கேம்பெயின்களை உருவாக்குதல்
செய்திமடல்கள், சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் பிற விளம்பரங்களை ஒரே பிரச்சாரத்தில் இணைப்பதன் மூலம் உங்களின் அனைத்துச் சந்தைப்படுத்தல்களையும் ஒரே இடத்தில் தடமறியவும் அளவிடவும் கேம்பெயின்களைப் பயன்படுத்தலாம். இணைப்புகள் மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி உங்கள் பிரச்சாரத்தைப் பகிரவும், பார்வையாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதைத் தடமறியவும், உங்கள் பிரச்சாரம் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை அளவிடவும்.
ஒரு பிரச்சாரத்தை உருவாக்குவதற்கு முன்பு, கேம்பெயின்களுடன் தொடர்புடைய கலைச்சொற்கள், இணைப்பு வகைகள் மற்றும் அளவீடுகள் பற்றி அறிந்துகொள்ள கேம்பெயின்களைப் புரிந்துகொள்ளுதல் என்பதை மதிப்பாய்வு செய்யவும்.
இந்தப் பக்கத்தில்
கேம்பெயின்களை உருவாக்குவதற்கான தேவைகள்
கேம்பெயின்களை உருவாக்க, உங்கள் ஸ்டோர் பின்வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
- உங்கள் ஸ்டோர் Basic அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் இருக்க வேண்டும்.
- நீங்கள் ஆன்லைன் ஸ்டோர் மூலம் விற்க வேண்டும். ஹெட்லெஸ் ஸ்டோர்ஃபிரண்ட்களுக்குக் கேம்பெயின்கள் ஆதரிக்கப்படுவதில்லை.
- பிரச்சாரம் ஒன்றை உருவாக்க நீங்கள் டெஸ்க்டாப் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும். மொபைல் சாதனத்தில் உங்களால் பிரச்சாரத்தை உருவாக்க முடியாது.
- உங்களுக்கு அல்லது உங்கள் பணியாளர்களுக்கு சந்தைப்படுத்தல் ஸ்டோர் அனுமதி இருக்க வேண்டும். உங்கள் பிரச்சாரத்துடன் இணையும் பிரச்சாரச் செயல்பாடு ஒன்றை உருவாக்க, உங்களுக்கு அல்லது உங்கள் பணியாளர்களுக்கு செயலிகள் மற்றும் சேனல்களை நிர்வகித்தல் மற்றும் நிறுவுதல் என்பதற்கான ஸ்டோர் அனுமதியும் இருக்க வேண்டும்.
பிரச்சாரம் ஒன்றை உருவாக்குதல்
உங்கள் Shopify நிர்வாகியின் வளர்ச்சி (Growth) பிரிவிலிருந்து நீங்கள் ஒரு பிரச்சாரத்தை உருவாக்கலாம். பிரச்சாரத்தை உருவாக்கும்போது, உங்களின் பிரத்தியேகத் தடமறிதல் ID கொண்ட முழு URL, சுருக்கமான இணைப்பு மற்றும் QR குறியீடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகிரக்கூடிய இணைப்பு உருவாக்கப்படும். பகிரக்கூடிய இணைப்புகள் குறித்து மேலும் அறிக.
உங்கள் பிரச்சாரத்துடன் Shopify Messaging செய்திமடல் போன்ற ஒரு பிரச்சாரச் செயல்பாட்டை இணைப்பதற்கு முன்பு, அது உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு டிராஃபிக்கை உருவாக்க வேண்டும்.
படிப்பிலைகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வளர்ச்சி என்பதற்குச் செல்லவும்.
கேம்பெயின்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரச்சாரத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரச்சாரத்தின் பெயர் புலத்தில், உங்கள் பிரச்சாரத்திற்கான பெயரை உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பகிரக்கூடிய இணைப்புகள் பிரிவில், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- இயல்புநிலைச் சுருக்கமான இணைப்பு, முழு URL ஐ நகலெடுக்க அல்லது QR குறியீட்டைப் பதிவிறக்க:
- ஏற்கனவே உள்ள பகிரக்கூடிய இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் நகலெடுக்க விரும்பும் இணைப்பிற்கு அடுத்துள்ள நகலெடு ஐகானைக் கிளிக் செய்யவும் அல்லது QR குறியீட்டிற்கு அடுத்துள்ள பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஏற்கனவே உள்ள பகிரக்கூடிய இணைப்பைத் திருத்த:
- பகிரக்கூடிய இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- திருத்து என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் புதுப்பிக்க விரும்பும் புலங்களைத் திருத்தவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- மற்றொரு பகிரக்கூடிய இணைப்பைச் சேர்க்க:
- + என்பதைக் கிளிக் செய்யவும்.
- கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஓர் இலக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
- சுருக்கமான இணைப்பு ஹேண்டிலை உள்ளிடவும்.
- விருப்பத்திற்குரியது: கூடுதல் UTM அளவுருக்கள் பிரிவில், நீங்கள் சேர்க்க விரும்பும் ஏதேனும் அளவுருக்களை நிரப்பவும்.
- முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
- இயல்புநிலைச் சுருக்கமான இணைப்பு, முழு URL ஐ நகலெடுக்க அல்லது QR குறியீட்டைப் பதிவிறக்க:
தானியங்குப் பொருத்த விதியை அமைக்க, பின்வருவனவற்றைச் செய்யவும்:
- தானியங்குப் பொருத்த விதி பிரிவில், + என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் தடமறிய விரும்பும் ஏதேனும் டிராஃபிக் அளவுருக்களை நிரப்பவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரச்சாரச் செயல்பாடுகள் பிரிவில், பின்வருவனவற்றைச் செய்யவும்:
- உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு டிராஃபிக்கை உருவாக்கிய பிரச்சாரச் செயல்பாடுகளைக் கைமுறையாக ஒதுக்க, + என்பதைக் கிளிக் செய்யவும்.
- பிரச்சாரச் செயல்பாடுகளைச் சேர் உரையாடலில், நீங்கள் ஒதுக்க விரும்பும் செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரச்சார அறிக்கையைப் பார்க்கவும்
ஒரு பிரச்சாரத்தை உருவாக்கிய பிறகு, உங்கள் சந்தைப்படுத்தல் முயற்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்த நுண்ணறிவுகளைப் பார்க்கப் பிரச்சார அளவீடுகளை நீங்கள் கண்காணிக்கலாம். உங்கள் பிரச்சாரங்களுக்குக் கிடைக்கும் அளவீடுகள் பற்றி மேலும் அறிக.
நீங்கள் ஒரு பிரச்சாரத்தைப் புதுப்பித்தால், மிகச் சமீபத்திய டிராஃபிக் தரவைச் சேர்க்க உங்கள் அறிக்கை புதுப்பிக்கப்படும். உங்கள் பிரச்சார அறிக்கை தரவு ஒத்திசைக்கச் சிறிது நேரம் ஆகலாம். ஒத்திசைவு முடியும் வரை அறிக்கையில் தரவு ஒத்திசைவு செயல்பாட்டில் உள்ளது என்ற பேட்ஜ் காட்டப்படும். தரவு முடிந்தவரை துல்லியமாக இருப்பதை உறுதிசெய்ய, உங்கள் பிரச்சார அறிக்கையைச் சரிபார்க்கும் முன் தரவு ஒத்திசைவு முடியும் வரை காத்திருக்கவும்.
படிப்பிலைகள்:
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வளர்ச்சி > கேம்பெயின்கள் என்பதற்குச் செல்லவும்.
- நீங்கள் பகுப்பாய்வைப் பார்க்க விரும்பும் பிரச்சாரத்தைக் கிளிக் செய்யவும்.