மின்னஞ்சல் பொருள் வரிகள் மற்றும் முக்கிய உரையைத் தானாக உருவாக்குதல்
Shopify Magic ஆனது பிரச்சார வகை மற்றும் தயாரிப்பு முக்கியச் சொற்கள் போன்று நீங்கள் வழங்கும் விவரங்களை எடுத்துக் கொள்ள, செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி, Shopify Messaging இல் மின்னஞ்சல் பொருள் வரிகள் மற்றும் முக்கிய உரைகளுக்கான பரிந்துரைகளை உருவாக்குகிறது. நீங்கள் ஏற்கனவே மின்னஞ்சல் பொருள் வரிக்கான வரைவை எழுதியிருந்தால், உங்கள் பொருள் வரியின் அடிப்படையில் முக்கியச் சொற்கள் தானாகவே உருவாக்கப்படும். உங்கள் மின்னஞ்சல்களுக்கான தானியங்கு உரையை உருவாக்குவதற்கு முன், AI-ஆல் இயக்கப்படும் கருவிகளைப் பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
இந்தப் பக்கத்தில்
ஆதரிக்கப்படும் மொழிகள்
Shopify ஆதரிக்கும் அனைத்து மொழிகளிலும் மின்னஞ்சல் உரை உருவாக்கம் கிடைக்கும். நீங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும் பிராம்ட்டை எழுதலாம், மேலும் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் உங்கள் பிராம்ட்டின் மொழியுடன் பொருந்தும். சிறந்த முடிவுகளுக்கு, உங்கள் மின்னஞ்சல் உள்ளடக்கம் எந்த மொழியில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அதே மொழியில் உங்கள் பிராம்ட்டை எழுதவும்.
மின்னஞ்சல் பொருள் வரிகள் மற்றும் முக்கிய உரையை உருவாக்குதல்
நீங்கள் Shopify Messaging பிரச்சாரத்தை உருவாக்கும்போது, பொருள் வரி மற்றும் மின்னஞ்சல் முக்கிய உரையை உருவாக்க Shopify Magic ஐப் பயன்படுத்தலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Messaging என்பதற்குச் செல்லவும்.
பிரச்சாரத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து, பிறகு ஒரு வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்வரும் படிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவுசெய்யவும்:
- மின்னஞ்சல் பொருள் வரியின் வரைவை உருவாக்க, பொருள் புலத்தில், உரையை உருவாக்கு ஐகானைக் கிளிக் செய்யவும்.
- மின்னஞ்சலின் முக்கிய உரையின் வரைவை உருவாக்க, உரைப் பகுதியின் ரிச் டெக்ஸ்ட் எடிட்டரில் உள்ள உரையை உருவாக்கு ஐகானைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலின் வகையை விவரிக்கும் பிராம்ட்டை உள்ளிட்டு, பிறகு அதைச் சமர்ப்பிக்கவும். உருவாக்கப்படும் உரை நேரடியாகப் பயன்படுத்தப்படும். நீங்கள் எவ்வளவு விவரங்களைச் சேர்க்கிறீர்களோ, அந்தளவுக்குப் பொருத்தமான உள்ளடக்கம் பரிந்துரைக்கப்படும். தயாரிப்பு முக்கியச் சொற்கள், விரும்பிய தொனி, நடை அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகளை உங்கள் பிராம்ட்டிலேயே நேரடியாகச் சேர்க்கலாம்.
விருப்பத்திற்குரியது: உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை உங்கள் பிராண்டிற்குப் பொருந்துமாறு திருத்தி வடிவமைக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் உரையை உருவாக்கிய பிறகு, மின்னஞ்சல் செய்தியைத் தனிப்பயனாக்குவதை நிறைவுசெய்யலாம்.
நீங்கள் பெறும் உள்ளடக்கப் பரிந்துரைகளை மேம்படுத்துதல்
Shopify Messaging க்காக உருவாக்கப்பட்ட பரிந்துரைகளை நீங்கள் மதிப்பீடு செய்யும்போது, பயனுள்ள மின்னஞ்சல் உள்ளடக்கம் எதன் மூலம் உருவாக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். பிரச்சார இலக்குகள், தயாரிப்புத் தகவல் மற்றும் குறிப்பிட்ட முக்கியச் சொற்கள் போன்ற உங்கள் பிரச்சாரம் தொடர்பான கூடுதல் விவரங்களை உங்கள் பிராம்ட்டில் வழங்குவதே உருவாக்கப்பட்ட பரிந்துரைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாகும்.
உரை உருவாக்க முடிவுகளை மேம்படுத்த, உங்கள் மின்னஞ்சல் பிரச்சாரங்களில் பின்வரும் தகவல்களைச் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளவும்:
- பிரச்சார வகை: நீங்கள் வழங்கும் எந்தவொரு பிரச்சார விவரக்குறிப்பும் சிறந்த முடிவுகளை உருவாக்க உதவும். உதாரணத்திற்கு, தயாரிப்பு மீளிருப்பு, வசந்தகால விற்பனை அல்லது பிறந்தநாள் தள்ளுபடி.
- தயாரிப்பு முக்கியச் சொற்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பைப் பற்றி எழுதுகிறீர்கள் என்றால், தயாரிப்பின் பெயரையும் வகையையும் சேர்க்க முயலவும். தயாரிப்பின் பெயர் தெளிவற்றதாக இருந்தால், ஹாட் சாஸ் அல்லது பார் சோப்பு போன்ற தயாரிப்பு அல்லது வகையை விவரிக்கும் முக்கியச் சொற்களை வழங்கவும். தயாரிப்பைத் தனித்துவமாக்குவது எது அல்லது அதை ஒருவர ஏன் வாங்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தும் விவரிக்கும் சொற்கள் எதையும் சேர்க்கவும். உதாரணத்திற்கு, Monaco என்பது விளக்கமானதல்ல. இருப்பினும், புதிய வரவுகள், Monaco, 10% தள்ளுபடி மற்றும் எடைகுறைவான ஆமை ஓடு சன்கிளாஸ்கள் போன்ற முக்கியச் சொற்களின் தொகுப்பைப் பயன்படுத்துவதன் மூலம், எதைப் பற்றி எழுத வேண்டும் என்பதை Shopify Magic இடம் உங்களால் கூற முடியும். முக்கியச் சொல் பிராம்ட்கள் எளிமையானதாகவோ சிக்கலானதாகவோ இருக்கலாம், மேலும் உங்கள் பிராம்ட்டை ஒரு வாக்கியமாக அமைக்கலாம் அல்லது முக்கியச் சொற்களை மட்டும்கூடப் பயன்படுத்தலாம். எமோஜிகளையும் நீங்கள் சேர்க்கலாம்.
- முக்கியமான பிராண்ட் முக்கியச் சொற்கள் அல்லது சொற்களஞ்சியம். நீங்கள் வழங்கும் தகவலுக்கு முடிவுகளில் வெவ்வேறு சொற்றொடர்கள் இருந்தாலும், பிராண்ட் பெயர்கள் அல்லது தனித்துவமான விவரிக்கும் சொற்கள் போன்ற சிறப்புச் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் பொதுவாக அப்படியே வைக்கப்படும். உங்கள் பிராண்ட் அடையாள வாசக பிராம்ட்டில் உங்கள் பிராண்ட் பெயரைச் சேர்த்தால், அது பொதுவாக முடிவுகளில் சேர்க்கப்படும். உதாரணத்திற்கு, முக்கியச் சொற்களில் உங்கள் புதினா லிப் பாமை mint-astic என நீங்கள் விவரித்தால், உருவாக்கப்படும் பரிந்துரைகளில் அந்தச் சொல் பெரும்பாலும் சேர்க்கப்படும்.
- பிற மின்னஞ்சல் விவரங்கள். நீங்கள் உருவாக்கும் உள்ளடக்க வகைக்குப் பொருத்தமான ஏதேனும் கூடுதல் விவரங்கள் இருந்தால் வழங்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு, விற்பனைச் செய்தியை நீங்கள் உருவாக்க விரும்பினால், விற்பனைத் தொகை மற்றும் விற்பனையின் ஒரு பகுதியாக இருக்கும் தயாரிப்புகளின் வகைகளைச் சேர்ப்பதை உறுதிசெய்துகொள்ளவும். எந்தெந்த முக்கியச் சொற்களை வழங்கலாம் என்பது தொடர்பான யோசனைகளைத் தானாகப் பரிந்துரைக்க, உங்கள் மின்னஞ்சலில் நீங்கள் சேர்க்கும் விவரங்களை Shopify Magic பயன்படுத்தும்.