Shopify Collabs-இல் புதிய கிரியேட்டர்களை நியமித்தல்
உங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த உள்ளடக்கக் கிரியேட்டர்களை நியமிக்கவும் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் Shopify Collabs உதவுகிறது. உங்கள் தயாரிப்புப் பகுதிகளுக்குப் பொருத்தமான கிரியேட்டர்களைக் கண்டறியவும், நேரடி மின்னஞ்சல் அழைப்புகளை அனுப்பவும், உங்கள் ஆன்லைன் ஸ்டோர் பக்கம் மூலமாக உங்களுடன் இணைந்து பணியாற்ற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்குப் பதிலளிக்கவும் உங்கள் Shopify Collabs செயலியின் நியமிப்புப் பிரிவைப் பயன்படுத்தலாம். Collabs ஓபன் அக்சஸ் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலமாகவும் நீங்கள் மறைமுகமாக நியமிக்கலாம்.
மற்றொரு தளத்திலிருந்து Shopify Collabs-க்கு நீங்கள் மாற்ற விரும்பும் தற்போதைய கிரியேட்டர்களின் சமூகம் உங்களிடம் இருந்தால், உங்கள் கிரியேட்டர்களை Shopify Collabs-க்கு மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.
இந்தப் பக்கத்தில்
- Shopify Collabs-இல் கிரியேட்டர்களைக் கண்டறிதல்
- Shopify Collabs-இல் புதிய கிரியேட்டர்களை நியமிப்பதற்கான பரிசீலனைகள்
- கிரியேட்டர்களுக்கு நேரடி அழைப்புகளை அனுப்புதல்
- உங்கள் Shopify Collabs விண்ணப்பதாரர்களுக்குப் பதிலளித்தல்
- ஒரு ஓபன் அக்சஸ் திட்டத்தை உருவாக்குதல்
- உங்கள் கிரியேட்டர்களுக்குப் பரிசுகளை வழங்குதல்
- அஃபிலியேட் இணைப்புகளில் சிக்கல் தீர்த்தல்
Shopify Collabs-இல் கிரியேட்டர்களைக் கண்டறிதல்
உள்ளடக்கக் கிரியேட்டர்கள் மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்களின் தரவுத்தளத்தை Shopify Collabs பராமரிக்கிறது. உங்கள் வணிகத்திற்கு ஏற்ற கூட்டாண்மைகளைத் தேட, உங்கள் Shopify Collabs செயலியிலுள்ள நியமிப்புப் பிரிவைப் பயன்படுத்தவும். ஒரு கிரியேட்டரை நீங்கள் தேடும்போது, தேடல் பட்டி, வடிப்பான்கள் மற்றும் வரிசைப்படுத்தல் விருப்பங்களைப் பயன்படுத்தி, நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பதைக் குறிப்பிடலாம்.
கிரியேட்டர்களைத் தேடுவது எப்படி
கிரியேட்டர்களைக் கண்டறியப் பின்வரும் தேடல் முறைகள், வடிப்பான்கள் மற்றும் வரிசைப்படுத்தல் விருப்பங்களை நீங்கள் பயன்படுத்தலாம்:
- முக்கியச் சொற்கள் மூலம் தேடுங்கள் - பயனர்பெயர், பயோ மற்றும் இடுகைகளில் நீங்கள் தேடும் சொற்களைப் பயன்படுத்தும் உள்ளடக்கக் கிரியேட்டர்கள் மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்களைக் கண்டறிய உங்கள் தேடல் சொல்லில் முக்கியச் சொற்களைப் பயன்படுத்தவும்.
- இடம் மூலம் தேடல் முடிவுகளை வடிகட்டவும் - சுயவிவரத்தில் தங்கள் இருப்பிடத்தை வழங்கும் உள்ளடக்கக் கிரியேட்டர்கள், சுயாதீனப் பணியாளர்கள் மற்றும் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்களைக் கண்டறிய, கீழ்தோன்றும் வடிப்பான்களிலிருந்து இடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- சமூகக் கணக்கு மூலம் தேடல் முடிவுகளை வடிகட்டவும் - Instagram, YouTube, TikTok, Facebook, Twitch மற்றும் Twitter போன்ற சமூக ஊடகக் கணக்குகள் மூலம் கிரியேட்டர்களை வடிகட்டக் கீழ்தோன்றும் விருப்பங்களைப் பயன்படுத்தவும்.
- பார்வையாளர்கள் மூலம் தேடல் முடிவுகளை வடிகட்டவும் - பார்வையாளர்கள் எனப்படுவது, ஒரு கிரியேட்டரின் Collabs சுயவிவரத்தில் இடம்பெற்றுள்ள சமூகத் தளங்களில் அவரைப் பின்தொடர்பவர்கள் மற்றும் சந்தாதாரர்களின் ஒட்டுமொத்த கூட்டு எண்ணிக்கையாகும்.
- பொருத்தம் அல்லது பார்வையாளர்களின் அளவு மூலம் தேடல் முடிவுகளை வரிசைப்படுத்தவும் - உங்கள் தேடலுக்கு மிகவும் பொருத்தமான கிரியேட்டர்களைக் கண்டறியவும் அல்லது பார்வையாளர்களின் அளவை சிறியது முதலில் அல்லது பெரியது முதலில் என்பதன் மூலம் வரிசைப்படுத்தவும்.
Shopify Collabs-இல் புதிய கிரியேட்டர்களை நியமிப்பதற்கான பரிசீலனைகள்
Shopify Collabs மூலம் புதிய கிரியேட்டர்களை நியமிப்பதற்கு முன்பு, பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:
- Shopify Collabs-இல் உங்களுடன் இணைந்து பணியாற்றக் கிரியேட்டர்களை அழைப்பதற்கு முன்பு, உங்கள் Shopify Collabs செயலியின் அமைப்புகள் பக்கத்திலுள்ள தொடர்புகொள்ளும் நபர் பிரிவில் உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் சரிபார்க்க வேண்டும்.
- Shopify Collabs-இல் உங்களுடன் இணைந்துகொள்ளக் கிரியேட்டர்களுக்கு நீங்கள் அனுப்பும் அழைப்புகள் 30 நாட்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடும்.
- எந்தவொரு 7 நாள் காலப்பகுதியிலும் நீங்கள் 100 கிரியேட்டர்கள் வரை அழைக்கலாம். நீங்கள் கிரியேட்டர்களை அழைக்கும்போது, கிரியேட்டர்களின் மின்னஞ்சல்களைச் சேர் பிரிவில் நீங்கள் பயன்படுத்திய அழைப்புகளின் நடப்பு மொத்தத்தைப் பார்க்கலாம். எந்த நேரத்திலாவது நீங்கள் அழைப்பு வரம்பை எட்டிவிட்டால், உங்கள் அழைப்பு வரம்பு மீட்டமைக்கப்படும் வரை உங்களால் மேலும் கிரியேட்டர்களை அழைக்க முடியாது.
கிரியேட்டர்களுக்கு நேரடி அழைப்புகளை அனுப்புதல்
உங்கள் Shopify Collabs சமூகத்தில் சேர நீங்கள் விரும்பும் கிரியேட்டர்களுக்கு நேரடி அழைப்புகளை அனுப்பலாம். Shopify Collabs செயலியிலிருந்து நேரடி அழைப்புகளை அனுப்புவதன் மூலம், உங்கள் சமூகத்தில் சேருவதற்குக் கிரியேட்டர்கள் விண்ணப்பிக்கும் செயல்முறையைத் தவிர்த்து, நீங்கள் நம்பும் கிரியேட்டர்களை விரைவாக ஆன்போர்டு செய்ய முடியும். நீங்கள் ஒரு கிரியேட்டரைக் கண்டறிந்து அழைக்கலாம் அல்லது கிரியேட்டர்களின் குழுவை அழைக்கலாம்.
ஒரு கிரியேட்டரைக் கண்டறிந்து அழைத்தல்
உங்கள் Shopify Collabs செயலியின் நியமிப்புப் பிரிவில், நீங்கள் ஒரு கிரியேட்டரைக் கிளிக் செய்து அவருக்குத் தனிப்பட்ட அழைப்பை அனுப்பலாம்.
படிகள்:
1.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.
Recruiting என்பதைக் கிளிக் செய்து, உலாவவும் அல்லது கிரியேட்டர்களைத் தேடவும்.
நீங்கள் அழைக்க விரும்பும் கிரியேட்டரைக் கிளிக் செய்யவும்.
கிரியேட்டரை அழை என்பதைக் கிளிக் செய்யவும்.
வரவேற்புச் சலுகையை உருவாக்கு பிரிவில், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது இரண்டையும் செய்யவும்:
- கிரியேட்டரைச் சேர்ப்பதற்கு உங்கள் Collabs திட்டங்களில் ஒன்றைத் தேர்வுசெய்ய, திட்டத்தைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் சேர்க்க விரும்பும் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, சலுகையில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- கிரியேட்டருக்கு வழங்குவதற்கான பரிசு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க, பரிசைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் சேர்க்க விரும்பும் பரிசைத் தேர்ந்தெடுத்து, சலுகையில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: கிரியேட்டர் மின்னஞ்சல்களைச் சேர் பிரிவில், உங்கள் ஸ்டோரின் செக்அவுட்டில் கிரியேட்டரின் வாங்குபவர்கள் பயன்படுத்தக்கூடிய, நீங்கள் விரும்பும் கிரியேட்டர் குறியீட்டிற்கு கிரியேட்டர் குறியீடு புலத்தை மாற்றவும்.
செய்தியைச் சேர் பிரிவில், இயல்புநிலையான மின்னஞ்சல் பொருள், உங்கள் செய்தி மற்றும் காட்சி முகவரி ஆகிய புலங்களைப் பயன்படுத்தவும் அல்லது உங்களுக்கெனச் சொந்தமாக உரையை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: எதிர்கால மின்னஞ்சல் அழைப்புகளுக்கான இயல்புநிலைச் செய்தியாக உங்கள் செய்தியை வைத்திருக்க, செய்தியை இயல்புநிலையாகச் சேமி தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: உங்களின் அனைத்து மின்னஞ்சல் அழைப்புகளின் அடிப்பகுதியிலும் காட்சி முகவரியைப் பயன்படுத்த, இயல்புநிலை மின்னஞ்சல் அடிப்பகுதியாகச் சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: அழைப்பு எவ்வாறு காட்டப்படும் என்பதற்கான முன்னோட்டத்தைப் பார்க்க, அழைப்பை முன்னோட்டமிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
அழைப்பை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
கிரியேட்டர்களை அழை
உங்கள் அழைப்பிற்கான மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கிரியேட்டர் குறியீடுகளை நீங்களே உள்ளிடலாம் அல்லது கிரியேட்டர் விவரங்களை இறக்குமதி செய்ய, CSV வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். CSV கோப்பில், மின்னஞ்சல் மற்றும் கிரியேட்டர் குறியீடு ஆகியவற்றிற்கு மட்டுமே நெடுவரிசைத் தலைப்புகள் இருக்க வேண்டும்.
படிகள்:
1.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.
Recruiting என்பதைக் கிளிக் செய்யவும்.
கிரியேட்டர்களை அழை என்பதைக் கிளிக் செய்யவும்.
வரவேற்புச் சலுகையை உருவாக்கு பிரிவில், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது இரண்டையும் செய்யவும்:
- கிரியேட்டர்களைச் சேர்ப்பதற்கு உங்கள் Collabs திட்டங்களில் ஒன்றைத் தேர்வுசெய்ய, திட்டத்தைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் சேர்க்க விரும்பும் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, சலுகையில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- கிரியேட்டர்களுக்கு வழங்குவதற்கான பரிசு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க, பரிசைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் சேர்க்க விரும்பும் பரிசைத் தேர்ந்தெடுத்து, சலுகையில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
கிரியேட்டர் மின்னஞ்சல்களைச் சேர் பிரிவில், பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
- ஒவ்வொரு கிரியேட்டரின் விவரங்களையும் நீங்களே தனித்தனியாகச் சேர்க்க:
- உங்களின் முதல் மின்னஞ்சல் மற்றும் கிரியேட்டரின் வாங்குபவர்கள் உங்கள் ஸ்டோரின் செக்அவுட்டில் பயன்படுத்தக்கூடிய கிரியேட்டர் குறியீடு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- மின்னஞ்சலைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, மற்றொரு மின்னஞ்சல் மற்றும் கிரியேட்டர் குறியீடு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- நீங்கள் சேர்க்க விரும்பும் கிரியேட்டர்களின் எண்ணிக்கைக்கு, இந்தப் படிகளை மீண்டும் செய்யவும்.
- CSV கோப்பின் மூலம் உங்கள் கிரியேட்டர் விவரங்களை இறக்குமதி செய்ய:
- CSV ஐ இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
- கோப்பைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்து, உங்கள் CSV கோப்பைச் சேர்க்கவும்.
- இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒவ்வொரு கிரியேட்டரின் விவரங்களையும் நீங்களே தனித்தனியாகச் சேர்க்க:
விருப்பத்தேர்வு: அழைப்புப் பட்டியலிலிருந்து ஒரு கிரியேட்டரை நீங்கள் அகற்ற வேண்டும் எனில், தொடர்புடைய கிரியேட்டருக்கான
ஐகானைக் கிளிக் செய்யவும்.
செய்தியைச் சேர் பிரிவில், இயல்புநிலையான மின்னஞ்சல் பொருள், உங்கள் செய்தி மற்றும் காட்சி முகவரி ஆகிய புலங்களைப் பயன்படுத்தவும் அல்லது உங்களுக்கெனச் சொந்தமாக உரையை உள்ளிடவும்.
விருப்பத்தேர்வு: எதிர்கால மின்னஞ்சல் அழைப்புகளுக்கான இயல்புநிலைச் செய்தியாக உங்கள் செய்தியை வைத்திருக்க, செய்தியை இயல்புநிலையாகச் சேமி தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: உங்களின் அனைத்து மின்னஞ்சல் அழைப்புகளின் அடிப்பகுதியிலும் காட்சி முகவரியைப் பயன்படுத்த, இயல்புநிலை மின்னஞ்சல் அடிப்பகுதியாகச் சேமி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: அழைப்பு எவ்வாறு காட்டப்படும் என்பதற்கான முன்னோட்டத்தைப் பார்க்க, அழைப்பை முன்னோட்டமிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
அழைப்பை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் Shopify Collabs விண்ணப்பதாரர்களுக்குப் பதிலளிக்கவும்
உங்கள் ஆன்லைன் ஸ்டோர் பக்கம் மூலமாக யாராவது விண்ணப்பித்தால், அவர்களின் விண்ணப்பத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
படிகள்:
1.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.
மேலோட்டம் பக்கத்தில், பரிசீலிக்க விண்ணப்பங்கள் ஏதேனும் இருந்தால், விண்ணப்பங்களைப் பரிசீலி என்பதைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்பதாரர்கள் பக்கத்தில், நீங்கள் பார்க்க விரும்பும் கிரியேட்டர் விண்ணப்பதாரரைக் கிளிக் செய்யவும்.
கிரியேட்டரின் விண்ணப்ப விவரங்களைப் பரிசீலித்த பிறகு, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
- கிரியேட்டரின் விண்ணப்பத்தை ஏற்க, இதைக் கிளிக் செய்யவும்: சலுகையை வழங்கு:
- வரவேற்புச் சலுகையை உருவாக்கு பக்கத்தில், நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலின் விவரங்களை முன்னோட்டமிடவும்.
- சலுகைப் பலன்களைச் சேர் பிரிவில், திட்டம் மற்றும் பரிசு ஆகியவற்றைச் சேர்க்கவும் அல்லது உருவாக்கவும்; அல்லது கீழ்தோன்றும் மெனுக்களிலிருந்து எதுவுமில்லை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- விருப்பத்தேர்வு: மின்னஞ்சல் உரை பிரிவில் உள்ள உள்ளடக்கத்தில் ஏதேனும் திருத்தங்களைச் செய்யவும்.
- சலுகையை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- கிரியேட்டரின் விண்ணப்பத்திற்குப் பின்னர் பதிலளிக்க, பிறகு பரிசீலி > பிற்பாடு பயன்படுத்தச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- கிரியேட்டரின் விண்ணப்பத்தை நிராகரிக்க, இதைக் கிளிக் செய்யவும்: நிராகரி:
- விருப்பத்தேர்வு: கிரியேட்டரின் விண்ணப்பம் ஏற்கப்படாததற்கான காரணத்தை அவருக்குத் தெரியப்படுத்த விரும்பினால், கிரியேட்டருக்கு மின்னஞ்சல் அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, ஒரு செய்தியை உள்ளிடவும்.
- விண்ணப்பதாரரை நிராகரி என்பதைக் கிளிக் செய்யவும்.
- கிரியேட்டரின் விண்ணப்பத்தை ஏற்க, இதைக் கிளிக் செய்யவும்: சலுகையை வழங்கு:
நிராகரிப்பு மின்னஞ்சல்களைப் புரிந்துகொள்ளுதல்
கிரியேட்டரின் விண்ணப்பத்தை நீங்கள் நிராகரிக்கும்போது, நிராகரிப்பு குறித்து அவருக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்குத் தேர்வுசெய்யலாம். விண்ணப்பத்தை நிராகரிக்கும்போது நீங்கள் நிராகரிப்பு மின்னஞ்சல் உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்கலாம் அல்லது உங்கள் Shopify Collabs செயலியில் உள்ள அமைப்புகள் > மின்னஞ்சல் என்பதில் இயல்புநிலை நிராகரிப்பு மின்னஞ்சலைத் திருத்தலாம்.
விண்ணப்ப நிராகரிப்பைச் செயல்தவிர்த்தல்
நீங்கள் தவறுதலாக ஒரு கிரியேட்டரை நிராகரித்துவிட்டால், அந்த நிராகரிப்பைச் செயல்தவிர்க்கலாம்.
படிகள்:
- உங்கள் Shopify Collabs செயலியிலிருந்து, Recruiting என்பதைக் கிளிக் செய்யவும்.
- பரிசீலிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, நிராகரிக்கப்பட்டது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- யாருக்கான நிராகரிப்பை நீங்கள் செயல்தவிர்க்க விரும்புகிறீர்களோ, அந்தக் கிரியேட்டரைக் கிளிக் செய்யவும்.
- கிரியேட்டருக்கு ஒப்புதல் அளிக்க, சலுகையை வழங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
நிராகரிப்புக்குப் பிறகு கிரியேட்டர் மீண்டும் விண்ணப்பித்தல்
ஒரு கிரியேட்டரின் விண்ணப்பத்தை நீங்கள் நிராகரித்த பிறகு, அதே கணக்கைப் பயன்படுத்தி அவர் உங்கள் சமூகத்தில் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. அதே கணக்கின் மூலம் ஒரு கிரியேட்டர் மீண்டும் விண்ணப்பிக்க முயன்றால், அவரால் விண்ணப்பப் பக்கத்தைப் பார்க்க முடியாது. உங்கள் இணையதளத்தில் உள்ள இப்போதே விண்ணப்பி இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, அவர் தன்னுடைய Collabs நிர்வாகிக்கு அனுப்பப்படுவார்; அங்கு விண்ணப்பம் எதுவும் அவருக்குத் தெரியாது.
திறந்த அணுகல் திட்டத்தை உருவாக்குதல்
ஒரு திறந்த அணுகல் திட்டம் மூலம், தகுதியான Collabs கிரியேட்டர்கள் அஃபிலியேட் இணைப்புகள் அல்லது குறியீடுகள் வழியாக உங்களுக்காக உருவாக்கும் விற்பனைகளுக்கு நீங்கள் வெகுமதியளிக்க முடியும்.
நீங்கள் ஒரு திறந்த அணுகல் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, அனைத்துத் தயாரிப்புகள் அல்லது குறிப்பிட்ட சேகரிப்புகளுக்குக் கமிஷன் விகிதத்தை அமைக்கிறீர்கள், மேலும் இது உங்கள் தயாரிப்புகளில் எவற்றைக் கிரியேட்டர்கள் அவர்களின் கண்டறியும் அனுபவத்தில் பார்க்க முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது.
படைப்பாளர்கள் தயாரிப்புகளைத் தேடலாம் மற்றும் எந்தவொரு ஒப்புதலும் தேவைப்படாமல் அஃபிலியேட் தயாரிப்பு இணைப்புகளைத் தானாகவே உருவாக்கலாம்.
உங்கள் படைப்பாளர்களுக்குப் பரிசுகளை வழங்குதல்
Shopify Collabs இல் உள்ள உங்கள் இணைப்புகளுக்கு மட்டுமே பரிசுகளை அனுப்ப முடியும்.
உங்கள் படைப்பாளர் இணைப்புகளுக்கு மூன்று வெவ்வேறு வகையான பரிசுகளை நீங்கள் வழங்கலாம். இலவசத் தயாரிப்பு, சதவீதத் தள்ளுபடிக் குறியீடு அல்லது நிலையான தொகைத் தள்ளுபடிக் குறியீடு ஆகியவற்றில் ஒன்றை வழங்குமாறு நீங்கள் தேர்வுசெய்யலாம்.
பரிசை உருவாக்கிய பிறகு, எதிர்காலத்தில் அதை மீண்டும் அனுப்புவதற்காக அது உங்கள் Shopify Collabs செயலியில் சேமிக்கப்படும்.
பரிசை உருவாக்குதல்
1.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.
Programs என்பதைக் கிளிக் செய்து, Gifts தாவலைக் கிளிக் செய்யவும்.
Create gift என்பதைக் கிளிக் செய்யவும்.
Gift name புலத்தில், படைப்பாளர்களுக்குக் காட்டப்படும் பரிசின் தலைப்பை உள்ளிடவும்.
Type பிரிவில், பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
- படைப்பாளர்களுக்கு இலவசத் தயாரிப்பைப் பரிசாக வழங்க, இதைக் கிளிக் செய்யவும் தயாரிப்பு:
- Products பிரிவில், Browse என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் சேர்க்க விரும்பும் உருப்படியைக் கிளிக் செய்த பிறகு, Select என்பதைக் கிளிக் செய்யவும்.
- Quantity புலத்தில், நீங்கள் சேர்க்க விரும்பும் உருப்படியின் அளவைத் தேர்ந்தெடுக்கவும்.
- விருப்பத்தேர்வு: தனிப்பயனாக்கக்கூடிய தயாரிப்பில் படைப்பாளர்கள் விவரங்களைச் சேர்க்க அனுமதிக்க, Add custom உள்ளீட்டைக் கிளிக் செய்து, தொடர்புடைய விவரங்களை உள்ளிடவும்.
- விருப்பத்தேர்வு: நீங்கள் தேர்ந்தெடுக்கும் உருப்படியில் மாறுபாடுகள் இருந்தால், பரிசுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் மாறுபாடு விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது Allow creator to choose என்பதில் அவற்றை விடவும்.
- படைப்பாளர்களுக்குத் தள்ளுபடிக் குறியீட்டை வழங்க, இதைக் கிளிக் செய்யவும் தள்ளுபடிக் குறியீடு:
- Discount value கீழ்தோன்றும் மெனுவில், Percentage அல்லது Fixed amount என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- சதவீதத் தள்ளுபடி சேமிப்பு அல்லது நிலையான தொகைத் தள்ளுபடி மதிப்பை உள்ளிடவும்.
- Applies to கீழ்தோன்றும் மெனுவில், தள்ளுபடியானது All products, Specific products அல்லது Specific collections ஆகியவற்றில் எதற்குப் பொருந்தும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- படைப்பாளர்களுக்கு இலவசத் தயாரிப்பைப் பரிசாக வழங்க, இதைக் கிளிக் செய்யவும் தயாரிப்பு:
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
பரிசை அனுப்புதல்
Shopify Collabs இல் படைப்பாளருக்கு நீங்கள் பரிசை அனுப்பும்போது, இலவச ஷிப்பிங் எப்போதும் பொருந்தும்.
உங்கள் படைப்பாளர் இணைப்பு தனது பரிசைக் கோரிய பிறகு, நீங்கள் நிறைவேற்றுவதற்காக உங்கள் Shopify நிர்வாகியில் ஒரு ஆர்டர் காட்டப்படும்.
படிகள்:
1.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.
Programs என்பதைக் கிளிக் செய்யவும்.
Gifts தாவலைக் கிளிக் செய்யவும்.
அனுப்ப விரும்பும் பரிசுக்கான
> பரிசு அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
பரிசை நீங்கள் அனுப்ப விரும்பும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, Shipping method பெயர் மற்றும் Billing address ஆகியவற்றைக் குறிப்பிடவும்.
Send gifts என்பதைக் கிளிக் செய்யவும்.
பரிசின் வரலாற்றைக் காண்பது
ஒரு பரிசு எத்தனை முறை அனுப்பப்பட்டுள்ளது மற்றும் ரிடீம் செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் பார்க்கலாம்.
படிகள்:
1.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.
Programs என்பதைக் கிளிக் செய்யவும்.
Gifts தாவலைக் கிளிக் செய்யவும்.
பார்க்க விரும்பும் பரிசுக்கான
> வரலாற்றைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.
பரிசை நீக்குதல்
1.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.
Programs என்பதைக் கிளிக் செய்யவும்.
Gifts தாவலைக் கிளிக் செய்யவும்.
அழிக்க விரும்பும் பரிசுக்கான
> அழி என்பதைக் கிளிக் செய்யவும்.
Delete gift என்பதைக் கிளிக் செய்யவும்.
அஃபிலியேட் இணைப்புகளில் உள்ள சிக்கலைத் தீர்த்தல்
404 பக்கம் காணப்படவில்லை பிழைகளுக்கு வழிவகுக்கும் அஃபிலியேட் இணைப்புகளில் உள்ள சிக்கலைத் தீர்த்தல்
உங்கள் படைப்பாளர்களுக்கான அஃபிலியேட் இணைப்புகள் 404 பக்கம் காணப்படவில்லை பிழைகளுக்கு வழிவகுத்தால், அது பொதுவாகத் தவறான அடுக்கு இலக்கு இணைப்பால் ஏற்படுகிறது.
அடுக்கு அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள இலக்கு இணைப்புக்கு வாடிக்கையாளர்களை அஃபிலியேட் இணைப்புகள் திசைதிருப்புகின்றன. இலக்கு இணைப்பு இல்லை என்றால் அல்லது தவறானதாக இருந்தால், அஃபிலியேட் இணைப்பும் 404 பிழைக்கு வழிவகுக்கும்.
படிகள்:
- உங்கள் Shopify Collabs செயலியில், Programs > Tiers என்பதைக் கிளிக் செய்யவும்.
- பிழையைக் காட்டும் அஃபிலியேட் இணைப்புடன் தொடர்புடைய அடுக்கைக் கண்டறிந்து, View என்பதைக் கிளிக் செய்யவும்.
- இலக்கு இணைப்பை மதிப்பாய்வு செய்யவும். இணைப்பு தவறாக இருந்தாலோ அல்லது இல்லாத பக்கத்திற்குச் சென்றாலோ, அடுக்கைப் புதுப்பிக்க Edit என்பதைக் கிளிக் செய்யவும்.
- Link destination புலத்தில், தயாரிப்புப் பக்கம், சேகரிப்புப் பக்கம் அல்லது உங்கள் முகப்புப் பக்கம் போன்ற உங்கள் ஸ்டோர்ஃபிரண்டில் உள்ள செயலில் உள்ள பக்கத்திற்கான சரியான URL ஐ உள்ளிடவும்.
- Save என்பதைக் கிளிக் செய்யவும்.
- அஃபிலியேட் இணைப்பு சரியாகச் செயல்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த, அதைச் சோதிக்கவும்.
இலக்கு இணைப்பைப் புதுப்பித்த பிறகும் அஃபிலியேட் இணைப்பு 404 பிழைக்கு வழிவகுத்தால், பிழையைச் சரிசெய்யப் பின்வரும் செயல்களை முயற்சிக்கவும்:
- உங்கள் உலாவித் தற்காலிகச் சேமிப்பு மற்றும் குக்கீகளை அழிக்கவும்.
- வேறொரு உலாவி அல்லது மறைநிலைப் பயன்முறையில் அஃபிலியேட் இணைப்பை அணுக முயற்சிக்கவும்.
- படைப்பாளர் ஒரு அடுக்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும், உங்கள் Shopify Collabs செயலியின் Connections பிரிவில் Connected எனக் காட்டப்படுவதையும் உறுதிசெய்யவும். இணைக்கப்பட்டு ஒரு அடுக்குக்கு ஒதுக்கப்பட்ட படைப்பாளர்களுக்கு மட்டுமே அஃபிலியேட் இணைப்புகள் வேலை செய்யும்.