பொதுவான ஒப்பந்த CSV இறக்குமதிச் சிக்கல்களைத் தீர்த்தல்
உங்கள் ஒப்பந்த கமாவால் பிரிக்கப்பட்ட மதிப்புகள் (CSV) கோப்பை இறக்குமதி செய்வதில் சிக்கல் இருந்தால், பின்வரும் தீர்வுகளில் அந்தச் சிக்கல் பட்டியலிடப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும். நீங்கள் இன்னமும் சிக்கல்களை எதிர்கொண்டால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.
இந்தப் பக்கத்தில்
CSV கோப்பு 10 MBஐத் தாண்டுகிறது
ஒரு CSV கோப்பின் அதிகபட்சப் பதிவேற்ற அளவு 10 MB ஆகும். உங்கள் CSV கோப்பு 10 MBஐ விடப் பெரியதாக இருந்தால், தனித்தனியாக இறக்குமதி செய்ய அதிகபட்சப் பதிவேற்ற அளவுக்குட்பட்டு பல கோப்புகளாக CSVஐப் பிரிக்கலாம்.
பிழைச் செய்திகளும் தீர்வுகளும்
CSV கோப்பில் ஒப்பந்தத் தகவல் இல்லை
CSV நெடுவரிசைகளில் உள்ள அனைத்து மதிப்புகளும் காலியாக இருந்தால், CSV கோப்பு இறக்குமதி செய்யப்படாது. ஒவ்வொரு வரிசையிலும் தேவையான ஒப்பந்தத் தகவலை நிரப்பவும்.
CSV கோப்பில் நகல் ஒப்பந்தங்கள் மட்டுமே உள்ளன
CSV கோப்பில் உள்ள அனைத்து handle நெடுவரிசைகளும் ஏற்கனவே உள்ள ஒப்பந்த ஹேண்டில்களுடன் பொருந்தினால், இறக்குமதி செய்யப் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் இல்லாததால் CSV கோப்பு இறக்குமதி செய்யப்படாது. புதிய ஒப்பந்தங்களாகக் கருதப்படும் ஒப்பந்தங்கள் இருந்தால், ஹேண்டில்களை ஒரு பிரத்தியேகப் பெயருக்கு மாற்றவும்.
நெடுவரிசைப் பிழைகள்
தவறான நெடுவரிசைகளைக் கொண்ட CSV கோப்பு பின்வரும் பிழைகளில் ஏதேனும் ஒன்றை உருவாக்கலாம்:
- நெடுவரிசை ஆதரிக்கப்படவில்லை
- நெடுவரிசை விடுபட்டுள்ளது
- நெடுவரிசை நகலாக உள்ளது
உங்கள் CSV கோப்பில் உள்ள நெடுவரிசைகள் தேவையான நெடுவரிசைகளுடன் சரியான வரிசையில் பொருந்துவதை உறுதிசெய்யவும்.
cadence_interval_count இல் விவரிக்கப்பட்டுள்ள கால அளவு அதிகபட்ச அளவைத் தாண்டுகிறது
சுழற்சி இடைவெளி எண்ணிக்கை அதிகபட்சமாக 100 ஆண்டுகளைக் கொண்டுள்ளது.
அதே ஹேண்டிலைக் கொண்ட கூடுதல் ஒப்பந்தங்களில் செல்லுபடியாகாத புலங்கள் உள்ளன
பல வரிசை உருப்படிகளைக் கொண்ட ஒப்பந்தங்களுக்கு, பின்வரும் நெடுவரிசைகளில் மட்டுமே மதிப்புகளைச் சேர்க்கவும்:
- handle
- line_variant_id
- line_quantity
- line_current_price
- விருப்பத்திற்குரியது: line_selling_plan_id
- விருப்பத்திற்குரியது: line_selling_plan_name
நகல் ஒப்பந்தம்
நகல் ஒப்பந்தங்கள் என்பவை செயலியில் உள்ள தற்போதைய ஒப்பந்தத்துடன் பொருந்தக்கூடிய handleஐக் கொண்ட ஒப்பந்தங்கள் ஆகும். நகல் ஒப்பந்தங்கள் புறக்கணிக்கப்படும். அந்த ஒப்பந்தம் புதிய ஒப்பந்தமாக இருக்க வேண்டும் எனில், ஒப்பந்த handleஐ ஒரு பிரத்தியேக மதிப்பிற்கு மாற்றவும்.
delivery_address_phone இல் செல்லுபடியாகாத உள்ளூர் டெலிவரித் தொலைபேசி எண் உள்ளது
delivery_address_phone என்பது செல்லுபடியாகும் தொலைபேசி எண் வடிவத்துடன் பொருந்த வேண்டும்.
delivery_pickup_method_location_id இல் செல்லுபடியாகாத பிக்அப் இருப்பிட ID உள்ளது
delivery_pickup_method_location_id ஆனது உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள ஒரு இடத்தின் IDயுடன் பொருந்த வேண்டும்.
ஒப்பந்தங்களில் செல்லுபடியாகாத விநியோக முறைப் புலங்கள் உள்ளன
ஒவ்வொரு விநியோக முறையும் காலியான மதிப்புகளைக் கொண்டிருக்க வேண்டிய குறிப்பிட்ட விநியோக முறைப் புலங்களைக் கொண்டுள்ளது. பின்வரும் முறைகளுக்கு இந்தக் குறிப்பிட்ட புலங்கள் காலியாக இருக்க வேண்டும்:
- ஷிப்பிங் விநியோக முறையில் உள்ள ஒப்பந்தங்களில் செல்லுபடியாகாத புலங்கள் உள்ளன: delivery_local_delivery_phone, delivery_local_delivery_instructions, delivery_pickup_method_location_id ஆகிய புலங்கள் காலியாக இருக்க வேண்டும்.
- உள்ளூர் டெலிவரி முறையில் உள்ள ஒப்பந்தங்களில் செல்லுபடியாகாத புலங்கள் உள்ளன: delivery_pickup_method_location_id புலம் காலியாக இருக்க வேண்டும்.
- நேரில் பெறும் முறையில் உள்ள ஒப்பந்தங்களில் செல்லுபடியாகாத புலங்கள் உள்ளன: அனைத்து டெலிவரி முகவரிப் புலங்களும், delivery_local_delivery_phone புலமும், delivery_local_delivery_instructions புலமும் காலியாக இருக்க வேண்டும்.
- விநியோக முறை எதுவும் இல்லாத ஒப்பந்தங்களில் செல்லுபடியாகாத புலங்கள் உள்ளன: அனைத்து டெலிவரி முகவரி, உள்ளூர் டெலிவரி மற்றும் நேரில் பெறுதல் புலங்கள் காலியாக இருக்க வேண்டும்.
நெடுவரிசை காலியாக உள்ளது
தேவையான நெடுவரிசைகளில் மதிப்புகள் இருக்க வேண்டும். நெடுவரிசையில் விடுபட்ட மதிப்பைச் சேர்க்கவும்.
நெடுவரிசையில் எண்களல்லாத மதிப்புகள் உள்ளன
குறிப்பிடப்பட்ட நெடுவரிசையிலிருந்து எண்களாக இல்லாத எழுத்துகளை அகற்றவும்.
நெடுவரிசையில் குறைந்தபட்ச ஏற்கத்தக்க மதிப்பிற்குக் குறைவான மதிப்புகள் உள்ளன
நெடுவரிசையில் உள்ள மதிப்புகள் விவரிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பிற்குக் குறைவாக இருக்கக்கூடாது. மதிப்பை அதிக மதிப்பிற்கு மாற்றவும்.
நெடுவரிசையில் அதிகபட்ச ஏற்கத்தக்க மதிப்பிற்கு மேலான மதிப்புகள் உள்ளன
நெடுவரிசையில் உள்ள மதிப்புகள் விவரிக்கப்பட்டுள்ள அதிகபட்ச மதிப்பிற்கு அதிகமாக இருக்கக்கூடாது. மதிப்பைக் குறைந்த மதிப்பிற்கு மாற்றவும்.
நெடுவரிசையில் அதிக நீளமான மதிப்புகள் உள்ளன
நெடுவரிசையில் உள்ள மதிப்புகள் விவரிக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நீளத்தைத் தாண்டக்கூடாது. ஏற்கப்பட்ட வரம்பிற்குள் உள்ள நீளத்திற்கு மதிப்பைச் சுருக்கவும்.
நெடுவரிசையில் வடிவமைப்புப் பிழைகள் உள்ளன
நெடுவரிசையில் வழங்கப்பட்ட மதிப்பின் வடிவம் தேவையான வடிவத்துடன் பொருந்தவில்லை. உதாரணமாக, cadence_interval_count நெடுவரிசையானது ஒரு எண்ணாக இருக்க வேண்டும்.
நெடுவரிசையில் செல்லுபடியாகாத வடிவம் உள்ளது
line_current_price மற்றும் delivery_price ஆகியவற்றில் உள்ள அனைத்து மதிப்புகளும் செல்லுபடியாகும் நாணய வடிவத்தில் இருக்க வேண்டும்.
delivery_address_country_code இல் செல்லுபடியாகாத நாட்டுக் குறியீடு உள்ளது
delivery_address_country_code என்பது செல்லுபடியாகும் நாட்டுக் குறியீடாக இருக்க வேண்டும். நாட்டுக் குறியீடுகள் ISO 3166-1 ஆல்ஃபா-2 நாட்டுக் குறியீடு வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
currency_code இல் செல்லுபடியாகாத நாணயக் குறியீடு உள்ளது
currency_code மதிப்பு செல்லுபடியாகும் நாணயக் குறியீடாக இருக்க வேண்டும்.
நாணயக் குறியீடு செயல்படுத்தப்படவில்லை
உங்கள் CSV இல் பயன்படுத்தப்படும் நாணயக் குறியீடு உங்கள் ஸ்டோரில் செயலில் இருக்க வேண்டும்.
நெடுவரிசை முன்பே வரையறுக்கப்பட்ட ஏற்கத்தக்க மதிப்புகள் எதனுடனும் பொருந்தவில்லை
cadence_interval, status மற்றும் delivery_method_type நெடுவரிசைகளில் உள்ள அனைத்து மதிப்புகளும் CSV விளக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மதிப்பு விருப்பங்களில் ஒன்றோடு பொருந்த வேண்டும்.
upcoming_billing_date இல் செல்லுபடியாகாத தேதி நேர வடிவம் உள்ளது
upcoming_billing_date மதிப்பானது YYYY-MM-DDTHH:MM:SSZ என்ற ISO 8601 வடிவத்தில் இருக்க வேண்டும். நேரம் UTC (Coordinated Universal Time) இல் இருக்கும்.
upcoming_billing_date இல் செல்லுபடியாகாத வரவிருக்கும் பில்லிங் தேதி உள்ளது
upcoming_billing_date மதிப்பானது, CSV கோப்பு இறக்குமதி செய்யப்படும் தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு குறைந்தது 24 மணிநேரம் கழித்து வரும் ஒரு தேதி மற்றும் நேரத்திற்கு அமைக்கப்பட வேண்டும்.
delivery_address_zip தவறான அஞ்சல் குறியீட்டைக் கொண்டுள்ளது
delivery_address_zip மதிப்பானது சரியான அஞ்சல் குறியீடாக இருக்க வேண்டும்.
customer_payment_method_id வாடிக்கையாளருடன் பொருந்தவில்லை
customer_payment_method_id என்பது அதே வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ள customer_id உடன் பொருந்த வேண்டும்.
customer_id தவறான வாடிக்கையாளர் ID-யைக் கொண்டுள்ளது
customer_id மதிப்பானது உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள சரியான வாடிக்கையாளர் ID உடன் பொருந்த வேண்டும்.
customer_payment_method_id தவறான கட்டண முறை ID-யைக் கொண்டுள்ளது
customer_payment_method_id மதிப்பானது உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள சரியான கட்டண முறை ID உடன் பொருந்த வேண்டும்.
product_variant_id தவறான தயாரிப்பு மாறுபாடு ID-யைக் கொண்டுள்ளது
product_variant_id மதிப்பானது உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள சரியான மாறுபாடு ID உடன் பொருந்த வேண்டும்.