கிரியேட்டர்களுக்கான Collabs சமூக வழிகாட்டுதல்கள்
ஒரு கிரியேட்டராக Collabs-ஐப் பயன்படுத்த, நீங்கள் Collabs சமூக வழிகாட்டுதல்களை மதிப்பாய்வு செய்து பின்பற்ற வேண்டும்:
- Collabs தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காக அசல் உள்ளடக்கத்தை உருவாக்கிப் பதிவிடும் உண்மையான கிரியேட்டராக நீங்கள் இருக்கிறீர்கள்.
- நீங்கள் தேர்ந்தெடுத்த பிளாட்ஃபார்ம்களில் நீங்கள் உருவாக்கியுள்ள பார்வையாளர்களிடம் உரையாடுவதன் மூலம் நீங்கள் டிராஃபிக்கை உருவாக்குகிறீர்கள்.
- Collabs செயலி அல்லது சேவைகளைப் பயன்படுத்துவதற்கோ, செயலி அல்லது சேவைகள் மூலமாகவோ அல்லது அது தொடர்பாகவோ எந்தவொரு உள்ளடக்கத்தையோ அல்லது கருத்துகளையோ சமர்ப்பிக்க, கடத்த, வெளியிட, பதிவேற்ற, காட்சிப்படுத்த, வழங்க அல்லது பதிவிடவோ உங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது: (a) எங்களின் உரிமைகள் அல்லது அறிவுசார் சொத்து, தனியுரிமை அல்லது விளம்பர உரிமைகள் உட்பட, வரம்பின்றி ஏதேனும் மூன்றாம் தரப்பின் உரிமைகளை மீற, மீறுகை செய்ய அல்லது தவறாகப் பயன்படுத்த; (b) தவறான, தவறாக வழிநடத்தும் அல்லது ஏமாற்றும் தகவல்களைச் சமர்ப்பிக்க; (c) வைரஸ்கள் அல்லது வேறு ஏதேனும் தீங்கிழைக்கும் அல்லது அழிவுகரமான குறியீட்டைப் பதிவேற்ற அல்லது கடத்த; (d) மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க அல்லது தடமறிய; (e) ஸ்பேம், ஃபிஷிங் (phishing), ஃபார்மிங் (pharming), ப்ரீடெக்ஸ்ட் (pretext), ஸ்பைடர் (spider), க்ரால் அல்லது ஸ்கிராப் (scrape) செய்ய; (f) வெறுக்கத்தக்க, அவதூறான, இழிவான, ஆபாசமான அல்லது ஒழுக்கக்கேடான நோக்கத்திற்காக; (g) சேவைகள் அல்லது அது தொடர்புடைய இணையதளம் அல்லது செயலி, பிற இணையதளம் அல்லது செயலி அல்லது இணையத்தின் பாதுகாப்பு அம்சங்களில் தலையிட அல்லது தவிர்த்துச் செயல்பட; (h) Shopify-இன் தனிப்பட்ட முடிவின்படி, Shopify-க்கு பொறுப்பை உருவாக்கக்கூடிய அல்லது Shopify-இன் நற்பெயரை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபட; அல்லது (i) மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்ய அல்லது அதில் பங்கேற்க வேறு ஏதேனும் நபரைத் தூண்ட அல்லது ஊக்குவிக்க.
நீங்கள் விளம்பரப்படுத்தும் பிராண்டுகளுடன் நம்பகத்தன்மையை உருவாக்க உதவுவதற்காக இந்த வழிகாட்டுதல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன, இது வலுவான உறவுகளுக்கு வழிவகுக்கும். Collabs சமூக வழிகாட்டுதல்களை மீறுவதால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்ள, இந்தப் பக்கத்தை மதிப்பாய்வு செய்யவும்.
இந்தப் பக்கத்தில்
Collabs சமூக வழிகாட்டுதல்களை மீறுவதால் ஏற்படும் விளைவுகள்
நீங்கள் Collabs சமூக வழிகாட்டுதல்களை மீறினால், பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:
- Collabs-இல் உள்ள அனைத்து பிராண்டுகளுக்கும் உங்கள் கமிஷன் சலுகை 0% ஆகக் குறையும்.
- நிலுவையில் உள்ள அனைத்து பேஅவுட்களும் ரத்துசெய்யப்படும்.
- பிராண்டுகள் உங்களுடனான இணைப்பை இடைநிறுத்தத் தேர்வுசெய்யலாம், இது உங்கள் அஃபிலியேட் இணைப்புகள் மற்றும் தள்ளுபடிக் குறியீடுகளைச் செல்லாததாக்கும்.
கூட்டாண்மை விளைவுகள்
ஒரு பிராண்டுடன் அங்கீகரிக்கப்பட்ட கூட்டாண்மையில் நீங்கள் இருந்து, Collabs சமூக வழிகாட்டுதல்களை மீறினால், பின்வரும் விளைவுகள் பொருந்தும்:
- ஒரு தகராறு தானாகவே திறக்கப்படும், மேலும் நீங்கள் பிராண்டுடன் நேரடியாகப் பேசி தகராறைத் தீர்க்கும் வரை, நீங்கள் பெறும் எந்தவொரு கமிஷனும் நிறுத்திவைக்கப்படும்.
- பிராண்டு உங்களுடனான அவர்களின் இணைப்பை இடைநிறுத்தத் தேர்வுசெய்யலாம், இதனால் நிலுவையில் உள்ள அனைத்து பேஅவுட்களும் இடைநிறுத்தப்படும் மற்றும் உங்கள் அஃபிலியேட் இணைப்புகள் மற்றும் தள்ளுபடிக் குறியீடுகள் செல்லாததாக்கப்படும்.
உங்கள் கமிஷன் குறைக்கப்பட்டாலோ அல்லது அதுதொடர்பாக தகராறு ஏற்பட்டாலோ, மற்றும் ஒரு பிராண்டு உங்களுடனான இணைப்பை இடைநிறுத்தினாலோ Shopify-இடமிருந்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும்.
Collabs-ஐப் பயன்படுத்துவதிலிருந்து முடக்கப்பட்ட கிரியேட்டர்கள்
Collabs சமூக வழிகாட்டுதல்களை மீறியதன் காரணமாக நீங்கள் Shopify ஆல் முடக்கப்பட்டால், நீங்கள் இனி Collabs-ஐப் பயன்படுத்த முடியாது, மேலும் பிராண்டுகளிடமிருந்து நிலுவையில் உள்ள உங்களின் பேமெண்ட்கள் ரத்துசெய்யப்படும். இந்த முடிவு இறுதியானது மற்றும் இதை மாற்ற முடியாது.
Collabs-ஐப் பயன்படுத்துவதிலிருந்து நீங்கள் முடக்கப்பட்டால், Shopify-இடமிருந்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும்.