என அமைக்கவும்.

விருப்பம் A: உங்கள் கேமராவை மேனுவல் (M) மோடுக்கு அமைக்கவும்

மேனுவல் மோடில் நீங்கள் படமெடுக்கும்போது, உங்களின் புகைப்படக்கலையின் மீது உங்களுக்கு அதிகக் கட்டுப்பாடு கிடைக்கும். மேனுவல் மோடில், உங்களின் f-ஸ்டாப் மற்றும் ஷட்டர் வேகம் ஆகிய இரண்டையும் நீங்கள் தனித்தனியாக அமைக்கலாம்.

படிகள்:

  1. உங்களின் f-ஸ்டாப்பை அதிகபட்ச எண்ணிற்கு அமைக்கவும், இது உங்களுக்கு மிகச் சிறந்த டெப்த் ஆஃப் ஃபீல்டை (depth of field) வழங்கும்.
  2. பட முன்னோட்டத்தில் படம் சரியான வெளிச்சத்துடன் தோன்றுவதற்கு ஏற்ப ஷட்டர் வேகத்தைச் சரிசெய்யவும்.

விருப்பத்தேர்வு B: அப்பர்ச்சர் பிரையாரிட்டி (AV) பயன்முறையைப் பயன்படுத்தவும்

அப்பர்ச்சர் பிரையாரிட்டி பயன்முறையில், நீங்கள் f-ஸ்டாப்பை அமைக்கும்போது, நீங்கள் தேர்ந்தெடுத்த f-ஸ்டாப்பிற்கு ஏற்ப கேமரா ஷட்டர் வேகத்தை தானாகவே சரிசெய்கிறது.

படிகள்:

  1. f-ஸ்டாப்பை அதிகபட்ச எண்ணிற்கு அமைக்கவும்.
  2. விருப்பத்திற்குரியது: கேமரா தேர்ந்தெடுக்கும் ஷட்டர் வேகம் தவறாகத் தோன்றினால், ஒளியைச் சேர்க்க எக்ஸ்போஷர் காம்பென்சேஷன் டயலைப் (exposure compensation dial) பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.

விருப்பத்தேர்வு C: ஆட்டோ எக்ஸ்போஷர்

  1. உங்களிடம் எக்ஸ்போஷர் காம்பென்சேஷன் டயல் இருந்தால், சரியான எக்ஸ்போஷரைப் பெற +1 அல்லது +1½ ஐச் சேர்க்க வேண்டியிருக்கலாம். தேர்ந்தெடுப்பதற்கு பிரீசெட்கள் (presets) மட்டுமே இருந்தால், சன்செட் (Sunset) போன்ற குறைந்த ஒளியுள்ள பிரீசெட்டைத் தேர்ந்தெடுக்க முயலவும்.

4. தயாரிப்பை அமைத்தல்

செட்டில் தயாரிப்பைச் சரியாக நிலைநிறுத்துவதற்கு நேரம் ஒதுக்கவும். தயாரிப்பின் முக்கிய நுணுக்கங்கள் அனைத்தும் தெரிவதை உறுதிசெய்ய, சில சோதனைப் புகைப்படங்களை எடுக்கவும். கேமராவின் கோணத்திலிருந்து எல்லாவற்றையும் சரியாக வரிசைப்படுத்த, நீங்கள் பல சிறிய நகர்வுகளைச் செய்ய வேண்டியிருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, உங்கள் தயாரிப்பு ஒரு பாட்டிலாக இருந்தால், லேபிளை மையத்தில் வைப்பதில் கவனம் செலுத்தவும்.

5. ரிஃப்ளெக்டர் கார்டை (reflector card) அமைத்தல்

நீங்கள் ஒரு வெள்ளை நிற ரிஃப்ளெக்டர் கார்டைப் பயன்படுத்தினால், வெவ்வேறு கோணங்களில் ஒளி எவ்வாறு மாறுகிறது என்பதைச் சோதித்துப் பார்க்கவும். ஒளி கார்டில் பட்டு பிரதிபலித்து நிழல்களை நிரப்புகிறது.

6. படம் எடுத்து மதிப்பீடு செய்தல்

முதல் படங்களை எடுத்த பிறகு, படத்தைப் பார்க்க சிறிது நேரம் ஒதுக்கவும். எது சிறப்பாக உள்ளது, எது சரியாக இல்லை, அதை எப்படி மேம்படுத்தலாம் என்பதைச் சிந்திக்கவும்.

வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்பின் வெவ்வேறு பார்வைகளை வழங்க, பல கோணங்களில் படமெடுக்கவும். சில வாடிக்கையாளர்கள் மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை விரும்பலாம், மற்றவர்கள் உருப்படிகளை நேராகப் பார்க்க விரும்பலாம்.

முயன்று பார்க்கக்கூடிய சில கேமரா கோணங்கள்:

  • கண் மட்டம் (eye level), இது நீங்கள் நேராகப் பார்ப்பதைப் போலவே தயாரிப்பைக் காண்பிக்கும்.
  • உயர் கோணம் (high angle), இது தயாரிப்பை நீங்கள் மேலிருந்து கீழாகப் பார்ப்பதைப் போலக் காண்பிக்கும்.
  • குறைந்த கோணம் (low angle), இது தயாரிப்பை நீங்கள் கீழிருந்து மேலாகப் பார்ப்பதைப் போலக் காண்பிக்கும்.
  • பேர்ட்ஸ் ஐ (bird’s eye), இது நீங்கள் தயாரிப்பிற்கு மேலே நின்றுகொண்டு பார்ப்பதைப் போலக் காண்பிக்கும்.

7. படங்களை ரீடச் (retouch) செய்தல்

இறுதிப் படங்களில் நீங்கள் திருப்தியடைந்தால், பின்னணியைத் தூய வெள்ளை நிறத்திற்கு மாற்றுவது போன்ற மேம்பாடுகள் தேவைப்படும் பகுதிகளை ரீடச் செய்ய புகைப்படத் திருத்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

பல்வேறு ரீடச்சிங் மென்பொருள்கள் கிடைக்கின்றன, உங்கள் விலை வரம்பைப் பொறுத்து, ரீடச்சிங் செய்வதற்குப் நிபுணர் ஒருவரை நீங்கள் பணியமர்த்த விரும்பலாம். Shopify App Store இல் அதற்கான செயலிகளையும் நீங்கள் தேடலாம் அல்லது ஒரு Shopify Partner-ஐப் பணியமர்த்தலாம்.

படத்தின் பின்னணியை மாற்றியமைக்க அல்லது வெளிச்சத்தைச் சரிசெய்ய, கோப்பு எடிட்டரில் (file editor) மீடியா உருவாக்கத்தைப் (media generation) பயன்படுத்தலாம்.

8. இணையதளத்திற்கு ஏற்ப படங்களை மேம்படுத்துதலும் அளவை மாற்றுதலும்

உங்கள் உயர்தரப் புகைப்படங்களை இணையத்திற்கேற்ப மேம்படுத்தவும் அளவை மாற்றவும், படத் திருத்தக் கருவியை நீங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். பெரிய படங்கள் பக்கத்தை ஏற்றும் நேரத்தை தாமதமாக்கக்கூடும். படத்தின் அளவை 200 KB இக்கு மிகாமல் வைத்திருப்பது நல்லது, இதைவிடக் குறைவாக இருந்தாலும் சிறப்பே.

இணையத்திற்கேற்ப படங்களை மேம்படுத்தப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகளும் மென்பொருள்களும் ஆன்லைனில் கிடைக்கின்றன. Shopify App Store இலிருந்து ஒரு செயலியைப் பயன்படுத்தலாம் அல்லது உங்களுக்கு உதவ ஒரு Shopify Partner-ஐப் பணியமர்த்தலாம்.