முன்பதிவுகள்

கையிருப்பில் இல்லாத அல்லது இன்னும் விற்பனைக்கு வராத தயாரிப்புகளை முன்பதிவுகளாக அமைப்பதன் மூலம் விற்பனை செய்யலாம். நீங்கள் வெளியிடும் புதிய தயாரிப்பிற்கான தேவையை முன்கூட்டியே கணிக்க அல்லது புதிய வெளியீடு குறித்து வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்க முன்பதிவுகளைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் வழங்கும் முன்பதிவு விருப்பத்தேர்வுகளைப் பொறுத்து, வாடிக்கையாளர் ஆர்டர் செய்யும்போது முழுமையாகவோ ஒரு பகுதியாகவோ கட்டணத்தை வசூலிக்கலாம் அல்லது கட்டணம் ஏதும் வசூலிக்காமலும் இருக்கலாம். கட்டணங்களை வசூலிப்பது வாடிக்கையாளரின் கட்டண முறையைச் சேமித்து வைக்கும், அதன் பிறகு நீங்கள் ஆர்டரை நிறைவேற்றி மீதமுள்ள கட்டணத்தை எதிர்காலத்தில் வசூலித்துக்கொள்ளலாம்.

முன்பதிவுகளைப் பயன்படுத்த, Shopify App Store இலிருந்து ஒரு முன்கூட்டிய ஆர்டர் செயலியை (pre-order app) நிறுவி, பிறகு Shopify நிர்வாகியில் முன்பதிவுகளை நிர்வகிக்க வேண்டும். ஒரு உருப்படியை முன்பதிவிற்காக அமைக்க, நீங்கள் நிறுவும் செயலியில் அதற்கான அமைப்பை நிறைவுசெய்ய வேண்டும்.

முன்கூட்டிய ஆர்டர் செயலியை நீங்கள் நிறுவல்நீக்கினால், செயலியில் நீங்கள் உருவாக்கிய முன்பதிவுத் தரவுகள் அனைத்தும் (வாடிக்கையாளரின் கட்டணத் தகவல் தவிர) 48 மணிநேரத்திற்குப் பிறகு நீக்கப்படும். செயலியில் காப்புநகல் (backup) வசதி இருந்தால், பிறகு அந்தத் தரவை மீட்டெடுக்கலாம்.

இந்தப் பிரிவில்