புதிய கைவிடப்பட்ட செக்அவுட் தானியக்கமாக்கலுக்கு விருப்பம் தெரிவிக்கவும்
தங்களின் கார்ட்டில் ஒரு தயாரிப்பைச் சேர்த்து, செக்அவுட் செய்யத் தொடங்கியிருந்தாலும், வாங்குதலை நிறைவுசெய்யாமல் செக்அவுட்டைக் கைவிட்ட வாடிக்கையாளர்களுக்குத் தானியங்கு மின்னஞ்சல்களை அனுப்ப இந்தக் கைவிடப்பட்ட செக்அவுட் மறு-ஈடுபாட்டுத் தானியக்கமாக்கல் உங்களை அனுமதிக்கிறது.
கைவிடப்பட்ட செக்அவுட் தானியக்கமாக்கல் Shopify Messaging செயலியில் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. கைவிடப்பட்ட செக்அவுட்கள் எப்போது, யாருக்கு அனுப்பப்படுகின்றன என்பதன் மீது கூடுதல் வடிவமைப்பு நெகிழ்வுத்தன்மையையும் கட்டுப்பாட்டையும் புதிய அமைப்புகள் வழங்குகின்றன. புதிய தானியக்கமாக்கலுக்கு விருப்பம் தெரிவிக்க, அங்கு செல்லவும்.
அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குள் உள்ள தற்போதைய கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சல் அகற்றப்படும் வரை, நீங்கள் தொடர்ந்து அதைப் பயன்படுத்தலாம், அது அகற்றப்படும்போது Shopify Messaging செயலியில் உள்ள புதிய கைவிடப்பட்ட செக்அவுட்டுக்கு நீங்கள் மாற வேண்டும். அது அகற்றப்படும் வரை, மேலும் அறிய கைவிடப்பட்ட செக்அவுட்களை மீட்டெடுப்பது என்பதைப் பார்க்கவும்.
இந்தப் பக்கத்தில்
- புதிய கைவிடப்பட்ட செக்அவுட் தானியக்கமாக்கலுக்கு மாறவும்
- கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சலைத் திருத்தவும்
- வாடிக்கையாளரின் கைவிடப்பட்ட செக்அவுட் இணைப்பை அவர்களுக்குத் தானாக மின்னஞ்சல் செய்யவும்
- வழங்கப்படாத கைவிடப்பட்ட செக்அவுட்களைப் புரிந்துகொள்ளுதல்
- கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சலை மனிதவழியாக அனுப்பவும்
- உங்கள் கைவிடப்பட்ட செக்அவுட்களை மதிப்பாய்வு செய்யவும்
- கைவிடப்பட்ட செக்அவுட்டில் உள்ள பேமெண்ட் நிகழ்வுகளைப் பார்க்கவும்
- கைவிடப்பட்ட செக்அவுட்கள் மின்னஞ்சல் அறிக்கை
புதிய கைவிடப்பட்ட செக்அவுட் தானியக்கமாக்கலுக்கு மாறவும்
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Messaging என்பதற்குச் செல்லவும்.
தானியக்கமாக்கல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
வார்ப்புருக்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்து, கைவிடப்பட்ட செக்அவுட் தானியக்கமாக்கல் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: மின்னஞ்சல் உள்ளடக்கத்தைத் திருத்த அல்லது தானியக்கமாக்கலின் பணிப்பாய்வில் மாற்றங்களைச் செய்ய திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
தானியக்கமாக்கலை இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
தகவலை மதிப்பாய்வு செய்து தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
புதிய தானியக்கமாக்கல் இயக்கப்பட்டதும், தானியக்கமாக்கலின் சுருக்கப் பக்கத்திலிருந்து அதை இயக்குதல் மற்றும் முடக்குதல் உள்ளிட்டவற்றை நீங்கள் திருத்தலாம் மற்றும் நிர்வகிக்கலாம்.
கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சலைத் திருத்தவும்
மின்னஞ்சல் அனுப்பப்படும் வாடிக்கையாளர் பட்டியல், பொருள் வரி, மாதிரிக்காட்சி உரை மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை நீங்கள் மாற்றலாம்.
Shopify Messaging-இல் பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் திருத்தும் பிரிவுகளைப் பயன்படுத்தியும் உங்களின் கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சலின் உள்ளடக்கத்தைத் திருத்தலாம். உரையைச் சேர்க்கலாம் மற்றும் உங்கள் ஸ்டோர் பிராண்டைப் பிரதிபலிக்கும் வகையில், ஒரு லோகோவைச் சேர்ப்பதன் மூலம் அல்லது வண்ணத் திட்டத்தை மாற்றுவதன் மூலம் உங்கள் வடிவமைப்பைத் தனிப்பயனாக்கலாம். உங்கள் வாடிக்கையாளர் செக்அவுட்டுக்குத் திரும்பும்போது பயன்படுத்தக்கூடிய தள்ளுபடியையும் நீங்கள் சேர்க்கலாம். உங்கள் மின்னஞ்சல் செய்திகளைத் தனிப்பயனாக்குவது குறித்து மேலும் அறிக.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Messaging என்பதற்குச் செல்லவும்.
தானியக்கமாக்கல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
கைவிடப்பட்ட செக்அவுட் தானியக்கமாக்கலைத் தேர்ந்தெடுக்கவும்.
திருத்து > மின்னஞ்சலைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
மின்னஞ்சலைத் திருத்துவதற்கான பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்து, தொடர்க என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைத் திருத்தலாம்:
- பெறுநர்: என்பதற்கு அருகில், மின்னஞ்சலை அனுப்ப வேண்டிய வாடிக்கையாளர் குழுவை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
- பொருள்: என்பதற்கு அருகில், இயல்பான மின்னஞ்சல் பொருள் வரிக்குப் பதிலாகக் கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சலுக்கு நீங்கள் விரும்பும் பொருள் வரியை மாற்றலாம்.
- மாதிரிக்காட்சி உரை: என்பதற்கு அருகில், பொருள் வரிக்குப் பிறகு காட்டப்படும் உரையுடன் உங்கள் மின்னஞ்சலைச் சுருக்கமாக எழுதலாம்.
- From: என்பதற்குப் பக்கத்தில், எந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டும் என்பதை மாற்ற, Edit என்பதைக் கிளிக் செய்து அனுப்புநர் மின்னஞ்சல் அமைப்புகளைத் திறக்கலாம்.
Shopify மின்னஞ்சலின் பிரிவு எடிட்டரைப் பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சல் செய்தியைத் தனிப்பயனாக்குங்கள்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
வாடிக்கையாளரின் கைவிடப்பட்ட செக்அவுட்டிற்கான இணைப்பை அவருக்குத் தானாகவே மின்னஞ்சல் செய்யவும்
கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சல்களைத் தானாகவே அனுப்ப, நீங்கள் ஒரு தானியக்கமாக்கலை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தானியக்கமாக்கல் மின்னஞ்சலிலும் வாடிக்கையாளரின் கைவிடப்பட்ட கார்ட்டிற்கான இணைப்பு இருக்கும், இதன்மூலம் அவர்கள் விரும்பினால், தங்கள் செக்அவுட்டை முடிக்கலாம். இந்த மின்னஞ்சல்களை நீங்கள் தானாக அனுப்ப விரும்பவில்லை எனில், அவற்றை நேரடியாகவே அனுப்பலாம்.
Shopify Messaging செயலியில் புதிய கைவிடப்பட்ட செக்அவுட் தானியக்கமாக்கலை நீங்கள் உருவாக்கும்போது, உங்களின் முந்தைய கைவிடப்பட்ட செக்அவுட் அமைப்புகளிலிருந்து உங்கள் அமைப்புகள் கொண்டுசெல்லப்படும். இரண்டாவது கைவிடப்பட்ட செக்அவுட் தானியக்கமாக்கலை நீங்கள் உருவாக்கினால், வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படுவதற்கு முன்பு இயல்பாக 10 மணிநேரம் காத்திருக்கும்படி தானியக்கமாக்கல் செயல்படும், அதோடு சந்தைப்படுத்தலுக்குப் பதிவுசெய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இது அனுப்பப்படும்.
காத்திருப்பு நேரம் உட்பட உங்கள் புதிய கைவிடப்பட்ட செக்அவுட் தானியக்கமாக்கலின் பணிப்பாய்வைத் திருத்த, நீங்கள் Shopify flow என்பதைப் பயன்படுத்தலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Messaging என்பதற்குச் செல்லவும்.
தானியக்கமாக்கல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
கைவிடப்பட்ட செக்அவுட் தானியக்கமாக்கலைத் தேர்ந்தெடுக்கவும்.
Edit என்பதைக் கிளிக் செய்து, பணிப்பாய்வைத் திருத்த Shopify Flow என்பதைப் பயன்படுத்தவும்.
திருத்தி முடித்ததும் Turn on workflow என்பதைக் கிளிக் செய்யவும்.
வழங்கப்படாத கைவிடப்பட்ட செக்அவுட்களைப் புரிந்துகொள்ளுதல்
பின்வரும் சூழ்நிலைகளில் கைவிடப்பட்ட செக்அவுட்டிற்கு, கைவிடப்பட்ட செக்அவுட் மறுஈடுபாட்டு மின்னஞ்சல் அனுப்பப்படாது (not sent):
- வாடிக்கையாளர் முன்பு எந்தவொரு கொள்முதலையும் முடிக்காமலும், சந்தைப்படுத்தலுக்குப் பதிவுசெய்யாமலும் இருக்கும்போது.
- வாடிக்கையாளர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைவிடப்பட்ட செக்அவுட்களை உருவாக்கி, கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சல் அனுப்பப்படுவதற்கு முன்பே கொள்முதலை முடிக்கும்போது.
- செக்அவுட்டில் உள்ள எந்தவொரு உருப்படியும் கொள்முதல் செய்யக் கிடைக்காதபோது.
- செக்அவுட்டில் உள்ள அனைத்து உருப்படிகளும் இலவசமாக இருந்து, வாடிக்கையாளர் ஷிப்பிங் கட்டணத்தைச் சேர்க்க ஷிப்பிங் பக்கத்தைப் பார்வையிடாமல் இருக்கும்போது அல்லது ஷிப்பிங் கட்டணமும் இலவசமாக இருக்கும்போது.
- Shop செயலியின் செக்அவுட்டிலிருந்து ஒரு செக்அவுட் கைவிடப்படும்போது. இந்தத் தானியக்கமாக்கல் ஆன்லைன் ஸ்டோர் செக்அவுட்டிற்கு மட்டுமே பொருந்தும்.
- செக்அவுட் முயற்சி அதிக ஆபத்துடையதாகக் கண்டறியப்பட்டு Shopify Payments பேமெண்ட்டைத் தடுக்கும்போது.
- வாடிக்கையாளர் மிகச் சமீபத்தில் ஒரு செக்அவுட்டைக் கைவிட்டு, கடைசியாகக் கைவிடப்பட்ட செக்அவுட்டிற்கான காத்திருப்பு நேரம் முடிவடையாதபோது.
கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சல்களைத் தானாகவே அனுப்புமாறு உங்கள் ஸ்டோரை நீங்கள் அமைத்திருந்தால், அதற்கான செயல்திறன் தரவை Shopify Messaging இல் உள்ள தானியக்கமாக்கல்கள் பக்கத்தில் கண்டறியலாம்.
தானியக்கமாக்கல் பணிப்பாய்வு டெலிவரி விவரங்களைச் சரிபார்த்தல்
வாடிக்கையாளருக்குக் கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சல் டெலிவரி செய்யப்படவில்லையா என்பது போன்ற விரிவான தகவல்களைப் பார்க்க, Shopify Messaging இல் உள்ள தானியக்கமாக்கல்கள் பக்கத்தில் குறிப்பிட்ட தானியக்கமாக்கலை நீங்கள் அணுகலாம். அனுப்பப்படும் ஒவ்வொரு மின்னஞ்சலும் ரன் எனக் குறிப்பிடப்படுவதுடன், அதற்கான ஒரு IDயும் இருக்கும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Messaging என்பதற்குச் செல்லவும்.
தானியக்கமாக்கல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
சந்தைப்படுத்தல் தன்னியக்கமாக்கல் (Marketing automation) என்பதன்கீழ், எந்தத் தானியக்கமாக்கலின் முடிவுகளைச் சரிபார்க்க வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுக்கவும்.
Workflow பிரிவில், View recent activity என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் விவரங்களைச் சரிபார்க்க விரும்பும் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் அல்லது ரன் IDயைக் கிளிக் செய்யவும்.
மின்னஞ்சல் அல்லது ரன் IDக்கான விவரங்கள் Results பிரிவின்கீழ் காட்டப்படும்.
கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சலை நேரடியாக அனுப்புதல்
வாடிக்கையாளருக்குக் கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சலை நேரடியாக அனுப்ப நீங்கள் தேர்வுசெய்யலாம். அந்த மின்னஞ்சலில் வாடிக்கையாளரின் கைவிடப்பட்ட கார்ட்டிற்கான இணைப்பு இருக்கும், இதன்மூலம் அவர்கள் தங்கள் செக்அவுட்டை முடிக்கலாம். நீங்கள் தானியக்கமாக்கலை அமைக்காதபோது அல்லது உங்கள் வாடிக்கையாளர் கைவிடப்பட்ட செக்அவுட் இணைப்பைக் கேட்கும்போது, நீங்கள் கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சலை நேரடியாக அனுப்ப விரும்பலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > கைவிடப்பட்ட செக்அவுட்கள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் மீட்க விரும்பும் கைவிடப்பட்ட செக்அவுட்டின் எண்ணைக் கிளிக் செய்யவும்.
வாடிக்கையாளர் தகவலின்கீழ் உள்ள வாடிக்கையாளரின் மின்னஞ்சலைக் கிளிக் செய்யவும்.
மின்னஞ்சல் செய்தியில் கைவிடப்பட்ட செக்அவுட் இணைப்புடன் உங்கள் மின்னஞ்சல் கிளையண்ட் திறக்கப்படும்.
கைவிடப்பட்ட செக்அவுட் இணைப்பைத் திறக்கும் எவரும் அந்தச் செக்அவுட்டைத் தொடரலாம், எனவே எந்த வாடிக்கையாளர் அதைக் கைவிட்டாரோ அவருக்கு மட்டுமே இணைப்பை அனுப்பவும். இணைப்பைத் திறக்கும் நபர் உங்கள் ஸ்டோரில் உள்ள வாடிக்கையாளர் கணக்கில் உள்நுழைந்திருந்தால், அந்த கணக்கின் கீழ் செக்அவுட் தொடரும், மேலும் அதன்பின் உருவாகும் எந்தவொரு ஆர்டரும் அந்த வாடிக்கையாளருக்கே உருவாக்கப்படும். கைவிடப்பட்ட செக்அவுட் இணைப்பை நீங்கள் அனுப்பிய பிறகு அதை முடக்கவோ காலாவதியாக்கவோ முடியாது. ஆர்டர் முடிந்த பிறகு, அந்த இணைப்பு செக்அவுட்டைத் திறக்காது, ஆனால் அந்த ஆர்டருக்கான ஆர்டர் நிலை பக்கத்தை அதைக் கொண்டு திறக்க முடியும்.
அந்த இணைப்பைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் தனது ஆர்டரை முடித்தால், Abandoned checkout பக்கத்தில் உள்ள Recovery status மீட்கப்பட்டதாகக் காட்டப்படும்படி புதுப்பிக்கப்படும்.
உங்கள் கைவிடப்பட்ட செக்அவுட்களைச் சரிபார்த்தல்
உங்கள் வாடிக்கையாளர்கள் ஏன் ஆர்டர்களை முடிக்கவில்லை என்பதைக் குறிக்கும் பேட்டர்ன்களைக் கண்டறிய, உங்களின் கைவிடப்பட்ட செக்அவுட்களை நீங்கள் சரிபார்க்கலாம்.
அதிக ஆபத்துடையதாகக் கண்டறியப்பட்டு ஒரு செக்அவுட் முயற்சியை Shopify Payments தடுத்தால், உங்கள் கைவிடப்பட்ட செக்அவுட்களின் Blocked பார்வையில் அந்தச் செக்அவுட் பட்டியலிடப்படும்.
சந்தேகத்திற்குரிய கார்டு சோதனை அல்லது பாட் செயல்பாடு என அடையாளம் காணப்படும் சில செக்அவுட் முயற்சிகள் உங்கள் கைவிடப்பட்ட செக்அவுட்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை. உங்கள் கைவிடப்பட்ட செக்அவுட் மீட்பை உண்மையான வாடிக்கையாளர்கள் மீது மையப்படுத்த இது உதவுகிறது. அனைத்து தானியங்கு செயல்பாடுகளும் வடிகட்டப்படுவதில்லை என்பதால், சில கைவிடப்பட்ட செக்அவுட்கள் பாட்களிலிருந்து வரக்கூடும். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் பாட் செயல்பாட்டைக் கண்டறிவது குறித்து மேலும் அறிக.
மூன்று மாதங்களுக்கும் மேலான கைவிடப்பட்ட செக்அவுட்கள் Shopify நிர்வாகியிலிருந்து தானாகவே நீக்கப்படும். குறிப்பிட்ட கைவிடப்பட்ட செக்அவுட்டை நீங்கள் தக்கவைத்துக்கொள்ள விரும்பினால், அதே விவரங்களுடன் ஒரு வரைவு ஆர்டரை உருவாக்கி உங்கள் Shopify நிர்வாகியில் அதைத் திறந்து வைக்கலாம். குறிப்பிட்ட கைவிடப்பட்ட செக்அவுட்டை நேரடியாக நீக்க எந்த வழியும் இல்லை.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் என்பதற்குச் செல்லவும்.
கைவிடப்பட்ட செக்அவுட்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
கைவிடப்பட்ட செக்அவுட்டிலிருந்து பேமெண்ட் நிகழ்வுகளைப் பார்த்தல்
ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் தங்கள் ஆர்டருக்குப் பணம் செலுத்த முயற்சிக்கும்போது, கைவிடப்பட்ட செக்அவுட்டின் காலவரிசையில் ஒரு பேமெண்ட் நிகழ்வு குறிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு, நீங்கள் பேமெண்ட் நிகழ்வுகளை விரிவாக்கலாம்.
வாடிக்கையாளர் ஒரு ஆர்டரைச் செய்ய முயன்று அவர்களின் பேமெண்ட் தோல்வியடைந்தால், பேமெண்ட் நிகழ்வுகள் உதவியாக இருக்கும். செக்அவுட்டின்போது பேமெண்ட் செயல்படவில்லை என வாடிக்கையாளர் உங்களைத் தொடர்புகொண்டால், நீங்கள் பேமெண்ட் நிகழ்வின் விவரங்களைப் பார்த்து, உங்கள் வாடிக்கையாளர் ஆர்டர் செய்ய உதவுவதற்கு அந்தத் தகவலைப் பயன்படுத்தலாம்.
செக்அவுட்டின்போது உங்கள் வாடிக்கையாளர் பேமெண்ட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டால், பேமெண்ட் நிகழ்வுகளைப் பார்க்க ஆர்டரின் காலவரிசைக்குச் செல்லவும்.
காலவரிசையில் மோசடி செய்வதற்கான அதிக ஆபத்து காரணமாகத் தடுக்கப்பட்டது (Blocked due to high risk of fraud) என்பது இடம்பெற்றிருந்தால், ஆர்டர் உருவாக்கப்படுவதற்கு முன்பே Shopify Payments பேமெண்ட்டைத் தடுத்துவிட்டது என்று அர்த்தம். எந்தப் பேமெண்ட்டும் கைப்பற்றப்படவில்லை.
வாடிக்கையாளர் ஒவ்வொரு முறை செக்அவுட்டைச் சமர்ப்பிக்கும்போதும் Shopify Payments ஆபத்தை மதிப்பிடும். வேறு பேமெண்ட் அல்லது பில்லிங் விவரங்களுடன் வாடிக்கையாளர் மீண்டும் முயற்சித்தால், பேமெண்ட் தடுக்கப்படாமல் இருக்கலாம்.
வாடிக்கையாளரை உங்களுக்குத் தெரிந்திருந்து, விற்பனையை முடிக்க விரும்பினால், ஒரு வரைவு ஆர்டரை உருவாக்கி, வாடிக்கையாளருக்கு விலைப்பட்டியலை அனுப்பவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > கைவிடப்பட்ட செக்அவுட்கள் என்பதற்குச் செல்லவும்.
கைவிடப்பட்ட செக்அவுட்டைக் கிளிக் செய்யவும்.
காலவரிசை பிரிவில், பேமெண்ட் நிகழ்வொன்றைக் கிளிக் செய்யவும்.
கைவிடப்பட்ட செக்அவுட்களின் மின்னஞ்சல் அறிக்கை
பரிவர்த்தனையை முடிப்பதற்கு உங்கள் வாடிக்கையாளர்களை மீண்டும் அழைத்து வருவதில் அந்த மின்னஞ்சல்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள Shopify வழங்கும் கைவிடப்பட்ட செக்அவுட் மின்னஞ்சல்கள் அறிக்கை உதவுகிறது. இது Shopify இன் வளர்ச்சி பிரிவில் கிடைக்கும்.
நினைவூட்டல் மின்னஞ்சல்களின் மூலம் எத்தனை அமர்வுகள் மற்றும் முடிக்கப்பட்ட ஆர்டர்கள் கிடைத்துள்ளன என்பதை இந்த அறிக்கை உங்களுக்குத் தெரிவிக்கும். அத்துடன் மாற்று வீதம், மொத்த விற்பனைத் தொகை, சராசரி ஆர்டர் மதிப்பு, விற்கப்பட்ட தயாரிப்புகளின் சராசரி எண்ணிக்கை மற்றும் முதல்முறை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களையும் இது கொண்டுள்ளது.
இந்த அறிக்கை 18 நவம்பர் 2019 முதல் உள்ள தரவை மட்டுமே காட்டுகிறது.