ஒப்பந்த CSV-ஐ இறக்குமதி செய்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல்

மூன்றாம் தரப்பு சந்தா செயலிகளிலிருந்து Shopify Subscriptions செயலிக்கு ஒப்பந்தங்களை இறக்குமதி செய்ய அல்லது Shopify Subscriptions செயலியிலிருந்து ஒப்பந்தங்களை ஏற்றுமதி செய்ய நீங்கள் CSV (கமாவால் பிரிக்கப்பட்ட மதிப்புகள்) கோப்பைப் பயன்படுத்தலாம்.

CSV கோப்புகளைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிய, CSV கோப்பைத் திறத்தல் மற்றும் திருத்துதல் என்பதைப் பார்க்கவும்.

மாதிரி CSV கோப்பைப் பதிவிறக்குதல்

வார்ப்புருவாகப் பயன்படுத்த மாதிரி ஒப்பந்த CSV கோப்பை நீங்கள் பதிவிறக்கிப் பார்க்கலாம்.

ஒப்பந்த CSV கோப்புக்கான பரிசீலனைகள்

ஒப்பந்தங்களை இறக்குமதி செய்ய ஒப்பந்த CSV கோப்பைப் பயன்படுத்துவதற்கு முன்பு, பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்.

CSV கோப்பை வடிவமைத்தல்

உங்கள் ஒப்பந்த CSV கோப்பு சரியாக இறக்குமதி செய்யப்படுவதற்கு, அது பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்:

  • உங்கள் ஒப்பந்த CSV கோப்பின் முதல் வரியானது, ஒப்பந்த CSV விளக்க அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நெடுவரிசை ஹெடர்களாக இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நெடுவரிசையும் கமாவால் பிரிக்கப்பட வேண்டும்.
  • ஒரு CSV கோப்பு அதிகபட்சம் 10 MB அளவு இருக்கலாம்.

ஹேண்டில் நெடுவரிசையைப் புரிந்துகொள்ளுதல்

ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் தனித்துவமாக அடையாளம் காண ஹேண்டில் பயன்படுகிறது. தரவை பின்வரும் வழிகளில் நிர்வகிக்க ஹேண்டில்கள் பயன்படுகின்றன:

  • பல வரிசை உருப்படிகளைக் கொண்ட ஒப்பந்தங்களை வகைப்படுத்தல்: பல வரிசை உருப்படிகளைக் கொண்ட ஒப்பந்தங்கள், பொதுவான ஹேண்டில் மூலம் தொகுக்கப்படுகின்றன.
  • நகல் ஒப்பந்தங்களைத் தடுத்தல்: இறக்குமதியின்போது நகல் ஒப்பந்தங்கள் புறக்கணிக்கப்படும். அதே ஹேண்டிலைக் கொண்ட ஒரு வரிசை முன்பு வெற்றிகரமாக இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், புதிய இறக்குமதிச் செயல்முறையில் அந்த வரிசை தவிர்க்கப்படும். தரவு நகலாக்கத்தைத் தவிர்க்க இந்தச் செயல்முறை உதவுகிறது.

பல வரிசை உருப்படி ஒப்பந்தங்கள்

பல வரிசை உருப்படிகளை உள்ளடக்கிய ஒப்பந்தங்களுக்கு ஒவ்வொரு வரிசை உருப்படிக்கும் தனித்தனி வரிசை தேவை, மேலும் அவை handle நெடுவரிசையுடன் தொகுக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, ஒரு ஒப்பந்தத்தில் மூன்று வரிசை உருப்படிகள் இருந்தால், ஒவ்வொரு வரிசை உருப்படியும் தனித்தனி வரிசையாகச் சேர்க்கப்பட வேண்டும். முதல் வரிசையில் அனைத்து ஒப்பந்தத் தகவல்களும் இருக்கும், அடுத்த இரண்டு வரிசைகளில் பின்வரும் நெடுவரிசைகளில் உள்ள மதிப்புகள் மட்டுமே இருக்கும்:

  • handle
  • line_variant_id
  • line_quantity
  • line_current_price
  • விரும்பினால் வழங்குவது: line_selling_plan_id
  • விரும்பினால் வழங்குவது: line_selling_plan_name

மூன்று நெடுவரிசைகளுக்கும் handle ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டு மற்றும் மூன்றாம் வரிசைகளில் உள்ள மற்ற அனைத்து நெடுவரிசைகளும் காலியாக இருக்க வேண்டும். பல வரிசை உருப்படி ஒப்பந்தத்தின் எடுத்துக்காட்டைப் பார்க்க, மாதிரி CSV வார்ப்புருவை நீங்கள் பதிவிறக்கலாம்.

CSV கோப்பின் விளக்கம்

ஒப்பந்த CSV-இல் பயன்படுத்தப்படும் தகவல்கள் பின்வரும் வகைகளின் கீழ் வரும்:

  • ஒப்பந்தத்தின் பெயர்
  • வாடிக்கையாளர் மற்றும் பில்லிங் தகவல்
  • விநியோக முறை மற்றும் தகவல்
  • சந்தாவில் உள்ளடக்கப்பட்டுள்ள உருப்படிகள்

சரியாக இறக்குமதி செய்ய, அனைத்து நெடுவரிசைகளும் CSV கோப்பில் சேர்க்கப்பட வேண்டும், மேலும் குறிப்பிட்டுச் சொல்லப்படாத வரை அனைத்துப் புலங்களும் கட்டாயமானவை.

ஒப்பந்த CSV கோப்பில் உள்ள நெடுவரிசைகளின் விளக்கம்.
நெடுவரிசைவிளக்கம்
Handleஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் தனித்துவமான அடையாளங்காட்டிகளாக ஹேண்டில்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, red-shirt. ஹேண்டில்கள் எழுத்துகள் மற்றும் எண்களைக் கொண்டிருக்கலாம், இவை பொதுவாக எழுத்துகள், எண்கள் அல்லது இரண்டின் இணைந்த சரமாக இருக்கும். ஒவ்வொரு ஒப்பந்தமும் தனித்துவமான ஹேண்டிலைக் கொண்டிருக்க வேண்டும்.
upcoming_billing_dateஒப்பந்தத்திற்கான வரவிருக்கும் பில்லிங் தேதி.
நேரம் UTC (Coordinated Universal Time) முறையில் உள்ளது, இது YYYY-MM-DDTHH:MM:SSZ என வடிவமைக்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டாக, செப்டம்பர் 7, 2019 அன்று பிற்பகல் 3:50 என்பது UTC (Coordinated Universal Time) நேர மண்டலத்தில் 2019-09-07T15:50:00Z எனக் குறிக்கப்படும்.
வரவிருக்கும் பில்லிங் தேதி மதிப்பானது, CSV கோப்பு இறக்குமதி செய்யப்படும் தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு குறைந்தது 24 மணிநேரம் கழித்து வரும் ஒரு தேதி மற்றும் நேரத்திற்கு அமைக்கப்பட வேண்டும்.
customer_idவாடிக்கையாளர் ID. இந்த ID உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தற்போதைய வாடிக்கையாளரின் ID-யுடன் பொருந்த வேண்டும், மேலும் இது எண்களின் சரமாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 6320530986896.
currency_codeஒப்பந்தத்தின் நாணயக் குறியீடு. உங்கள் ஸ்டோரில் செயலில் உள்ள நாணயத்துடன் நாணயக் குறியீடு பொருந்த வேண்டும்.
statusஒப்பந்தத்தின் நிலை. ஒப்பந்தங்கள் பின்வரும் நிலைகளில் ஒன்றைக் கொண்டிருக்கலாம்:
  • செயலில் உள்ளது
  • இடைநிறுத்தப்பட்டது
cadence_intervalசந்தாவின் டெலிவரி அதிர்வெண். ஒரு ஒப்பந்தம் பின்வரும் தொடர்வரிசை இடைவெளிகளில் ஒன்றைக் கொண்டிருக்கலாம்:
  • வாரம்
  • மாதம்
  • ஆண்டு
cadence_interval_countஒட்டுமொத்த நேர இடைவெளிக்குள் சந்தாவின் டெலிவரி அதிர்வெண். எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு மாதத்திற்குமான சுழற்சி இடைவெளி எண்ணிக்கை 1 ஆகும், மேலும் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்குமான சுழற்சி இடைவெளி 2 ஆகும்.
customer_payment_method_idஒப்பந்தத்திற்கு வாடிக்கையாளர் பயன்படுத்திய கட்டண முறையின் ID. இந்த ID என்பது பிரத்தியேகமான எண்ணெழுத்துக் குறியீடாகும். எடுத்துக்காட்டாக, 24e8c839c47ef47d30ad28346d130e74.
delivery_priceசரியான நாணய வடிவத்தில் டெலிவரிக்கான விலை.
delivery_method_type சந்தாவின் விநியோக முறை. விநியோக முறையானது பின்வரும் வகைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்:
  • ஷிப்பிங்
  • உள்ளூர் டெலிவரி
  • நேரில் பெறுதல்
  • எதுவுமில்லை
delivery_address_first_nameடெலிவரி முகவரியில் பெறுநரின் முதல் பெயர். ஷிப்பிங் மற்றும் உள்ளூர் டெலிவரி முறைகளுக்கு மட்டுமே இந்தப் புலம் தேவை.
delivery_address_last_nameடெலிவரி முகவரியில் பெறுநரின் கடைசிப் பெயர்.
ஷிப்பிங் மற்றும் உள்ளூர் டெலிவரி முறைகளுக்கு மட்டுமே இந்தப் புலம் தேவை.
delivery_address_address1டெலிவரி முகவரியின் முதல் வரி.
ஷிப்பிங் மற்றும் உள்ளூர் டெலிவரி முறைகளுக்கு மட்டுமே இந்தப் புலம் தேவை.
delivery_address_address2டெலிவரி முகவரியின் இரண்டாவது வரி.
முகவரியில் இரண்டாவது புலம் இருந்தாலோ விநியோக முறை ஷிப்பிங் அல்லது உள்ளூர் டெலிவரி ஆக இருந்தாலோ மட்டுமே இந்தப் புலம் தேவை.
delivery_address_cityடெலிவரி முகவரியிலுள்ள நகரம்.
ஷிப்பிங் மற்றும் உள்ளூர் டெலிவரி முறைகளுக்கு மட்டுமே இந்தப் புலம் தேவை.
delivery_address_province_codeடெலிவரி முகவரியின் மாகாணம் அல்லது மாநிலத்தின் ISO குறியீடு.
ஷிப்பிங் மற்றும் உள்ளூர் டெலிவரி முறைகளுக்கு மட்டுமே இந்தப் புலம் தேவை.
delivery_address_country_codeடெலிவரி முகவரியின் நாட்டின் ISO குறியீடு.
ஷிப்பிங் மற்றும் உள்ளூர் டெலிவரி முறைகளுக்கு மட்டுமே இந்தப் புலம் தேவை.
delivery_address_companyடெலிவரி முகவரியில் நிறுவனத்தின் பெயர்.
ஆர்டர் ஒரு வணிகத்திற்காக இருந்தாலோ விநியோக முறை ஷிப்பிங் அல்லது உள்ளூர் டெலிவரி ஆக இருந்தாலோ மட்டுமே இந்தப் புலம் தேவை.
delivery_address_zipடெலிவரி முகவரியின் அஞ்சல் குறியீடு.
ஷிப்பிங் மற்றும் உள்ளூர் டெலிவரி முறைகளுக்கு மட்டுமே இந்தப் புலம் தேவை.
delivery_address_phoneடெலிவரி முகவரியின் தொலைபேசி எண் -- எடுத்துக்காட்டாக +1 (613) 555-5555.
ஷிப்பிங் மற்றும் உள்ளூர் டெலிவரி முறைகளுக்கு மட்டுமே இந்தப் புலம் தேவை.
delivery_local_delivery_phoneடெலிவரி முகவரியின் தொலைபேசி எண்.
உள்ளூர் டெலிவரி முறையைக் கொண்ட சந்தாக்களுக்கு இந்தப் புலம் தேவை.
delivery_local_delivery_instructionsஉள்ளூர் டெலிவரிக்கான அறிவுறுத்தல்கள்.
உள்ளூர் டெலிவரி முறையுடன் கூடிய சந்தாக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும்போது மட்டுமே இந்தப் புலம் சேர்க்கப்பட வேண்டும்.
delivery_pickup_method_location_idநேரில் பெறும் முறைக்கான இடத்தின் ID.
உள்ளூரில் நேரில் பெறுதல் முறையைக் கொண்ட சந்தாக்களுக்கு மட்டுமே இந்தப் புலம் தேவை.
line_variant_idசந்தாவில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு வரிசை உருப்படிக்குமான ID -- எடுத்துக்காட்டாக 53154087005812.
சந்தாவில் பல வரிசை உருப்படிகள் சேர்க்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு வரிசை உருப்படியும் தனித்துவமான மாறுபாடு ID உடன் புதிய வரியாகச் சேர்க்கப்பட வேண்டும்.
line_quantityசந்தாவில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு வரிசை உருப்படியின் அளவு.
சந்தாவில் பல வரிசை உருப்படிகள் சேர்க்கப்பட்டிருந்தால், சேர்க்கப்படும் அளவு குறிப்பிட்ட அந்த உருப்படிக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, சேர்க்கப்பட்டுள்ள அனைத்து உருப்படிகளின் மொத்த அளவாக இருக்கக் கூடாது.
line_current_priceசரியான நாணய வடிவத்தில் சந்தா வரிசை உருப்படியின் விலை.
line_selling_plan_idசந்தாத் திட்டத்தின் ID -- எடுத்துக்காட்டாக 3607724288.
இந்தப் புலம் விருப்பத்திற்குரியது.
line_selling_plan_nameசந்தாத் திட்டத்தின் பெயர்.
இந்தப் புலம் விருப்பத்திற்குரியது.

CSV கோப்பைப் பயன்படுத்தி ஒப்பந்தங்களை இறக்குமதி செய்தல்

Shopify App Store இலிருந்து தகுதியான மூன்றாம் தரப்புச் சந்தாச் செயலியில் இருந்தோ மற்றொரு ஸ்டோரில் உள்ள Shopify Subscriptions செயலியில் இருந்தோ, ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்களை இறக்குமதி செய்ய, CSV கோப்பைப் பயன்படுத்தலாம்.

ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்களைத் திருத்தவோ மேலெழுதவோ CSV கோப்பைப் பயன்படுத்த முடியாது. இறக்குமதி செய்யும்போது, ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்களின் நகல்கள் புறக்கணிக்கப்படும்.

மூன்றாம் தரப்புச் சந்தாச் செயலியிலிருந்து ஒப்பந்தங்களை இறக்குமதி செய்தல்

மூன்றாம் தரப்புச் சந்தாச் செயலியில் இருந்து உங்களால் ஒப்பந்தங்களை இறக்குமதி செய்ய முடியும். மூன்றாம் தரப்புச் செயலியிலிருந்து இறக்குமதி செய்யும்போது, பின்வரும் செயல்பாடுகளைக் கருத்தில் கொள்ளவும்:

  • உங்கள் மூன்றாம் தரப்புச் சந்தாச் செயலியுடன் Shopify Checkout ஒருங்கிணைக்கப்படவில்லை எனில், உங்களால் ஒப்பந்தங்களை இறக்குமதி செய்ய முடியாது.
  • உங்கள் மூன்றாம் தரப்புச் செயலியிலிருந்து தரவை நேரடியாக இறக்குமதி செய்ய முடியாது. இறக்குமதி செய்வதற்கு, உங்கள் மூன்றாம் தரப்புச் செயலியிலுள்ள ஒப்பந்தத் தரவை சரியான வடிவத்தில் Shopify Subscriptions செயலிக்கு இணக்கமான CSV கோப்பில் சேர்க்க வேண்டும்.
  • உங்கள் மூன்றாம் தரப்புச் சந்தாச் செயலியில் ஏற்றுமதி அம்சம் இல்லை என்றாலோ ஏற்றுமதி செய்யப்பட்ட தரவில் தேவையான தரவு அனைத்தும் இல்லை என்றாலோ, ஆதரவிற்குச் செயலியின் டெவலப்பரைத் தொடர்புகொள்ளவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Subscriptions என்பதற்குச் செல்லவும்.

  2. ஒப்பந்தங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. கோப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் இறக்குமதி செய்ய விரும்பும் CSV கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. கோப்பைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் CSV கோப்பு பதிவேற்றப்பட்ட பிறகு, உங்கள் Shopify ஸ்டோரை அமைப்பதற்குப் பயன்படுத்திய மின்னஞ்சல் கணக்கிற்கு, Shopify இடமிருந்து உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறுவீர்கள். இறக்குமதிச் சிக்கல்களைத் தீர்க்க உதவுவதற்கு, பொதுவான இறக்குமதிப் பிழைகளுக்கான தீர்வுகளைப் படிக்கவும்.

CSV கோப்பைப் பயன்படுத்தி ஒப்பந்தங்களை ஏற்றுமதி செய்தல்

உங்கள் பதிவுகளுக்காகவோ Shopify Subscriptions செயலியை நிறுவியுள்ள மற்றொரு Shopify ஸ்டோரில் இறக்குமதி செய்வதற்காகவோ, நீங்கள் ஒப்பந்தங்களை ஏற்றுமதி செய்யலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Subscriptions என்பதற்குச் செல்லவும்.

  2. ஒப்பந்தங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.