Launchpad வழிகாட்டுதல்கள் மற்றும் வரம்புகள்
சேகரிப்புகள், திட்டமிடல் மற்றும் B2B விலைப்பட்டியல்கள் தொடர்பான வரம்புகள் உட்பட, Launchpad நிகழ்வுகளை உருவாக்குவது குறித்த பின்வரும் வழிகாட்டுதல்களைப் படித்துப் பாருங்கள்.
இந்தப் பக்கத்தில்
உங்கள் நிகழ்வைத் திட்டமிடுதல்
- ஒன்றோடு ஒன்று மேற்பொருந்தும் நிகழ்வுகளை உங்களால் இயக்கவோ திட்டமிடவோ முடியாது. எடுத்துக்காட்டாக, முடிவுத் தேதி இல்லாமல் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வு உங்களிடம் இருந்து, நீங்கள் ஒரு புதிய நிகழ்வைத் திட்டமிட விரும்பினால், ஏற்கனவே உள்ள நிகழ்வை புதிய நிகழ்வின் தொடக்கத் தேதிக்கு முந்தைய ஒரு முடிவுத் தேதியைக் கொண்டிருக்குமாறு திருத்த வேண்டும்.
- முந்தைய நிகழ்வு முடிவடைந்த குறைந்தது ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு தொடங்கும் வகையில் நிகழ்வுகள் திட்டமிடப்பட வேண்டும்.
தயாரிப்புகளைச் சேர்த்தல் மற்றும் திருத்துதல்
- Launchpad நிகழ்வில் சேகரிப்புகளைச் சேர்க்கும்போது, எந்தச் சேகரிப்பிலும் 1000 தயாரிப்புகளுக்கு மேல் இல்லை என்பதைச் சரிபார்க்கவும்.
- ஒரு நிகழ்வின் போது தயாரிப்பின் விலையை நீங்கள் திருத்தினால், நிகழ்வு முடிவடையும்போது அந்தத் தயாரிப்பு அதன் நிகழ்வுக்கு முந்தைய விலைக்குத் திரும்பும். தயாரிப்பின் விவரங்களை நீங்கள் அடிக்கடி புதுப்பிக்க வேண்டும் என்றால், நிகழ்வுகளுக்கு இடையில் விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில் குறுகிய நேர நிகழ்வுகளைத் திட்டமிடுங்கள்.
தள்ளுபடிகளை நிர்வகித்தல்
- ஒரு நிகழ்வில் உள்ள அனைத்து சதவீதத் தள்ளுபடிகளும் தயாரிப்பின் வழக்கமான விலைகளுக்குப் பொருந்துமே தவிர, ஒப்பீட்டு விலைகளுக்கு அல்ல. விற்பனை நிகழ்வு தொடங்கும்போது, நிகழ்விற்காக நீங்கள் குறிப்பிட்ட விற்பனை விலைகள் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும். உங்கள் தயாரிப்புகளுக்கு நீங்கள் ஒப்பீட்டு விலைகளை வைத்திருந்தால், நிகழ்வு நடக்கும் காலக்கட்டத்தில் இந்த மதிப்புகள் தயாரிப்புகளின் வழக்கமான, விற்பனைக்கு முந்தைய விலைகளாக மாறும். நிகழ்வு முடிவடையும்போது, வழக்கமான மற்றும் ஒப்பீட்டு விலைகள் இரண்டும் நிகழ்வுக்கு முன்பு இருந்த மதிப்புகளுக்கே மாறும். நிகழ்வின் போது ஒப்பீட்டு விலைகள் காட்டப்படுவதை நீங்கள் விரும்பவில்லை எனில், உங்கள் நிகழ்வுத் தீமிலிருந்து அவற்றை அகற்றுங்கள்.
- ஒரு சேகரிப்பிற்குத் தள்ளுபடி வழங்கும் நிகழ்வை நீங்கள் உருவாக்கினால், நிகழ்வு தொடங்கும்போதும் முடியும்போதும் அந்தச் சேகரிப்பிலுள்ள தயாரிப்புகளின் விலைகள் மாற்றப்படும். நிகழ்வின் போது சேகரிப்பில் ஒரு தயாரிப்பைச் சேர்ப்பதால் தள்ளுபடி பொருந்தாது. நிகழ்வின் போது சேகரிப்பிலிருந்து ஒரு தயாரிப்பை அகற்றுவதால் தள்ளுபடி நீங்காது; இருப்பினும், நிகழ்வு முடிவடையும் போது தயாரிப்பு தானாகவே வழக்கமான விலைக்குத் திரும்பும்.
- மொத்த விற்பனை விலைகள் Launchpad நிகழ்வுகளால் பாதிக்கப்படலாம்.
- Launchpad நிகழ்வின்போது வாடிக்கையாளர்கள் தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்தலாம். தள்ளுபடி விற்பனையில் உள்ள ஒரு தயாரிப்புக்கு வாடிக்கையாளர் தள்ளுபடிக் குறியீட்டைப் பயன்படுத்தினால், விற்பனை விலைக்கு அந்தத் தள்ளுபடிக் குறியீடு பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, Launchpad நிகழ்வின்போது $1,000 USD மதிப்புள்ள சட்டை $500 USD-க்கு வழங்கப்படுகிறது. நிகழ்வின்போது, 10% தள்ளுபடிக் குறியீடு உள்ள வாடிக்கையாளர் இந்தச் சட்டையை $450 USD-க்குக் கொள்முதல் செய்யலாம். தள்ளுபடிக் குறியீடுகளைச் செயலிழக்கச் செய்ய Launchpad ஐப் பயன்படுத்த முடியாது. ஆனால் நிகழ்வு நடைபெறும் காலத்திற்கு மட்டும் கைமுறையாக தள்ளுபடிக் குறியீடுகளைச் செயலிழக்கச் செய்து நிகழ்வு முடிந்ததும் மீண்டும் செயல்படுத்தலாம். Shopify Plus திட்டத்தில் உள்ள ஸ்டோர்களுக்கு, குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான தள்ளுபடிக் குறியீடுகள் உள்ள ஸ்டோர்களுக்கு, கைமுறையாகச் செயலிழக்கச் செய்வது பொதுவாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை.
- உங்கள் நிகழ்வின் ஒரு பகுதியாக ஒரு கிஃப்ட் கார்டுக்கு நீங்கள் தள்ளுபடியை அமைத்தால், அந்த கிஃப்ட் கார்டின் மதிப்பும் குறைக்கப்படும். கிஃப்ட் கார்டு என்பது நாணயத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுவதால், Launchpadஐப் பயன்படுத்தி ஒரு கிஃப்ட் கார்டை அதன் மதிப்பை விடக் குறைவான விலைக்கு விற்க முடியாது. எடுத்துக்காட்டாக, 50% தள்ளுபடி செய்யப்பட்ட $50 USD கிஃப்ட் கார்டின் விலை மற்றும் மதிப்பு இரண்டுமே $25 USD ஆக இருக்கும்.
- ஒரே தயாரிப்பு வெவ்வேறு விலைகளில் ஒரே நிகழ்வில் பல முறை சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இது நிகழும்போது, ஏதேனும் விலை வேறுபாடுகள் இருந்தால் அவை பின்வருமாறு தீர்க்கப்படும்:
தயாரிப்புக்கு ஒரு குறிப்பிட்ட விலை அமைக்கப்பட்டிருந்தால், உங்கள் வாடிக்கையாளருக்கு அந்த விலை வழங்கப்படும். சேகரிப்புத் தள்ளுபடிகள் எதுவும் பொருந்தாது.
தயாரிப்புக்கு என அமைக்கப்பட்ட விலை எதுவும் இல்லை என்றால், மிகக் குறைந்த தள்ளுபடி விலை உங்கள் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு பனிமனிதன் (snowman) டி-சர்ட்டைச் சேர்த்து (வழக்கமான விலை $30 USD) அதன் விற்பனை விலையை $20 USD என அமைக்கிறீர்கள். பின்னர், அதே பனிமனிதன் டி-சர்ட்டைக் கொண்ட ஒரு சேகரிப்பைச் சேர்த்து, அதற்கான தள்ளுபடியை 50% ஆக அமைக்கிறீர்கள். நிகழ்வின் போது, வாடிக்கையாளர்களுக்கு அந்த டி-சர்ட் அமைக்கப்பட்ட விலையான $20 USDக்கு வழங்கப்படும்.
பின்னர், நீங்கள் வேறு ஒரு நிகழ்வை உருவாக்கி, ஒரே பனிமனிதன் டி-சர்ட்டைக் கொண்ட இரண்டு சேகரிப்புகளைச் சேர்க்கிறீர்கள் (வழக்கமான விலை $30 USD). முதல் சேகரிப்புக்கு 25% தள்ளுபடியும், இரண்டாவது சேகரிப்புக்கு 50% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, வாடிக்கையாளர்களுக்கு அந்தப் பனிமனிதன் டி-சர்ட் 50% தள்ளுபடி விலையான $15 USDக்கு வழங்கப்படும்.
B2B விலைப்பட்டியல்கள்
- Launchpad நிகழ்வின் மூலம் உருவாக்கப்படும் தள்ளுபடிகள், B2B கேட்லாக்குகளில் சேர்க்கப்பட்டுள்ள தயாரிப்புகளுக்குப் பொருந்தும். Launchpad நிகழ்வு மற்றும் B2B கேட்லாக் ஆகிய இரண்டாலும் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு உருப்படியை ஒரு B2B வாடிக்கையாளர் வாங்கினால், இரண்டு தள்ளுபடிகளுமே பொருந்தும்.
- ஒரு வாடிக்கையாளர் B2B வாடிக்கையாளராக உள்நுழைந்து, Launchpad நிகழ்வு மற்றும் B2B கேட்லாக் ஆகிய இரண்டாலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள உங்கள் ஸ்டோரின் தயாரிப்புப் பக்கத்தைப் பார்வையிட்டால், தயாரிப்புப் பக்கங்கள் அல்லது சேகரிப்புப் பக்கங்களில் ஒப்பீட்டு விலைகள் மற்றும் விற்பனை டேக்குகள் காட்டப்படாது.
உங்கள் கடவுச்சொல் பக்கத்தைச் செயல்படுத்துதல்
- ஒரு நிகழ்வை உருவாக்கும்போது Launchpad செயலியிலிருந்து கடவுச்சொல் பக்கத்தைச் செயல்படுத்தினால், அது உங்கள் ஸ்டோரின் அமைப்புகளை மேலெழுதக்கூடும்:
- உங்கள் ஸ்டோருக்கு ஏற்கனவே ஒரு கடவுச்சொல் பக்கம் செயல்பட்டு, நீங்கள் நிகழ்வை உருவாக்கும்போது Launchpad இல் அந்தப் பக்கத்தைச் செயல்படுத்தவில்லை என்றால், உங்கள் நிகழ்வு இயங்கும் காலக்கட்டத்தில் கடவுச்சொல் பக்கம் தொடர்ந்து செயல்படும். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள ஆன்லைன் ஸ்டோர் > விருப்பத்தேர்வுகள் என்பதில் இருந்து மேனுவலாக அதை அகற்றினால் தவிர கடவுச்சொல் பக்கம் அகற்றப்படாது.
- உங்கள் ஸ்டோருக்கு ஏற்கனவே ஒரு கடவுச்சொல் பக்கம் செயல்பட்டு, நீங்கள் நிகழ்வை உருவாக்கும்போது Launchpad இல் அந்தப் பக்கத்தைச் செயல்படுத்தினால், நிகழ்வு தொடங்கும்போது உங்கள் கடவுச்சொல் பக்கம் அகற்றப்படும். உங்கள் நிகழ்வு முடிவடையும்போது அது மீண்டும் மீட்டமைக்கப்படாது.