Shopify Subscriptions-ஐ அமைத்தல்
Shopify Subscriptions செயலியை நிறுவி சந்தாத் திட்டங்களை அமைத்த பிறகு, உங்கள் வாடிக்கையாளர்கள் வழக்கமான அடிப்படையில் திட்டமிடப்பட்ட கொள்முதல்களைச் செய்யலாம். உங்களின் அனைத்துச் சந்தாத் திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களையும் Shopify Subscriptions செயலியில் நீங்கள் நிர்வகிக்கலாம், அதன் பிறகு உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உங்களின் சந்தாத் திட்டங்களைக் காட்டலாம். உங்கள் ஸ்டோருக்கான புதிய சந்தாக் கொள்கை மற்றும் சந்தா மின்னஞ்சல் அறிவிப்புகளையும் Shopify Subscriptions செயலி சேர்க்கிறது.
உங்கள் ஸ்டோருக்கு Shopify Subscriptions-ஐ அமைத்த பிறகும், உங்கள் தயாரிப்புகளுக்கான சந்தாத் திட்டங்களை உருவாக்கிய பிறகும், நீங்கள் சந்தாத் திட்டங்கள் அல்லது ஒப்பந்தங்களை மாற்றியமைக்கவோ, வாடிக்கையாளர் விவரங்களைப் புதுப்பிக்கவோ அல்லது வரவிருக்கும் ஆர்டர்களைச் சரிசெய்யவோ தேவைப்படலாம்.
இந்தப் பக்கத்தில்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் சந்தாக்களைக் காட்டவும்
நீங்கள் சந்தாத் திட்டங்களை அமைத்த பிறகு, உங்கள் தயாரிப்புப் பக்கத்தில் சந்தா விட்ஜெட்டைச் சேர்க்கலாம். சந்தா விவரங்கள் தயாரிப்புப் பக்கம், கார்ட் பக்கம் மற்றும் நன்றிப் பக்கங்களில் காட்டப்படும்.
தீம் இணக்கத்தன்மை
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
சந்தா விட்ஜெட்டை எந்தத் தீமில் சேர்க்க விரும்புகிறீர்களோ அதற்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஏற்கெனவே இருக்கும் ஒரு தயாரிப்பு வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது சந்தா விட்ஜெட்டைச் சேர்க்க புதியதொரு வார்ப்புருவை உருவாக்கவும்.
தயாரிப்புத் தகவல் என்பதன் கீழ், பிளாக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, பிறகு சந்தா விட்ஜெட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் ஸ்டோரின் தீமுடன் பொருந்தும் வகையில் சந்தா விட்ஜெட்டைத் தனிப்பயனாக்குங்கள்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் என்பதைத் தட்டவும்.
சந்தா விட்ஜெட்டை எந்தத் தீமில் சேர்க்க விரும்புகிறீர்களோ அதற்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.
ஏற்கெனவே இருக்கும் ஒரு தயாரிப்பு வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது சந்தா விட்ஜெட்டைச் சேர்க்க புதியதொரு வார்ப்புருவை உருவாக்கவும்.
தயாரிப்புத் தகவல் என்பதன் கீழ், பிளாக்கைச் சேர் என்பதைத் தட்டி, பிறகு சந்தா விட்ஜெட் என்பதைத் தட்டவும்.
விருப்பத்தேர்வு: உங்கள் ஸ்டோரின் தீமுடன் பொருந்தும் வகையில் சந்தா விட்ஜெட்டைத் தனிப்பயனாக்குங்கள்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
பழைய தீம்கள்
சந்தா விட்ஜெட், பின்வரும் பழைய தீம்களில் மட்டுமே ஆதரிக்கப்படும்:
- பதிப்பு 15.0 அல்லது பிந்தைய பதிப்புகளில் உள்ள Debut
- பதிப்பு 17.0 அல்லது பிந்தைய பதிப்புகளில் உள்ள Brooklyn
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
சந்தா விட்ஜெட்டை எந்தத் தீமில் சேர்க்க விரும்புகிறீர்களோ அதற்கு அடுத்துள்ள
> குறியீட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
product-template.liquid கோப்பில், உங்கள் தயாரிப்புப் பக்கத்தில் சந்தா விட்ஜெட் எங்கு காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ அங்கு பின்வரும் குறியீட்டுத் துணுக்கைச் சேர்க்கவும்.
<div class="subscriptions_app_embed_block"></div>- சேமி என்பதைக் கிளிக் செய்து, பின்னர் வெளியேறு என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதே தீமிற்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- பக்கப்பட்டியில், செயலி உட்பொதிவுகள் ஐகானைக் கிளிக் செய்து, பிறகு விட்ஜெட்டை இயக்க சந்தா விட்ஜெட் என்பதற்கு அருகிலுள்ள நிலைமாற்றியைக் கிளிக் செய்யவும்.
- விருப்பத்தேர்வு: உங்கள் ஸ்டோரின் தீமுடன் பொருந்தும் வகையில் சந்தா விட்ஜெட்டைத் தனிப்பயனாக்குங்கள்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
தீம்களைத் தனிப்பயனாக்குதல் மற்றும் தீம் குறியீட்டைத் திருத்துதல் குறித்து மேலும் அறிக.
சந்தாக் கொள்கையைச் சேர்த்தல்
நீங்கள் சந்தாவை அமைத்திருந்தால், உங்கள் ஸ்டோரில் புதிய வாங்குவதற்கான விருப்பத்தேர்வுகள் ரத்துக் கொள்கை தானாகவே சேர்க்கப்படும். இந்தக் கொள்கையானது கார்ட் பக்கத்திலும் செக்அவுட்டின் எக்ஸ்பிரஸ் செக்அவுட் பிரிவிலும் ரத்துக் கொள்கையாக இணைக்கப்பட்டிருக்கும், மேலும் செக்அவுட் அடிப்பகுதியில் சந்தாக் கொள்கை என இணைக்கப்பட்டிருக்கும்.
Shopify நிர்வாகி அமைப்புகளில் கொள்கையைப் பூர்த்தி செய்யாமல் காலியாக விட்டால், வாடிக்கையாளர்களுக்கு இயல்புநிலை வார்ப்புரு காட்டப்படும்.
செக்அவுட்டின் போது, வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்முதலை முடிப்பதற்கு முன்பு ரத்துக் கொள்கை நிபந்தனைகளை ஏற்க வேண்டும்.
உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் வாங்குவதற்கான விருப்பத்தேர்வுகள் ரத்துக் கொள்கையைப் புதுப்பிக்க, உங்கள் ஸ்டோர் கொள்கைகளைத் திருத்தவும்.
உங்கள் செக்அவுட் மற்றும் கணக்குப் பக்கங்களில் சந்தா நிர்வாக விருப்பத்தேர்வுகளைச் சேர்த்தல்
சந்தாவை வாங்கிய பிறகு அல்லது தங்கள் வாடிக்கையாளர் கணக்கில் உள்நுழைந்திருக்கும் போது உங்கள் வாடிக்கையாளர்களே தங்களின் சந்தாக்களை நிர்வகிக்க அனுமதிப்பதற்கு, உங்கள் செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களில் சந்தா நிர்வாக விருப்பத்தேர்வுகளை நீங்கள் சேர்க்கலாம். Shopify Subscriptions பின்வரும் பிளாக்குகளை ஆதரிக்கிறது:
- ஒரு தனி சந்தா நிர்வாக வாடிக்கையாளர் கணக்குப் பக்கம்.
- ஆர்டர் மற்றும் ஆர்டர் நிலை பக்கங்களிலுள்ள ஆர்டர் செயல் பொத்தான்கள்.
- நன்றிப் பக்கத்திலுள்ள ஒரு சந்தா நிர்வாக இணைப்பு.
இந்த நிர்வாக விருப்பத்தேர்வுகள், செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரைப் பயன்படுத்தி பிளாக்குகளாகச் சேர்க்கப்படுகின்றன. செயலிகள் மூலம் உங்கள் செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குகளைத் தனிப்பயனாக்குவது குறித்து மேலும் அறிக.
சந்தா நிர்வாக வாடிக்கையாளர் கணக்குப் பக்கத்தைச் சேர்ப்பது
வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் உள்நுழையும்போது சந்தாக்களை நிர்வகிப்பதற்கு ஒரு பிரத்யேக சந்தா நிர்வாகப் பக்கத்தை நீங்கள் சேர்க்கலாம். இந்தப் புதிய பக்கம், செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் வாடிக்கையாளர் கணக்குகள் பக்கமாகச் சேர்க்கப்படும், மேலும் இதை எந்த நேரத்திலும் எடிட் செய்யலாம்.

படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
வழிசெலுத்தல் பக்கப்பட்டியில்,
ஐகானைக் கிளிக் செய்து, Subscriptions செயலியைத் தேடவும்.
சந்தா நிர்வாகத்திற்கு அடுத்துள்ள ⊕ என்பதைக் கிளிக் செய்து, கணக்குகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் மாற்றங்களைச் சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: சந்தா நிர்வாகப் பக்கத்தை வாடிக்கையாளர்கள் கண்டறிய உதவுவதற்கு, உங்கள் வழிசெலுத்தல் மெனுவில் அதற்கான இணைப்பைச் சேர்க்கலாம்:
- மெனுவில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- விருப்பத்தேர்வு: உங்கள் வாடிக்கையாளர் கணக்கின் பிரதான மெனுவிலுள்ள சந்தா நிர்வாகப் பக்கத்திற்கான லேபிள் தலைப்பைத் தனிப்பயனாக்குங்கள்.
- செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டருக்குத் திரும்ப, சேமி என்பதைக் கிளிக் செய்து, பின்னர் X என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் மற்றும் ஆர்டர் நிலை பக்கங்களில் ஆர்டர் செயல்பாட்டுப் பொத்தானைச் சேர்ப்பது
வாடிக்கையாளர் தமது வாடிக்கையாளர் கணக்கில் உள்ள ஆர்டர் பக்கத்தைப் பார்வையிடும்போது, அவர்களது சந்தாவை நிர்வகிப்பதற்கான பொத்தானை அவர்களால் பார்க்க முடியும்.

படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
வழிசெலுத்தல் பக்கப்பட்டியில்,
ஐகானைக் கிளிக் செய்து, Subscriptions செயலியைத் தேடவும்.
ஆர்டர் செயல்பாட்டுப் பொத்தானுக்கு அடுத்துள்ள ⊕ என்பதைக் கிளிக் செய்து, ஆர்டர்கள் மற்றும் ஆர்டர் நிலை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் மாற்றங்களைச் சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
நன்றிப் பக்கத்தில் சந்தா நிர்வாக இணைப்பைச் சேர்ப்பது
வாங்கிய பிறகான நன்றிப் பக்கத்தில் சந்தா நிர்வாக இணைப்பைச் சேர்க்கலாம். இந்த இணைப்பு Shopifyயின் வடிவமைப்பு முறைக்கு ஏற்ற இயல்புநிலை ஸ்டைல் மற்றும் உரையைப் பயன்படுத்தும், ஆனால் பக்கத்தில் இடமமைப்பதைத் தாண்டி இதைத் தனிப்பயனாக்க முடியாது.

படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
வழிசெலுத்தல் பக்கப்பட்டியில்,
ஐகானைக் கிளிக் செய்து, Subscriptions செயலியைத் தேடவும்.
சந்தா நிர்வாக இணைப்பிற்கு அடுத்துள்ள ⊕ என்பதைக் கிளிக் செய்து, நன்றி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: நன்றிப் பக்கத்தில் பிளாக்கின் இடத்தை மாற்ற,
என்பதைக் கிளிக் செய்து, நன்றிப் பக்கத்தில் நீங்கள் விரும்பும் இடத்திற்கு அந்த பிளாக்கை இழுத்துச் செல்லவும்.
உங்கள் மாற்றங்களைச் சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.