உள்ளடக்கச் சந்தைப்படுத்தல் உத்தியை உருவாக்கவும்

உள்ளடக்கச் சந்தைப்படுத்தல் என்பது வலைப்பதிவுகள், மின்னஞ்சல்கள், SMS மெசேஜ்கள், வீடியோக்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் உங்கள் பிராண்டைப் பற்றிய கதைகளைச் சொல்வதற்கான உள்ளடக்கத்தை உருவாக்குவதைக் குறிக்கும். உள்ளடக்க உத்தியை உருவாக்குவதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கான அர்த்தமுள்ள மற்றும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்கலாம்.

உங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தவும் உங்கள் பார்வையாளர்களுடன் உறவாடவும் உள்ளடக்கத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதை வரையறுக்கும் உங்களின் சந்தைப்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதிதான் உள்ளடக்க உத்தியாகும். பயனுள்ள உள்ளடக்க உத்தி பின்வரும் காரணிகளை உள்ளடக்கும்:

  • உங்கள் பார்வையாளர்களிடம் பிரபலமாக உள்ள சந்தைப்படுத்தல் சேனல்களைத் தேர்ந்தெடுத்தல்
  • தொடர்புடைய உள்ளடக்கம் மற்றும் பயனுள்ள உள்ளடக்க வடிவங்களை உருவாக்குதல்
  • உங்கள் உள்ளடக்கத்தின் வெற்றியின் அளவை அறிய இலக்குகளை அமைத்தல்

உங்கள் உள்ளடக்கத்தை உருவாக்கிய பிறகு, திட்டமிடல் நாள்காட்டியைப் பயன்படுத்தி உங்கள் உள்ளடக்கத்தை வெளியிடுவதைத் திட்டமிடலாம்.

உள்ளடக்கச் சந்தைப்படுத்தல் சேனல்களைத் தேர்ந்தெடுத்தல்

சில சந்தைப்படுத்தல் சேனல்களுக்கு உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம், உங்கள் பார்வையாளர்கள் உங்கள் பிராண்டுடன் தொடர்புகொள்ளவும் உங்கள் ஸ்டோரைக் கண்டறியவும் வெவ்வேறு வழிகளை வழங்குகிறீர்கள். பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேனல்களுக்கு உள்ளடக்கத்தை உருவாக்குவதைக் கருத்தில் கொள்ளவும்:

ஒவ்வொரு சேனலின் பண்புகளின் அடிப்படையில் சந்தைப்படுத்தல் உள்ளடக்கத்தை வடிவமைக்கவும். உரை, படங்கள் அல்லது வீடியோக்களை மேம்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு சேனலுக்கும் ஏற்ப உள்ளடக்கத்தை மாற்றியமைக்கவும். உங்கள் பார்வையாளர்கள் உங்களின் உள்ளடக்கத்தைக் கண்டறிய உதவ, ஹேஷ்டேக்குகள் அல்லது மென்ஷன்கள் போன்ற குறிப்பிட்ட சேனலின் அம்சங்களைப் பயன்படுத்தவும். ஒரு வாடிக்கையாளர் உங்களின் உள்ளடக்கத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட சேனல்களில் பார்க்க வாய்ப்புள்ளதால், ஒரே உள்ளடக்கத்தை எல்லா இடங்களிலும் சேர்க்க வேண்டாம். அதற்குப் பதிலாக, கதையின் வெவ்வேறு பகுதிகளைச் சொல்வதற்கு வெவ்வேறு சேனல்களில் ஒருங்கிணைக்கக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்கவும். எடுத்துக்காட்டாக, உங்கள் பணியாளர்கள் இடம்பெறும் Instagram படப் பதிவானது, உங்களின் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள எங்களைப் பற்றி பக்கத்திற்கு வழிநடத்தலாம்.

நீங்கள் ஒவ்வொரு சேனலிலும் இருக்க வேண்டியதில்லை. உங்களால் நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய ஓர் உத்தியை உருவாக்கி, உங்கள் வாடிக்கையாளர்கள் அதிகம் இருக்க வாய்ப்புள்ள சேனல்களுக்கான உள்ளடக்கத்தை உருவாக்கவும்.

இலக்குகளை அமைத்தல் மற்றும் முடிவுகளின் அளவை அறிதல்

எந்தவொரு உள்ளடக்கத்தையும் உருவாக்கும் முன், பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிப்பது, உங்கள் சந்தாதாரர் பட்டியலை விரிவாக்குவது அல்லது தயாரிப்புத் தேவையை அதிகரிப்பது போன்ற நீங்கள் அடைய விரும்பும் குறிப்பிட்ட இலக்குகளை வரையறுக்கவும். நீங்கள் இதுவரை சந்தைப்படுத்தல் இலக்குகளை அமைக்கவில்லை எனில், வழிகாட்டுதலுக்கு சந்தைப்படுத்தல் திட்டத்தை உருவாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

ஒரு சமூக ஊடகக் கணக்கிற்கான சுயவிவரம், ஒரு Shopify Messaging பிரச்சாரம் அல்லது இரண்டாம் நிலை இணையதளத்திற்கான ஏதேனும் உள்ளடக்கத்தை நீங்கள் உருவாக்கும்போது, உங்கள் ஸ்டோருக்கான பரிந்துரை இணைப்புகளைச் சேர்க்கவும். அந்த சேனல்களின் மாற்று வீதத்தின் அடிப்படையில், அவற்றுக்கான உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மதிப்பைக் கண்டறிய இந்த இணைப்புகளைப் பயன்படுத்தலாம். ஆர்டர்களுக்கான மாற்ற விவரங்களைக் கண்காணிப்பது பற்றி மேலும் அறிக.

உள்ளடக்கத்தை உருவாக்குதல்

உங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் உள்ளடக்க வகைகளைத் தீர்மானிப்பதே உள்ளடக்க உத்தியின் ஒரு சவாலாகும். உங்கள் சேனல்கள் முழுவதும் சீரான ஈடுபாட்டை ஏற்படுத்தும் உள்ளடக்கத்தை உருவாக்க, ஒரு சில தொடர்ச்சியான வடிவங்கள் மற்றும் இடுகை வகைகளைக் கொண்ட உள்ளடக்கக் கலவையை வரையறுக்கவும். நீங்கள் எழுதப்பட்ட உள்ளடக்கம் அல்லது வீடியோக்கள், படங்கள் போன்ற மீடியா உள்ளடக்கத்தை உருவாக்கலாம்.

வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரைக் கண்டறிய உதவ, நீங்கள் உருவாக்கும் உள்ளடக்கம் உங்கள் தயாரிப்புகள் தொடர்பான தலைப்புகள் அல்லது தகவல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் தேடுபொறியில் உங்கள் ஸ்டோரைக் கண்டறியப் பயன்படுத்தக்கூடிய முக்கியச் சொற்களைக் கருத்தில் கொண்டு, அந்த முக்கியச் சொற்களுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தை உருவாக்கவும். பல உள்ளடக்கச் சேனல்கள் தேடல் வசதியை வழங்குவதால், SEO உத்திகளைப் பயன்படுத்துவது உங்கள் உள்ளடக்கத்தைக் கண்டறிய உங்கள் பார்வையாளர்களுக்கு உதவும்.

உங்கள் பிராண்ட் மற்றும் பார்வையாளர்களுக்கு ஏற்றதாகவும், போட்டியாளர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்துவதாகவும் உள்ள உள்ளடக்கக் கலவையை வரையறுக்க முயலுங்கள். உங்கள் உள்ளடக்கக் கலவைக்குப் பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வடிவங்களைக் கருத்தில் கொள்ளவும்:

  • செய்திகள்: உங்கள் துறை அல்லது தற்போதைய டிரெண்டுகள் பற்றிய தகவல்
  • உத்வேகம்: மேற்கோள்கள் அல்லது உலகெங்கிலும் உள்ள புகைப்படங்கள் போன்ற ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதற்கான ஊக்கம்
  • கல்வி: உண்மைகள், டுடோரியல்கள் அல்லது எப்படிச் செய்வது என்பது குறித்த வலைப்பதிவு இடுகைகள்
  • தயாரிப்பு மேம்பாடு: உங்கள் தயாரிப்புகள் பயன்படுத்தப்படும் உயர்தரப் படங்கள், செயல்விளக்க வீடியோக்கள் அல்லது சான்றுகள்
  • போட்டிகள்: இலவசப் பதிவிறக்கங்கள், தள்ளுபடிகள் அல்லது வாடிக்கையாளர்கள் வெல்லக்கூடிய பிற சலுகைகள்
  • வாடிக்கையாளர் அல்லது இன்ஃப்ளூயன்சர் சிறப்புப் பதிவுகள்: உங்கள் வாடிக்கையாளர்கள் அல்லது அவர்கள் பின்தொடர்பவர்கள் இடம்பெறும் படங்கள் அல்லது வீடியோக்கள்
  • சமூக நிகழ்வுகள்: குறிப்பாக நீங்கள் ஒரு உள்ளூர் வணிகமாக இருந்தால் சந்திப்புகள், நிதி திரட்டுதல் அல்லது கற்றல் வாய்ப்புகள் பற்றிய தகவல்
  • கேள்வி-பதில்: கேள்விகள், கருத்துக்கணிப்புகள் அல்லது பொதுவான விசாரணைகளுக்கான பதில்கள்
  • திரைக்குப் பின்னால்: உங்கள் தயாரிப்புகள், பணியாளர்கள், வணிகச் செயல்பாடுகள், பிராண்ட் கதை அல்லது துறை பற்றிய வீடியோக்கள் அல்லது கட்டுரைகள்

ஒரு வடிவத்திற்குள் புதிய உள்ளடக்கத்தை உருவாக்குவதை எளிதாக்க, நீங்கள் வார்ப்புருக்கள் மற்றும் வடிவமைப்புகளை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் சமூக ஊடக ஹேஷ்டேக்குகளைச் சேமிக்கலாம், இதனால் நீங்கள் இடுகையிடும்போது அவை எப்போதும் எளிதாகக் கிடைக்கும், அல்லது சீரான அழகியலைப் பெற உங்களின் அனைத்துப் புகைப்படங்களுக்கும் அதே ஃபில்டரைப் பயன்படுத்தலாம்.

நாள்காட்டியில் உள்ளடக்கத்தைத் திட்டமிடுதல்

உள்ளடக்கப் புதுப்பிப்புகளைத் திட்டமிட ஒரு நாள்காட்டியைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் பல்வேறு வகையான உள்ளடக்கங்களை உருவாக்கி, உங்கள் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் அதிர்வெண்ணில் அதை வெளியிடுவதை உறுதிசெய்யலாம். ஒவ்வொரு சமூக ஊடகப் புதுப்பிப்பு, வலைப்பதிவு இடுகை, மின்னஞ்சல் அல்லது SMS பிரச்சாரம், வீடியோ அல்லது பிற உள்ளடக்கச் சந்தைப்படுத்தல் முயற்சி ஆகியவற்றை நாள்காட்டியில் சேர்க்கவும், இதன்மூலம் உங்கள் சேனல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதைச் சரிபார்க்கலாம். பலவிதமான சேனல்களுக்கான ஒருங்கிணைந்த உள்ளடக்கத்தைத் திட்டமிட அல்லது உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்புடைய வரவிருக்கும் விடுமுறைகள் அல்லது நிகழ்வுகளுக்கான உள்ளடக்கத்தைத் திட்டமிடவும் நீங்கள் நாள்காட்டியைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் எப்போது வெளியிடுகிறீர்கள் என்பது ஈடுபாட்டைப் பாதிக்கலாம். உள்ளடக்கத்தை வெளியிடுவதற்கான சிறந்த நேரங்களைத் தீர்மானிக்க, உங்கள் பார்வையாளர்கள் அல்லது சேனல்களுக்குப் பொருத்தமான துறை சார்ந்த ஆராய்ச்சிகளை நீங்கள் படிக்கலாம், அல்லது மெதுவாகத் தொடங்கி உள்ளடக்கத்துடனான வாடிக்கையாளர் ஈடுபாட்டை அளவிடலாம். உங்கள் சொந்தப் பழக்கவழக்கங்களைக் கூட வழிகாட்டுதலாகப் பயன்படுத்தலாம்.

நேரத்தை மிச்சப்படுத்த, உள்ளடக்கத்தை முன்கூட்டியே தயார் செய்ய திட்டமிடல் கருவிகளைப் பயன்படுத்தலாம். உங்கள் உள்ளடக்கக் கலவையில், நீங்கள் முன்கூட்டியே திட்டமிடக்கூடிய, மீண்டும் உருவாக்கக்கூடிய, தொடர்ந்து வெளியிடக்கூடிய ஐடியாக்களைச் சேர்க்கவும். நீங்கள் விரைவாக உருவாக்கக்கூடிய வடிவங்களையும் மற்றும் உருவாக்குவதற்கு அதிக நேரம் தேவைப்படும் பிற வடிவங்களையும் சேர்த்துக் கலவையைச் சமநிலைப்படுத்தவும். ஒரே நேரத்தில் பல உள்ளடக்கப் பகுதிகளைத் தயார் செய்யுங்கள், இதனால் உங்கள் வணிகத்தின் பிற அம்சங்களில் கவனம் செலுத்த நேரத்தைச் செலவிட முடியும்.

ஒரு கணிக்கக்கூடிய வெளியீட்டுத் திட்டமிடல், வாடிக்கையாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது. நீங்கள் ஒரு நாள்காட்டியில் உள்ளடக்கத்தைத் திட்டமிடும்போது, உள்ளடக்க உருவாக்கத்தைத் தொடர்ந்து செய்ய முடியும் என்பதையும், அதிக சுமை ஏற்படாது என்பதையும் உறுதிசெய்து கொள்ளவும்.

ஆன்லைன் இருப்பு முழுவதும் உள்ளடக்க உத்தியைப் பயன்படுத்துதல்

உங்கள் உள்ளடக்க உத்தியைத் திட்டமிடும்போது, பார்வையாளர்கள் உங்கள் ஸ்டோருடன் தொடர்பு கொள்ளும் எந்த இடத்திலும் அதைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள். உங்கள் பிராண்ட் அசெட்களை நிர்வகிப்பதன் மூலம் உங்களின் காட்சி அடையாளத்தை மையப்படுத்தலாம். பின்வரும் இடங்களிலும் நீங்கள் ஒரே மாதிரியான நடை, செய்தி அல்லது படத்தைப் பயன்படுத்த வேண்டும்:

குறிப்பாகச் சமூக ஊடகச் சேனல்களில் அல்லது வலைப்பதிவுக் கருத்துகளில் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருப்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் கருத்துகளுக்குப் பதிலளிக்கும்போது, மற்றவர்களின் இடுகைகளைப் பகிரும்போது மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, உங்கள் பிராண்ட் கதையைச் சொல்ல இந்தச் செயல்பாடுகள் உங்களின் மற்ற உள்ளடக்கக் கலவையுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.