Shopify Messaging மின்னஞ்சல் கேம்பெயினை உருவாக்கும்போது அணுகல்தன்மைச் சாதனங்களைப் பயன்படுத்துதல்
உதவித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வணிகர்கள் அணுகும் வகையில் Shopify Messaging மின்னஞ்சல் எடிட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் மவுஸைப் பயன்படுத்தாமல் எல்லாப் பணிகளையும் செய்து முடிக்க உதவும் விசைப்பலகை வழிசெலுத்தல் மற்றும் ஸ்கிரீன் ரீடர்களை இந்த எடிட்டர் ஆதரிக்கிறது.
இந்தப் பக்கத்தில்
Shopify Messaging இல் விசைப்பலகை வழிசெலுத்தல்
பின்வரும் விசைப்பலகைக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, நீங்கள் மின்னஞ்சல் எடிட்டரில் வழிசெலுத்தலாம்:
- Tab: எடிட்டரில் உள்ள ஊடாடும் கூறுகளுக்கு இடையே நகர்த்த
- பிரிவின் உள்ளடக்கங்களைத் திருத்த Tabஐ ஒருமுறை அழுத்தவும்
- ஒரு பிரிவில் திருத்தக்கூடிய புலங்களை அணுக Tabஐ இரண்டு முறை அழுத்தவும்
- பிரிவுச் செயல்களை அணுக (நகர்த்த, நகலெடுக்க, மறைக்க, நீக்க) Tabஐப் பலமுறை அழுத்தவும்
- பிரிவைச் சேர் பொத்தானுக்குத் திரும்ப, மீண்டும் Tabஐ அழுத்தவும்
- பிரிவின் பக்கப்பட்டி அமைப்புகளை அணுக, Tabஐ மீண்டும் ஒருமுறை அழுத்தவும்
- shift + Tab: பிரிவுகளில் பின்னோக்கி நகர்த்தி, அவற்றை ஹைலைட் செய்ய
- அம்பு விசைகள்: பிரிவுகளுக்கு இடையே நகர்த்த
- Enter அல்லது Space: கூறுகளைத் தேர்ந்தெடுக்க அல்லது செயல்படுத்த
- வழக்கமான விசைப்பலகை ஷார்ட்கட்கள்: பின்வருபவை போன்ற பொதுவான விசைப்பலகை ஷார்ட்கட்களைப் பயன்படுத்த:
- நகலெடு: ctrl + C (PC) அல்லது command + C (Mac)
- ஒட்டு: ctrl + V (PC) அல்லது command + V (Mac)
- செயல்தவிர்: ctrl + Z (PC) அல்லது command + Z (Mac)
ஸ்கிரீன் ரீடர் ஆதரவு
Shopify Messaging மின்னஞ்சல் எடிட்டரில் ஸ்கிரீன் ரீடர்களுக்கான பிரத்யேக லேபிளிங் உள்ளது, இது பின்வரும் செயல்களைச் செய்ய உங்களுக்கு உதவும்:
- வெவ்வேறு பிரிவுகளைக் கண்டறிந்து அவற்றுக்கு இடையே வழிசெலுத்த
- பிரிவின் அமைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை அணுக
- உங்கள் மின்னஞ்சல் வார்ப்புருவில் புதிய பிரிவுகளைச் சேர்க்க
- ஒவ்வொரு கூறிற்கும் கிடைக்கும் செயல்களைப் புரிந்துகொள்ள