கைவிடப்பட்ட செக்அவுட்களை மீட்டெடுத்தல்

கைவிடப்பட்ட செக்அவுட் என்பது வாடிக்கையாளர் தங்களின் மின்னஞ்சல் தகவலை வழங்கியிருந்தாலும், நிறைவடையாமல் இருக்கும் செக்அவுட் செயல்முறையைக் குறிக்கிறது. வாடிக்கையாளர் தங்கள் ஆர்டரை இறுதி செய்வதற்குப் பேமெண்ட்டைத் தொடராதபோது இது நிகழ்கிறது. வாடிக்கையாளர் தங்களின் மின்னஞ்சல் தகவலை வழங்கிய பிறகு பத்து நிமிடங்களுக்கும் மேலாக செக்அவுட் முழுமையடையாமல் இருந்தால், அது கைவிடப்பட்டதாகக் கருதப்படும்.

செக்அவுட்டைக் கைவிட்ட நேரத்தில் வாடிக்கையாளரின் கார்ட்டில் இருந்த உருப்படிகள் சேமிக்கப்படாது.

கைவிடப்பட்ட செக்அவுட் மீட்பு என்பது ஆன்லைன் ஸ்டோர் விற்பனைச் சேனல் மற்றும் வாங்கு பொத்தான் விற்பனைச் சேனல் ஆகியவற்றிற்கு மட்டுமே கிடைக்கும். Shopify POS அல்லது மூன்றாம் தரப்பு விற்பனைச் சேனல்களில் கைவிடப்பட்ட செக்அவுட்கள், செக்அவுட் மீட்பு மின்னஞ்சலைப் பெறாது.

கைவிடப்பட்ட உங்கள் செக்அவுட்களை மதிப்பாய்வு செய்யவும்

வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை ஏன் நிறைவுசெய்யவில்லை என்பதைக் குறிக்கக்கூடிய பேட்டர்ன்களைக் கண்டறிய, கைவிடப்பட்ட உங்களின் செக்அவுட்களை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.

அதிக ஆபத்து உள்ளது எனக் கண்டறியப்பட்டதன் காரணமாகச் செக்அவுட் முயற்சியை Shopify Payments தடுத்தால், கைவிடப்பட்ட உங்கள் செக்அவுட்களில் தடுக்கப்பட்டது பார்வையில் அந்தச் செக்அவுட் பட்டியலிடப்படும்.

சந்தேகத்திற்குரிய கார்டு சோதனை அல்லது பாட் செயல்பாடு என அடையாளம் காணப்படும் சில செக்அவுட் முயற்சிகள் உங்கள் கைவிடப்பட்ட செக்அவுட்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை. உங்கள் கைவிடப்பட்ட செக்அவுட் மீட்பை உண்மையான வாடிக்கையாளர்கள் மீது மையப்படுத்த இது உதவுகிறது. அனைத்து தானியங்கு செயல்பாடுகளும் வடிகட்டப்படுவதில்லை என்பதால், சில கைவிடப்பட்ட செக்அவுட்கள் பாட்களிலிருந்து வரக்கூடும். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் பாட் செயல்பாட்டைக் கண்டறிவது குறித்து மேலும் அறிக.

மூன்று மாதங்களுக்கும் மேலான கைவிடப்பட்ட செக்அவுட்கள் தானாகவே Shopify நிர்வாகியிலிருந்து நீக்கப்படும். நீங்கள் தக்கவைக்க விரும்பும் குறிப்பிட்ட கைவிடப்பட்ட செக்அவுட் இருந்தால், அதே விவரங்களுடன் ஒரு வரைவு ஆர்டரை உருவாக்கி உங்கள் Shopify நிர்வாகியில் அதைத் திறந்து வைத்திருக்கலாம். குறிப்பிட்ட கைவிடப்பட்ட செக்அவுட்டைக் கைமுறையாக நீக்க எந்த வழியும் இல்லை.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. கைவிடப்பட்ட செக்அவுட்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

கைவிடப்பட்ட செக்அவுட்டிலிருந்து பேமெண்ட் நிகழ்வுகளைப் பார்க்கவும்

வாடிக்கையாளர் தங்களின் ஆர்டருக்குப் பணம் செலுத்த முயலும் ஒவ்வொரு முறையும், கைவிடப்பட்ட செக்அவுட்டின் காலவரிசையில் பேமெண்ட் நிகழ்வு ஒன்று குறிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்குப் பேமெண்ட் நிகழ்வுகளை நீங்கள் விரிவாக்கலாம்.

வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்ய முயலும்போது அவரது பேமெண்ட் தோல்வியடைந்தால், பேமெண்ட் நிகழ்வுகள் உதவியாக இருக்கும். செக்அவுட்டில் பேமெண்ட் செயல்படாத காரணத்தால் வாடிக்கையாளர் உங்களைத் தொடர்புகொண்டால், பேமெண்ட் நிகழ்வின் விவரங்களை நீங்கள் பார்த்து, உங்கள் வாடிக்கையாளருக்கு உதவ அந்தத் தகவலைப் பயன்படுத்தலாம்.

உங்கள் வாடிக்கையாளர் செக்அவுட்டில் வெற்றிகரமாகப் பேமெண்ட்டைச் செலுத்தினால், பேமெண்ட் நிகழ்வுகளைப் பார்க்க ஆர்டரின் காலவரிசைக்குச் செல்லவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > கைவிடப்பட்ட செக்அவுட்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. கைவிடப்பட்ட செக்அவுட் ஒன்றைக் கிளிக் செய்யவும்.

  3. கைவிடப்பட்ட செக்அவுட் விவரங்கள் பக்கத்தில், காலவரிசை என்பதற்குச் செல்லவும்.

  4. விவரங்களை விரிவாக்க, ஒரு பேமெண்ட் நிகழ்வைக் கிளிக் செய்யவும்.

  5. தோல்வியடைந்த பேமெண்ட் குறித்து உங்கள் வாடிக்கையாளருக்கு நீங்கள் வழங்கக்கூடிய ஏதேனும் தகவல் உள்ளதா என செய்தி புலத்தை மதிப்பாய்வு செய்யவும். பேமெண்ட் தோல்வியடைவதற்கான காரணங்களுக்கு, கைவிடப்பட்ட செக்அவுட்களில் பேமெண்ட் காரணங்கள் என்பதைப் பார்க்கவும்.

உங்களுக்கு வாடிக்கையாளரைத் தெரிந்திருந்து, அதிக அபாயமுள்ள பேமெண்ட் முடக்கத்திற்குப் பிறகு விற்பனையை முடிக்க விரும்பினால், வரைவு ஆர்டர் ஒன்றை உருவாக்கி வாடிக்கையாளருக்கு விலைப்பட்டியலை அனுப்பவும்.

வாடிக்கையாளர்கள் செக்அவுட்டைக் கைவிட்ட பிறகு அவர்களுக்கு தானாகவே ஒரு மின்னஞ்சலை அனுப்பலாம். ஒவ்வொரு மின்னஞ்சலிலும் வாடிக்கையாளரின் கைவிடப்பட்ட கார்ட்டுக்கான இணைப்பு இருக்கும், அவர்கள் விரும்பினால் தங்களின் செக்அவுட்டை நிறைவுசெய்ய இது அனுமதிக்கும். லோகோவைச் சேர்ப்பதன் மூலம் அல்லது வண்ணத் திட்டத்தை மாற்றுவதன் மூலம் மின்னஞ்சல் வார்ப்புருவை நீங்கள் திருத்தலாம்.

பின்வரும் சூழ்நிலைகளில் கைவிடப்பட்ட செக்அவுட்டுக்கு மீட்பு மின்னஞ்சல் அனுப்பப்படாது:

  • சாத்தியமான வாடிக்கையாளர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைவிடப்பட்ட செக்அவுட்களை உருவாக்கி, மீட்பு மின்னஞ்சல் அனுப்பப்படுவதற்கு முன்பு விற்பனையை முடித்தால், மின்னஞ்சல் அனுப்பப்படாது.
  • வாடிக்கையாளர் தனது செக்அவுட்டை முடிக்க முயன்றபோது கட்டணச் செயலாக்கப் பிழை ஏற்பட்டிருந்தால், மின்னஞ்சல் அனுப்பப்படாது.
  • வாடிக்கையாளரின் முகவரிக்கு ஷிப்பிங் செய்வதை உங்கள் ஷாப் ஆதரிக்கவில்லை என்றால், மின்னஞ்சல் அனுப்பப்படாது.
  • செக்அவுட்டில் மின்னஞ்சல் முகவரிக்குப் பதிலாக தொலைபேசி எண்ணை உள்ளிட வாடிக்கையாளர்களை நீங்கள் அனுமதித்தாலும், தொலைபேசி எண்ணை உள்ளிடுவதை வாடிக்கையாளர் தேர்வுசெய்தாலும், மின்னஞ்சலை அனுப்ப முடியாது.
  • செக்அவுட்டில் உள்ள தயாரிப்புகள் எவையும் வாங்குவதற்குக் கிடைக்கவில்லை எனில் (எடுத்துக்காட்டாக, காலியான சரக்கு இருப்பு), மின்னஞ்சல் அனுப்பப்படாது.
  • செக்அவுட்டில் உள்ள அனைத்துத் தயாரிப்புகளும் இலவசமாக இருந்து, ஷிப்பிங் கட்டணத்தைச் சேர்ப்பதற்கு வாடிக்கையாளர் ஷிப்பிங் பக்கத்தைப் பார்வையிடாவிட்டாலோ ஷிப்பிங் கட்டணமும் இலவசமாக இருந்தாலோ, மின்னஞ்சல் அனுப்பப்படாது.
  • செக்அவுட் முயற்சி அதிக ஆபத்து உள்ளதாக அடையாளம் காணப்பட்டதன் காரணமாக Shopify Payments பேமெண்ட்டை முடக்கினால், மின்னஞ்சல் அனுப்பப்படாது.

தானாகவே மீட்பு மின்னஞ்சல்களை அனுப்பும் வகையில் உங்கள் ஷாப்பை நீங்கள் உள்ளமைத்திருந்தால், மீட்பு மின்னஞ்சல்கள் ஏன் வழங்கப்படவில்லை என்பதை விளக்கும் உதவிக்குறிப்புகளை கைவிடப்பட்ட செக்அவுட்கள் பக்கம் கொண்டிருக்கும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Messaging என்பதற்குச் செல்லவும்.

  2. தானியக்கமாக்கல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. Shopify வழங்கும் கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சல்கள் தன்னியக்கமாக்கலில், Show actions > அமைப்புகளைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சல்கள் பிரிவில், கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சல்களைத் தானாகவே அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சல் அமைப்புகளைச் சரிசெய்யவும்:

    1. இதற்கு அனுப்பு பிரிவில், கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சல்களை அனுப்ப விரும்பும் பார்வையாளரின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
    2. இதற்குப் பிறகு அனுப்பு பிரிவில், வாடிக்கையாளர் செக்அவுட்டைக் கைவிட்டதிலிருந்து தானியங்கு மின்னஞ்சல் அனுப்பப்படும் வரை எவ்வளவு நேரம் கடக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. விருப்பத்திற்குரியது: உங்கள் கைவிடப்பட்ட செக்அவுட் அறிவிப்பு வார்ப்புருவைத் திருத்த, மின்னஞ்சலைத் தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

புதிய தன்னியக்கமாக்கலை இயக்கிய பிறகு, அதை ஆஃப் மற்றும் ஆன் செய்வது உட்பட நீங்கள் தன்னியக்கமாக்கலைத் திருத்தலாம் மற்றும் நிர்வகிக்கலாம்.

ஆர்டர்கள் > கைவிடப்பட்ட செக்அவுட்கள் என்பதற்குச் சென்று ஒவ்வொரு கைவிடப்பட்ட ஆர்டர் மின்னஞ்சலின் நிலையையும் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். ஒவ்வொரு மீட்பு மின்னஞ்சலின் நிலையும் மின்னஞ்சல் நிலை நெடுவரிசையின் கீழ் காணப்படுகிறது. கைவிடப்பட்ட செக்அவுட்டின் நிலையை மீட்பு நிலை என்பதன் கீழ் கண்டறியலாம்.

ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்ட பிறகு, வாடிக்கையாளர் ஆர்டரை நிறைவுசெய்ததும் செக்அவுட் மீட்டெடுக்கப்பட்டதாகக் கருதப்படும். வாடிக்கையாளர் மின்னஞ்சலில் உள்ள மீட்பு இணைப்பைக் கிளிக் செய்யலாம் அல்லது தாங்களாகவே செக்அவுட்டை நிறைவுசெய்யலாம்.

வாடிக்கையாளருக்குக் கைமுறையாகக் கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சலை அனுப்ப நீங்கள் தேர்வுசெய்யலாம். அந்த மின்னஞ்சலில் வாடிக்கையாளர் கைவிட்ட கார்ட்டுக்கான இணைப்பு இருக்கும், இது அவர்களின் செக்அவுட்டை நிறைவுசெய்ய அனுமதிக்கும். நீங்கள் தன்னியக்கமாக்கலை அமைக்காதபோது அல்லது உங்கள் வாடிக்கையாளர் கைவிடப்பட்ட செக்அவுட் இணைப்பைக் கோரும்போது கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சலைக் கைமுறையாக அனுப்ப நீங்கள் விரும்பலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > கைவிடப்பட்ட செக்அவுட்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் கைவிடப்பட்ட செக்அவுட்டின் எண்ணைக் கிளிக் செய்யவும்.

  3. வாடிக்கையாளர் தகவலின் கீழ் உள்ள வாடிக்கையாளரின் மின்னஞ்சலைக் கிளிக் செய்யவும்.

மின்னஞ்சலின் உள்ளடக்கப் பகுதியில் கைவிடப்பட்ட செக்அவுட் இணைப்புடன் உங்கள் மின்னஞ்சல் கிளையண்ட் தொடங்குகிறது.

கைவிடப்பட்ட செக்அவுட் இணைப்பைத் திறக்கும் எவரும் அந்தச் செக்அவுட்டைத் தொடரலாம், எனவே இணைப்பைக் கைவிட்ட வாடிக்கையாளருக்கு மட்டுமே அனுப்பவும். இணைப்பைத் திறக்கும் நபர் உங்கள் ஸ்டோரில் உள்ள வாடிக்கையாளர் கணக்கில் உள்நுழைந்திருந்தால், செக்அவுட் அந்தக் கணக்கின் கீழ் தொடரும், மேலும் எந்த விளைவான ஆர்டரும் அந்த வாடிக்கையாளருக்காகவே உருவாக்கப்படும். நீங்கள் அனுப்பிய பிறகு கைவிடப்பட்ட செக்அவுட் இணைப்பை முடக்கவோ காலாவதியாக்கவோ முடியாது. ஆர்டர் நிறைவடைந்த பிறகு, அந்த இணைப்பு செக்அவுட்டைத் திறக்காது, ஆனால் அந்த ஆர்டருக்கான ஆர்டர் நிலை பக்கத்தைத் திறக்கும்.

வாடிக்கையாளர் அந்த இணைப்பைப் பயன்படுத்தித் தங்கள் ஆர்டரை நிறைவுசெய்தால், கைவிடப்பட்ட செக்அவுட் பக்கத்தில் உள்ள மீட்பு நிலை மீட்டெடுக்கப்பட்டதாகக் காட்டப் புதுப்பிக்கப்படும்.

கைவிடப்பட்ட செக்அவுட்கள் மின்னஞ்சல் அறிக்கை

Shopify வழங்கும் கைவிடப்பட்ட செக்அவுட்கள் மின்னஞ்சல்கள் அறிக்கை உங்கள் வாடிக்கையாளர்களைத் திரும்பக் கொண்டுவந்து பரிவர்த்தனையை முடிக்க அந்த மின்னஞ்சல்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றிச் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. இது Shopify-இன் வளர்ச்சி (Growth) பிரிவில் கிடைக்கிறது.

நினைவூட்டல் மின்னஞ்சல்களின் விளைவாக எத்தனை அமர்வுகள் மற்றும் நிறைவடைந்த ஆர்டர்கள் கிடைத்துள்ளன என்பதை இந்த அறிக்கை உங்களுக்குத் தெரிவிக்கிறது. மாற்று வீதங்கள், மொத்த விற்பனைத் தொகை, சராசரி ஆர்டர் மதிப்பு, விற்கப்பட்ட தயாரிப்புகளின் சராசரி எண்ணிக்கை மற்றும் எத்தனை வாடிக்கையாளர்கள் முதல் முறை வாடிக்கையாளர்கள் போன்ற தகவல்களையும் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.

நவம்பர் 18, 2019 முதலான தரவை மட்டுமே அறிக்கை காட்டும்.

கைவிடப்பட்ட செக்அவுட்களுக்கான பேமெண்ட் காரணங்கள்

பின்வரும் பட்டியலில் உள்ள (முழுமையானது அல்ல) காரணங்களில் ஏதேனும் ஒன்றால் பேமெண்ட் தோல்வியடையும் போது கைவிடப்பட்ட செக்அவுட் உருவாக்கப்படலாம்:

  • மோசடிக்கான அதிக அபாயம் இருப்பதால் முடக்கப்பட்டது
  • தொழில்நுட்பக் காரணங்களால் பேமெண்ட்டைச் செயலாக்க முடியவில்லை
  • கட்டணச் செயலியால் கார்டு நிராகரிக்கப்பட்டது
  • தவறான கார்டு எண்
  • செல்லுபடியாகாத கார்டு எண்
  • கார்டு காலாவதியாகும் தேதி MM/YY வடிவமைப்பில் இல்லை
  • கார்டின் சரிபார்ப்புக் குறியீடு சரியான 3-4 இலக்க வடிவமைப்பில் இல்லை
  • கார்டு காலாவதியாகிவிட்டது
  • கார்டின் சரிபார்ப்புக் குறியீடு தவறானது
  • அஞ்சல் குறியீடு பில்லிங் முகவரியுடன் பொருந்தவில்லை
  • பில்லிங் முகவரி தவறானது
  • கார்டு நிராகரிக்கப்பட்டது
  • உள்ளிடப்பட்ட PIN தவறானது
  • 3-D பாதுகாப்பான அங்கீகரிப்பு தோல்வியடைந்தது
  • சரக்கு இருப்பு தீர்ந்துவிட்டது
  • தள்ளுபடிக் குறியீடு அல்லது கிஃப்ட் கார்டை இனி பயன்படுத்த முடியாது

முடக்கப்பட்ட அதிக அபாயமுள்ள பேமெண்ட்டுகள்

Shopify Payments செக்அவுட்டில், காலவரிசை என்பதில் உள்ள மோசடிக்கான அதிக அபாயம் இருப்பதால் முடக்கப்பட்டது என்ற செய்தி செக்அவுட் முயற்சியானது அதிக அபாயம் கொண்டதாகக் கண்டறியப்பட்டதைக் குறிக்கிறது. ஆர்டர் உருவாக்கப்படும் முன்னரே பேமெண்ட்டை Shopify Payments முடக்கிவிட்டது.

வாடிக்கையாளர் செக்அவுட்டைச் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு முறையும் Shopify Payments அபாயத்தை மதிப்பிடும். வாடிக்கையாளர் வெவ்வேறு பேமெண்ட் அல்லது பில்லிங் விவரங்களுடன் மீண்டும் முயன்றால், பேமெண்ட் முடக்கப்படாமல் போகலாம்.

உங்களுக்கு வாடிக்கையாளரைத் தெரிந்திருந்து, விற்பனையை முடிக்க விரும்பினால், வரைவு ஆர்டர் ஒன்றை உருவாக்கி வாடிக்கையாளருக்கு விலைப்பட்டியலை அனுப்பவும்.

மூன்றாம் தரப்புக் கட்டண நுழைவாயில்களில் இருந்து கைவிடப்பட்ட செக்அவுட்கள்

உங்கள் ஸ்டோர் மூன்றாம் தரப்பு வெளி வழங்குநர் மூலம் பேமெண்ட்டுகளை ஏற்றால், வழங்குநரிடமிருந்து பேமெண்ட் உறுதிப்படுத்தலை Shopify பெற்ற உடனேயே ஆர்டர்கள் உருவாக்கப்படும். வாடிக்கையாளர் Shopify Checkout பகுதிக்குத் திருப்பிவிடப்படுவதற்கு முன்பே, கட்டண வழங்குநர் PaymentSessionResolve அல்லது PaymentSessionPending உறுதிப்படுத்தலை அனுப்பும்போது இது நிகழும்.

பின்வரும் சூழ்நிலைகளில் நீங்கள் கைவிடப்பட்ட செக்அவுட்டைப் பெறலாம்:

  • வெளி நுழைவாயிலில் பேமெண்ட்டை முடிப்பதற்கு முன்பு வாடிக்கையாளர் செக்அவுட்டைக் கைவிடுதல்.
  • மூன்றாம் தரப்பு நுழைவாயிலில் பேமெண்ட் தோல்வியடைதல்.
  • ஆஃப்சைட் பேமெண்ட் பெறப்பட்ட பிறகு வாடிக்கையாளரைத் திருப்பிவிடுவதற்கான ரிட்டர்ன் URL ஒன்றை நீங்கள் கைமுறையாக அமைப்பதை மூன்றாம் தரப்புக் கட்டண நுழைவாயில் கோருகிறது, ஆனால் அந்த URL தவறாக இருத்தல்.
  • பேமெண்ட் உறுதிப்படுத்தல் Shopify-ஐச் சென்றடைவதைத் தடுக்கும் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருத்தல்.

உங்களுக்குக் கைவிடப்பட்ட செக்அவுட் கிடைத்து, மூன்றாம் தரப்பு வெளி வழங்குநரால் பேமெண்ட் வெற்றிகரமாகப் பெறப்பட்டதை உறுதிசெய்தாலும் அது Shopify-க்குச் சரியாகத் தெரிவிக்கப்படவில்லையெனில், கைவிடப்பட்ட செக்அவுட்டை வரைவு ஆர்டராக மீண்டும் உருவாக்கலாம், பின்னர் நீங்கள் உருப்படிகளை நிறைவேற்றுவதற்கு முன்பு ஆர்டரைப் பணம் செலுத்தப்பட்டதாகக் குறிக்கலாம்.