மின்னஞ்சல் பொருள்வரிகள் மற்றும் உட்புற உரையைத் தானாக உருவாக்குதல்

Shopify Messaging-இல் மின்னஞ்சல் பொருள்வரிகள் மற்றும் உட்புற உரைக்கான பரிந்துரைகளை உருவாக்க, பிரச்சார வகை மற்றும் தயாரிப்பு முக்கியச் சொற்கள் போன்ற நீங்கள் வழங்கும் விவரங்களை Sidekick பயன்படுத்துகிறது. மின்னஞ்சல் பொருள்வரியை முன்பே வரைவாக எழுதி வைத்திருந்தால், உங்கள் பொருள்வரியின் அடிப்படையில் முக்கியச் சொற்கள் தானாகவே உருவாக்கப்படும். உங்கள் மின்னஞ்சல்களுக்கான தானியங்கு உரையை உருவாக்குவதற்கு முன், AI-ஆல் இயக்கப்படும் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

ஆதரிக்கப்படும் மொழிகள்

மின்னஞ்சல் உரை உருவாக்கம் என்பது Shopify ஆதரிக்கும் அனைத்து மொழிகளிலும் கிடைக்கிறது. உங்கள் பிராம்ட்டை எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். உருவாக்கப்படும் உள்ளடக்கம் உங்கள் பிராம்ட்டின் மொழியுடன் பொருந்தும். சிறந்த முடிவுகளுக்கு, உங்களின் மின்னஞ்சல் உள்ளடக்கம் எந்த மொழியில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அதே மொழியில் உங்களின் பிராம்ட்டையும் எழுதவும்.

மின்னஞ்சல் பொருள்வரிகள் மற்றும் உட்புற உரையை உருவாக்குதல்

நீங்கள் Shopify Messaging பிரச்சாரத்தை உருவாக்கும்போது, பொருள்வரி மற்றும் மின்னஞ்சல் உட்புற உரையை உருவாக்க Sidekick-ஐப் பயன்படுத்தலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Messaging பகுதிக்குச் செல்லவும்.

  2. பிரச்சாரத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் ஒரு வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. பின்வரும் படிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்யவும்:

    • மின்னஞ்சல் பொருளின் வரியை வரைவாக உருவாக்க, பொருள் புலத்தில் உள்ள Generate text ஐகானைக் கிளிக் செய்யவும்.
    • மின்னஞ்சல் உள்ளடக்க உரையை வரைவாக உருவாக்க, உரைச் செக்‌ஷனின் ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ள Generate text ஐகானைக் கிளிக் செய்யவும்.
  4. நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலின் வகையை விவரிக்கும் பிராம்ட்டை உள்ளிட்டு, சமர்ப்பிக்கவும். உருவாக்கப்பட்ட உரை நேரடியாகப் பயன்படுத்தப்படும். நீங்கள் எவ்வளவு விவரங்களைச் சேர்க்கிறீர்களோ, அந்தளவுக்குப் பரிந்துரைக்கப்படும் உள்ளடக்கம் தொடர்புடையதாக இருக்கும். தயாரிப்புக்கான முக்கியச் சொற்கள், விரும்பிய தொனி, நடை அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகளை உங்கள் பிராம்ட்டிலேயே நீங்கள் நேரடியாகச் சேர்க்கலாம்.

  5. விருப்பத்திற்குரியது: உங்கள் பிராண்டுக்குப் பொருத்தமாக இருக்கும்படி, உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைத் திருத்தி வடிவமைக்கவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் உரையை உருவாக்கிய பிறகு, உங்கள் மின்னஞ்சல் செய்தியைக் பிரத்தியேகமாக்கி முடிக்கலாம்.

நீங்கள் பெறும் உள்ளடக்கப் பரிந்துரைகளை மேம்படுத்துதல்

Shopify Messaging-க்காக உருவாக்கப்பட்ட பரிந்துரைகளை நீங்கள் மதிப்பிடும்போது, மின்னஞ்சல் உள்ளடக்கத்தை எது சிறப்பானதாக்குகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். உங்கள் பிரச்சாரத்தின் இலக்குகள், தயாரிப்புத் தகவல், குறிப்பிட்ட முக்கியச் சொற்கள் போன்ற உங்கள் பிரச்சாரம் பற்றிய கூடுதல் விவரங்களை உங்கள் பிராம்ட்டில் வழங்குவதே, உருவாக்கப்பட்ட பரிந்துரைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாகும்.

உரை உருவாக்க முடிவுகளை மேம்படுத்த, உங்கள் மின்னஞ்சல் கேம்பெயின்களில் பின்வரும் வகையான தகவல்களைச் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளவும்:

  • பிரச்சாரத்தின் வகை: நீங்கள் வழங்கும் எந்தவொரு பிரச்சார விவரக்குறிப்புகளும் சிறந்த முடிவுகளை உருவாக்க உதவும். எடுத்துக்காட்டாக, தயாரிப்பு மீளிருப்பு, வசந்தகால விற்பனை அல்லது பிறந்தநாள் தள்ளுபடி.
  • தயாரிப்புக்கான முக்கியச் சொற்கள்: நீங்கள் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு பற்றி எழுதுகிறீர்கள் எனில், தயாரிப்பின் பெயரையும் வகையையும் சேர்த்துப் பார்க்கவும். தயாரிப்பின் பெயர் தெளிவாக இல்லை எனில், காரமான சாஸ் (hot sauce) அல்லது பார் சோப் (bar soap) என்பது போல் தயாரிப்பு அல்லது வகையை விவரிக்கும் முக்கியச் சொற்களை வழங்கவும். தயாரிப்பைத் தனித்துவமானதாக்குவது எது அல்லது அதை ஒருவர் ஏன் வாங்க விரும்பலாம் என்பதை முன்னிலைப்படுத்தும் விவரிப்பான்களைச் சேர்க்கவும். எடுத்துக்காட்டாக, மொனாக்கோ என்பது விளக்கமானதாக இல்லை. எனினும், புதிய வரவுகள், மொனாக்கோ, 10% தள்ளுபடி மற்றும் எடைகுறைவான ஆமை-ஓடு சன்கிளாஸ்கள் போன்ற முக்கியச் சொற்களின் தொகுப்பைப் பயன்படுத்துவதன் மூலம், எதைப் பற்றி எழுத வேண்டும் என்பதை நீங்கள் விவரிக்கலாம். முக்கியச் சொல் பிராம்ட்கள் எளிமையானதாகவோ சிக்கலானதாகவோ இருக்கலாம், மேலும் உங்கள் பிராம்ட்டை ஒரு வாக்கியமாக அமைக்கலாம் அல்லது முக்கியச் சொற்களை மட்டும் பயன்படுத்தலாம். எமோஜிகளையும் நீங்கள் சேர்க்கலாம்.
  • முக்கியமான பிராண்ட் முக்கியச் சொற்கள் அல்லது சொற்பதங்கள்: நீங்கள் வழங்கும் தகவலுக்கு முடிவுகளில் வெவ்வேறு சொற்றொடர்கள் இருந்தாலும், பிராண்ட் பெயர்கள் அல்லது தனித்துவமான விவரிப்புச் சொற்கள் போன்ற சிறப்புச் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் பெரும்பாலும் அப்படியே வைக்கப்படும். உங்கள் பிராண்ட் அடையாள வாசக பிராம்ட்டில் உங்கள் பிராண்டின் பெயரைச் சேர்த்தால், அது பொதுவாக முடிவுகளில் சேர்க்கப்படும். எடுத்துக்காட்டாக, முக்கியச் சொற்களில் உங்கள் புதினா லிப் பாமை mint-astic என விவரித்தால், உருவாக்கப்பட்ட பரிந்துரைகளில் பெரும்பாலும் அந்தச் சொல் சேர்க்கப்படும்.
  • பிற மின்னஞ்சல் விவரங்கள்: நீங்கள் உருவாக்கும் உள்ளடக்கத்தின் வகைக்குப் பொருத்தமான எந்தவொரு கூடுதல் விவரங்களும் வழங்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு விற்பனைச் செய்தியை உருவாக்க விரும்பினால், விற்பனைத் தொகை மற்றும் விற்பனையின் பகுதியாக இருக்கும் தயாரிப்புகளின் வகைகளைச் சேர்ப்பதை உறுதிசெய்துகொள்ளவும். எந்த முக்கியச் சொற்களை வழங்கலாம் என்பது தொடர்பான யோசனைகளைத் தானாகப் பரிந்துரைக்க, உங்கள் மின்னஞ்சலில் நீங்கள் சேர்க்கும் விவரங்களை Sidekick பயன்படுத்தும்.