Shopify Subscriptions செயலி மற்றும் Shopify விலையிடல் திட்டங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளுதல்

"Shopify subscription" என்பது Shopify தளத்தில் உள்ள இரண்டு வேறுபட்ட கருத்துகளைக் குறிக்கலாம். சந்தா அடிப்படையிலான தயாரிப்புகளை நிர்வகிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Shopify Subscriptions செயலியைப் பற்றி விவாதிக்கிறீர்களா அல்லது உங்களுக்குக் கிடைக்கும் Shopify கணக்குகளின் பல்வேறு நிலைகளுடன் தொடர்புடைய Shopify விலையிடல் திட்டங்களைப் பற்றி விவாதிக்கிறீர்களா என்பதைத் தெளிவுபடுத்துவது முக்கியமாகும்.

Shopify Subscriptions செயலி

தங்களின் Shopify நிர்வாகியிலிருந்து நேரடியாகத் தொடர்ச்சியான அடிப்படையில் தயாரிப்புகளை விற்க Shopify Subscriptions செயலி உங்களை அனுமதிக்கிறது. தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சந்தா சேவைகள் அல்லது தொடர் பில்லிங் விருப்பங்களை வழங்க விரும்பும் வணிகங்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம். Shopify Subscriptions செயலியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • சந்தா நிர்வாகம்: நிலையான அல்லது பிரத்தியேக பில்லிங் இடைவெளிகளைக் கொண்டு சந்தாத் தயாரிப்புகளை உருவாக்கவும் நிர்வகிக்கவும் உங்களை அனுமதிக்கிறது.
  • வாடிக்கையாளர் போர்ட்டல்: ஆர்டர்களை இடைநிறுத்துதல், மீண்டும் தொடங்குதல் அல்லது ரத்துசெய்தல் உட்படத் தங்களின் சந்தாக்களை நிர்வகிக்க உங்கள் வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது.
  • தள்ளுபடி நிர்வாகம்: சதவீத அல்லது நிலையான தொகையிலான தள்ளுபடிகள் உட்பட, சந்தா ஆர்டர்களுக்குத் தள்ளுபடிகளைச் செலுத்தும் திறனை வழங்குகிறது.
  • பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடல்: சந்தாச் செயல்திறன் குறித்த விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.

Shopify விலையிடல் திட்டங்கள்

Shopify விலையிடல் திட்டங்கள் என்பவை Shopify வழங்கும் பல்வேறு சேவைக் கட்டங்களாகும், இவை உங்களுக்குக் கிடைக்கும் அம்சங்களின் வரம்பையும், Shopify தளத்தைப் பயன்படுத்துவதற்கான செலவையும் தீர்மானிக்கின்றன. முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • திட்ட விருப்பங்கள்: Basic, Grow மற்றும் Advanced ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது, ஒவ்வொன்றும் பல்வேறு வணிக அளவுகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு வெவ்வேறு அம்சங்களை வழங்குகின்றன.
  • மாதாந்திர அல்லது வருடாந்திர விலையிடல்: கட்டணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் அமையும், இவை தொடர்ச்சியான மாதாந்திர அல்லது வருடாந்திர அடிப்படையில் பில் செய்யப்படும்.
  • திட்ட அளவிடுதிறன்: உங்கள் வணிகத் தேவைகளின் அடிப்படையில் உங்கள் திட்டத்தை நீங்கள் மேம்படுத்தலாம் அல்லது தரமிறக்கலாம்.
  • சேர்க்கப்பட்டுள்ள அம்சங்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தைப் பொறுத்து, Shopify POS ஒருங்கிணைப்பு மற்றும் விரிவான அறிக்கையிடல் திறன்கள் ஆகியவை அம்சங்களில் அடங்கும்.

Shopify Subscriptions செயலி மற்றும் Shopify விலையிடல் திட்டங்களை ஒப்பிடுதல்

Shopify Subscriptions செயலி மற்றும் Shopify விலையிடல் திட்டங்களின் ஒப்பீடு
அம்சம்Shopify Subscriptions செயலிShopify விலையிடல் திட்டங்கள்
நோக்கம்தொடர்ச்சியான தயாரிப்பு விற்பனையை நிர்வகிக்கிறது.Shopify அம்சங்கள் மற்றும் கருவிகளுக்கான அணுகல் அளவை வரையறுக்கிறது.
முக்கியக் கவனம்சந்தாத் தயாரிப்பு நிர்வாகம்.தள அணுகல் மற்றும் பயன்பாடு.
பயனர் ஊடாடல்வாடிக்கையாளர் சந்தா நிர்வாகப் போர்ட்டல்.திட்ட அமைப்புகளைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் நிர்வகித்தல்.
விலை நிர்ணயம்அமைப்பைப் பொறுத்துக் கூடுதல் கட்டணங்கள் இருக்கலாம்.தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மாதாந்திர அல்லது வருடாந்திர நிலையான விலை.
உத்தேசிக்கப்பட்ட இலக்குநேயர்கள்சந்தா அடிப்படையிலான தயாரிப்புகளைக் கொண்ட வணிகர்கள்.Shopify தளத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு வணிகரும்.