Shopify Collabs-இல் கமிஷன்களுக்கான பேமெண்ட்டைப் பெறுதல்

Shopify வியாபாரி ஒருவருடன் நீங்கள் செயலில் உள்ள கூட்டாண்மையைக் கொண்டிருந்தால், நீங்கள் ஸ்டோருக்குப் பரிந்துரைக்கும் விற்பனையை விளம்பரப்படுத்தவும் தடமறியவும் அஃபிலியேட் இணைப்பு அல்லது தள்ளுபடிக் குறியீட்டைப் பெறலாம்.

உங்கள் பார்வையாளர்களுடன் அஃபிலியேட் இணைப்பு அல்லது தள்ளுபடிக் குறியீட்டை நீங்கள் பகிரலாம். உங்கள் அஃபிலியேட் இணைப்பு அல்லது தள்ளுபடிக் குறியீட்டைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒவ்வொரு கொள்முதலுக்கும் அஃபிலியேட் கமிஷனை நீங்கள் பெறலாம்.

உங்கள் Collabs கணக்கிலுள்ள செயலில் உள்ள Collabs பிரிவில் உங்கள் கமிஷன் தொகையைக் கண்டறியலாம்.

Collabs-க்கான தானியங்கிப் பேமெண்ட்டுகளை அமைத்தல்

செயலிலுள்ள உங்கள் அஃபிலியேட் சலுகைகள் மூலமாக நீங்கள் ஈட்டும் கமிஷன்களுக்கான பேமெண்ட்டுகள், ஒவ்வொரு வணிகரின் Collabs பேமெண்ட் அமைப்புகளுக்கும் ஏற்பத் தானாகவே வழங்கப்படுகின்றன.

நீங்கள் கூட்டாளராக உள்ள பிராண்டுகளிடமிருந்து பேமெண்ட்டைப் பெற, உங்கள் கமிஷனைத் தானாகவே பெறும்படி Hyperwallet கணக்கை அமைக்கலாம்.

படிகள்:

  1. Collabs இணையதளத்தில் உள்நுழையவும்.

  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பேஅவுட்கள் தாவலைக் கிளிக் செய்யவும்.

  4. தானியங்கி பேஅவுட்களைச் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. உங்கள் Hyperwallet கணக்கை உருவாக்கு பிரிவில் தேவையான அனைத்துப் புலங்களையும் நிரப்பி, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. அடுத்த திரையில், உங்கள் Shopify கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. உங்கள் Collabs கமிஷன்களைப் பெறுவதற்கான புதிய கட்டண முறையைச் சேர்க்க, உங்கள் பேஅவுட் முறையை நிர்வகித்தல் என்பதைப் பார்க்கவும்.

Shopify பார்ட்னர் டாஷ்போர்டில் உங்கள் பேஅவுட் முறை அமைப்புகளைக் காணலாம், இதுவே Shopify மூலமாகப் பணம் சம்பாதிக்கும் அஃபிலியேட்கள் மற்றும் சுயாதீனப் பணியாளர்களுக்கான பேமெண்ட்டுகளைக் கையாளும் தளமாகும். Shopify பார்ட்னர் டாஷ்போர்டை அணுக, உங்கள் Collabs கணக்கின் பேஅவுட்கள் பிரிவுக்குச் செல்லவும். Shopify பார்ட்னர் தளத்தால் ஆதரிக்கப்படும் பேஅவுட் முறைகள் குறித்து மேலும் அறிக.

உங்கள் அஃபிலியேட் இணைப்பைப் பயன்படுத்தி ஒரு தயாரிப்பு வாங்கப்படும்போது, ஆர்டருக்கான பணம் திரும்பப்பெறப்படவில்லையா என்பதை உறுதிப்படுத்த, அந்தத் தயாரிப்புக்கான கமிஷன் ஒரு நிறுத்திவைப்பு காலம் வரை நிலுவையில் உள்ளதாகக் குறிக்கப்படும். நிறுத்திவைப்பு காலம் முடிந்ததும், அந்தக் கமிஷன் உங்களுக்குச் செலுத்தப்படுவதற்காக வணிகரின் கணக்கில் பற்று வைக்கப்படும். நிறுத்திவைப்பு காலம் வணிகரால் அமைக்கப்படுகிறது, இது 1 முதல் 90 நாட்கள் வரை இருக்கலாம். ஒரு வணிகர் அமைத்துள்ள நிறுத்திவைப்பு காலத்தைத் தீர்மானிக்க, வணிகருடைய சுயவிவரப் பக்கத்தின் கட்டண விதிமுறைகள் பிரிவை மதிப்பாய்வு செய்யவும்.

வணிகர் கமிஷனைச் செலுத்தியதும் அது சேர்க்கப்பட்டு, உங்கள் அடுத்த பேஅவுட் என்பதில் காண்பிக்கப்படும். தானியங்கி பேஅவுட்கள் மாதம் இருமுறை செலுத்தப்படும்படி திட்டமிடப்பட்டு, உங்களின் அடுத்த பேஅவுட் இருப்பு குறைந்தபட்சம் $25-ஆக இருந்தால் மட்டுமே செயலாக்கப்படும். உங்களுக்கு வரவிருக்கும் மற்றும் நிலுவையில் உள்ள பேஅவுட்களை பேஅவுட்கள் பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம். பேஅவுட் வரம்பு மற்றும் அதிர்வெண் குறித்து மேலும் அறிக.

தானியங்கி பேஅவுட்கள் USD-இல் கையாளப்படுகின்றன. நீங்கள் வேறு பேஅவுட் நாணயத்தைத் தேர்ந்தெடுத்தால், உங்களிடம் பேஅவுட் நாணய மாற்றுக் கட்டணம் வசூலிக்கப்படலாம்.

தானியங்கு பேஅவுட்கள் மூலம் கையாளப்படும் கமிஷனுக்கு, தொடர்புடைய வரியானது வசூலிக்கப்பட்டு உங்கள் சார்பாகச் செலுத்தப்படும்.

Collabs-இல் பேமெண்ட் தகராறுகளைக் கையாளுதல்

வணிகர் தேர்ந்தெடுத்த நிறுத்திவைப்பு காலத்திற்குள் இருக்கும் வரை, நிலுவையில் உள்ளது என இருக்கும் கமிஷனுக்கான பேமெண்ட் தகராறை வணிகர்களால் தொடங்க முடியும். அவ்வாறு நடந்தால், நீங்கள் மின்னஞ்சலைப் பெறுவீர்கள். அத்துடன், உங்கள் Shopify Collabs கணக்கில் உள்ள பேஅவுட்கள் பக்கத்திலிருந்தும் தகராறு விவரங்களை அணுகலாம். தீர்வுகாண, நீங்கள் வணிகருக்குப் பதிலளிக்க வேண்டும். வணிகரால் மட்டுமே திறந்திருக்கும் தகராறைத் தீர்க்க முடியும்.

ஒரு பிராண்ட் Collabs-ஐ விட்டு வெளியேறும்போது பேமெண்ட்டைப் பெறுதல்

நீங்கள் பணிபுரியும் ஒரு பிராண்ட் Collabs-ஐ விட்டு வெளியேறினால், கூட்டாண்மையிலிருந்து உங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள எந்தவொரு கமிஷனுக்கும் உங்களுக்குப் பணம் செலுத்தப்படும். தகராறில் உள்ள எந்தவொரு கமிஷனும் ரத்துசெய்யப்படும்.

நீங்கள் பணிபுரியும் பிராண்ட் Collabs-ஐ விட்டு வெளியேறும்போது வேறு என்ன நடக்கும் என்பது குறித்த பின்வரும் விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • பிராண்ட் தங்களின் அஃபிலியேட் திட்டத்தை முடித்துக்கொள்வது குறித்த மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவீர்கள்.
  • அந்தப் பிராண்டிலிருந்து நீங்கள் பெற்ற எந்தவொரு அஃபிலியேட் இணைப்புகளும் கிரியேட்டர் தள்ளுபடிக் குறியீடுகளும் முடக்கப்படும்.
  • Collabs-இல் அந்தப் பிராண்டின் மூலம் நீங்கள் இனி எந்தக் கமிஷனையும் ஈட்ட முடியாது.
  • Collabs மொபைல் செயலி மற்றும் Collabs இணையதளத்தில்:
    • உங்கள் சுயவிவரத்தில் பிராண்டைப் பார்க்கும்போது, அது Collabs-ஐ விட்டு வெளியேறியது என லேபிளிடப்பட்டிருக்கும்.
    • உங்கள் சுயவிவரத்தில் தயாரிப்புகளைப் பார்க்கும்போது, பிராண்டின் ஏதேனும் தயாரிப்புகள் செயலற்றவை என லேபிளிடப்பட்டிருக்கும்.
  • பிராண்டுடன் பணிபுரிந்ததில் இருந்தான உங்களின் கிரியேட்டர் பகுப்பாய்வை நீங்கள் இன்னும் பார்க்கலாம்.

Collabs-இல் வரிகளைக் கையாளுதல்

கிரியேட்டரின் சேவைகளுக்கு விற்பனை அல்லது பயன்பாட்டு வரி விதிக்கப்படலாம். வரிகள் செலுத்தப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு வணிகருக்கும் கிரியேட்டருக்கும் உள்ளது. நீங்கள் ஈட்டிய கமிஷன்கள் வணிகரின் நிலையான மாதாந்திர விலைப்பட்டியலில் காட்டப்படும், மேலும் பொருந்தக்கூடிய சட்டத்தின்படி குறிப்பிட்ட அதிகார வரம்புகளில் கிரியேட்டரின் சேவைகளின் விற்பனை தொடர்பான வரிகளை Shopify வசூலித்துத் தாக்கல் செய்கிறது. கூடுதல் தகவலுக்கு, Collabs சேவை விதிமுறைகளைப் பார்க்கவும்.

வணிகர் அமெரிக்காவைச் சேர்ந்தவராக இருந்தால், அவர் Shopify Collabs மூலம் W9 படிவத்தைச் சமர்ப்பிக்குமாறு கோரலாம். வணிகர் W9 படிவத்தைக் கோரும்போது, பேஅவுட் வரம்பான $599.99 USD-ஐ எட்டும்போது கிரியேட்டர்கள் அந்தப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வணிகர் W9 படிவத்தைக் கோரியிருந்தும், கிரியேட்டர் அதைப் படிவத்தைச் சமர்ப்பிக்கவில்லை எனில், அந்த ஆண்டிற்கான பேஅவுட்கள் $599.99 USD என வரம்பிடப்படும்.

எல்லா நிகழ்வுகளிலும், ஏதேனும் பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் வரிப் படிவங்களை அறிக்கையிடுவதும் செலுத்துவதும் உட்பட, தங்களுடைய அந்தந்த வரிக் கடமைகளுக்கு இணங்க வேண்டிய பொறுப்பு வணிகர்களுக்கும் கிரியேட்டர்களுக்கும் உள்ளது.

Collabs-இல் உங்களின் விற்பனைப் பகுப்பாய்வைப் பார்த்தல்

உங்கள் Shopify Collabs-நிர்வாகியின் பகுப்பாய்வு பக்கத்திலிருந்து உங்களின் கிரியேட்டர் பகுப்பாய்வைப் பார்க்கலாம்.

பகுப்பாய்வு பக்கத்தில் நீங்கள் இணைந்துள்ள வணிகர்களின் பட்டியல் இருக்கும், மேலும் ஒவ்வொரு பிராண்டும் பின்வரும் தரவைக் காட்டும்:

  • மாற்றம்: விற்பனையில் முடிந்த மொத்தப் பார்வைகளின் சதவீதம்.
  • பார்வைகள்: உங்களின் அஃபிலியேட் இணைப்பைப் பயன்படுத்தி வணிகரின் ஸ்டோருக்குச் சென்ற மொத்தப் பார்வைகளின் எண்ணிக்கை.
  • விற்பனை: உங்களின் அஃபிலியேட் இணைப்பு அல்லது தள்ளுபடிக் குறியீட்டுக்குக் காரணமான மொத்த விற்பனைகளின் எண்ணிக்கை.
  • ஈட்டியவை: ஈட்டப்பட்ட மொத்தக் கமிஷன். ஆர்டருக்கான பணத்தைத் திரும்பப்பெறுதல்கள் மற்றும் ரத்துசெய்தல்களின் அடிப்படையில் கமிஷன் சரிசெய்யப்படலாம்.

காண்பிக்கப்படும் தரவு, வணிகருடன் நீங்கள் கூட்டுசேர்ந்த மொத்த நேரத்தையும் குறிக்கிறது. குறிப்பிட்ட தேதி வரம்புகளைத் தேர்ந்தெடுக்க முடியாது.