Facebook தரவுப் பகிர்வு

Meta வழங்கும் Facebook மற்றும் Instagram-இல் உள்ள தரவுப் பகிர்வு அமைப்புகள், உங்களின் ஆன்லைன் ஸ்டோரில் வாடிக்கையாளர் தரவு மற்றும் உலாவுதல் நடத்தை எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்பதைத் தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது. Meta பிக்சல் மற்றும் Facebook Conversions API போன்ற தரவுப் பகிர்வுக் கருவிகள் ஆர்டர்களைத் தடமறியவும், பிற நிகழ்வுகளிலிருந்து தரவைச் சேகரிக்கவும் அனுமதிக்கின்றன, இது உங்கள் ஸ்டோர் டிராஃபிக்கைப் பகுப்பாய்வு செய்யவும் டைனமிக் விளம்பரங்கள் மூலம் விளம்பர இலக்கிடலை மேம்படுத்தவும் உதவும்.

தரவைப் பகிர்வது என்பது உங்களின் விருப்பமாகும். வாடிக்கையாளர் தரவானது பிரச்சாரத்தின் செயல்திறன் மற்றும் விற்பனைத் தடமறிதலை மேம்படுத்தும் அதேவேளையில், அனைவரும் தங்கள் தரவு பகிரப்படுவதை விரும்புவதில்லை. தரவை நீங்கள் எவ்வாறு பகிர்கிறீர்கள் என்பதை உங்கள் வாடிக்கையாளர்களிடம் சொல்வதும், எந்த வகையான தரவு அல்லது எவ்வளவு தரவை நீங்கள் பகிர விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிப்பதும் முக்கியம். இந்தத் தகவலை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க, உங்கள் தனியுரிமைக் கொள்கை புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்யவும்.

Meta-இன் வாடிக்கையாளர் தரவுப் பகிர்வு நிலையைத் தேர்ந்தெடுத்தல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கும் Facebook-க்கும் இடையே தரவு எவ்வாறு சேகரிக்கப்பட்டுப் பகிரப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்க Meta வழங்கும் Facebook மற்றும் Instagram அனுமதிக்கிறது. தரவுப் பகிர்வு அமைப்புகளில் பின்வரும் மூன்று நிலைகளிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்: நிலையானது, மேம்பட்டது அல்லது அதிகபட்சம்.

Meta வழங்கும் Facebook மற்றும் Instagram-ஐ நீங்கள் எப்போது நிறுவினீர்கள் என்பதைப் பொறுத்து, வாடிக்கையாளர் தரவுப் பகிர்வு நிலைகள் வெவ்வேறு தனியுரிமை அமைப்புகளை வழங்குகின்றன.

நீங்கள் நிலையானது என்பதைத் தேர்ந்தெடுத்தால், உங்களின் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள வாடிக்கையாளரின் உலாவுதல் நடத்தையிலிருந்து Meta பிக்சல் தரவைச் சேகரிக்கும். உலாவி அடிப்படையிலான விளம்பரத் தடுப்பான், Meta பிக்சல் தரவைப் பகிர்வதைத் தடுக்கக்கூடும்.

நீங்கள் Enhanced (மேம்படுத்தப்பட்டது) என்பதைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் ஸ்டோர் Facebook இன் Conversions API மற்றும் Meta பிக்சலைப் பயன்படுத்துகிறது. Conversions API ஆனது Shopify மற்றும் Facebook சேவையகங்களுக்கு இடையே கொள்முதல் நிகழ்வை அனுப்புகிறது. சேவையகங்களுக்கிடையே அனுப்பப்படும் தரவை உலாவி சார்ந்த விளம்பரத் தடுப்பான்களால் தடுக்க முடியாது. Enhanced அமைப்பானது Facebook வலையமைப்பில் உள்ள பயனர்களைப் பொருத்துவதற்கு உங்கள் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவலைப் பகிர்கிறது. இந்த அமைப்பைப் பயன்படுத்திச் சேகரிக்கப்படும் தகவலில் உங்கள் வாடிக்கையாளரின் பெயர், இடம், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றுடன், உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் அவர்கள் உலாவிய விதமும் அடங்கும். மேலும் தகவலுக்கு, Conversions API குறித்த Facebook இன் ஆவணங்களைப் பார்க்கவும்.

நீங்கள் Maximum (அதிகபட்சமானது) என்பதைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் ஸ்டோர் Facebook இன் Conversions API, Meta பிக்சலைப் பயன்படுத்துவதுடன், Facebook இன் சமீபத்திய விளம்பரத் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்படும். Conversions API ஆனது Shopify மற்றும் Facebook சேவையகங்களுக்கு இடையே கொள்முதல் நிகழ்வை அனுப்புகிறது. சேவையகங்களுக்கிடையே அனுப்பப்படும் தரவை உலாவி சார்ந்த விளம்பரத் தடுப்பான்களால் தடுக்க முடியாது. Maximum அமைப்பானது Facebook வலையமைப்பில் உள்ள பயனர்களைப் பொருத்துவதற்கு உங்கள் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவலைப் பகிர்கிறது. இந்த அமைப்பைப் பயன்படுத்திச் சேகரிக்கப்படும் தகவலில் உங்கள் வாடிக்கையாளரின் பெயர், இடம், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றுடன், உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் அவர்கள் உலாவிய விதமும் அடங்கும். மேலும் தகவலுக்கு, Conversions API குறித்த Facebook இன் ஆவணங்களைப் பார்க்கவும்.

Facebook தரவுப் பகிர்வை அமைக்கவும்

Facebook Shop மற்றும் Instagram Shopping ஆகியவற்றை அமைக்கும்போது, வாடிக்கையாளர் தரவுப் பகிர்வை நீங்கள் செயல்படுத்தலாம். Facebook மற்றும் Instagram by Meta அமைப்புகளில் எந்த நேரத்திலும் உங்கள் Facebook வாடிக்கையாளர் தரவுப் பகிர்வு அமைப்புகளைச் செயல்படுத்தலாம் மற்றும் மாற்றலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, விற்பனைச் சேனல்கள் > Facebook & Instagram என்பதற்குச் செல்லவும்.

  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தரவுப் பகிர்வு அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. வாடிக்கையாளர் தரவுப் பகிர்வு பிரிவில், வாடிக்கையாளர் தரவுப் பகிர்வைச் செயல்படுத்தவும்.

  5. CHOOSE LEVEL (நிலையைத் தேர்ந்தெடு) பிரிவில், நீங்கள் செயல்படுத்த விரும்பும் வாடிக்கையாளர் தரவுப் பகிர்வு நிலையைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. நீங்கள் Meta பிக்சலை இணைக்கவில்லை எனில், வாடிக்கையாளர் தரவுப் பகிர்வுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் பிக்சலில் Connect (இணை) என்பதைக் கிளிக் செய்யவும்.

வாடிக்கையாளர் தரவுப் பகிர்வு நிகழ்வுகள்

Shopify இல் Meta பிக்சலைச் சேர்த்த பிறகு, வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட பக்கத்தைப் பார்ப்பது போன்ற உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் நடைபெறும் குறிப்பிட்ட நிகழ்வுகளை இந்தப் பிக்சல் தடமறிகிறது. உங்கள் ஸ்டோருடன் வாடிக்கையாளர்கள் எவ்வாறு ஊடாடுகிறார்கள் என்பதைப் பற்றி மேலும் அறிய, இந்த நிகழ்வுகளிலிருந்து பெறப்படும் தரவை நீங்கள் பயன்படுத்தலாம். பிரச்சாரங்களை உருவாக்கவும் மாற்றங்களைத் தடமறியவும் Meta பிக்சல் நிகழ்வுகளைப் பயன்படுத்துவது குறித்து Facebook உதவி மையத்தில் மேலும் அறிக.

ஆர்டர் மதிப்பைத் தடமறியும் நிகழ்வுகள், ஆர்டரின் மொத்த விலையைப் பயன்படுத்துகின்றன. இது சுங்க வரிகள், வரிகள் மற்றும் தள்ளுபடிகள் உட்பட செக்அவுட்டில் உள்ள அனைத்து உருப்படிகளின் விலைகளின் கூடுதலாகும்.

Meta பிக்சல் நிகழ்வுகள்

உங்கள் ஆன்லைன் ஸ்டோருடன் Meta பிக்சலை ஒருங்கிணைத்த பிறகு, பின்வரும் நிகழ்வுகளைப் பிக்சல் தானாகவே தடமறிகிறது.

Meta பிக்சலைக் கொண்டு நீங்கள் தானாகவே தடமறியக்கூடிய வாடிக்கையாளர் நிகழ்வுகளின் பெயர்கள் மற்றும் விளக்கங்களின் பட்டியல்.
நிகழ்வின் பெயர்நிகழ்வின் விளக்கம்
PageViewபார்வையாளர் ஒரு பக்கத்தைப் பார்க்கும்போது.
ViewContentபார்வையாளர் ஒரு தயாரிப்பைப் பார்க்கும்போது.
Searchபார்வையாளர் தேடும்போது.
AddToCartபார்வையாளர் ஷாப்பிங் கார்ட்டில் ஒரு தயாரிப்பைச் சேர்க்கும்போது.
InitiateCheckoutபார்வையாளர் செக்அவுட் பொத்தானைக் கிளிக் செய்யும்போது.
AddPaymentInfoபார்வையாளர் செக்அவுட்டில் கட்டணத் தகவலை உள்ளிடும்போது.
Purchaseபார்வையாளர் கொள்முதலை நிறைவுசெய்து செக்அவுட்டில் நன்றிப் பக்கத்தைப் பார்க்கும்போது.

தரவுப் பகிர்வுக்கான சிறந்த நடைமுறைகள்

உங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல் எவ்வாறு பகிரப்பட வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிப்பதால், அவர்களின் தனிப்பட்ட தகவலை நீங்கள் எவ்வாறு சேகரித்துச் செயல்படுத்துகிறீர்கள் என்பதை உங்கள் வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்வதை உறுதிசெய்ய வேண்டும். Facebook இன் Facebook வணிகக் கருவிகளுக்கான தனியுரிமை மற்றும் தரவுப் பயன்பாட்டிற்கான சிறந்த நடைமுறைகளை மதிப்பாய்வு செய்வதும், இதையும் பிற தொடர்புடைய தகவல்களையும் உங்கள் ஸ்டோரின் தனியுரிமைக் கொள்கையில் சேர்ப்பதும் உங்களின் கடமையாகும். தனியுரிமைக் கொள்கையை உருவாக்குவதற்கு உதவ, நீங்கள் Shopify இன் தனியுரிமைக் கொள்கை ஜெனரேட்டரைப் பயன்படுத்தலாம்.