வாங்குவதற்கான விருப்பத்தேர்வுகள்
வழக்கமான "இப்போதே வாங்குங்கள், கட்டணம் செலுத்துங்கள், அனுப்பி வைக்கப்படும்" (buy, pay, and ship now) மாடலுக்கு அப்பாற்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு வாங்குவதற்கான விருப்பத்தேர்வுகளை வழங்கும் வகையில் உங்கள் ஸ்டோரை அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர்கள் ஒரு ஆல்பம் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே ஆர்டர் செய்யலாம் அல்லது மாதந்தோறும் காபி பீன்ஸ் பேக்கைப் பெறுவதற்குச் சந்தா ஆர்டரைச் செய்யலாம்.
வாடிக்கையாளர்களுக்கு மூன்று வாங்குவதற்கான விருப்பத்தேர்வுகளை நீங்கள் வழங்கலாம்: சந்தாக்கள், முன்பதிவுகள் மற்றும் வாங்குவதற்கு முன் முயன்று பாருங்கள் (TBYB).
- சந்தாக்கள் (Subscriptions): தயாரிப்புகளை விற்பனை செய்து, சுழற்சி அடிப்படையில் வாடிக்கையாளர்களிடம் அதற்கான கட்டணங்களை வசூலிக்கலாம்.
- முன்பதிவுகள்: இன்னும் நிறைவேற்றத் தயாராக இல்லாத, ஆனால் பின்னர் நீங்கள் நிறைவேற்றக்கூடிய உருப்படிகளை வாடிக்கையாளர்கள் வாங்கலாம் அல்லது முன்பதிவு செய்து வைக்கலாம்.
- வாங்குவதற்கு முன் முயன்றுபார்த்தல் (Try-before-you-buy): வாடிக்கையாளர்கள் உடனே கட்டணம் செலுத்தாமல் உருப்படிகளை ஆர்டர் செய்யலாம். வழக்கமான ஆர்டரைப் போலவே TBYB ஆர்டர்களையும் நீங்கள் நிறைவேற்றலாம், ஆனால் வாடிக்கையாளர்கள் தயாரிப்பை முயன்றுபார்த்த பிறகு, எதிர்காலத்தில் குறிப்பிட்ட தேதியில் கட்டணம் செலுத்துவார்கள்.
வாடிக்கையாளரின் கட்டணத் தகவலை Shopify பாதுகாப்பாகச் சேமித்துவைக்கிறது. வாடிக்கையாளர் உள்ளிட்ட பிறகு, அவருடைய முழுமையான கிரெடிட் கார்டு தகவலையும் உங்களால் அணுக முடியாது.