Shopify Subscriptions
Shopify Subscriptions செயலி உங்கள் Shopify ஸ்டோருடன் இணைக்கப்பட்டுள்ளதால், உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து வெளியேறாமலேயே சந்தாக்களை உருவாக்கவும் நிர்வகிக்கவும் முடியும். வாங்குவதற்கான விருப்பத்தேர்வாகச் சந்தாக்களைச் சேர்ப்பதன் மூலம், நீங்கள் தயாரிப்புகளைத் தொடர்ந்து விற்கலாம். மேலும் நீங்கள் Shopify POS மூலம் ஸ்டோரில் சந்தாக்களை விற்கலாம். Shopify Subscriptions செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், சந்தா பேமெண்ட்டுகளின் அதிர்வெண் மற்றும் உங்கள் சந்தாத் திட்டங்களுக்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய தள்ளுபடி வகைகளில் அதிக நெகிழ்வுத்தன்மையைப் பெறுகிறீர்கள்.
உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சந்தாத் திட்டங்களை உங்களால் வழங்க முடியும். ஒற்றைத் தயாரிப்புக்கோ பல தயாரிப்புகளுக்கோ பல்வேறு அதிர்வெண்கள் மற்றும் தள்ளுபடி வகைகளுடன் நீங்கள் சந்தாத் திட்டங்களை வழங்கலாம்.
Shopify Subscriptions செயலியைப் பயன்படுத்திப் பின்வரும் பணிகளை உங்களால் முடிக்க முடியும்:
- வாரம், மாதம் அல்லது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிற, தானாகப் பில் செய்யப்படுகிற சந்தாக்களை உருவாக்கலாம்.
- சந்தாத் திட்டங்களையும் ஒப்பந்தங்களையும் மாற்றலாம், தவிர்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் ரத்துசெய்யலாம்.
- சந்தாத் தயாரிப்புகளுக்கு டாலர் தொகை, சதவீதம், X-ஐ வாங்கினால் Y இலவசம் அல்லது நிலையான தொகைத் தள்ளுபடிகளைப் பயன்படுத்தலாம்.
- உங்களின் ஆன்லைன் ஸ்டோரில் சந்தா விட்ஜெட்டைக் காட்டலாம்.
- தயாரிப்பு, கார்ட் மற்றும் நன்றி தெரிவிக்கும் பக்கங்களில் சந்தா விவரங்களைப் பார்க்கலாம்.
- வாடிக்கையாளர்களின் சந்தா ஆர்டர்கள் குறித்து அவர்களுக்கு மின்னஞ்சல் அறிவிப்புகளை அனுப்பலாம்.
- செயலில் உள்ள, இடைநிறுத்தப்பட்ட மற்றும் ரத்துசெய்யப்பட்ட சந்தாக்கள் குறித்த பகுப்பாய்வுகளைப் பார்த்து, கண்காணிக்கலாம்.
வாடிக்கையாளர்கள் தங்கள் ஒருமுறை வாங்குதல்களையும் சந்தா வாங்குதல்களையும் பார்க்கவும் நிர்வகிக்கவும் தங்கள் வாடிக்கையாளர் கணக்கில் உள்நுழையலாம். வாடிக்கையாளர்கள் தங்களின் சந்தாக்களைத் தொடரலாம், தவிர்க்கலாம் அல்லது ரத்துசெய்யலாம், அத்துடன் தங்கள் கட்டண முறைகளையும் ஷிப்பிங் முகவரியையும் நிர்வகிக்கலாம்.
வாடிக்கையாளரின் கட்டணத் தகவல் Shopify ஆல் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் முழுமையான கிரெடிட் கார்டு தகவலை அவர்கள் உள்ளிட்ட பிறகு உங்களால் அணுக முடியாது.