படிவங்களை நிர்வகித்தல்

நீங்கள் படிவத்தை உருவாக்கிய பிறகு, அதற்கான நிலையைச் செயல்படுவதிலிருந்து செயலற்றதாக மாற்றுவது, மறுபெயரிடுவது அல்லது படிவத்தை நீக்குவது போன்று படிவங்களை நிர்வகிப்பதற்கான செயல்களை 'படிவங்கள்' மேலோட்டப் பக்கத்திலிருந்து மேற்கொள்ளலாம். உங்கள் படிவங்கள் தொடர்பான பகுப்பாய்வுகளைக் காணவும் வாடிக்கையாளர் பிரிவுகளை உருவாக்க, வாடிக்கையாளர்களுக்குக் குறிச்சொல்லிடவும் முடியும்.

செயலில் உள்ள படிவம் உங்கள் ஸ்டோரில் காட்டப்படுவதற்கு, உங்கள் ஸ்டோரில் Forms தீம் செயலி உட்பொதிவு நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

படிவத்தைச் செயல்படுத்து

நீங்கள் படிவத்தை உருவாக்கிய பிறகு, அதன் நிலை 'செயலில் இல்லை' என்று இருக்கும். அதைச் செயல்படுத்தும் வரை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் அது காட்டப்படாது. முன்பு நீங்கள் முடக்கிய படிவத்தையும் உங்களால் செயல்படுத்த முடியும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Forms என்பதற்குச் செல்லவும்.

  2. செயல்படுத்த விரும்பும் படிவத்திற்கு அருகிலுள்ள Horizontal menu என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு குறிப்பிட்ட படிவத்தின் பக்கத்திலிருந்தும் படிவங்களைச் செயல்படுத்தலாம். நீங்கள் செயல்படுத்த வேண்டிய படிவத்தைக் கிளிக் செய்து, படிவத்தை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

படிவத்தை முடக்கு

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Forms என்பதற்குச் செல்லவும்.

  2. செயலிழக்கச் செய்ய விரும்பும் படிவத்திற்கு அருகிலுள்ள Horizontal menu என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு குறிப்பிட்ட படிவத்தின் பக்கத்திலிருந்தும் படிவங்களை முடக்கலாம். நீங்கள் முடக்க வேண்டிய படிவத்தைக் கிளிக் செய்து, படிவத்தை முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும். முடக்கப்பட்டிருக்கும்போது படிவங்கள் உங்கள் ஸ்டோரில் காட்டப்படாது.

படிவத்தின் பெயரை மாற்று

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Forms என்பதற்குச் செல்லவும்.

  2. பெயர் மாற்ற விரும்பும் படிவத்திற்கு அருகிலுள்ள Horizontal menu என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. படிவத்தின் பெயரை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. படிவத்திற்கான புதிய பெயரை உள்ளிடவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு குறிப்பிட்ட படிவத்தின் பக்கத்திலிருந்தும் படிவங்களின் பெயரை மாற்றலாம். நீங்கள் பெயர் மாற்ற வேண்டிய படிவத்தைக் கிளிக் செய்து, மேலும் செயல்கள் என்பதைக் கிளிக் செய்து, பிறகு பெயர் மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

படிவத்தை நீக்கு

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Forms என்பதற்குச் செல்லவும்.

  2. அழிக்க விரும்பும் படிவத்திற்கு அருகிலுள்ள Horizontal menu என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. படிவத்தை நீக்கு என்பதைக் கிளிக் செய்து, பிறகு படிவத்தை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு குறிப்பிட்ட படிவத்தின் பக்கத்திலிருந்தும் படிவங்களை நீக்கலாம். நீங்கள் நீக்க வேண்டிய படிவத்தைக் கிளிக் செய்து, மேலும் செயல்கள் என்பதைக் கிளிக் செய்து, நீக்கு என்பதைக் கிளிக் செய்து, பிறகு படிவத்தை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

படிவத்திற்கான மின்னஞ்சல் அறிவிப்புகளை இயக்கு

வாடிக்கையாளர் ஒவ்வொரு முறையும் படிவத்தைச் சமர்ப்பிக்கும்போது மின்னஞ்சல் அறிவிப்பைப் பெற விரும்பினால், உங்கள் Forms அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கிக் கொள்ளலாம்.

பல்வேறு மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சல் அறிவிப்பை அனுப்ப விரும்பினால், நீங்கள் Shopify Flow மூலம் ஒரு தானியக்கமாக்கலை உருவாக்கலாம். இது, படிவச் சமர்ப்பிப்புக்குப் பிறகு நீங்கள் விரும்பும் பெறுநருக்கு அக மின்னஞ்சலை அனுப்பும்.

படிவச் சமர்ப்பிப்பு குறித்த மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறும்போது, அதற்கான பதிலளிப்பு முகவரியாக வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரி இருக்கும். வாடிக்கையாளர் தொலைபேசி எண்ணை மட்டும் பயன்படுத்திப் பதிவுசெய்தால், பதிலளிப்பு முகவரி no-reply@shopify.com என்பதாக இருக்கும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Forms என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் எந்தப் படிவத்திற்கு அறிவிப்புகளை நிர்வகிக்க விரும்புகிறீர்களோ அந்தப் படிவத்தைக் கிளிக் செய்யவும்.

  3. மின்னஞ்சல் அறிவிப்புகள் பிரிவில், இந்தப் படிவத்திற்கான ஒவ்வொரு சமர்ப்பிப்புக்கும் மின்னஞ்சலை அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

படிவத்தில் Sign in with Shop என்பதை முடக்கு

உங்கள் ஸ்டோரில் Sign in with Shop செயல்படுத்தப்பட்டிருந்தால், தகுதியான படிவங்கள் இயல்பாகவே Claim with Shop பொத்தானைக் காண்பிக்கும். குறிப்பிட்ட ஒரு படிவத்தில் அந்தப் பொத்தான் காட்டப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அந்தப் படிவத்திற்கு மட்டும் Sign in with Shop என்பதை முடக்கலாம். இது, உங்கள் ஸ்டோரின் மற்ற பகுதிகளில் உள்ள Sign in with Shop அம்சங்களைப் பாதிக்காது.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Forms என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் படிவத்தைக் கிளிக் செய்யவும்.

  3. Sign in with Shop விருப்பத்தை முடக்கவும்.

Forms பகுப்பாய்வு

உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள Shopify Forms செயலியின் கண்ணோட்டம் பக்கத்திலிருந்து படிவங்கள் குறித்த பகுப்பாய்வைக் காணலாம். இந்தப் பக்கத்தின் மேற்பகுதியில், உங்களின் அனைத்துப் படிவங்களுக்கான மொத்தத் தரவுடனான அளவீட்டுப் பட்டி ஒன்றும் உங்கள் ஒவ்வொரு படிவத்திற்குமான அளவீடுகளின் சுட்டி அட்டவணை ஒன்றும் காட்டப்படும்.

மொத்தப் படிவத் தரவு

  • மொத்தப் பார்வைகள்: அனைத்துப் படிவங்களிலுமான மொத்தப் பார்வைகளின் எண்ணிக்கை.
  • மொத்தச் சமர்ப்பிப்புகள்: அனைத்துப் படிவங்களிலிருந்துமான மொத்தச் சமர்ப்பிப்புகள்.
  • சராசரி நிறைவு விகிதம்: படிவச் சமர்ப்பிப்புகளின் மொத்த எண்ணக்கையைப் பார்வைகளின் மொத்த எண்ணிக்கையால் வகுத்துக் கிடைக்கும் மதிப்பு, சதவீதமாகக் காட்டப்படும்.

தனிப்பட்ட படிவ அளவீடுகள்

  • பார்வைகள்: படிவம் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது.
  • சமர்ப்பிப்புகள்: வாடிக்கையாளர் ஒரு படிவத்தை வெற்றிகரமாக நிரப்பி எத்தனை முறை சமர்ப்பித்துள்ளார். படிவச் சமர்ப்பிப்புகளைப் பார்ப்பது குறித்து மேலும் அறிக.
  • நிறைவு விகிதம்: படிவச் சமர்ப்பிப்புகளின் எண்ணிக்கையைப் பார்வைகளின் மொத்த எண்ணிக்கையால் வகுத்துக் கிடைக்கும் மதிப்பு.

இயல்பாகவே, கண்ணோட்டமானது உங்கள் படிவங்கள் அனைத்தையும் காண்பிக்கும். எனினும் செயலில் உள்ள அல்லது செயலில் இல்லாத படிவங்களை மட்டும் காட்டும்படி நீங்கள் காட்சியை வடிகட்டலாம். ஒரு படிவத்தைச் செயல்படுத்துதல், பெயர் மாற்றுதல் அல்லது நீக்குதல் போன்ற செயல்களைச் செய்து பிரதான செயலிப் பக்கத்திலிருந்தே உங்கள் படிவங்களை உங்களால் நிர்வகிக்க முடியும்.

படிவச் சமர்ப்பிப்புகளைப் பார்

வாடிக்கையாளர் ஒரு படிவத்தைச் சமர்ப்பித்ததும், படிவச் சமர்ப்பிப்புத் தரவானது உங்கள் Shopify நிர்வாகியில் சேமிக்கப்படும். புதிய வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாடிக்கையாளர் சுயவிவரம் உருவாக்கப்படும், மேலும் ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்களின் தகவல்கள் அவர்களது சுயவிவரத்துடன் பொருத்தப்படும்.

குறிப்பிட்ட ஒரு படிவத்திற்கான சமர்ப்பிப்புகளை Forms செயலியில் பார்க்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Forms என்பதற்குச் செல்லவும்.

  2. கண்ணோட்டம் பக்கத்தில், நீங்கள் பார்க்க விரும்பும் படிவத்தின் தலைப்பைக் கிளிக் செய்யவும்.

  3. சமர்ப்பிப்புகளைப் பார் என்பதைக் கிளிக் செய்யவும்.

கீழ்க்காணும் இடங்களிலும் உங்களால் படிவச் சமர்ப்பிப்புத் தரவைப் பார்க்க முடியும்:

வாடிக்கையாளர் பிரிவை உருவாக்கு

உங்கள் ஒவ்வொரு படிவத்திற்கும் நீங்கள் வாடிக்கையாளர் பிரிவை உருவாக்கலாம். படிவத்திலிருந்து ஒரு வாடிக்கையாளர் பிரிவை உருவாக்கிய பிறகு, அந்த வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப அல்லது தள்ளுபடி வழங்க அந்தப் பிரிவைப் பயன்படுத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Forms என்பதற்குச் செல்லவும்.

  2. எந்தப் படிவத்திற்கு வாடிக்கையாளர் பிரிவை உருவாக்க விரும்புகிறீர்களோ அதைக் கிளிக் செய்யவும்.

  3. பிரிவைக் காண்க என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. விருப்பத்தேர்வு: புதிய பிரிவு புலத்தில், வாடிக்கையாளர் பிரிவில் நீங்கள் சேர்க்க விரும்பும் கூடுதல் வடிப்பான்களைப் பயன்படுத்தவும்.

  5. செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்து, பின்னர் பிரிவைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. புதிய பிரிவாகச் சேமி உரையாடல் பெட்டியில், பிரிவுப் பெயர் புலத்தில், உங்கள் பிரிவிற்கான பெயரை உள்ளிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. விருப்பத்தேர்வு: பிரிவைப் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்து, உங்கள் பிரிவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அல்லது தள்ளுபடியை அனுப்ப பிராம்ட்களைப் பின்பற்றவும்.