Shopify Forms செயலி
Shopify Forms செயலி மூலம் உங்கள் ஆன்லைன் ஸ்டோர் வாடிக்கையாளர்களிடம் தொடர்புகொள்ளலாம், சந்தைப்படுத்தல் சந்தாதாரர்களின் பட்டியலையும் பெருக்கலாம். உங்கள் சந்தாதாரர் பட்டியலை உருவாக்கவும் மொத்த விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் உங்கள் ஆன்லைன் ஸ்டோர் பார்வையாளர்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் பல படிவங்களை உருவாக்கலாம். ஒரு படிவம் எந்தெந்தத் தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்பதையும் உங்கள் ஸ்டோரில் அது எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதையும் கட்டுப்படுத்த, படிவத்தைத் தனிப்பயனாக்கலாம்.
மின்னஞ்சல், SMS அல்லது WhatsApp சந்தைப்படுத்தலில் பதிவுசெய்ய வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்த, புதிய அல்லது ஏற்கனவே உள்ள தள்ளுபடியைப் படிவத்தில் சேர்க்கலாம். நீங்கள் படிவத்தை உருவாக்கிய பிறகு, Shopify Messaging போன்ற ஒரு செயலியைப் பயன்படுத்திப் பகுப்பாய்வுகளைக் காணவும், தானியக்கமாக்கலைத் தூண்டவும், வாடிக்கையாளர் பிரிவுகளை உருவாக்க வாடிக்கையாளர்களுக்குக் குறிச்சொல்லிடவும் உங்கள் சந்தாதாரர்களுக்கு மின்னஞ்சல் சந்தைப்படுத்தலை அனுப்பவும் முடியும்.
உங்கள் ஸ்டோரில் Shop மூலம் உள்நுழைக (Sign in with Shop) என்பதைச் செயல்படுத்தியிருக்கும்போது, தகுதியான படிவங்கள் இயல்புநிலையாக Shop மூலம் உரிமை கோரு (Claim with Shop) என்ற பொத்தானைக் காட்டும். குறிப்பிட்ட படிவத்தில் Shop மூலம் உரிமை கோரு பொத்தானைக் காட்ட விரும்பவில்லை எனில், அதை படிவ அமைப்புகளில் அகற்றலாம்.
Shopify Forms செயலியைப் பயன்படுத்துவதற்கு முன்பு அதை நிறுவ வேண்டும். எந்தவொரு Shopify திட்டத்திலும் இயல்புநிலையாக இந்தச் செயலி நிறுவப்பட்டிருக்காது, ஆனால் இதை இலவசமாக நிறுவிப் பயன்படுத்தலாம்.