இன்லைன் படிவ அமைப்புகள்

பின்வரும் அமைப்புகள் உங்கள் இன்லைன் படிவத்தின் தோற்றத்தையும் பிளேஸ்மென்ட்டையும் தீர்மானிக்க உங்களை அனுமதிக்கின்றன. பாப்-அப் மற்றும் இன்லைன் படிவங்கள் இரண்டிற்கும் பொருந்தும் அமைப்புகளுடன் சேர்ந்து, நீங்கள் ஒரு படிவத்தை உருவாக்கும்போது இந்த அமைப்புகளை உள்ளமைக்கலாம்.

ஸ்டைலிங் அமைப்புகள்

உங்கள் இன்லைன் படிவத்திற்கான ஸ்டைலிங் (Styling) அமைப்புகளின் அச்சுக்கலை (Typography) பிரிவில், உங்கள் தலைப்புகள் மற்றும் உடல் உரைக்குப் பயன்படுத்த விரும்பும் எழுத்துருவைத் தேர்ந்தெடுக்க, கீழ்தோன்றும் மெனுக்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு இன்லைன் படிவத்தின் நிறங்கள் அல்லது தளவமைப்பை மாற்ற, தீம் எடிட்டரைப் பயன்படுத்தவும். உதாரணத்திற்கு, உங்கள் இன்லைன் படிவங்களின் நிறங்களைத் திருத்த, தீம் எடிட்டரில், தீம் அமைப்புகள் (Theme settings) > நிறங்கள் (Colors) > படிவப் புலங்கள் (Form fields) என்பதற்குச் சென்று உங்கள் படிவத்தின் உரை, விளிம்புகள் மற்றும் பின்புலத்தின் நிறங்களைத் திருத்தலாம்.

பிளேஸ்மென்ட்

நீங்கள் ஒரு படிவத்தை உருவாக்கும்போது, உங்கள் ஸ்டோரில் படிவம் எங்கு காட்டப்படும் என்பதை பிளேஸ்மென்ட் (Placement) அமைப்பு தீர்மானிக்கிறது. ஒரு படிவத்திற்காகப் பின்வரும் பிளேஸ்மென்ட்களில் இருந்து ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்:

புதிய லேண்டிங் பக்கத்தில் படிவத்தைச் சேர்த்தல்

உங்கள் இன்லைன் படிவம் இருக்கும் பக்கத்திற்கெனத் தனி URL-ஐ ஒதுக்க நீங்கள் விரும்பும் பட்சத்தில், உங்கள் தீமிலுள்ள புதிய லேண்டிங் பக்கத்தில் படிவத்தைச் சேர்ப்பது ஒரு பயனுள்ள விருப்பமாக அமையும்.

உதாரணத்திற்கு, மொத்த விற்பனையாளர்கள் அல்லது B2B-க்கான பிரத்யேகப் பதிவுசெய்தல் பக்கத்தை உருவாக்க இந்த விருப்பம் உகந்தது.

உங்கள் படிவத்திற்கான தனி URL இருப்பதன் மூலம், சமூக ஊடகச் செய்திகள் அல்லது மின்னஞ்சல்களில் இந்தப் பக்கத்தின் URL-ஐ நீங்கள் எளிதாகப் பகிரலாம்.

ஏற்கெனவே உள்ள பக்க வார்ப்புருவில் படிவத்தைச் சேர்த்தல்

ஏற்கெனவே உள்ள பக்க வார்ப்புருவில் நீங்கள் ஒரு படிவத்தைச் சேர்க்கும்போது, அது வார்ப்புருவுடன் ஒரு பிளாக்காகச் சேர்க்கப்படும், மேலும் அந்த வார்ப்புருவைப் பயன்படுத்தும் எல்லாப் பக்கங்களிலும் படிவம் காட்டப்படும். புதிய பக்க URL அல்லது வார்ப்புரு எதுவும் உருவாக்கப்படாததால், ஏற்கெனவே உள்ள தீம் வார்ப்புருவில் ஒரு படிவத்தைச் சேர்ப்பதற்குக் குறைவான தனிப்பயனாக்கப்பட்ட பக்க நிர்வாகமே தேவைப்படும்.

உதாரணத்திற்கு, உங்கள் மொத்தச் சில்லறை விற்பனையாளர் திட்டத்தின் கொள்கைகள், தேவைகள் மற்றும் தயாரிப்பு அட்டவணை உதாரணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல பக்கங்களில் நீங்கள் பயன்படுத்தும் தனிப்பயனாக்கப்பட்ட பக்க வார்ப்புருவை ஏற்கெனவே உருவாக்கியிருந்தால், அந்த வார்ப்புருவை ஏற்கெனவே பயன்படுத்தும் தொடர்புடைய அனைத்துப் பக்கங்களுக்கும் பதிவுசெய்யும் படிவத்தை விரைவாகச் செயல்படுத்துவதற்கு, அந்தத் தனிப்பயனாக்கப்பட்ட பக்க வார்ப்புருவின் கீழ்ப்பகுதியில் இன்லைன் பதிவுசெய்தல் படிவத்தைச் சேர்க்கலாம்.