வாடிக்கையாளர்களின் சேமிக்கப்பட்ட கட்டண முறைகளை Shopify-க்கு இடமாற்றுதல்

நீங்கள் Shopify-க்கு இடமாறுகிறீர்கள் அல்லது ஸ்டோர்களை ஒருங்கிணைக்கிறீர்கள் என்றால், கட்டண முறையை இடமாற்றுவதன் மூலம் சந்தாக்கள் மற்றும் ஒரு முறை வாங்குதல்களுக்கான ஆதரிக்கப்படும் சேமிக்கப்பட்ட கட்டண முறைகளைப் பாதுகாக்க முடியும். கிடைக்கக்கூடிய முறையானது உங்கள் நுழைவாயில் மற்றும் அமைவைப் பொறுத்தது. சில கணக்கு மாற்றங்களுக்கு, வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டண முறைகளை மீண்டும் சேர்க்க வேண்டியிருக்கும்.

இடமாற்றச் சூழல்கள் மற்றும் தேவைகள்

இடமாற்றத் தேவைகள் சூழலைப் பொறுத்து மாறுபடும் மற்றும் சில சூழ்நிலைகளுக்கு இடமாற்றம் தேவையில்லை.

இடமாற்றப் பயன்பாட்டு நிகழ்வுகள் மற்றும் தேவையான ஆதாரங்கள்
பயன்பாட்டு நிகழ்வுவிளக்கம்இடமாற்றம் தேவையா?ஆதாரங்கள் மற்றும் செயல்கள்
சேமிக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்காக Shopify Payments மூலம் சந்தை அல்லது சட்டப்பூர்வ நிறுவனத்தை மாற்றுதல்UK நிறுவனத்திலிருந்து கனடா நிறுவனத்திற்கு மாறுவது போன்ற, உங்கள் சந்தை அல்லது சட்டப்பூர்வ நிறுவனத்தை மாற்றி, ஏற்கனவே உள்ள உங்கள் Shopify Payments கணக்கை மூடிவிட்டு புதியதைத் திறக்கிறீர்கள். உங்கள் ஸ்டோர் ID அப்படியே இருக்கும்.✘உங்கள் தற்போதைய சந்தாக்கள் தொடர்ந்து செயலாக்கப்படும். உங்களின் சந்தா ஒப்பந்தங்கள், கட்டண முறைகள் இரண்டுமே அப்படியே இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களின் கட்டண முறைகளை மீண்டும் சேர்க்க வேண்டியதில்லை.
சந்தாக்களுக்குப் பயன்படுத்தும் PayPal கணக்கை மாற்றுதல்சில சட்டப்பூர்வ நிறுவன மாற்றங்களின் போது, வேறுபட்ட PayPal கணக்கை நீங்கள் இணைக்கிறீர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள சந்தாதாரர்கள் PayPal மூலம் கட்டணம் செலுத்துவார்கள்.வாடிக்கையாளர் செயல்பட வேண்டியிருக்கலாம்உங்களின் கணக்கு மாற்றத்தை Shopify ஆதரவுடன் உறுதிப்படுத்தவும். புதிய கணக்கினால், தற்போதைய பில்லிங் ஒப்பந்தங்களைப் பயன்படுத்த முடியாவிட்டால், பாதிக்கப்பட்ட சந்தாதாரர்கள் தங்கள் கட்டண முறையைப் புதுப்பிக்க வேண்டும். PayPal சந்தாக்கள் மற்றும் கணக்கு மாற்றங்கள் என்பதைப் பார்க்கவும்.
Shopify-இல் கார்டுகள் சேமிக்கப்பட்டுள்ள நிலையில், உங்கள் முதன்மை நுழைவாயிலில் கட்டண வழங்குநர்களை மாற்றுதல்உங்கள் முதன்மை நுழைவாயிலாகச் செயல்படுத்தப்பட்ட கட்டண வழங்குநரை நீங்கள் மாற்றுகிறீர்கள், உதாரணமாக Stripe போன்ற மூன்றாம் தரப்பு வழங்குநரிடமிருந்து Shopify Payments-க்கு அல்லது Shopify Payments-லிருந்து Authorize.net-க்கு மாற்றுகிறீர்கள். உங்கள் வாடிக்கையாளர்களின் கட்டண முறைகள் ஏற்கனவே Shopify-இல் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டுள்ளன.✘உங்களின் அமைப்பிற்கு இடமாற்றம் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்த, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். ஆதரவுக் குழு இதை உறுதிசெய்த பிறகு, உங்களின் முதன்மை நுழைவாயிலை உங்களின் புதிய கட்டண வழங்குநருக்கு மாற்றலாம்.
நுழைவாயிலால் டோக்கன்கள் வைத்திருக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நிலை நுழைவாயிலில் இருந்து மாறுதல்Stripe போன்ற மூன்றாம் தரப்புச் செயலாக்கியை, உங்கள் இரண்டாம் நிலை நுழைவாயிலாகப் பயன்படுத்துகிறீர்கள், இது மரபுவழிச் சந்தாக் கட்டண நுழைவாயில் எனவும் அழைக்கப்படுகிறது மற்றும் உங்களின் சந்தா ஒப்பந்தங்கள், Shopify-இல் பாதுகாக்கப்பட்ட கட்டண முறைகளுக்குப் பதிலாக, அந்த நுழைவாயிலின் கட்டண டோக்கன்களைப் பயன்படுத்துகின்றன. உங்கள் முதன்மை நுழைவாயிலாகச் செயல்படுத்தப்பட்டுள்ள எந்தவொரு கட்டண வழங்குநருக்கும் இது பொருந்தும்.✔உங்கள் கட்டண முறைகளை இடமாற்றவும். Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும் அல்லது Shopify Professional Services-ஐப் பயன்படுத்தவும்.
பல ஸ்டோர்களை ஒன்றாக ஒருங்கிணைத்தல்நீங்கள் சந்தாக்களைக் கொண்டுள்ள ஒரு Shopify ஸ்டோர் உரிமையாளராக இருந்து, சந்தைகள் அம்சத்தைப் பயன்படுத்த ஸ்டோர்களை ஒருங்கிணைக்க விரும்புகிறீர்கள்.✔கட்டண முறைகளை இடமாற்ற, Shopify Professional Services-ஐப் பயன்படுத்தவும். API-ஐப் பயன்படுத்திச் சந்தா ஒப்பந்தங்களை மீண்டும் உருவாக்கவும்.
Shopify-க்கு இடமாறும் Enterprise வணிகம்Shopify-க்கு இடமாறும் ஒரு நிறுவன வணிகமான நீங்கள், ஒரு முறை வாங்குதல்களுக்கான சேமிக்கப்பட்ட கட்டண முறைகளைத் தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்.✔Shopify Professional Services-ஐப் பயன்படுத்தவும். முதன்மைக் கணக்கு எண் (PAN) இடமாற்றத்திற்கு, உங்கள் ஸ்டோர் Shopify Plus அல்லது Enterprise திட்டத்தில் இருக்க வேண்டும்.
Shopify-க்கு இடமாறும் சந்தா வணிகம்நீங்கள் மற்றொரு பிளாட்ஃபார்மில் இருந்து Shopify-க்கு இடமாறும் ஒரு சந்தா வணிகம் ஆகும்.✔மெதுவான இடமாற்ற முறையுடன்கூடிய இரண்டாம் நிலை நுழைவாயில் அல்லது Shopify Professional Services-ஐப் பயன்படுத்தவும்.

உங்கள் சந்தைகள் அமைவு அல்லது சட்டப்பூர்வ நிறுவனத்தை நீங்கள் மாற்றும்போது, உங்களின் தற்போதைய Shopify Payments கணக்கை மூடிவிட்டு புதிய கணக்கைத் திறக்க வேண்டியிருக்கலாம். இடமாற்றம் இல்லாமலேயே உங்களின் தற்போதைய சந்தாக்கள் தொடர்ந்து செயலாக்கப்படலாம், அத்துடன் உங்களின் சந்தா ஒப்பந்தங்கள், கட்டண முறைகள் இரண்டுமே அப்படியே இருக்கும். உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டண முறைகளை மீண்டும் சேர்க்க வேண்டியதில்லை. இடமாற்றம் தேவைப்படுகின்ற, பல ஷாப்களை ஒன்றாக ஒருங்கிணைக்கும் முறையிலிருந்து இந்தச் சூழல் வேறுபட்டது.

உங்கள் ஸ்டோரில் செயலில் உள்ள Shopify Payments கணக்கு இல்லாத எந்தவொரு காலக்கட்டத்திலும் Shopify Payments மீதான சந்தாப் பில்லிங் தோல்வியடையும்.

PayPal மூலம் செலுத்தப்பட்ட சந்தாக்களுக்கு, PayPal கணக்கில் மாற்றம் இருக்கிறதா என்பதைப் பொறுத்து இதன் தாக்கம் இருக்கும். PayPal சந்தாக்கள் மற்றும் கணக்கு மாற்றங்கள் என்பதைப் பார்க்கவும்.

சந்தாக்களுக்குப் பயன்படுத்தப்படும் PayPal கணக்கை மாற்றுவது, புதுப்பித்தல்களைத் தடைசெய்யலாம். PayPal பில்லிங் ஒப்பந்தங்கள், அவற்றை உருவாக்கிய கணக்கிற்கே சொந்தமானவை. முந்தைய கணக்கின் ஒப்பந்தங்களைப் புதிய கணக்கினால் பயன்படுத்த முடியாவிட்டால், புதிய PayPal செக்அவுட்கள் செயல்பட்டாலும் தற்போதைய புதுப்பித்தல்கள் தோல்வியடையக்கூடும்.

சட்டப்பூர்வ நிறுவன மாற்றம், உங்கற்குக் கிடைக்கும் கணக்கு மற்றும் கட்டண முறைகளைப் பாதிக்கலாம். சந்தைகளின் அமைப்புகளை மாற்றுவது மட்டுமே, உங்கள் PayPal கணக்கை மாற்றாது. கணக்குகளை மாற்றுவதற்கு முன்பு, Shopify ஆதரவு மற்றும் உங்கள் சந்தாச் செயலி வழங்குநரைத் தொடர்புகொண்டு தாக்கத்தை உறுதிசெய்து, வாடிக்கையாளர்களைச் சென்றடைவதற்கான திட்டத்தை வகுக்கவும்.

உங்களின் புதிய நிறுவனம் மற்றும் ஒருங்கிணைப்பைப் பொறுத்து, PayPal கிடைக்கும் தன்மை இருக்கும். பிரான்ஸில் உள்ள PayPal Wallet, அமெரிக்காவில் உள்ள PayPal Wallet அல்லது PayPal Express Checkout மற்றும் சந்தாக் குறிப்புப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றுக்கான தேவைகளைச் சரிபார்க்கவும். நீங்கள் வழங்கத் திட்டமிடும் கட்டண முறையை, உங்களின் புதுப்பிப்பு ஓட்டம் ஆதரிக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும்.

வாடிக்கையாளர்கள் PayPal-க்கு மீண்டும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று Shopify ஆதரவு உறுதிப்படுத்தினால், பரவலாகச் சென்றடைவதற்கு முன்பு மீட்டெடுப்பைச் சரிபார்க்க பின்வரும் செயல்முறையைப் பயன்படுத்தவும்:

படிகள்:

  1. உங்களின் சந்தாச் செயலியில், முந்தைய PayPal கணக்கில் உள்ள ஒப்பந்தங்களைப் பயன்படுத்தும் செயலில் உள்ள சந்தாக்களைக் கண்டறியவும். அடுத்து வரும் புதுப்பித்தல் இன்னும் தோல்வியடையாத ஒப்பந்தங்களையும் சேர்க்கவும்.
  2. சோதனையை முடிக்கக்கூடிய ஒரு வாடிக்கையாளருக்குப் பாதிக்கப்பட்டுள்ள 1 ஒப்பந்தத்திற்கான கட்டண முறைப் புதுப்பிப்பு இணைப்பை அனுப்பவும். உங்கள் செயலி வழங்குநரோ Shopify ஆதரவோ உறுதிப்படுத்தியுள்ளபடி, PayPal-ஐ ஆதரிக்கும் ஓட்டத்தைப் பயன்படுத்தவும். PayPal கிடைக்கவில்லை எனில், வேறொரு கட்டண முறைக்கு மாறுவதற்கான ஆதரிக்கப்படும் ஓட்டத்தை உறுதிப்படுத்தவும்.
  3. வாடிக்கையாளர் புதுப்பிப்பை முடித்த பிறகு, 1 புதுப்பித்தல் மறுமுயற்சிக்காக உங்களின் செயலி வழங்குநருடன் ஒருங்கிணைந்து செயல்படவும். முதலில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட முயற்சி உள்ளதா எனப் பார்த்து, இரட்டிப்புக் கட்டணம் ஏதுமில்லாமல் மறுமுயற்சி வெற்றியடைவதை உறுதிப்படுத்தவும்.
  4. வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டுள்ள மீதமுள்ள வாடிக்கையாளர்களின் அடுத்தப் புதுப்பித்தலுக்கு முன் அவர்களைத் தொடர்புகொள்ளவும். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் 1 புதுப்பிப்புக் கோரிக்கையை அனுப்பவும். ஒரு ஒப்பந்தம் பல சந்தாக்களை ஆதரிக்க முடியும், அத்துடன் ஒரு வாடிக்கையாளர் பல ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கலாம்.

சோதனை தோல்வியடைந்தால், பரந்த அளவிலான சென்றடைதலை இடைநிறுத்திவிட்டு, வாடிக்கையாளர் ID, புதுப்பிப்பு மற்றும் மீண்டும் முயன்ற நேரங்களுடன் Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தை மீட்டெடுக்க முடியாதபோது மட்டுமே மாற்றுச் சந்தாவைப் பயன்படுத்தவும். புதிய சந்தா அதன் விலை நிர்ணயம், தள்ளுபடிகள், பில்லிங் கால அளவு அல்லது நாணயத்தைத் தக்கவைக்காமல் போகலாம்.

முதன்மை நுழைவாயிலில் கட்டண வழங்குநர்களை மாற்றுதல்

உங்கள் முதன்மை நுழைவாயிலாகச் செயல்படுத்தப்பட்டுள்ள கட்டண வழங்குநரை மாற்றினால், நீங்கள் கட்டண முறைகளை இடமாற்ற வேண்டியதில்லை. நீங்கள் Stripe போன்ற மூன்றாம் தரப்பு வழங்குநரிலிருந்து Shopify Payments-க்கோ அல்லது Shopify Payments-லிருந்து Authorize.net போன்ற மூன்றாம் தரப்பு வழங்குநருக்கோ மாறலாம். உங்கள் வாடிக்கையாளர்களின் கட்டண முறைகள் ஏற்கனவே Shopify-இல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் போது, உங்கள் முதன்மை நுழைவாயிலை புதிய கட்டண வழங்குநருக்கு மாற்றலாம்.

இரண்டாம் நிலை நுழைவாயிலிலிருந்து மாறுதல்

மரபுவழிச் சந்தா கட்டண நுழைவாயில் எனவும் அழைக்கப்படும் இரண்டாம் நிலை நுழைவாயிலானது, Stripe போன்ற மூன்றாம் தரப்புச் செயலாக்கி மூலம் நீங்கள் ஏற்கனவே கொண்டுள்ள சந்தா ஒப்பந்தங்களுக்கு பில் செய்கிறது. உங்கள் வாடிக்கையாளர்களின் கட்டண முறைகள், Shopify-க்கு வெளியே அந்தச் செயலாக்கியால் நிர்வகிக்கப்படுகின்றன, மேலும் உங்கள் சந்தா ஒப்பந்தங்கள் நுழைவாயிலின் கட்டண டோக்கன்களைப் பயன்படுத்துகின்றன. உங்கள் முதன்மை நுழைவாயிலாகச் செயல்படுத்தப்படும் கட்டண வழங்குநர் எதுவாக இருந்தாலும் இது பொருந்தும்.

உங்கள் இரண்டாம் நிலை நுழைவாயில் செயலில் இருக்கும்போது, உங்கள் வாடிக்கையாளர்களின் கட்டண முறைகள் ஒவ்வொன்றாக உங்கள் முதன்மை நுழைவாயிலுக்கு நகரும். வாடிக்கையாளர் அவரது பில்லிங் விவரங்களைப் புதுப்பிக்கும்போது ஒரு கட்டண முறை நகர்கிறது, அதன் பிறகு அது Shopify-இல் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. இந்தப் படிப்படியான இடமாற்றம் மெதுவான துளி முறை ஆகும், உங்கள் வாடிக்கையாளர்கள் தங்களது பில்லிங் விவரங்களை எப்போது புதுப்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, இது எவ்வளவு காலம் எடுக்கும் என்பது அமையும்.

இரண்டாம் நிலை நுழைவாயிலின் கட்டண முறைகள் அனைத்தும் நகர்த்தப்படுவதற்கு முன்பே அதனை முடக்க, அது இன்னமும் வைத்திருக்கும் கட்டண முறைகளை Shopify-க்குள் இடமாற்ற Shopify Professional Services-ஐப் பயன்படுத்தவும். இந்த இடமாற்றத்திற்கு உங்கள் ஸ்டோர் Shopify Plus அல்லது நிறுவனத் திட்டத்தில் இருக்க வேண்டும். பிற திட்டங்களில், கடைசிக் கட்டண முறை நகர்த்தப்படும் வரை உங்கள் இரண்டாம் நிலை நுழைவாயிலைச் செயலிலேயே வைத்திருக்கவும்.

கட்டண இடமாற்றத்திற்கான தொடர்புகொள்ளல் தகவல்

உங்களின் கட்டண இடமாற்றத் தேவைகளைப் பற்றி விவாதிக்க, உங்களின் வாடிக்கையாளர் வெற்றி மேலாளரை (CSM) அல்லது Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

உங்களின் கட்டண இடமாற்றத் தேவைகள் குறித்து விவாதிக்க Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும்போது, உங்கள் தற்போதைய அமைவு பற்றிய பின்வரும் தகவலைச் சேர்க்கவும்:

  • உங்கள் தற்போதைய கட்டண வழங்குநர் அல்லது கட்டண நுழைவாயில்.
  • உங்களின் செயலில் உள்ள சந்தாதாரர்கள் அல்லது சேமிக்கப்பட்ட கட்டண முறைகளின் உத்தேச எண்ணிக்கை.
  • நீங்கள் ஏற்கும் கட்டண முறை வகைகள்.

Shopify Professional Services கட்டண இடமாற்றச் சேவை

கட்டண அட்டைத் துறை (PCI) கிரெடிட் கார்டு தரவை, கட்டணச் சேவையாக உங்களின் Shopify ஸ்டோருக்கு இடமாற்ற, நீங்கள் Shopify Professional Services-ஐப் பயன்படுத்தலாம். Shopify Professional Services-ஐப் பெறுவதற்கு உங்களின் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் அல்லது Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும்போது, கட்டணத் தரவு இடமாற்றத்தைச் செயல்படுத்துவதற்கு முன், அந்தச் சேவைக் குழுவானது தொழில்நுட்பத் தேவைகளைப் புரிந்துகொள்ள உங்களுடனும் மூன்றாம் தரப்புக் கட்டண நுழைவாயிலுடனும் தொடர்புகொள்ளும்.

Shopify Professional Services-ஐத் தொடர்புகொள்ளும்போது கவனிக்க வேண்டியவை

உங்களின் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் அல்லது Shopify ஆதரவைத் தொடர்புகொள்வதற்கு முன், பின்வரும் கவனிக்க வேண்டிய அம்சங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • உங்கள் முதன்மைக் கணக்கு எண்களை (PANs) இடமாற்ற, உங்கள் ஸ்டோர் Shopify Plus அல்லது நிறுவனத் திட்டத்தில் இருக்க வேண்டும்.
  • இந்தச் சேவையின் மூலம் கிரெடிட் கார்டு PANகளை மட்டுமே உங்களால் இறக்குமதி செய்ய முடியும். Venmo, Apple Pay மற்றும் Google Pay போன்ற விரைவுபடுத்தப்பட்ட வாலட்டுகள் மற்றும் வங்கிக் கணக்குத் தகவல்களுக்கு ஆதரவு இல்லை.
  • இந்தச் சேவையின் மூலம் உங்களால் PayPal பில்லிங் ஒப்பந்தங்களை இடமாற்ற முடியாது. இடமாற்றத்தைத் திட்டமிடுவதற்கு முன், உங்களின் தற்போதைய PayPal கணக்கைத் தனி API இறக்குமதி ஓட்டம் ஆதரிக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உங்கள் சந்தா செயலியை உருவாக்குபவரைக் கேட்கவும்.

உங்கள் PCI கிரெடிட் கார்டு தரவை உங்கள் Shopify ஸ்டோருக்கு இடமாற்ற, நீங்கள் Shopify Professional Services-ஐப் பயன்படுத்தினால், பின்வரும் தகவலை வழங்க வேண்டும்:

  • நீங்கள் இடமாற்ற விரும்பும் செயலில் உள்ள சந்தாக்களின் எண்ணிக்கை.
  • நீங்கள் பயன்படுத்தும் கட்டண நுழைவாயில்கள்.
  • உங்கள் சந்தா செயலி வழங்குநரின் பெயர்.

கட்டண இடமாற்ற வரம்புகள்

முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட கட்டணத் தரவை நகர்த்துவதன் இயல்புக் காரணமாகக் கட்டண முறைகளை இடமாற்றுவது சிக்கலானதாக இருக்கலாம். ஆதரவற்ற கட்டண நுழைவாயில்கள் மற்றும் உள்ளூர் கட்டண முறைகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய வரம்புகள் இருக்கலாம். உங்கள் இடமாற்றத்திற்குப் பொருந்தக்கூடிய குறிப்பிட்ட வரம்புகளைப் பற்றி விவாதிக்க Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

Enterprise-க்கான சேமிக்கப்பட்ட கட்டண முறைகளை இடமாற்றுதல்

உங்கள் ஸ்டோர் நிறுவனத் திட்டத்தில் இருந்தால், ஒரு முறை வாங்குதல்களுக்காக உங்கள் வாடிக்கையாளர்களின் கட்டண முறைகளை நீங்கள் சேமிக்கலாம். இந்தக் கட்டண முறைகளை உங்கள் Shopify ஸ்டோருக்கு இடமாற்ற, நீங்கள் Shopify Professional Services-ஐப் பயன்படுத்தலாம்.

Enterprise-க்கான கட்டண இடமாற்றம் குறித்து மேலும் அறிய, உங்களின் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் அல்லது Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

சந்தா கட்டண முறைகளை இடமாற்றுதல்

கிரெடிட் கார்டு முதன்மைக் கணக்கு எண்களை (PANs) இடமாற்ற, உங்கள் ஸ்டோர் Shopify Plus அல்லது நிறுவனத் திட்டத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்பதுடன் அது Shopify Professional Services-ஐப் பயன்படுத்துகிறது. கட்டண டோக்கன்களை இடமாற்றுவது அனைத்து Shopify திட்டங்களிலும் கிடைக்கிறது, மேலும் உங்கள் சந்தா செயலியை உருவாக்குபவரின் ஆதரவுடன் இதனை முடிக்க முடியும்.

உங்களின் சந்தா கட்டண முறைகளை இடமாற்ற, Shopify உடனும் உங்கள் சந்தா கட்டணச் செயலியை உருவாக்குபவருடனும் தொடர்புகொள்ள வேண்டும். நீங்கள் கட்டண டோக்கன்களை இடமாற்றுகிறீர்களா அல்லது கிரெடிட் கார்டு தரவை இடமாற்றுகிறீர்களா என்பதைப் பொறுத்துப் படிகள் அமையும்:

  • கட்டண டோக்கன்களை இடமாற்ற, உங்களின் சந்தா செயலியை உருவாக்குபவருடன் இணைந்து செயல்படவும்.
  • கிரெடிட் கார்டு தரவை இடமாற்ற, Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். உங்கள் ஸ்டோர் Shopify Plus அல்லது நிறுவனத் திட்டத்தில் இருக்க வேண்டும்.

Shopify-க்குள் உங்கள் தகவலை இறக்குமதி செய்ய பின்வரும் பணிகளை முடிக்கவும்.

வாடிக்கையாளர் பதிவேடுகள் மற்றும் தயாரிப்புகளை இறக்குமதி செய்தல்

கட்டண முறைகளை இடமாற்றுவதற்கு முன், உங்கள் Shopify ஸ்டோரில் தொடர்புடைய வாடிக்கையாளர் சுயவிவரங்கள் இருப்பதை உறுதிசெய்யவும். வாடிக்கையாளர் பதிவேடுகளை இறக்குமதி செய்வதற்கு அல்லது உருவாக்குவதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள். வாடிக்கையாளர் சுயவிவரங்களை உருவாக்குவது குறித்து மேலும் அறிக.

உங்கள் சந்தா ஒப்பந்தங்களை மீண்டும் உருவாக்குவதற்கு முன், உங்கள் ஸ்டோரில் உங்கள் தயாரிப்புகளையும் சேர்க்க வேண்டும்.

கட்டண முறைகளை இறக்குமதி செய்தல் அல்லது அமைத்தல்

உங்கள் Shopify ஸ்டோரில் உங்கள் வாடிக்கையாளர் சுயவிவரங்களைச் சேர்த்த பிறகு, உங்களின் கட்டண முறைகளை இறக்குமதி செய்யவும் அல்லது அமைக்கவும். பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் கட்டண முறைகளை நீங்கள் இறக்குமதி செய்யலாம்:

  • நீங்கள் வேறொரு தளத்திலிருந்து Shopify-க்கு இடமாறுகிறீர்கள் எனில், உங்கள் கட்டண முறைகளை இடமாற்றுவதற்கு மெதுவான துளி முறையிலான இரண்டாம் நிலை நுழைவாயிலைப் பயன்படுத்தலாம் அல்லது Shopify Professional Services-ஐத் தொடர்புகொள்ளலாம்.
  • நீங்கள் தற்போதுள்ள Shopify கடையின் உரிமையாளராக இருந்து, பல ஸ்டோர்களை ஒருங்கிணைக்கவோ அல்லது இரண்டாம் நிலை மற்றும் முதன்மை நுழைவாயிலுக்கு இடையில் கட்டண முறைகளை நகர்த்தவோ விரும்பினால், உங்களின் கட்டண முறைகளை இடமாற்ற Shopify Professional Services-ஐத் தொடர்புகொள்ள வேண்டும்.

சந்தா ஒப்பந்தங்களை மீண்டும் உருவாக்குதல்

கட்டண முறைகளை இடமாற்றிய பிறகு, ஏற்கனவே உள்ள சந்தா ஒப்பந்தங்களை மீண்டும் உருவாக்க Shopify-இன் அப்ளிகேஷன் புரோகிராமிங் இண்டர்ஃபேஸ்களைப் (APIs) பயன்படுத்தவும். இந்தப் படிக்கு நீங்களோ அல்லது உங்களின் சந்தா செயலி விற்பனையாளரோ பொறுப்பாவீர்கள். இதை முடித்த பிறகு, உங்களின் வாடிக்கையாளர்களின் சந்தா ஆர்டர்களைச் செயலாக்குவதைத் தொடரலாம்.

இரண்டாம் நிலை நுழைவாயிலுடன் கூடிய மெதுவான துளி கட்டண முறை இடமாற்றம்

கார்டு காலாவதியாகும்போது, வாடிக்கையாளர்கள் தங்களது பில்லிங் தகவலைப் புதுப்பிப்பதைப் போல, அவர்களின் கட்டண முறைகள் இரண்டாம் நிலை நுழைவாயிலிலிருந்து முதன்மை நுழைவாயிலுக்கு நகரும். மெதுவான துளி முறை என்றும் அழைக்கப்படும் இந்தப் படிப்படியான மாற்றமானது, வாடிக்கையாளர்கள் தங்களின் பில்லிங் விவரங்களை எப்போது புதுப்பிக்கத் தேர்வுசெய்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அனைத்துக் கட்டண முறைகளையும் முழுமையாக இடமாற்றுவதற்கு மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம் என்பதைக் குறிக்கிறது.

கிரெடிட் கார்டுகளை நேரடியாக இடமாற்றாமல் Shopify-க்குள் சந்தா ஒப்பந்தங்களை இறக்குமதி செய்ய, API கருவிகளின் தொகுப்பை நீங்கள் பயன்படுத்தலாம், அத்துடன் பின்வரும் கட்டண நுழைவாயில்களில் இருந்து வாடிக்கையாளர் தகவலை Shopify-க்கு உங்களால் இடமாற்ற முடியும்:

  • Stripe
  • Braintree
  • PayPal Express
  • Authorize.net

இந்த நுழைவாயில்கள் உங்கள் தற்போதைய ஒப்பந்தங்களுக்கு மட்டும் கட்டணம் வசூலிப்பதற்காக, இரண்டாம் நிலை சந்தாக் கட்டண நுழைவாயிலாக இணைகின்றன. அனைத்துப் புதிய ஒப்பந்தங்களுக்கும் அல்லது இடமாற்றத்திற்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கும் உங்கள் முதன்மைக் கட்டண நுழைவாயிலில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும்.

உங்கள் சந்தாதாரர்களில் சிலர் Stripe Link மூலம் பணம் செலுத்தினால், இரண்டாம் நிலை நுழைவாயில் முறையைப் பயன்படுத்தி, Stripe மூலம் அவர்களுக்குத் தொடர்ந்து நீங்கள் கட்டணம் வசூலிக்க முடியும். அவர்களின் கட்டண முறைகள் உங்களின் முதன்மை நுழைவாயிலுக்கு முழுமையாக இடமாறுமா என்பது உங்களின் அமைப்பைப் பொறுத்தது. உங்கள் சூழலுக்கு ஏற்ற வழிகாட்டுதலைப் பெற Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளுங்கள் அல்லது வாடிக்கையாளர் வெற்றி மேலாளரை (CSM) தொடர்புகொள்ளுங்கள்.

சந்தா ஒப்பந்தங்களை இடமாற்றுவது பற்றிய கூடுதல் தகவலுக்கு, பின்வரும் டெவலப்பர் ஆவணங்களைப் பார்க்கவும்: