சந்தா ஆர்டர்களை நிர்வகித்தல்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து டெலிவரிக்குப் பணம் செலுத்தும் ஆர்டர்கள் மற்றும் ப்ரீபெய்டு சந்தா ஆர்டர்களை நீங்கள் நிர்வகிக்கலாம்.
டெலிவரிக்குப் பணம் செலுத்தும் ஆர்டர்கள் ஒரு ஆர்டருக்கு ஒரு சந்தா உருப்படியை மட்டுமே கொண்டிருக்கும். சீரான இடைவெளிகளில், புதிய டெலிவரிக்குப் பணம் செலுத்தும் ஆர்டர்கள் உங்கள் சந்தா செயலியால் உருவாக்கப்பட்டு, உங்கள் ஆர்டர்கள் பட்டியலில் காண்பிக்கப்படும். டெலிவரிக்குப் பணம் செலுத்தும் ஆர்டர்கள், சந்தா இல்லாத ஆர்டர்களைப் போலவே நிர்வகிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
ப்ரீபெய்டு சந்தா ஆர்டர்கள் முன்கூட்டியே ஒரு மொத்தத் தொகையில் செலுத்தப்படுகின்றன, ஆனால் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் திட்டமிடப்பட்ட பல நிறைவேற்றங்களைக் கொண்டுள்ளன. ப்ரீபெய்டு சந்தா ஆர்டர்கள் நிறைவேற்றும் தேதியை அடையும் வரை திட்டமிடப்பட்டது என்ற நிலையுடன் ஒரே ஆர்டராகக் காட்டப்படும். நிறைவேற்றத் தேதியை அடைந்ததும், ஆர்டர் நிலை நிறைவேற்றப்படாதது என்று புதுப்பிக்கப்படும், அதன் பின்னர் நீங்கள் ஆர்டரை நிறைவேற்றலாம். அடுத்த நிறைவேற்றத் தேதியை அடையும் வரை ஆர்டரின் நிலை மீண்டும் திட்டமிடப்பட்டது என மாறும், இந்தச் சுழற்சி மீண்டும் தொடங்கும். ஆர்டர் திட்டமிடப்பட்டது என்ற நிலையில் இருக்கும்போது, உங்கள் ஆர்டர்கள் பக்கத்தில் அந்த ஆர்டரைத் தடமறியலாம், ஆனால் நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை.
ஆர்டரில், நிறைவேற்றப்பட்டது, நிறைவேற்றப்படாதது மற்றும் திட்டமிடப்பட்டது என நிறைவேற்றும் கார்டுகளாக வரிசைப்படுத்தப்பட்டுள்ள ப்ரீபெய்டு சந்தா ஆர்டர்களின் அனைத்து உருப்படிகளையும் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். ஆர்டருக்கான அடுத்த திட்டமிடப்பட்ட நிறைவேற்றம், திட்டமிடப்பட்டது நிறைவேற்றும் கார்டில் பட்டியலிடப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட அனைத்து நிறைவேற்றங்களையும் காண்பிக்க, அனைத்து நிறைவேற்றங்களையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
இந்தப் பக்கத்தில்
- உங்கள் ப்ரீபெய்டு சந்தா ஆர்டர்களை வடிகட்டுதல் மற்றும் வரிசைப்படுத்துதல்
- சந்தா ஆர்டர்களைத் திருத்துதல்
- ப்ரீபெய்டு சந்தா ஆர்டர்களை ரத்துசெய்தல் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்
- சரக்கு இருப்பை நிர்வகித்தல்
- சரக்கு இருப்பை ரிசர்வ் செய்தல்
- சந்தா ஆர்டர்களை நிறைவேற்றுதல்
- அதிக ஆபத்துள்ள சந்தா ஆர்டர்களை நிர்வகித்தல்
உங்கள் ப்ரீபெய்டு சந்தா ஆர்டர்களை வடிகட்டுதல் மற்றும் வரிசைப்படுத்துதல்
உடனடி நடவடிக்கை தேவைப்படாத வரவிருக்கும் நிறைவேற்றும் பணிகளைக் காண்பிக்க, உங்கள் ஆர்டர்கள் பக்கத்தை திட்டமிடப்பட்டது நிறைவேற்ற நிலை மூலம் வடிகட்டலாம்.
நிறைவேற்றத் தயாராக இருக்கும் ப்ரீபெய்டு சந்தா ஆர்டர்களைக் காண்பிக்க, உங்கள் ஆர்டர்கள் பக்கத்தை நிறைவேற்றப்படாதது நிலை மூலம் வடிகட்டவும். இயல்புநிலையாக, ஆர்டர்கள் பக்கம் தேதியின்படி வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இதன் பொருள் நிறைவேற்றத் தயாராக இருக்கும் ப்ரீபெய்டு சந்தா ஆர்டர்கள் உங்கள் நிறைவேற்றப்படாத ஆர்டர்களின் பட்டியலின் கீழே செல்லக்கூடும். இந்த ஆர்டர்களைக் காண்பிக்க, உங்கள் ஆர்டர்கள் பக்கத்தைப் பழைய தேதியின்படி வரிசைப்படுத்தலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
ஐகானைக் கிளிக் செய்யவும்.
வடிகட்டியைச் சேர் + என்பதைக் கிளிக் செய்யவும்.
நிறைவேற்ற நிலை என்பதைக் கிளிக் செய்து, பின்னர் நிறைவேற்றப்படாதது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
வரிசைப்படுத்து மெனுவைத் திறக்க, ⇅ என்பதைக் கிளிக் செய்யவும்.
தேதி மற்றும் ↑ பழையதிலிருந்து புதியது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்திற்குரியது: இந்த ஆர்டர் பட்டியல் காட்சிக்குப் பெயரிட்டுச் சேமிக்க, இவ்வாறு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
சந்தா ஆர்டர்களைத் திருத்துதல்
சந்தா உருப்படியைக் கொண்டுள்ள ஆர்டரை நீங்கள் திருத்தலாம். ஆர்டரைத் திருத்துவதால் சந்தா ஒப்பந்தம் மாற்றப்படாது. எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து நிறைவேற்றங்களுக்கும் சந்தா ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க, உங்கள் சந்தா நிர்வாகச் செயலியைப் பயன்படுத்தவும்.
ப்ரீபெய்டு சந்தா ஆர்டர்களைத் திருத்துதல்
திட்டமிடப்பட்ட நிறைவேற்றுதல் உருப்படிகளைக் கொண்டுள்ள ஆர்டரை நீங்கள் திருத்தலாம். ஒரு ஆர்டரில் உள்ள ப்ரீபெய்டு சந்தாத் தயாரிப்புகளைத் திருத்தும்போது பின்வரும் செயல்களை நீங்கள் செய்யலாம்:
- சந்தா உருப்படிக்குத் தள்ளுபடியைச் சேர்த்தல்
- சந்தா உருப்படிக்கான தள்ளுபடியைச் சரிசெய்தல்
- சந்தா உருப்படியிலிருந்து தள்ளுபடியை அகற்றுதல்
- ஒரு முறை வாங்கும் உருப்படியைச் சேர்த்தல்
ஒரு ஆர்டரில் ப்ரீபெய்டு விற்பனைத் திட்டம் இருந்தால், உங்களால் அந்த ஆர்டரை நகலெடுக்கவோ வரிசை உருப்படியின் அளவுகளைத் திருத்தவோ முடியாது.
டெலிவரிக்குப் பணம் செலுத்தும் சந்தா ஆர்டர்களைத் திருத்துதல்
டெலிவரிக்குப் பணம் செலுத்தும் சந்தா உருப்படிகளைக் கொண்டுள்ள ஆர்டரை நீங்கள் திருத்தலாம். ஒரு ஆர்டரில் உள்ள டெலிவரிக்குப் பணம் செலுத்தும் சந்தாத் தயாரிப்புகளைத் திருத்தும்போது பின்வரும் செயல்களை நீங்கள் செய்யலாம்:
- சந்தா உருப்படியின் அளவை அதிகரித்தல்
- சந்தா உருப்படியின் அளவைக் குறைத்தல்
- சந்தா உருப்படிக்குத் தள்ளுபடியைச் சேர்த்தல்
- சந்தா உருப்படிக்கான தள்ளுபடியைச் சரிசெய்தல்
- சந்தா உருப்படியிலிருந்து தள்ளுபடியை அகற்றுதல்
- சந்தாத் தயாரிப்பை அகற்றுதல்
- ஒரு முறை வாங்கும் உருப்படியைச் சேர்த்தல்
ஆர்டரைத் திருத்தும்போது புதிய சந்தாத் தயாரிப்பை உங்களால் சேர்க்க முடியாது. சந்தா ஆர்டரை உங்களால் நகலெடுக்கவும் முடியாது.
ப்ரீபெய்டு சந்தா ஆர்டர்களை ரத்துசெய்தல் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல்
இதுவரை நிறைவேற்றப்படாத ப்ரீபெய்டு சந்தா ஆர்டரை நீங்கள் ரத்துசெய்யலாம். திட்டமிடப்பட்ட ஏதேனும் உருப்படிகள் நிறைவேற்றப்பட்டிருந்தால், உங்களால் ஆர்டரை ரத்துசெய்ய முடியாது, ஆனால் நிறைவேற்றப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட உருப்படிகளுக்கு முழுமையாகவோ பகுதியளவிலோ பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான வசதியை வழங்கலாம்.
உங்கள் வாடிக்கையாளர் ஒரு ஆர்டரை ரத்துசெய்தால், அந்த ஆர்டருக்கான பணத்தை நீங்கள் இன்னும் கைமுறையாகவே திரும்ப வழங்க வேண்டியிருக்கலாம். இது நிகழும்போது ஆர்டரில் ஒரு செய்தி காண்பிக்கப்படும்.
ஆர்டர்கள் பக்கத்திலிருந்து ஒரு ஆர்டருக்கான பணத்தைத் திரும்ப வழங்கும்போது, உங்கள் சந்தா செயலியிலும் அந்த ஆர்டரை ரத்துசெய்ய வேண்டியிருக்கலாம்.
சரக்கு இருப்பை நிர்வகித்தல்
உங்களிடம் சரக்கு இருப்பைத் தடமறியும் தயாரிப்புகள் உங்கள் செயலில் உள்ள சந்தா ஒப்பந்தங்களில் இருந்து, அந்தத் தயாரிப்புகளுக்கு மிகை விற்பனை செய்ய அமைக்கப்பட்டிருக்கவில்லை எனில், உங்கள் சந்தா ஆர்டர்களில் உள்ள சிக்கல்களைத் தடுக்க வரவிருக்கும் டெலிவரி நேரத்தில் உங்களின் தயாரிப்புகள் இருப்பில் (stock) இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். சரக்கு இருப்பைத் தடமறிதல் குறித்து மேலும் அறிக.
நீங்கள் இலவச Shopify Subscriptions செயலியைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், சரக்கு இருப்புச் சிக்கல்கள் உள்ள சந்தா ஒப்பந்தங்களை மதிப்பாய்வு செய்து நிர்வகிக்கலாம், அத்துடன் போதிய சரக்கு இருப்பு இல்லாத சந்தா ஒப்பந்தங்களுக்கான பில்லிங் முயற்சிகளை நிர்வகிக்கலாம்.
சரக்கு இருப்பை ரிசர்வ் செய்தல்
நிறைவேற்றத் தேதியை அடையும்போது ஒவ்வொரு ப்ரீபெய்டு சந்தா ஆர்டர் சுழற்சிக்குமான சரக்கு இருப்பு ரிசர்வ் செய்யப்படும். முழு சந்தா ஆர்டருக்குமான சரக்கு இருப்பு ஆர்டர் உருவாக்கப்படும்போதே ரிசர்வ் செய்யப்படாது. நிறைவேற்றத் தேதிக்கு முன்னதாகவே திட்டமிடப்பட்ட நிறைவேற்றுதலுக்காக சரக்கு இருப்பை ரிசர்வ் செய்ய, திட்டமிடப்பட்ட ஆர்டரை நீங்கள் முன்கூட்டியே நிறைவேற்றலாம்.
சந்தா ஆர்டர்களை நிறைவேற்றுதல்
ஒரு தயாரிப்பின் நிறைவேற்றும் இடம் அல்லது ஷிப்பிங் சுயவிவரத்தின் அடிப்படையில் சந்தா ஆர்டர்களுக்கான நிறைவேற்றங்களை ஒரே ஆர்டருக்குள்ளேயே பிரிக்கலாம்.
முன்பணம் செலுத்தப்பட்ட சந்தா ஆர்டரை நிறைவேற்றுதல்
திட்டமிடப்பட்ட ஒரு ஆர்டர் அதன் நிறைவேற்றும் தேதியை அடையும்போது, ஆர்டர் நிலை நிறைவேற்றப்படாதது எனப் புதுப்பிக்கப்படும், பின்னர் நீங்கள் ஆர்டரை நிறைவேற்றலாம்.
முன்பணம் செலுத்தப்பட்ட சந்தா ஆர்டரை முன்கூட்டியே நிறைவேற்றுதல்
திட்டமிடப்பட்ட நிறைவேற்றங்களை உங்களால் மீண்டும் திட்டமிட முடியாது, ஆனால் ஆர்டரை முன்கூட்டியே நிறைவேற்ற நீங்கள் தேர்வுசெய்யலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் பகுதிக்குச் செல்லவும்.
நீங்கள் முன்கூட்டியே நிறைவேற்ற விரும்பும் ஆர்டரைத் தேர்ந்தெடுக்கவும்.
திட்டமிடப்பட்டது பிரிவில், முன்கூட்டியே நிறைவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் நிறைவேற்றும் தகவலைச் சரிபார்த்துவிட்டு, நிறைவேற்றப்படாததாகக் குறி என்பதைக் கிளிக் செய்யவும். ஆர்டர் நிலை நிறைவேற்றப்படாதது எனப் புதுப்பிக்கப்படும், பின்னர் நீங்கள் உருப்படிகளை நிறைவேற்றலாம்.
அதிக ஆபத்துள்ள சந்தா ஆர்டர்களை நிர்வகித்தல்
தொடக்கச் சந்தா ஆர்டர் அதிக ஆபத்து உள்ளதாகக் குறிக்கப்பட்டால், நீங்கள் அந்த ஆர்டரை நிறைவேற்ற வேண்டும் அல்லது ரத்துசெய்ய வேண்டும். அசல் ஆர்டர் அதிக ஆபத்துள்ளதாகக் குறிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாமல் இருந்தால், அடுத்தடுத்த சந்தா புதுப்பிப்புகள் தோல்வியடையும்.
அதிக ஆபத்துள்ள ஆர்டரை நீங்கள் நிறைவேற்றும்போது, சந்தாவின் ஆபத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறீர்கள், மேலும் எதிர்காலப் புதுப்பிப்புகள் தொடர அனுமதிக்கப்படும். அதிக ஆபத்துள்ள ஆர்டரை நிறைவேற்றக் கூடாது என நீங்கள் முடிவுசெய்தால், அந்த ஆர்டரை நீங்கள் ரத்துசெய்யலாம் மற்றும் அதற்கான பணத்தைத் திரும்பியளிக்கலாம்.
அதிக ஆபத்துள்ள ஆர்டர்களை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிய, மோசடியைத் தடுத்தல் என்பதைப் பார்க்கவும்.