Collabs செயலியில் பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்ட்களுக்கான பிரத்தியேகமாக்கப்பட்ட அஃபிலியேட் இணைப்புகளை அமைத்தல்
Collabs செயலி மூலம், செக்அவுட்டின் போது தானாகவே தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்தும் mystore.com/sammy போன்ற பிரத்தியேகமாக்கப்பட்ட அஃபிலியேட் இணைப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம். நீங்கள் பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்டைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், பிரத்தியேகமாக்கப்பட்ட அஃபிலியேட் இணைப்புகளைப் பயன்படுத்த பின்வரும் தேவைகளை நீங்கள் பூர்த்திசெய்ய வேண்டும்:
- Shopify-க்குப் பக்கப் பார்வை நிகழ்வுகளை அனுப்புதல்.
- URL திசைதிருப்பல்களைக் கையாளுதல்.
- தானியங்கு தள்ளுபடிக் குறியீடுப் பயன்பாட்டிற்கு
/discountவழியைத் திறம்பட நிர்வகித்தல்.
உங்கள் ஸ்டோர்ஃபிரண்ட் இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், இந்தப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை நிறைவுசெய்யவும்.
இந்தப் பக்கத்தில்
பக்கப் பார்வை நிகழ்வுகளை அனுப்புதல்
Collabs செயலியானது, Shopify நிர்வாகியைப் போன்ற அதே கண்காணிப்புத் தரவைப் பயன்படுத்துகிறது என்பதால், உங்களின் பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்ட் Shopify பகுப்பாய்வை அனுப்ப வேண்டும். Shopify-க்குப் பகுப்பாய்வை அனுப்ப, Hydrogen ஆவணத்தைப் பார்க்கவும்.
பகுப்பாய்வு Shopify-க்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்தல்
நீங்கள் Shopify-க்குப் பகுப்பாய்வை அனுப்பிய பிறகு, ஆர்டர் மாற்றச் சுருக்கத்தைச் சரிபார்ப்பதன் மூலம் அவை வேலை செய்கின்றனவா என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, ஆர்டர்கள் (Orders) என்பதற்குச் செல்லவும்.
ஏதேனும் ஒரு ஆரடரைக் கிளிக் செய்யவும்.
மாற்றச் சுருக்கம் (Conversion summary) பிரிவில், மாற்ற விவரங்களைப் பார் (View conversion details) என்பதைக் கிளிக் செய்யவும்.
வாடிக்கையாளரின் பயணம் உங்களின் பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்ட்டில் தொடங்கியதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
URL திசைதிருப்பல்களைக் கையாளுதல்
பிரத்தியேகமாக்கப்பட்ட இணைப்புகளை உருவாக்க, Collabs செயலியானது உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் URL திசைதிருப்பல்களைப் பயன்படுத்துகிறது. உள்ளடக்கம் (Content) > மெனுக்கள் (Menus) > URL திசைதிருப்பல்களைப் பார் (View URL redirects) என்பதற்குச் செல்வதன் மூலம் உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து உங்கள் URL திசைதிருப்பல்களின் பட்டியலைக் கண்டறியலாம்.
URL திசைதிருப்பல்களைச் சரியாகக் கையாள, Hydrogen இன் உள்ளமைக்கப்பட்ட அம்சமான storefrontRedirect utility ஐ நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
URL திசைதிருப்பல்கள் வேலை செய்வதை உறுதிப்படுத்தவும்
உங்கள் பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்ட் URL திசைதிருப்பல்களைக் கையாளுகிறது என்பதை உறுதிப்படுத்த, உங்கள் பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்ட்டில் ஏதேனும் URL திசைதிருப்பல் பாதையைத் திறக்கலாம், பின்னர் URL சரியான இடத்திற்குத் திசைதிருப்பப்படுகிறதா என்பதைச் சரிபார்க்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் > மெனுக்கள் என்பதற்குச் செல்லவும்.
URL திசைதிருப்பல்களைப் பார் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்ட்டில் ஏதேனும் URL திசைதிருப்பல் பாதையைத் திறக்கவும்.
URL சரியான இடத்திற்குத் திசைதிருப்பப்படுவதைச் சரிபார்க்கவும்.
/discount பாதையைக் கையாளுதல்
வாடிக்கையாளர்களுக்குத் தானாகவே தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்த, Collabs செயலி /discount பாதையைப் பயன்படுத்துகிறது.
/discount பாதையை அமைத்துக் கையாள, Hydrogen வார்ப்புருவில் உள்ள தள்ளுபடிப் பாதைச் செயலாக்கத்தின் இந்த உதாரணத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
/discount பாதை சரியாகக் கையாளப்படுவதை உறுதிப்படுத்தவும்
mystore.com/discount/test-discount?redirect=/&dt_id=0என்பதற்குச் செல்லவும்.mystore.com/?dt_id=0என்ற இடத்திற்கு நீங்கள் திசைதிருப்பப்பட்டுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.- ஒரு செக்அவுட்டைத் தொடங்கி, செக்அவுட்டில்
test-discountஎன்ற தள்ளுபடிக் குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
அஃபிலியேட் இணைப்புகளின் டொமைனை மாற்று
உங்கள் பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்ட்டிற்குப் பிரத்தியேகப்படுத்திய அஃபிலியேட் இணைப்புகளை அமைப்பதற்கான தேவைகளைப் பூர்த்திசெய்த பிறகு, உங்களின் அஃபிலியேட் இணைப்புகள் டொமைனை மாற்றலாம்.
நீங்கள் டொமைனைப் புதுப்பிக்கும் போது, முன்பே உள்ள அனைத்து அஃபிலியேட் இணைப்புகளும் புதுப்பிக்கப்படும் மற்றும் அனைத்துப் புதிய அஃபிலியேட் இணைப்புகளும் புதிய டொமைனுடன் உருவாக்கப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.
அமைப்புகள் > அஃபிலியேட்டுகள் என்பதற்குச் செல்லவும்.
ஸ்டோர்ஃபிரண்ட் டொமைன் பிரிவில், உங்களின் பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்ட் டொமைனைச் சேர்க்கவும்.
இணைப்புப் பிரத்தியேகமாக்கம் பிரிவில், பிரத்தியேகப்படுத்திய இணைப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.