Collabs சமூக வழிகாட்டுதல்களைப் புரிந்துகொள்ளுதல்

Collabs ஆனது கிரியேட்டர்கள் மற்றும் பிராண்டுகளின் சிறந்த சமூகமாக இருப்பதை உறுதிசெய்ய, நீங்கள் இணைந்து பணியாற்றும் கிரியேட்டர்கள், கிரியேட்டர்களுக்கான Collabs சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

Collabs சமூக வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத கிரியேட்டர்களுக்கு எதிராக Collabs நடவடிக்கை எடுக்கும்.

Collabs சமூக வழிகாட்டுதல்களை மீறும் கிரியேட்டர்களுக்கான விளைவுகள்

உங்கள் திறந்த அணுகல் திட்டத்தில் உள்ள, Collabs சமூக வழிகாட்டுதல்களை மீறிய கிரியேட்டர்கள் மீது பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:

  • அந்தக் கிரியேட்டருக்கு அதிக ஆபத்து உள்ளதாகக் கொடியிடப்படும்.
  • அவர்களது கமிஷன் தானாகவே 0% ஆகக் குறைந்துவிடும்.
  • நிலுவையில் உள்ள பேஅவுட்கள் அனைத்தும் ரத்துசெய்யப்படும்.
  • கிரியேட்டருடனான உங்கள் இணைப்பை இடைநிறுத்த நீங்கள் தேர்வுசெய்யலாம். இது அவர்களின் அஃபிலியேட் இணைப்புகளையும் தள்ளுபடிக் குறியீடுகளையும் செல்லாததாக்கிவிடும்.

நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட கூட்டாண்மையில் உள்ள, Collabs சமூக வழிகாட்டுதல்களை மீறிய கிரியேட்டர்கள் மீது பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:

  • அந்தக் கிரியேட்டருக்கு அதிக ஆபத்து உள்ளதாகக் கொடியிடப்படும்.
  • Shopify மூலம் தானாகவே ஒரு சர்ச்சை தொடங்கப்பட்டு, நீங்கள் அதனைத் தீர்க்கும் வரை கிரியேட்டரின் கமிஷன் நிறுத்திவைக்கப்படும். நீங்கள் சர்ச்சையைத் தீர்க்கும்போது, அவர்களிடம் நிலுவையில் உள்ள கமிஷன் பேமெண்ட்டுகளைச் செலுத்தவோ ரத்துசெய்யவோ வேண்டியிருக்கலாம்.
  • நீங்கள் 30 நாட்களுக்குள் கிரியேட்டருடன் நேரடியாகப் பேசி சர்ச்சையைத் தீர்க்காவிட்டால், Collabs பின்வருவனவற்றைச் செய்யும்:
    • கிரியேட்டருடனான உங்கள் இணைப்பை இடைநிறுத்தும்.
    • கமிஷன், பரிசுகள், கிரியேட்டரின் அஃபிலியேட் இணைப்புகள் மற்றும் தள்ளுபடிக் குறியீடுகளை ரத்துசெய்யும்.
    • இந்த மாற்றங்கள் குறித்துக் கிரியேட்டருக்குத் தெரிவிக்கும்.
  • ஒரு கிரியேட்டர் Collabs ஐப் பயன்படுத்த முடியாதபடி Shopify ஆல் முடக்கப்பட்டால், நீங்கள் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாது, அத்துடன் அவர்களை முடக்கத்திலிருந்து நீக்க மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

அதிக ஆபத்துள்ள கிரியேட்டர்களைப் பார்க்கவும்

நீங்கள் பணியாற்றும் ஒரு கிரியேட்டர் Collabs சமூக வழிகாட்டுதல்களை மீறினால், Shopify அவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளதாகக் கொடியிடும். அத்துடன் அந்தக் கிரியேட்டர் திறந்த அணுகல் திட்டத்தில் உள்ளாரா அல்லது அங்கீகரிக்கப்பட்ட கூட்டாண்மையில் உள்ளாரா என்பதைப் பொறுத்து பிற நடவடிக்கைகளையும் எடுக்கும். இதுகுறித்து அந்தக் கிரியேட்டருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

அதிக ஆபத்து எனக் கொடியிடப்பட்ட கிரியேட்டர்களைப் பார்க்க, உங்கள் இணைப்புகள் அட்டவணையில் ஆபத்து வடிப்பானைச் சேர்க்கலாம். அத்துடன் ஒரு கிரியேட்டரின் சுயவிவரத்தில் உள்ள ஆபத்து பகுப்பாய்வு பிரிவையும் நீங்கள் பார்க்கலாம். இது Shopify ஒதுக்கிய ஆபத்து நிலையையும் அதற்கான காரணத்தையும் குறிக்கும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.

  2. இணைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. search filter பொத்தானைக் கிளிக் செய்யவும்.

  4. வடிப்பானைச் சேர் + என்பதைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஆபத்து என்பதைத் தேர்ந்தெடுத்து, அதிகம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. விருப்பத்தேர்வு: ஒரு கிரியேட்டரின் சுயவிவரத்தில் உள்ள ஆபத்து பகுப்பாய்வு பிரிவை மதிப்பாய்வு செய்ய, அவர்களைக் கிளிக் செய்யவும்.

கிரியேட்டர்களுடனான சர்ச்சைகளைக் கையாளவும்

பின்வரும் வழிகளில் உங்களுக்கு Collabs கிரியேட்டர்களுடன் சர்ச்சைகள் ஏற்படலாம்:

  • Collabs செயலியில் நீங்கள் சுயமாக உருவாக்கும் சர்ச்சைகள். அல்லது அங்கீகரிக்கப்பட்ட கூட்டாண்மையில் உங்களுடன் இருக்கும் ஒரு கிரியேட்டர் Collabs சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக, அவருக்கு அதிக ஆபத்து உள்ளதாகக் கொடியிடப்படும்போது Shopify தானாகவே உருவாக்கும் சர்ச்சைகள்.
  • நிலுவையில் உள்ள கமிஷன் பேமெண்ட்டுகள் தொடர்புடைய சர்ச்சைகள் அல்லது குறிப்பிட்ட கமிஷன் பேமெண்ட்டுகள் ஏதும் தொடர்பில்லாத சர்ச்சைகள்.

உங்களுக்கு ஏதேனும் செயலில் உள்ள சர்ச்சைகள் இருந்தால், உங்கள் Collabs செயலியின் மேலோட்டம் பக்கத்தில் அதுகுறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும், அத்துடன் அந்தச் சர்ச்சைகளைத் தீர்க்க நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.

  2. மேலோட்டம் பக்கத்தில், சர்ச்சைகளைத் தீர்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. இணைப்புகள் பக்கத்தில், எந்தக் கிரியேட்டருடனான சர்ச்சையைத் தீர்க்க வேண்டுமோ அவரைக் கிளிக் செய்யவும்.

  4. சர்ச்சையைத் தீர்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. உரையாடல் பெட்டியில், கிரியேட்டருக்கு Shopify ஏன் அதிக ஆபத்து எனக் கொடியிட்டது என்பது போன்ற சர்ச்சையின் விவரங்களை மதிப்பாய்வு செய்து, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • கிரியேட்டருடன் தொடர்ந்து பணியாற்ற, தீர்த்து இணைந்திரு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • கிரியேட்டருடனான உங்கள் இணைப்பை இடைநிறுத்த, இணைப்பு மற்றும் ஊக்கத்தொகைகளை இடைநிறுத்தித் தீர்க்கவும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. சர்ச்சையைத் தீர்க்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.