சந்தாத் தள்ளுபடிகள்

நீங்கள் சந்தாத் தயாரிப்புகளை வழங்கினால், X-ஐ வாங்கி Y-ஐப் பெறுங்கள் தள்ளுபடி, தொகைக் கழிவு அல்லது இலவச ஷிப்பிங் தள்ளுபடிகளை உருவாக்கும்போது கூடுதல் விருப்பத்தேர்வுகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் Shopify நிர்வாகியின் தள்ளுபடிகள் பிரிவில் உள்ள தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கு பக்கத்தில் வாங்கும் வகை பிரிவு காட்டப்படும்.

Shopify App Store இலிருந்து சந்தாச் செயலியை நிறுவியிருந்தால், உங்களால் சந்தாவுக்கு நேரடியாகத் தள்ளுபடியைப் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, நீங்கள் இலவச முதல் தரப்பு Shopify Subscriptions செயலியை நிறுவியிருந்தால், சந்தாத் திட்டத்திற்கு நேரடியாகத் தள்ளுபடியைப் பயன்படுத்தலாம்.

தள்ளுபடிகளைச் சந்தாக் கொள்முதல்கள், ஒரு முறை வாங்குதல்கள் அல்லது இரண்டிற்கும் பயன்படுத்த வேண்டுமா என்பதை நீங்கள் பின்வரும் வழிகளில் தேர்வுசெய்யலாம்:

சந்தாத் தயாரிப்புகளுக்குத் தள்ளுபடி வகைகளைப் பயன்படுத்தக்கூடிய வாங்கும் வகைகள் குறித்த விளக்கம்.
தள்ளுபடி வகைவிளக்கம்கிடைக்கும் வாங்கும் வகை
X-ஐ வாங்கி Y-ஐப் பெறுங்கள்உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் உருப்படியை இலவசமாக அல்லது தள்ளுபடி விலையில் வழங்க, இந்தத் தள்ளுபடியைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, நீங்கள் காஃபி சந்தாவுடன் ஒரு இலவசக் கோப்பையை வழங்கலாம். நிபந்தனைகள் பூர்த்தியாகும்போது பயன்படுத்தப்படும் ஒரு தானியங்கு தள்ளுபடியாக X-ஐ வாங்கி Y-ஐப் பெறுங்கள் தள்ளுபடியை அமைக்கலாம் அல்லது தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கலாம். ஷிப்பிங் செலவுகளுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தாது. X-ஐ வாங்கி Y-ஐப் பெறுங்கள் தள்ளுபடியானது பின்வரும் வாங்கும் வகைகளுக்குப் பொருந்தும்:
  • வாங்கப்பட்ட தயாரிப்பு அல்லது தள்ளுபடியின் "X-ஐ வாங்குங்கள்" பகுதியானது சந்தாவாக அல்லது ஒரு முறை வாங்குதலாக இருக்கலாம்.
  • சேர்க்கப்பட்ட தயாரிப்பு அல்லது தள்ளுபடியின் "Y-ஐப் பெறுங்கள்" பகுதியானது ஒரு முறை வாங்குதலாக இருக்க வேண்டும்.
தொகைக் கழிவுஒரு ஆர்டரில் உள்ள தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு நிலையான மதிப்பு அல்லது சதவீதத் தள்ளுபடியை வழங்க இந்தத் தள்ளுபடியைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் ஒரு முறை வாங்குவதற்குப் பதிலாக சந்தாவைத் தேர்ந்தெடுக்கும்போது 10% தள்ளுபடியை வழங்கலாம். நிபந்தனைகள் பூர்த்தியாகும்போது பயன்படுத்தப்படும் ஒரு தானியங்கு தள்ளுபடியாகத் தொகைக் கழிவுத் தள்ளுபடியை அமைக்கலாம் அல்லது தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கலாம். ஷிப்பிங் செலவுகளுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தாது.நீங்கள் தொகைக் கழிவுத் தள்ளுபடியைப் பின்வரும் வாங்கும் வகைகளில் ஏதேனும் ஒன்றுக்கோ அல்லது இரண்டிற்குமோ பயன்படுத்தலாம்:
  • சந்தாக் கொள்முதல்கள்
  • ஒரு முறை வாங்குதல்கள்
இலவச ஷிப்பிங்உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஷிப்பிங் வழங்க, இந்தத் தள்ளுபடியைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, சந்தா ஆர்டரின் முதல் டெலிவரியின்போது இலவச ஷிப்பிங்கிற்கான தள்ளுபடியை நீங்கள் வழங்கலாம். நிபந்தனைகள் பூர்த்தியாகும்போது பயன்படுத்தப்படும் ஒரு தானியங்கு தள்ளுபடியாக இலவச ஷிப்பிங் தள்ளுபடியை அமைக்கலாம் அல்லது தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கலாம்.நீங்கள் இலவச ஷிப்பிங் தள்ளுபடியைப் பின்வரும் வாங்கும் வகைகளில் ஏதேனும் ஒன்றுக்கோ அல்லது இரண்டிற்குமோ பயன்படுத்தலாம்:
  • சந்தாக் கொள்முதல்கள்
  • ஒரு முறை வாங்குதல்கள்

ஒரு தள்ளுபடியின் வாங்கும் வகையை மாற்றுதல்

நீங்கள் தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கும்போது, தள்ளுபடியின் பயன்பாட்டைக் குறிப்பிட்ட வாங்கும் வகைகளுக்கு மட்டுப்படுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம். தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கு பக்கத்தில் உள்ள வாங்கும் வகை பிரிவில் சந்தா என்பதைத் தேர்ந்தெடுத்தால், அனைத்துச் சந்தாத் தயாரிப்புகளுக்கும், குறிப்பிட்ட சேகரிப்பில் உள்ள அனைத்துச் சந்தாத் தயாரிப்புகளுக்கும் அல்லது குறிப்பிட்ட சந்தாத் தயாரிப்புகளுக்கும் தள்ளுபடியைப் பயன்படுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம்.

நீங்கள் புதுப்பிக்க விரும்பும் தள்ளுபடிக் குறியீடு முன்பே இருந்தால், சந்தா அடிப்படையிலான விதிகளைச் சேர்க்க, உங்கள் தள்ளுபடிக் குறியீட்டைத் திருத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தள்ளுபடிகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தள்ளுபடியைக் கிளிக் செய்யவும்.

  3. வாங்கும் வகை பிரிவில், உங்கள் தள்ளுபடிக் குறியீட்டை எந்த வாங்கும் வகைக்கு மட்டுப்படுத்த விரும்புகிறீர்களோ அதைத் தேர்வுசெய்யவும்:

    • உங்கள் தள்ளுபடிக் குறியீட்டுக்கான வாங்கும் வகையாக சந்தா என்பதைத் தேர்ந்தெடுத்தால், எந்தச் சந்தாத் தயாரிப்புகளுக்குத் தள்ளுபடியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். குறிப்பிட்ட சந்தாத் தயாரிப்புகள் அல்லது குறிப்பிட்ட சேகரிப்புக்கு உங்கள் தள்ளுபடிக் குறியீட்டின் பயன்பாட்டை நீங்கள் மட்டுப்படுத்தலாம்.
    • குறிப்பிட்ட சந்தாத் தயாரிப்பு அல்லது சேகரிப்புக்கு உங்கள் தள்ளுபடியை மட்டுப்படுத்த நீங்கள் தேர்வுசெய்தால், காட்டப்படும் உலாவு பொத்தானைப் பயன்படுத்தி உங்கள் தயாரிப்பு அல்லது சேகரிப்பைத் தேடவும்.

இலவச ஷிப்பிங் தள்ளுபடியில் பயன்பாட்டு வரம்புகளை மாற்றுதல்

சந்தாத் தயாரிப்புகளுக்குப் பொருந்தும் இலவச ஷிப்பிங் தள்ளுபடியை நீங்கள் வழங்கினால், தள்ளுபடி எவ்வளவு காலம் பொருந்தும் என்பதைக் குறிப்பிடலாம். உங்கள் இலவச ஷிப்பிங் தள்ளுபடியை முதல் பேமெண்ட்டுக்கு மட்டுப்படுத்தவோ, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேமெண்ட்டுகளுக்கு மட்டுப்படுத்தவோ அல்லது எதிர்காலத்தில் செலுத்தப்படும் அனைத்துச் சந்தா பேமெண்ட்டுகளுக்கும் இலவச ஷிப்பிங்கைச் செயல்படுத்தவோ நீங்கள் தேர்வுசெய்யலாம்.

நீங்கள் புதுப்பிக்க விரும்பும் இலவச ஷிப்பிங் தள்ளுபடி முன்பே இருந்தால், சந்தா அடிப்படையிலான விதிகளைச் சேர்க்க, உங்கள் தள்ளுபடிக் குறியீட்டைத் திருத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தள்ளுபடிகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் இலவச ஷிப்பிங் தள்ளுபடியைக் கிளிக் செய்யவும்.

  3. தள்ளுபடியைத் திருத்தும் கருவியின் வாங்கும் வகை பிரிவில் வாங்கும் வகையை சந்தா எனப் புதுப்பிக்கவும்.

  4. பயன்பாட்டு வரம்புகள் பிரிவில், சந்தாக்களுக்கான தொடர் பேமெண்ட்டுகள் என்பதன் கீழ் உங்கள் தள்ளுபடிக்குப் பயன்படுத்த விரும்பும் வரம்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.

சந்தா ஒப்பந்தங்களில் தள்ளுபடிக் குறியீட்டின் காலாவதி

சந்தாவுக்குத் தள்ளுபடிக் குறியீடு பயன்படுத்தப்படும்போது, அந்தத் தள்ளுபடியின் ஸ்னாப்ஷாட் சந்தா ஒப்பந்தத்தில் சேமிக்கப்படும். இந்த ஸ்னாப்ஷாட் அசல் தள்ளுபடிக் குறியீட்டைச் சார்ந்திருக்காது. தள்ளுபடிக் குறியீட்டை நீங்கள் காலாவதியாக்கினாலோ முடக்கினாலோ, தற்போதைய சந்தா ஒப்பந்தங்களில் தொடர்ந்து தள்ளுபடி பயன்படுத்தப்படும்.

தள்ளுபடி எத்தனை கட்டணச் சுழற்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தானாகவே மட்டுப்படுத்த, சந்தாக்களுக்கான தொடர் பேமெண்ட்டுகள் அமைப்பே ஒரே வழியாகும். தற்போதைய சந்தா ஒப்பந்தத்தில் இருந்து ஒரு தள்ளுபடியை அகற்ற, உங்கள் சந்தாச் செயலியைப் பயன்படுத்தவும்.