தயாரிப்புகளைத் தேடுதல் மற்றும் உங்கள் தயாரிப்புப் பட்டியலை ஃபில்டர் செய்தல்
Shopify இல் உள்ள தயாரிப்புகள் பகுதியில் உங்களின் அனைத்துத் தயாரிப்புகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். ஒவ்வொரு பக்கத்திலும் 50 தயாரிப்புகள் பட்டியலிடப்படும். தயாரிப்புப் பட்டியலை ஒழுங்கமைக்கவும், பல பக்கங்களில் பரவியுள்ள தயாரிப்புகளைக் கண்டறியவும், நீங்கள் அவற்றைப் பட்டியல்படி வரிசைப்படுத்தலாம், தேடலாம் மற்றும் வடிகட்டலாம்.
நிர்வாகியின் தயாரிப்புகள் பகுதியில் உங்கள் தயாரிப்புகள் வரிசைப்படுத்தப்படும் அல்லது வடிகட்டப்படும் விதம், உங்கள் ஆன்லைன் ஸ்டோர் போன்ற பிற செயலிகள் அல்லது விற்பனைச் சேனல்களில் உங்கள் தயாரிப்புகள் காண்பிக்கப்படும் விதத்தைப் பாதிக்காது. ஆன்லைன் ஸ்டோரில் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தயாரிப்புகள் காண்பிக்கப்படும் விதத்தை மாற்ற வேண்டுமெனில், சேகரிப்பில் உள்ள தயாரிப்புகளின் வரிசையை மாற்றவும்.
இந்தப் பக்கத்தில்
- உங்கள் தயாரிப்புப் பட்டியலை வரிசைப்படுத்துதல்
- தயாரிப்புப் பட்டியலில் நெடுவரிசைகளைத் திருத்துதல்
- உங்கள் தயாரிப்புப் பட்டியலை வடிகட்டுதல்
- தயாரிப்பைத் தேடுதல்
- தயாரிப்புகளுக்கான தேடல் வினவல்கள்
- தயாரிப்புக் காட்சிகளை நிர்வகித்தல்
- தயாரிப்புக் காட்சி அல்லது வடிப்பானில் மொத்தச் செயல்களைப் பயன்படுத்துதல்
- தயாரிப்புத் தேடல் மற்றும் வடிகட்டுதல் குறித்த சிக்கல் தீர்த்தல்
உங்கள் தயாரிப்புப் பட்டியலை வரிசைப்படுத்துங்கள்
நீங்கள் புதுப்பிக்க அல்லது மதிப்பாய்வு செய்ய வேண்டிய தயாரிப்புகளைக் கண்டறிய, உங்கள் தயாரிப்புப் பட்டியலை வரிசைப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, எந்தத் தயாரிப்புகளின் சரக்கு இருப்பு குறைவாக உள்ளது என்பதைப் பார்க்க, சரக்கு இருப்பின் அடிப்படையில் தயாரிப்புப் பட்டியலை வரிசைப்படுத்தலாம்.
இயல்பாகவே, உங்கள் தயாரிப்புப் பட்டியல் உருவாக்கப்பட்ட தேதியின் அடிப்படையில், சமீபத்திய தயாரிப்பிலிருந்து வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். உங்கள் தயாரிப்புப் பட்டியலின் வரிசையை வேறு வரிசையாக்க விருப்பத்திற்கு மாற்றலாம் அல்லது வரிசைப்படுத்தப்பட்ட முறையைத் தலைகீழாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக, புதிய தயாரிப்பிற்குப் பதிலாக பழைய தயாரிப்பை முதலில் காண்பிக்கும்படி, இயல்பாக உருவாக்கப்பட்ட தேதியை நீங்கள் மாற்றலாம்.
பின்வரும் எந்தவொரு விருப்பத்திற்கும் உங்கள் தயாரிப்புப் பட்டியலின் வரிசையை மாற்றலாம்:
| வரிசைப்படுத்தும் விருப்பம் | மதிப்பு | விளக்கம் |
|---|---|---|
| தயாரிப்பு | A-Z அல்லது Z-A என அகரவரிசைப்படி வரிசைப்படுத்தப்படும். | இந்த விருப்பம் தயாரிப்புகளை தலைப்பின் அடிப்படையில் அகரவரிசையில் காண்பிக்கும். |
| உருவாக்கப்பட்டது | தேதியின் அடிப்படையில், முதலில் புதியது அல்லது முதலில் பழையது என வரிசைப்படுத்தப்படும். | இந்த விருப்பம் தயாரிப்புகளை அவை உருவாக்கப்பட்ட வரிசையில் காண்பிக்கும். இயல்பாகவே, தயாரிப்புப் பட்டியல் உருவாக்கப்பட்ட தேதியின்படி வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்: முதலில் புதியது. |
| புதுப்பிக்கப்பட்டது | தேதியின் அடிப்படையில், முதலில் புதியது அல்லது முதலில் பழையது என வரிசைப்படுத்தப்படும். | இந்த விருப்பம் தயாரிப்புகளை அவை கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட வரிசையில் காண்பிக்கும். |
| சரக்கு இருப்பு | அளவின் அடிப்படையில், ஏறுவரிசை அல்லது இறங்குவரிசை என வரிசைப்படுத்தப்படும். | இந்த விருப்பம் தயாரிப்புகளைச் சரக்கு இருப்பு அளவின் அடிப்படையில் காண்பிக்கும். |
| தயாரிப்பு வகை | A-Z அல்லது Z-A என அகரவரிசைப்படி வரிசைப்படுத்தப்படும். | இந்த விருப்பம் தயாரிப்புகளைத் தயாரிப்பு வகையின் அடிப்படையில் அகரவரிசையில் காண்பிக்கும். |
| வெளியிடுதல் | தேதியின் அடிப்படையில், ஏறுவரிசை அல்லது இறங்குவரிசை என வரிசைப்படுத்தப்படும். | இந்த விருப்பம் தயாரிப்புகளை வெளியிடும் நிலையின் அடிப்படையில் காண்பிக்கும். |
| விற்பனையாளர் | A-Z அல்லது Z-A என அகரவரிசைப்படி வரிசைப்படுத்தப்படும். | இந்த விருப்பம் தயாரிப்புகளை விற்பனையாளரின் அடிப்படையில் அகரவரிசையில் காண்பிக்கும். |
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
ஐகானைக் கிளிக் செய்யவும்.
வரிசைப்படுத்து மெனுவில், வரிசைப்படுத்தும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் தயாரிப்புப் பட்டியலில் நெடுவரிசைகளைத் திருத்துங்கள்
இயல்பான மற்றும் பிரத்தியேகத் தயாரிப்புக் காட்சிகள் இரண்டிலும் நீங்கள் நெடுவரிசைகளைத் திருத்தலாம். நீங்கள் செய்யும் மாற்றங்கள் நீங்கள் தற்போது பயன்படுத்தும் தயாரிப்புக் காட்சிக்கு மட்டுமே பொருந்தும். நெடுவரிசைகளை மறைக்கலாம் அல்லது மறைக்காமல் காட்டலாம், அத்துடன் நெடுவரிசைகளின் வரிசையையும் மாற்றலாம். இது உங்களுக்குத் தேவையான உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தவும் தேவையற்ற உள்ளடக்கத்தை மறைக்கவும் உதவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
ஐகானைக் கிளிக் செய்யவும்.
நெடுவரிசைகள் பிரிவில், பின்வரும் ஏதேனும் செயல்களைச் செய்யவும்:
- ஒரு நெடுவரிசையை மேலேயோ கீழேயோ மறுசீரமைக்க,
என்பதைக் கிளிக் செய்யவும். நெடுவரிசையை மேலே நகர்த்தும்போது அது அட்டவணையில் மேலும் இடதுபுறமாகவும், நெடுவரிசையை கீழே நகர்த்தும்போது அது மேலும் வலதுபுறமாகவும் வைக்கப்படும்.
- அட்டவணையில் நெடுவரிசையை மறைக்க அல்லது காண்பிக்க
அல்லது
என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒரு நெடுவரிசையை மேலேயோ கீழேயோ மறுசீரமைக்க,
விருப்பத்தேர்வு: உங்கள் பட்டியலில் காப்பகப்படுத்தப்பட்ட நிலையிலுள்ள தயாரிப்புகளை மறைக்க அல்லது காண்பிக்க, அனைத்தும் என்பதில் காப்பகப்படுத்தப்பட்டதை மறை அமைப்பை இயக்கலாம் அல்லது முடக்கலாம். இந்த அமைப்பு உங்கள் உலாவிப் பக்கத்தில் சேமிக்கப்படுவதால், இது உங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
உங்கள் தயாரிப்புப் பட்டியலை வடிகட்டுங்கள்
இயல்பாகவே, உங்கள் Shopify நிர்வாகியின் தயாரிப்புகள் பகுதியில் உங்களின் அனைத்துத் தயாரிப்புகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். தயாரிப்புகளின் ஒரு சிறிய துணைக்குழுவைக் காண்பிக்க இந்தப் பட்டியலை நீங்கள் வடிகட்டலாம்.
நீங்கள் திருத்த, மதிப்பாய்வு செய்ய அல்லது புதுப்பிக்க வேண்டிய குறிப்பிட்ட தயாரிப்புகளைக் கண்டறிய, தயாரிப்புப் பட்டியலை வடிகட்டுவது உதவும். பின்வரும் வடிப்பான் விருப்பங்கள் உள்ளன:
- விற்பனையாளர்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பு விற்பனையாளரின் தயாரிப்புகளைக் காண்பிக்கும்.
- டேக் - குறிப்பிட்ட மதிப்பின் மூலம் டேக் செய்யப்பட்ட தயாரிப்புகளைக் காண்பிக்கும்.
- நிலைகள் - காப்பகப்படுத்தப்பட்டது, செயலிலுள்ளது அல்லது வரைவு நிலையில் உள்ள தயாரிப்புகளைக் காண்பிக்கும்.
- வகைகள் - தேர்ந்தெடுக்கப்பட்ட தரநிலையான தயாரிப்பு வகையில் சேர்க்கப்பட்டுள்ள தயாரிப்புகளைக் காண்பிக்கும்.
- விற்பனைச் சேனல் - விற்பனைச் சேனலில் சேர்க்கப்பட்டுள்ள அல்லது தவிர்க்கப்பட்ட தயாரிப்புகளைக் காண்பிக்கும். சில விற்பனைச் சேனல்கள், நீங்கள் தயாரிப்புகளை வடிகட்ட ஒன்றுக்கும் மேற்பட்ட பிராந்தியம் அல்லது கணக்குடன் பல சேனல் இணைப்புகளைக் காண்பிக்கலாம்.
- பிராந்தியக் கேட்லாக் - சந்தையில் சேர்க்கப்பட்டுள்ள அல்லது தவிர்க்கப்பட்ட தயாரிப்புகளைக் காண்பிக்கும்.
- B2B கேட்லாக் - B2B கேட்லாக்கில் சேர்க்கப்பட்டுள்ள அல்லது தவிர்க்கப்பட்ட தயாரிப்புகளைக் காண்பிக்கும்.
- நிறுவனத்தின் இருப்பிடக் கேட்டலாக் - B2B நிறுவனத்தின் இருப்பிடக் கேட்டலாக்கில் சேர்க்கப்பட்டுள்ள அல்லது அதிலிருந்து விலக்கப்பட்டுள்ள தயாரிப்புகளைக் காண்பிக்கும்.
- சில்லறை விற்பனைக் கேட்டலாக் - சில்லறை விற்பனைக் கேட்டலாக்கில் சேர்க்கப்பட்டுள்ள அல்லது அதிலிருந்து விலக்கப்பட்டுள்ள தயாரிப்புகளைக் காண்பிக்கும்.
- ஒதுக்கப்படாத கேட்டலாக் - ஒதுக்கப்படாத கேட்டலாக்கில் சேர்க்கப்பட்டுள்ள அல்லது அதிலிருந்து விலக்கப்பட்டுள்ள தயாரிப்புகளைக் காண்பிக்கும்.
- வகைகள் - தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பு வகையைச் சேர்ந்த தயாரிப்புகளைக் காண்பிக்கும்.
- சேகரிப்பு - ஒரு சேகரிப்பில் கிடைக்கும் தயாரிப்புகளைக் காண்பிக்கும்.
- வெளியீட்டுப் பிழை - நீங்கள் ஆன்லைன் ஸ்டோர் அல்லாத பிற விற்பனைச் சேனல்களைப் பயன்படுத்தினால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் விற்பனைச் சேனலில் வெளியீட்டுப் பிழைகள் உள்ள தயாரிப்புகளை இது காண்பிக்கும்.
- கிஃப்ட் கார்டு - உங்கள் ஸ்டோரில் கிடைக்கும் கிஃப்ட் கார்டு தயாரிப்புகளைக் காண்பிக்கும்.
- ஒருங்கிணைந்த பட்டியல்கள் - ஒருங்கிணைந்த பட்டியல்களை மட்டும் காண்பிக்கும் அல்லது அவற்றை விலக்கும்.
- மெட்டாஃபீல்டுகள் - ஒரு குறிப்பிட்ட மெட்டாஃபீல்டு மதிப்பைக் கொண்ட தயாரிப்புகளைக் காண்பிக்கும். இந்த அம்சத்தைப் பயன்படுத்த, உங்கள் மெட்டாஃபீல்டு வரையறையில் நிர்வாகியில் வடிப்பானாகப் பயன்படுத்து என்பதைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் ஆடைகளை விற்பனை செய்து, உங்கள் டி-ஷர்ட்டுகளின் பட்டியலை மட்டும் பார்க்க விரும்பினால், T-shirt என்ற தயாரிப்பு வகையின்படி நீங்கள் வடிகட்டலாம். தயாரிப்புப் பட்டியலில் அந்த வகை தயாரிப்புகள் மட்டுமே காண்பிக்கப்படும் என்பதால், அந்தத் தயாரிப்புகளின் துணைக்குழுவைச் சரிபார்த்துப் புதுப்பிப்பதை இது எளிதாக்குகிறது.
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வடிப்பான்களைச் சேர்த்தால், அனைத்து நிபந்தனைகளுக்கும் பொருந்தும் தயாரிப்புகள் மட்டுமே காண்பிக்கப்படும்.
இணக்கம் தொடர்பான சிக்கல்களுக்காகக் கவனிக்கப்பட வேண்டிய தயாரிப்புகள் உங்களிடம் இருந்தால், தானாகவே முன்பே வடிகட்டப்பட்ட இடைநிறுத்தங்கள் காட்சி காண்பிக்கப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
விரும்பினால்: காட்சி மெனுவைத் திறக்க, அனைத்தும் என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் வடிகட்ட விரும்பும் காட்சியைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் வடிப்பானுக்கான ஆபரேட்டரையும் மதிப்பையும் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வடிப்பானைப் பொறுத்துக் கிடைக்கும் மதிப்புகள் வேறுபடும்.
விரும்பினால்: உங்கள் தேடலைச் செம்மைப்படுத்த, வெவ்வேறு வடிப்பான்கள் மற்றும் மதிப்புகளைத் தொடர்ந்து சேர்க்க, முக்கியச் சொற்களைத் தொடர்ந்து தட்டச்சு செய்யவும்:
- உங்கள் தேடலில்
andஆபரேட்டருடன் கூடுதல் வடிப்பானைச் சேர்க்க,என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது ஒரு ஸ்பேஸைச் சேர்த்து, நீங்கள் சேர்க்க விரும்பும் கூடுதல் வடிப்பானின் பெயரைத் தட்டச்சு செய்யத் தொடங்கவும்.
- ஒரு வடிப்பானில்
orஆபரேட்டருடன் கூடுதல் மதிப்பைச் சேர்க்க, ஒரு காற்புள்ளியைச் சேர்த்து, நீங்கள் சேர்க்க விரும்பும் கூடுதல் மதிப்பின் பெயரைத் தட்டச்சு செய்யத் தொடங்கவும்.
- உங்கள் தேடலில்
விரும்பினால்: வடிப்பானைத் திருத்த, தேடல் பட்டியில் உள்ள எந்தவொரு வடிப்பானின் ஃபில்டர் சிப்களையும் கிளிக் செய்யவும்.
விரும்பினால்: உங்களின் தற்போதைய வடிப்பான்களின் வரிசையைப் புதிய காட்சியாகச் சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்து, புதிய காட்சிக்கு ஒரு பெயரிடவும்.
தயாரிப்பைத் தேடுதல்
தயாரிப்புகளின் தலைப்புகள், விவரணங்கள் அல்லது டேக்குகளில் உள்ள சொற்களின் அடிப்படையில் அவற்றை நீங்கள் கண்டறியலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
தேடி, வடிகட்டு புலத்தில் தேடல் சொற்களை உள்ளிடவும்.
உங்கள் கீபோர்டில் Enter என்பதை அழுத்தவும். தயாரிப்புத் தலைப்புகள், விவரணங்கள் மற்றும் டேக்குகளில் உள்ள சொற்களைக் கொண்டுள்ள தயாரிப்புகளை மட்டும் காண்பிக்கும்படி, தயாரிப்புப் பட்டியல் புதுப்பிக்கப்படும்.
தயாரிப்புகளுக்கான தேடல் வினவல்கள்
உங்கள் தேடல் முடிவுகளின் துல்லியத்தை மேம்படுத்த, தேடல் வினவலைப் பயன்படுத்தித் தயாரிப்புகளை நீங்கள் தேடலாம்.
வினவல்கள் மற்றும் அவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து மேலும் அறிய, Shopify.dev இல் உள்ள தேடல் தொடரியல் (Search syntax) என்பதைப் பார்க்கவும்.
தலைப்பின்படி தயாரிப்புகளைத் தேடுதல்
நீங்கள் தலைப்பின்படி தயாரிப்புகளைத் தேடலாம். தேடல் பட்டியில் title:[search-term] என்பதை உள்ளிட்டு, [search-term] என்பதற்குப் பதிலாகத் தயாரிப்புத் தலைப்பை மாற்றவும். எடுத்துக்காட்டாக, Pitcher என்பது போன்று நீங்கள் தேடும் சரியான தயாரிப்புத் தலைப்பு உங்களுக்குத் தெரிந்தால், title:Pitcher என்று நீங்கள் தேடலாம்.
குறிப்பிட்ட எழுத்துகளில் தொடங்கும் ஒரு சொல்லைக் கொண்ட தலைப்புகளை நீங்கள் தேட விரும்பினால், முன்னொட்டுத் தேடலைப் (prefix search) பயன்படுத்தலாம். முன்னொட்டுத் தேடல்களில், நீங்கள் தேடும் தேடல் சொல்லின் முடிவில் ஆஸ்டிரிஸ்க் குறியீட்டை * சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, title:ani* என்ற வினவலுடன் தேடினால், 'Animals of the Jungle' Documentary, 'Best Animated Films (2000)' Box Set மற்றும் Mouse Animatronic ஆகிய தயாரிப்புத் தலைப்புகள் முடிவுகளில் வரலாம், ஆனால் 'Baking with Vanilla' DVD என்ற தயாரிப்புத் தலைப்பு முடிவுகளில் வராது.
ஒரு சொல்லின் இடையில் அல்லது முடிவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியான எழுத்துகளைத் தேடுவது ஆதரிக்கப்படாது.
குறிப்பிட்ட மெட்டாஃபீல்டைப் பயன்படுத்தும் தயாரிப்புகளைத் தேடுதல்
நீங்கள் மெட்டாஃபீல்டின்படி தயாரிப்புகளைத் தேடலாம். இந்த எடுத்துக்காட்டில், உங்கள் தயாரிப்புகளுக்கு நிர்வாகியில் வடிப்பானாகப் பயன்படுத்து என்பதைச் செயல்படுத்தியுள்ள தனிப்பயன் மெட்டீரியல் வரையறையுடன் கூடிய மெட்டாஃபீல்டு உங்களிடம் உள்ளது. தயாரிப்பில் உள்ள மெட்டாஃபீல்டு மதிப்பு silk ஆகும்.
silk என்ற மெட்டாஃபீல்டு மதிப்பைப் பயன்படுத்தும் தயாரிப்புகளைத் தேட, முடிவுகளைத் தயாரிப்புகளுக்கு மட்டும் வரம்பிட்டு, பின்வருமாறு தேடவும்:
metafields.custom.material:silk
மெட்டாஃபீல்டுகள் குறித்து மேலும் அறிக.
தயாரிப்பு டேக்கைத் தேடுதல்
new என்று டேக் செய்யப்பட்ட தயாரிப்புகளைக் காண்பிக்க, பின்வருமாறு தேடவும்:
tag:new
இருப்பினும், உங்கள் தயாரிப்பு டேக்கில் உள்ள சொல் பிற டேக்குகளிலும் பயன்படுத்தப்பட்டிருந்தால் (எடுத்துக்காட்டாக, New Zealand), அந்தப் பிற டேக்குகளுக்கான முடிவுகளை நீங்கள் விலக்க வேண்டும். முடிவுகளைத் தயாரிப்புகளுக்கு வரம்பிட்டு, பின்வருமாறு தேடவும்:
tag:new AND NOT tag:"new zealand"
தயாரிப்புக் காட்சிகளை நிர்வகித்தல்
உங்கள் தயாரிப்புகளை நீங்கள் தேடும்போதோ வடிகட்டும்போதோ, தேடல் அல்லது வடிப்பானை ஒரு தயாரிப்புக் காட்சியாகச் சேமிக்கலாம், இதனால் அதை நீங்கள் பிறகு மீண்டும் பயன்படுத்தலாம். தயாரிப்புக் காட்சி என்பது உங்கள் தயாரிப்புகளை நீங்கள் இன்னும் திறம்பட நிர்வகிக்க உதவுவதற்காக நீங்கள் அமைக்கும் அளவுகோல்களின் அடிப்படையிலான, உங்கள் தயாரிப்புகளின் தனிப்பயனாக்கப்பட்ட காட்சியாகும். தயாரிப்புக் காட்சிகள் தேடல் பட்டிக்கு இடதுபுறத்தில் ஒரு மெனுவாகக் காண்பிக்கப்படும். நீங்கள் தயாரிப்புக் காட்சிகளைத் தனிப்பயனாக்கலாம், அத்துடன் காட்சிகளை உருவாக்கலாம், மறுபெயரிடலாம் அல்லது நீக்கலாம். புதிய தயாரிப்புக் காட்சியை நீங்கள் உருவாக்கும்போது, அது தேடல் பட்டியில் புதிய மெனு விருப்பமாகச் சேர்க்கப்படும்.
பின்வரும் தயாரிப்புக் காட்சிகள் இயல்புநிலைக் காட்சிகளாகும்:
- அனைத்தும் (வடிகட்டப்படாத, இயல்புநிலைக் காட்சி)
- செயலில் உள்ளவை
- வரைவு
- காப்பகப்படுத்தப்பட்டவை
அனைத்தும் என்பதைத் தவிர வேறெந்தத் தயாரிப்புக் காட்சியிலும், பின்வரும் மாற்றங்களைச் செய்து அவற்றைத் தற்போதைய காட்சியிலேயே சேமிக்கலாம் அல்லது அவற்றைப் புதிய காட்சியாகச் சேமிக்கலாம்:
- வடிப்பான்களைத் தேர்ந்தெடுத்தல்
- தனிப்பயன் தேடல் சொல்லைக் கொண்டு வடிகட்டுதல்
- காட்சிக்கு மறுபெயரிடுதல்
- காட்சியை நீக்குதல்
இயல்புநிலைக் காட்சிகளை உங்களால் மாற்றவோ நீக்கவோ முடியாது என்றாலும், அனைத்தும் என்ற காட்சியின் அடிப்படையில் புதிய காட்சியை நீங்கள் உருவாக்கலாம்.
சேமிக்கப்பட்ட காட்சிகளில் சேர்க்கப்பட்டுள்ள தயாரிப்புகள் தானாகவே புதுப்பிக்கப்படும். எடுத்துக்காட்டாக, செயலில் உள்ள தயாரிப்புகள் என்பதற்கான வடிப்பானை நீங்கள் சேமித்திருந்தால், செயலில் உள்ள எந்தத் தயாரிப்புகளும் அந்தத் தயாரிப்புக் காட்சியில் தானாகவே சேர்க்கப்படும்.
புதிய தயாரிப்புக் காட்சியை உருவாக்குங்கள்
இயல்புநிலை அனைத்தும் காட்சியிலிருந்து புதிய தயாரிப்புக் காட்சிகளை நீங்கள் உருவாக்கலாம். புதிய காட்சிக்குச் சேமித்த பிறகு, வடிப்பான்கள் மற்றும் வரிசைப்படுத்தும் முறையை உங்களால் மாற்றிக்கொள்ள முடியும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
தேடல் பட்டியைப் பயன்படுத்தி, வடிப்பான்களைச் சேர்த்தல், நெடுவரிசைகளைத் திருத்துதல் அல்லது வரிசைப்படுத்தும் முறையை மாற்றுதல் போன்ற தனிப்பயனாக்கங்களை இயல்புநிலைக் காட்சிக்குச் செயல்படுத்துங்கள்.
சேமி என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
புதிய காட்சிக்கு ஒரு பெயரை உள்ளிட்டு, காட்சியை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
தயாரிப்புக் காட்சியை நகலெடுங்கள்
ஏற்கனவே உள்ள காட்சியை நகலெடுத்து, அந்த நகலுக்குப் புதிய வடிப்பான்கள் அல்லது தனிப்பயனாக்கங்களை உங்களால் செயல்படுத்த முடியும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
தேடல் பட்டியில் கிளிக் செய்து, நீங்கள் நகலெடுக்க விரும்பும் காட்சியைத் தேர்ந்தெடுங்கள்.
தேடல் பட்டியில் காட்சியின் பெயரைக் கிளிக் செய்து, நகலெடு என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
புதிய காட்சிக்கு ஒரு பெயரை உள்ளிட்டு, காட்சியை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
வடிப்பான்களைச் சேர்த்தல், நெடுவரிசைகளைத் திருத்துதல் அல்லது வரிசைப்படுத்தும் முறையை மாற்றுதல் போன்ற தனிப்பயனாக்கங்களைக் காட்சிக்குச் செயல்படுத்துங்கள்.
சேமி என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
தயாரிப்புக் காட்சியைத் திருத்துங்கள்
அனைத்தும் காட்சியைத் தவிர எந்தவொரு காட்சிக்கும் வடிகட்டி மாற்றங்களை நீங்கள் சேமிக்கலாம். காட்சியின் உள்ளடக்கங்களைச் சிறப்பாக விவரிக்க, தயாரிப்புக் காட்சிக்கு உங்களால் மறுபெயரிடவும் முடியும். வரிசையாக்கத்தில் செய்யும் மாற்றங்கள் காட்சிகளில் சேமிக்கப்படாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
தேடல் பட்டியில் கிளிக் செய்து, நீங்கள் மாற்றங்களைச் செய்ய விரும்பும் தயாரிப்புக் காட்சியைத் தேர்ந்தெடுங்கள்.
விருப்பத்தேர்வு: வடிப்பான்களைச் சேர்த்தல், நெடுவரிசைகளைத் திருத்துதல் அல்லது வரிசைப்படுத்தும் முறையை மாற்றுதல் போன்ற தனிப்பயனாக்கங்களைக் காட்சிக்குச் செயல்படுத்திவிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
விருப்பத்தேர்வு: தயாரிப்புக் காட்சிக்கு மறுபெயரிட, பின்வரும் செயல்களைச் செய்யுங்கள்:
- தயாரிப்புக் காட்சியின் பெயரைக் கிளிக் செய்து, மறுபெயரிடு என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
- தயாரிப்புக் காட்சிக்குப் புதிய பெயரை உள்ளிடுங்கள்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
தயாரிப்புக் காட்சியை நீக்குங்கள்
இயல்புநிலைத் தயாரிப்புக் காட்சிகளைத் தவிர்த்து, உங்களுக்குத் தேவையில்லாத தயாரிப்புக் காட்சிகளை உங்களால் நீக்கிக்கொள்ள முடியும். தயாரிப்புக் காட்சியை நீக்கிய பிறகு மீட்டெடுக்க முடியாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
தேடல் பட்டியில் கிளிக் செய்து, நீங்கள் நீக்க விரும்பும் தயாரிப்புக் காட்சியைத் தேர்ந்தெடுங்கள்.
தயாரிப்புக் காட்சியின் பெயரைக் கிளிக் செய்து, நீக்கு என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
நீக்குதலை உறுதிப்படுத்த, காட்சியை நீக்கு என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
தயாரிப்புக் காட்சி அல்லது வடிப்பான் மூலம் மொத்தச் செயல்களைப் பயன்படுத்துங்கள்
எந்தவொரு தயாரிப்புக் காட்சியிலும், சில அல்லது அனைத்துத் தயாரிப்புகளையும் தேர்ந்தெடுத்து, அவற்றில் மொத்தச் செயல்களை உங்களால் செய்ய முடியும். தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பதைத் தொடர, தயாரிப்புக் காட்சிகளுக்கு இடையில் நீங்கள் மாறலாம்; நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய தொடர்புடைய தயாரிப்புகளை மட்டும் காட்ட வடிப்பான்களைப் பயன்படுத்தலாம் அல்லது முக்கியச் சொற்களைப் பயன்படுத்தித் தேடலாம்.
உங்கள் Shopify நிர்வாகியில் மொத்தச் செயல்களைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறியுங்கள்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
விருப்பத்தேர்வு: தேடல் பட்டியில், சேமிக்கப்பட்ட காட்சியின் பெயரைத் தட்டச்சு செய்து, தயாரிப்புப் பட்டியலில் உள்ள தொடர்புடைய தயாரிப்புகளை மட்டும் காட்ட அந்தக் காட்சியின் பெயரைத் தேர்ந்தெடுங்கள்.
மொத்தமாகத் திருத்து என்பது போன்ற ஒரு செயலைக் கிளிக் செய்யுங்கள் அல்லது
என்பதைக் கிளிக் செய்து, பட்டியலில் இருந்து ஒரு செயலைத் தேர்ந்தெடுங்கள்.
ஒரு செயலை உறுதிப்படுத்துமாறு உங்களிடம் கேட்கப்பட்டால், உங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்துங்கள்.
தயாரிப்புத் தேடல் மற்றும் வடிகட்டுதலில் சிக்கல் தீர்த்தல்
டேக்குகள் இல்லாத தயாரிப்புகளைக் கண்டறிதல்
Shopify நிர்வாகியில் உள்ள தேடல் பட்டி மற்றும் வடிப்பான்கள், டேக்குகள் இல்லாத தயாரிப்புகள் போன்ற ஒரு குறிப்பிட்ட பண்புக்கூறு விடுபட்ட தயாரிப்புகளைத் தேடுவதை ஆதரிக்காது. டேக்குகள் இல்லாத தயாரிப்புகளை நீங்கள் தேடினால், முடிவுகள் முழுமையற்றதாகவோ நம்பகத்தன்மையற்றதாகவோ இருக்கலாம்.
டேக்குகள் இல்லாத அனைத்துத் தயாரிப்புகளையும் கண்டறிய, உங்கள் தயாரிப்புப் பட்டியலை ஏற்றுமதி செய்து, விரிதாளில் உள்ள Tags நெடுவரிசையைச் சரிபாருங்கள்:
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்து, அனைத்துத் தயாரிப்புகளும் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
தயாரிப்புகளை ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யுங்கள். உங்கள் மின்னஞ்சலுக்கு Shopify ஒரு CSV கோப்பை அனுப்பும்.
ஏற்றுமதி செய்யப்பட்ட CSV கோப்பை, விரிதாள் செயலியில் திறங்கள்.
Tags நெடுவரிசையில் காலியாக உள்ள கலங்களை வரிசைப்படுத்துங்கள் அல்லது தேடுங்கள். Tags நெடுவரிசையில் மதிப்பு இல்லாத வரிசைகளே டேக்குகள் இல்லாத தயாரிப்புகளாகும்.
உங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வது குறித்து மேலும் அறியுங்கள்.