Launchpad நிகழ்வுகளை உருவாக்குதல்

விற்பனைகள், தயாரிப்பு வெளியீடுகள் மற்றும் சரக்கு இருப்பு மீளிருப்புகளைத் திட்டமிட ஒரு நிகழ்வை நீங்கள் உருவாக்கலாம். நிகழ்வுகளை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம், வணிக நேரங்களுக்கு வெளியிலும் திட்டமிட்டபடி சரியாக உங்கள் விற்பனைகள், தயாரிப்பு வெளியீடுகள் மற்றும் மீளிருப்புகளைத் தொடங்கலாம்.

நீங்கள் தொடங்கும் முன்

நீங்கள் நிகழ்வை உருவாக்குவதற்கு முன், Launchpad வழிகாட்டுதல்கள் மற்றும் வரம்புகளை நன்கு அறிந்துகொள்ளவும்.

நிகழ்வை உருவாக்கு

உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து செயலிகள் என்பதைக் கிளிக் செய்து, பின்பு Launchpad என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் Launchpad செயலியைத் திறக்கவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Launchpad என்பதற்குச் செல்லவும்.

  2. நிகழ்வை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தலைப்பு பிரிவில், நிகழ்விற்கான தலைப்பை உள்ளிடவும்.

  4. தொடக்கத் தேதி பிரிவில், தொடங்கும் தேதி மற்றும் நேரத்தை உள்ளிடவும். நீங்கள் நிகழ்வைச் சேமிக்கும் போது தொடக்கத் தேதியையும் நேரத்தையும் குறிப்பிடவில்லை எனில், நிகழ்வு வரைவாகச் சேமிக்கப்படும்.

  5. பின்வரும் விருப்பங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் தேர்ந்தெடுக்கவும்:

    • புதிய தயாரிப்புகளை வெளியிட, உங்கள் விற்பனைச் சேனல்களில் தயாரிப்புகளை வெளியிடு என்பதைத் தேர்ந்தெடுத்து, Adjust ஐகானைக் கிளிக் செய்யவும். இந்த விருப்பம் ஒரு விற்பனைச் சேனலில் தயாரிப்பைக் கிடைக்கச் செய்கிறது. Launchpad தயாரிப்பு நிலையை மாற்றாது, மேலும் தயாரிப்பின் நிலை வரைவு அல்லது காப்பகப்படுத்தப்பட்டது என இருந்தால் தயாரிப்புகளை வெளியிட அதனால் முடியாது.
    • தற்போதைய தயாரிப்புகள் அல்லது முன்பு கிடைக்காத தயாரிப்புகளுக்குச் சரக்கு இருப்பைச் சேர்க்க, உங்கள் விற்பனைச் சேனல்களில் தயாரிப்புகளை வெளியிடு என்பதைத் தேர்ந்தெடுத்து, தயாரிப்புகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளை தள்ளுபடி அல்லது விற்பனை விலைகளில் வழங்க, உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேகரிப்புகளுக்குத் தள்ளுபடியைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுத்து, தயாரிப்புகளைச் சேர் அல்லது சேகரிப்புகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளுக்கு ஒட்டுமொத்தமாக தள்ளுபடிகளைப் பயன்படுத்த, உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேகரிப்புகளுக்குத் தள்ளுபடியைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுத்து, ஒட்டுமொத்தத் தள்ளுபடிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஒரு குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் நிகழ்வு தானாகவே முடிவடையும்படி திட்டமிட, முடிவுத் தேதியை அமை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் முடிவுத் தேதியைக் குறிப்பிடவில்லை எனில், நிகழ்வை நீங்களாகவே முடிக்கும் போது மட்டுமே அது முடிவடையும்.
    • உங்கள் நிகழ்வு நடைபெறும் காலத்தில் வேறு ஒரு தீமைப் பயன்படுத்த, தீம் மாறுதலை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • நிகழ்விற்கு முன்பு உங்கள் ஸ்டோரைப் பூட்ட, கடவுச்சொல் பக்கத்தை இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

நீங்கள் தொடங்கும் தேதி மற்றும் நேரத்தை உள்ளிட்டிருந்தால், உங்கள் நிகழ்வு அந்தத் தேதி மற்றும் நேரத்தில் இயங்குமாறு திட்டமிடப்படும். இல்லையெனில், உங்கள் நிகழ்வு வரைவாகச் சேமிக்கப்படும்.

தயாரிப்புகளை வெளியிடாமலோ அல்லது சரக்கு இருப்பைப் புதுப்பிக்காமலோ ஒரு நிகழ்வின் போது நீங்கள் டாஷ்போர்டை அணுகலாம்.