Shopify Collabs ஐ அமைத்தல்

விற்பனை மற்றும் பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிக்கப் படைப்பாளர்கள் மற்றும் பிராண்ட் தூதர்களைச் சேர்ப்பதற்கு Shopify Collabs உதவுகிறது.

படைப்பாளர்கள் மற்றும் பிராண்ட் ரசிகர்களுடன் உங்கள் நிரல் பற்றிய விவரங்களைப் பகிரவும், விண்ணப்பங்களைச் சேகரிக்கவும் உங்கள் Shopify Collabs ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் பிராண்டுக்கு ஏற்றவாறு உங்கள் ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தில் உள்ள படங்கள் மற்றும் உரையைத் தனிப்பயனாக்கலாம். மேலும் உங்கள் நிரலில் விண்ணப்பதாரர்களை ஏற்பதற்கு முன்பு அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளக் கணக்கெடுப்புக் கேள்விகளை அமைக்கலாம்.

அஃபிலியேட் நிலையில் தகுதியான படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற, திறந்த அணுகல் நிரலையும் நீங்கள் செயல்படுத்தலாம். விருப்பம் தெரிவிக்க, அனைத்துத் தயாரிப்புகளுக்கும் அல்லது சேகரிப்பு நிலையிலோ நீங்கள் கமிஷன் விகிதத்தை அமைக்கலாம். இது உங்கள் தயாரிப்புகளைப் படைப்பாளர்களுக்கான கண்டறியும் அனுபவத்தில் காட்ட அனுமதிக்கும். படைப்பாளர்கள் உங்கள் தயாரிப்புகளைத் தேடலாம் மற்றும் எந்தவொரு ஒப்புதலும் தேவைப்படாமல் தயாரிப்பு இணைப்புகளைச் சேமித்து உருவாக்கலாம், இதனால் படைப்பாளர்கள் உடனடியாக இணைப்புகளைப் பகிரவும் விற்பனையை உருவாக்கவும் தொடங்கலாம்.

Starter மற்றும் Retail திட்டங்களைத் தவிர மற்ற அனைத்து Shopify திட்டங்களிலும் Shopify Collabs கிடைக்கிறது. விலையிடல் திட்டங்கள் பற்றி மேலும் அறிக. நீங்கள் Shopify Flow ஐப் பயன்படுத்தத் தகுதியுடையவராக இருந்தால், Shopify Collabs ஐ ஒருங்கிணைத்து, உங்கள் Collabs செயல்முறையைத் தானியங்குபடுத்தலாம்.

உங்கள் கணக்கை உருவாக்குதல்

நீங்கள் Shopify App Store இலிருந்து Shopify Collabs-ஐ நிறுவலாம். ஒரு செயலியை நிறுவுவது எப்படி என அறிக.

உங்கள் Shopify Collabs கணக்கைத் தனிப்பயனாக்கி அமைப்பதற்கு முன், நீங்கள் ஒரு கணக்கிற்குப் பதிவுசெய்ய வேண்டும்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.

  2. தொடங்குக என்பதைக் கிளிக் செய்து, பின்னர் அமைவுப் படிகளைப் பின்பற்றவும்.

  3. முன்பே நிரப்பப்பட்ட மின்னஞ்சல் முகவரியை வைத்திருக்கவும் அல்லது உங்கள் Collabs அறிவிப்புகளுக்குப் பயன்படுத்த விரும்பும் வேறொரு மின்னஞ்சல் முகவரிக்கு அதை மாற்றவும். படைப்பாளர்களுக்கு நீங்கள் அழைப்புகளை அனுப்பும்போதும் இந்த மின்னஞ்சல் முகவரி காட்டப்படும்.

  4. படைப்பாளர்களுடன் உங்களைப் பொருத்துவதற்கு Collabs-க்கு உதவ, பின்வருவனவற்றை நீங்கள் அடையாளம் காண வேண்டும்:

    • உங்கள் பிராண்டின் தயாரிப்பு வகை.
    • உங்கள் பிராண்டின் முதன்மைப் பார்வையாளர்கள்.
    • நீங்கள் எந்த நாடுகளைச் சேர்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்கள் என்பது. உங்களின் முதன்மைச் சந்தையுடன் பொருந்தும்படி இது முன்பே நிரப்பப்பட்டுள்ளது.
  5. அமைவை நிறைவுசெய் என்பதைக் கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் Shopify Collabs கணக்கு செயலில் உள்ளதால், உங்கள் சுயவிவரத்தை உருவாக்கிப் படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கலாம்.

உங்கள் சுயவிவரத்தை நிறைவுசெய்யவும்

உங்கள் பிராண்டைப் பற்றியும், நீங்கள் வழங்குபவற்றைப் பற்றியும் படைப்பாளர்களுக்கு மேலும் தெரிவிக்க, உங்கள் Collabs சுயவிவரம் பயன்படுத்தப்படுகிறது.

படி 1: பிராண்ட் விவரங்கள்

பிராண்ட் விவரங்கள் பிரிவில் நீங்கள் உள்ளிடும் தகவல்கள், உங்கள் பிராண்ட் பக்கத்தின் ஒரு பகுதியாகக் காட்டப்படும்.

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.

  2. மேலோட்டம் பிரிவில் சுயவிவரத்தைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Shopify Collabs உங்களின் Shopify பிராண்ட் அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள சதுர லோகோவைச் பயன்படுத்துகிறது. உங்கள் லோகோவை மாற்ற விரும்பினால், லோகோவைத் திருத்து என்பதைக் கிளிக் செய்து, உங்கள் லோகோவைப் புதுப்பிக்கவும்.

  4. உங்கள் பிராண்டின் மதிப்புகளைத் தேர்ந்தெடுக்க, பிராண்ட் மதிப்புகள் பிரிவில் மதிப்புகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. உங்கள் பிராண்டின் பாணியைப் பிரதிபலிக்கும் வகையில் 4 படங்கள் வரை சேர்க்க, மீடியா பிரிவில் மீடியாவைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2: கூட்டாண்மைத் தகவல்

உங்களின் Collabs சமூகத்தில் நீங்கள் வழங்குபவற்றைப் பற்றிப் படைப்பாளர்கள் மேலும் அறிந்துகொள்ளக் கூட்டாண்மைத் தகவல் உதவுகிறது:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.

  2. மேலோட்டம் பிரிவில் சுயவிவரத்தைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. கூட்டாண்மைத் தகவல் பிரிவில், நீங்கள் எவ்வாறு படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறீர்கள் என்ற புலத்தில் ஒரு விளக்கத்தை உள்ளிடவும். உங்கள் பிராண்டுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும், கூட்டாண்மையிலிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்தும் படைப்பாளர்களிடம் தெரிவிக்கவும்.

  4. பட்டியலிலிருந்து Collabs-இல் நீங்கள் வழங்க விரும்பும் செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவும். இவை Collabs ஆதரிக்கும் செயல்பாடுகள் ஆகும்.

  5. பட்டியலிலிருந்து Collabs-க்கு வெளியே நீங்கள் வழங்கும் செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவும். இவை Collabs தற்போது ஆதரிக்காத செயல்பாடுகள் ஆகும்.

படி 3: சமூக ஊடகக் கணக்குகள்

சமூக ஊடகக் கணக்குகளை இணைப்பது, நீங்கள் உருவாக்கும் உள்ளடக்க வகையைப் படைப்பாளர்கள் மதிப்பாய்வு செய்யவும், உங்கள் பிராண்டைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் அனுமதிக்கிறது. உங்களின் Shopify பிராண்ட் அமைப்புகளில் நீங்கள் பட்டியலிட்டுள்ள சமூக ஊடகக் கணக்குகள் Collabs-இல் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒரு YouTube கணக்கை Shopify Collabs உடன் இணைத்தால், YouTube சேவை விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவதாக ஒப்புக்கொள்கிறீர்கள். YouTube API சேவைகள் மூலம் அணுகப்படும் தகவல்கள், Shopify தனியுரிமைக் கொள்கை மற்றும் Google தனியுரிமைக் கொள்கைக்கு இணங்க Shopify மூலம் பயன்படுத்தப்படுகின்றன, சேமிக்கப்படுகின்றன மற்றும் வெளியிடப்படுகின்றன. உங்களின் Google பாதுகாப்பு அமைப்புகள் மூலம் எந்த நேரத்திலும் உங்கள் YouTube தரவுக்கான Shopify Collabs-இன் அணுகலை நீங்கள் திரும்பப் பெறலாம், மேலும் உங்கள் YouTube கணக்கைத் துண்டிப்பதன் மூலம் Shopify Collabs-ஆல் சேமிக்கப்பட்ட YouTube தரவை நீக்கலாம்.

சமூக ஊடக இணைப்புகளைச் சேர்ப்பது குறித்து மேலும் அறிக.

படி 4: இலக்குச் சந்தை

உங்களுக்கு மிகவும் பொருத்தமான படைப்பாளர்களைக் கண்டறிய, நீங்கள் ஒரு இலக்குச் சந்தையை அமைக்க வேண்டும். திறந்தநிலை அணுகல் திட்டத்தை நீங்கள் செயல்படுத்தும்போது, பொருந்தக்கூடிய சந்தையிலுள்ள படைப்பாளர்களுடன் உங்களை இணைக்க உதவுவதற்கு உங்கள் இலக்குச் சந்தை பயன்படுத்தப்படுகிறது. உங்கள் இலக்குச் சந்தையானது, கணக்கு அமைவிலிருந்து பெறப்படும் தகவல்களுடன் முன்பே நிரப்பப்பட்டிருக்கும்.

உங்கள் இலக்குச் சந்தைத் தகவலை உங்களின் Collabs சுயவிவரத்தில் எந்த நேரத்திலும் மாற்றிக்கொள்ளலாம்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.

  2. மேலோட்டம் பிரிவில் சுயவிவரத்தைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. இலக்குச் சந்தை பிரிவில், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து உங்களின் தயாரிப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. கீழ்தோன்றும் மெனுவிலிருந்து உங்களின் முதன்மைப் பார்வையாளர்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. இடம் பிரிவில், திருத்து என்பதைக் கிளிக் செய்து, பின்னர் உங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த விரும்பும் நாடுகளைத் தேர்வுசெய்யவும்.

படி 5: சுயவிவரப் புலப்பாடு

உங்களின் Collabs சமூகத்தை விளம்பரப்படுத்தவும் Collabs-இல் படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றவும் இரண்டு வழிகள் உள்ளன:

  • திறந்தநிலை அணுகல் திட்டம்: உங்கள் தயாரிப்புகளை விற்கக்கூடிய தகுதியான படைப்பாளர்களுடன் உங்கள் தயாரிப்புகளை உடனடியாகப் பகிர, திறந்தநிலை அணுகல் திட்டத்தைச் செயல்படுத்தவும்.
  • ஆன்லைன் ஸ்டோர் பக்கம்: உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணைந்து செயல்படும் வாய்ப்பை வழங்க, உங்களின் ஆன்லைன் ஸ்டோரில் Collabs சுயவிவரத்தைச் சேர்க்கவும்.

விண்ணப்பக் கருத்துக்கணிப்பு

படைப்பாளர்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள, உங்களின் Collabs ஆன்லைன் ஸ்டோர் பக்கத்திலிருந்து விண்ணப்பிக்கும் படைப்பாளர்களுக்காகத் தனிப்பயன் கருத்துக்கணிப்பை அமைக்கவும்:

  1. படைப்பாளர்கள் உங்களை எங்கு கண்டறிகிறார்கள் என்ற பிரிவில், யார் உங்களுக்குப் பொருத்தமானவர் என்பதைத் தீர்மானிக்க உதவும் வகையில் படைப்பாளர்கள் நிரப்பும் படிவத்தைத் திருத்த, ஆன்லைன் ஸ்டோர் பக்கம் என்பதற்கு அருகிலுள்ள கியர் ஐகானைக் கிளிக் செய்யவும்.
  2. கேள்விகள் பக்கத்தில், உங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளைத் திருத்தவும் மற்றும் சேர்க்கவும்.
  3. விருப்பத்தேர்வு: நீங்கள் ஒரு கேள்வியைச் சேர் என்பதைக் கிளிக் செய்தால், தேவையான புலங்களில் தகவலை உள்ளிடவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

படைப்பாளர் மின்னஞ்சல் வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்கவும்

படைப்பாளர்களை நீங்கள் அழைக்கும்போதோ, அவர்களின் விண்ணப்பத்தை அங்கீகரிக்கும்போதோ அல்லது நிராகரிக்கும்போதோ Shopify Collabs அவர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சல்களை நீங்கள் தனிப்பயனாக்கலாம். இந்த மின்னஞ்சல்களைத் தனிப்பயனாக்குவது, உங்கள் பிராண்டின் தொனியைப் பராமரிக்கவும், உங்கள் திட்டத்தைப் பற்றிய பொருத்தமான தகவலைப் படைப்பாளர்களுக்கு வழங்கவும் உதவுகிறது.

மின்னஞ்சல் வார்ப்புருக்களை அணுகவும்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Collabs என்பதற்குச் செல்லவும்.

  2. அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. மின்னஞ்சல் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. படைப்பாளர் மின்னஞ்சல் வார்ப்புருக்கள் பிரிவில், நீங்கள் திருத்த விரும்பும் மின்னஞ்சல் வார்ப்புருவைக் கிளிக் செய்யவும்: அழைப்பு, வரவேற்பு அல்லது நிராகரிப்பு.

அழைப்பு மின்னஞ்சல்

உங்களின் Collabs திட்டத்தில் சேர நீங்கள் அழைக்கும் படைப்பாளர்களுக்கு அழைப்பு மின்னஞ்சல் அனுப்பப்படும். மின்னஞ்சலின் பின்வரும் பகுதிகளை நீங்கள் தனிப்பயனாக்கலாம்:

  • பொருள் வரி: 70 எழுத்துகள் வரை
  • உள்ளடக்கம்: தடித்த, சாய்வெழுத்து மற்றும் இணைப்புகளுக்கான வடிவமைப்பு விருப்பங்களுடன் 2,000 எழுத்துகள் வரை
  • முகவரி: அழைப்பு மின்னஞ்சல்களின் கீழே காட்டப்படும் வணிக முகவரி (விளம்பர மின்னஞ்சல்களுக்குச் சட்டப்படி தேவையானது)

படைப்பாளரின் முதல் பெயரைத் தானாகவே சேர்க்க, உங்கள் உள்ளடக்கத்தில் %firstname% என்பதைப் பயன்படுத்தலாம்.

வரவேற்பு மின்னஞ்சல்

படைப்பாளர்களின் விண்ணப்பத்தை நீங்கள் அங்கீகரிக்கும்போது அவர்களுக்கு வரவேற்பு மின்னஞ்சல் அனுப்பப்படும். மின்னஞ்சலின் பின்வரும் பகுதியை நீங்கள் தனிப்பயனாக்கலாம்:

  • உள்ளடக்கம்: தடித்த, சாய்வெழுத்து மற்றும் இணைப்புகளுக்கான வடிவமைப்பு விருப்பங்களுடன் 2,000 எழுத்துகள் வரை

வரவேற்பு மின்னஞ்சல்களுக்கான பொருள் வரியைத் தனிப்பயனாக்க முடியாது. கிரியேட்டரின் முதல் பெயரைத் தானாகவே சேர்க்க, உங்கள் உள்ளடக்கத்தில் %firstname% என்பதைப் பயன்படுத்தலாம்.

நிராகரிப்பு மின்னஞ்சல்

கிரியேட்டர்களின் விண்ணப்பத்தை நீங்கள் நிராகரிக்கும்போது அவர்களுக்கு நிராகரிப்பு மின்னஞ்சல் அனுப்பப்படும். மின்னஞ்சலின் பின்வரும் பகுதியை நீங்கள் தனிப்பயனாக்கலாம்:

  • உள்ளடக்கம்: தடித்த, சாய்வெழுத்து மற்றும் இணைப்புகளுக்கான வடிவமைப்பு விருப்பங்களுடன் 2,000 எழுத்துகள் வரை

நிராகரிப்பு மின்னஞ்சல்களுக்கான பொருள் வரியைத் தனிப்பயனாக்க முடியாது. நிராகரிப்பு மின்னஞ்சல்கள் no-reply@shopify.com என்பதிலிருந்து அனுப்பப்படும்.

கிரியேட்டர் மின்னஞ்சல்களுக்கான கவனத்தில் கொள்ள வேண்டியவை

உங்கள் கிரியேட்டர் மின்னஞ்சல் வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய பின்வருவனவற்றை மதிப்பாய்வு செய்யவும்:

  • பரிசு மின்னஞ்சல்களை இந்த நேரத்தில் தனிப்பயனாக்க முடியாது
  • அழைப்பு மின்னஞ்சல்களைக் கிரியேட்டர்களுக்கு அனுப்பும் முன்பு, அவற்றை முன்னோட்டம் பார்க்கவோ சோதனை முறையில் அனுப்பவோ முடியாது
  • மேலும் மேம்பட்ட மின்னஞ்சல் தனிப்பயனாக்கத்திற்கு, Klaviyo போன்ற செயலிகளுடன் Shopify Flow-ஐப் பயன்படுத்தலாம்