ஆன்லைன் ஸ்டோர் பக்கம்

ஆன்லைன் ஸ்டோர் பக்கம் மூலம் கிரியேட்டர்கள் மற்றும் பிராண்டின் ரசிகர்கள் உங்கள் திட்டத்தைக் கண்டறிந்து, உங்கள் ஆன்லைன் ஸ்டோரிலேயே நேரடியாக விண்ணப்பிக்க முடியும். இந்தப் பக்கம் உங்கள் தற்போதைய தீமில் சேர்க்கப்படும். தீம் எடிட்டரைப் பயன்படுத்தி இதன் தோற்றத்தை நீங்கள் தனிப்பயனாக்கலாம் மற்றும் கூடுதல் கூறுகளைச் சேர்க்கலாம்.

ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தைச் செயலாக்குதல்

உங்கள் பிராண்டுடன் இணைந்து பணியாற்றக் கிரியேட்டர்கள் விண்ணப்பிக்கும் முன், உங்கள் ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தை நீங்கள் செயலாக்க வேண்டும்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.

  2. கிரியேட்டர்களுடன் இணைந்திருங்கள் பிரிவில், பக்கத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. ஆன்லைன் ஸ்டோர் பக்கம் பிரிவில், பக்கத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தின் URL-ஐத் திருத்துதல்

ஆன்லைன் ஸ்டோர் பக்கம் பிரிவில், உங்கள் ஆன்லைன் ஸ்டோர் பக்கத்திற்கான URL-ஐ மாற்றலாம்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.

  2. கிரியேட்டர்கள் உங்களை எப்படிக் கண்டறியலாம் என்ற பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் பக்கம் என்பதற்கான கியர் ஐகானைக் கிளிக் செய்யவும்.

  3. ஆன்லைன் ஸ்டோர் பக்கம் பிரிவில், Horizontal menu ஐகானைக் கிளிக் செய்யவும்.

  4. URL-ஐ மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. பக்கத்தின் URL புலத்தில், உங்கள் பக்கத்திற்குப் பயன்படுத்த விரும்பும் URL-ஐ உள்ளிடவும்.

  6. புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தைத் தனிப்பயனாக்குதல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தைச் செயலாக்கிய பிறகு, அதைத் தீம் எடிட்டரிலிருந்தே நீங்கள் தனிப்பயனாக்கலாம்.

படங்கள், விளக்கங்கள் மற்றும் கூட்டாண்மை வாய்ப்புகள் ஆகியவை உங்கள் பிராண்ட் சுயவிவரத்திலிருந்து முன்பே நிரப்பப்பட்டிருக்கும்.

தீம் எடிட்டரைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

உங்கள் ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தைப் பகிர்தல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தைத் தனிப்பயனாக்கி முடித்த பிறகு, அதை உங்கள் பார்வையாளர்களிடம் பகிரலாம்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.

  2. கிரியேட்டர்கள் உங்களை எப்படிக் கண்டறியலாம் என்ற பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் பக்கம் என்பதற்கான கியர் ஐகானைக் கிளிக் செய்யவும்.

  3. ஆன்லைன் ஸ்டோர் பக்கம் என்பதற்கு இணைப்பை நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. விருப்பத்தேர்வு: வாடிக்கையாளர்களும் கிரியேட்டர்களும் அணுகுவதற்கு இந்த இணைப்பைப் பதிவிட்டுப் பகிரவும்.

  5. விருப்பத்தேர்வு: தீம் எடிட்டர் மூலமாக இந்தப் பக்கத்தை ஒரு மெனு உருப்படியாக அல்லது உங்கள் ஸ்டோரின் அடிப்பகுதியின் ஒரு அங்கமாகச் சேர்க்கலாம்.

ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தைச் செயலிழக்கச் செய்தல்

உங்களின் Collabs ஆன்லைன் ஸ்டோர் பக்க அமைப்புகளில் உங்கள் ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தை அகற்றலாம்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.

  2. கிரியேட்டர்கள் உங்களை எப்படிக் கண்டறியலாம் என்ற பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் பக்கம் என்பதற்கான கியர் ஐகானைக் கிளிக் செய்யவும்.

  3. ஆன்லைன் ஸ்டோர் பக்கம் பிரிவில், Horizontal menu ஐகானைக் கிளிக் செய்யவும்.

  4. செயலிழக்கச் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. செயலிழக்கச் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.