மின்னஞ்சல் சந்தாதாரர் பட்டி்யல் நிர்வாகம்

உங்கள் வணிகத்தை வளர்க்கவும் உங்கள் வாடிக்கையாளர்களுடன் உறவுகளை உருவாக்கவும் மின்னஞ்சல் சந்தைப்படுத்தலைப் பயன்படுத்தலாம். உங்கள் அஞ்சல் பட்டியலில் பதிவுசெய்யும் வாடிக்கையாளர்களுக்குச் செய்திமடல்களை அனுப்புவது, புதிய தயாரிப்புகள் மற்றும் வரவிருக்கும் விற்பனைகள் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்த உதவும் ஒரு சிறந்த வழியாகும்.

வாடிக்கையாளர்களிடமிருந்து மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரித்தல்

சட்ட மற்றும் தனியுரிமைக் காரணங்களுக்காக, உங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து வரும் சந்தைப்படுத்தல் செய்திகளைப் பெற ஒப்புக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நீங்கள் விளம்பர மின்னஞ்சல்களை அனுப்புவதை உறுதிசெய்துகொள்ளவும். வாடிக்கையாளர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் செய்திமடல் பதிவில் சேர்ப்பதன் மூலம் அல்லது செக்அவுட்டில் உள்ள தேர்வுப்பெட்டியைத் டிக் செய்வதன் மூலம் அல்லது தங்களின் வாடிக்கையாளர் கணக்கில் உள்நுழையும்போது விருப்பத்தேர்வைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சந்தைப்படுத்தல் மின்னஞ்சல்களுக்குக் குழுசேரலாம். பின்னர் உங்கள் செக்அவுட் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் அவர்கள் சந்தாவுக்கான உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைப் பெறச் செய்யலாம்.

ஒரு வாடிக்கையாளர் உங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து வரும் சந்தைப்படுத்தலை ஏற்றுக்கொண்டவுடன், அவர்களின் மின்னஞ்சல் முகவரி உங்களின் Shopify நிர்வாகியில் உள்ள வாடிக்கையாளர்கள் பக்கத்தில் காட்டப்படும். விளம்பர மின்னஞ்சல்களைப் பெற ஒப்புக்கொண்ட வாடிக்கையாளர்களை மதிப்பாய்வு செய்ய, மின்னஞ்சல் சந்தாதாரர்கள் பிரிவைக் கிளிக் செய்யவும்.

சந்தாதாரர்கள் மின்னஞ்சலில் உள்ள குழுவிலகு என்பதைக் கிளிக் செய்யும்போது, மின்னஞ்சலை ஸ்பேம் எனக் குறிக்கும்போது அல்லது தங்கள் கணக்கில் இருந்து மின்னஞ்சல் சந்தைப்படுத்தலில் இருந்து விலகும்போது, உங்கள் சந்தாதாரர் பட்டியலிலிருந்து அவர்கள் அகற்றப்படுவார்கள். மின்னஞ்சல் முகவரியில் உள்ள சிக்கல் காரணமாக மின்னஞ்சல் பவுன்ஸ் ஆகும்போது, எதிர்கால மின்னஞ்சல் அனுப்புதல்களில் இருந்து அந்த மின்னஞ்சல் முகவரி தானாகவே தடுக்கப்படும்.

வாடிக்கையாளர்களிடமிருந்து மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரிக்க Shopify Forms செயலியைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

செக்அவுட்டிலும் உள்நுழைவிலும் வாடிக்கையாளர் மின்னஞ்சல்களைச் சேகரித்தல்

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
  2. மார்க்கெட்டிங் விருப்பத்தேர்வு பிரிவில், மார்க்கெட்டிங் ஒப்புதல் தேர்வுப்பெட்டியானது செக்அவுட்டில் மட்டும், உள்நுழைவுப் பக்கத்தில் மட்டும் அல்லது செக்அவுட் மற்றும் உள்நுழைவுப் பக்கத்தில் காட்டப்பட வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.
  3. விருப்பத்தேர்வு: பதிவுசெய்தல் விருப்பத்தேர்வை முன்பே தேர்ந்தெடு என்பதை டிக் செய்யவும். கணக்கு இல்லாத வாடிக்கையாளர்களுக்காகச் செக்அவுட்டில் உள்ள மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் பதிவுப் பெட்டியை இது முன்பே தேர்ந்தெடுக்கும். மின்னஞ்சல் சந்தாதாரர்கள் வாடிக்கையாளர் பட்டியலில் இருக்கும், கணக்கைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கான பெட்டியையும் இது முன்பே தேர்ந்தெடுக்கும். மின்னஞ்சல் சந்தைப்படுத்தலில் இருந்து விலகிய, மின்னஞ்சல் சந்தாதாரர்கள் வாடிக்கையாளர் பட்டியலில் இல்லாத கணக்குகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்குச் செக்அவுட்டில் பெட்டி முன்பே தேர்ந்தெடுக்கப்படாது.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. Shopify செயலியில், Menu என்பதைத் தட்டி, பிறகு Settings அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், செக்அவுட் என்பதைத் தட்டவும்.

  3. மார்க்கெட்டிங் விருப்பத்தேர்வு பிரிவில், மார்க்கெட்டிங் ஒப்புதல் தேர்வுப்பெட்டியானது செக்அவுட்டில் மட்டும், உள்நுழைவுப் பக்கத்தில் மட்டும் அல்லது செக்அவுட் மற்றும் உள்நுழைவுப் பக்கத்தில் காட்டப்பட வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.

  4. விருப்பத்தேர்வு: பதிவுசெய்தல் விருப்பத்தேர்வை முன்பே தேர்ந்தெடு என்பதை டிக் செய்யவும். கணக்கு இல்லாத வாடிக்கையாளர்களுக்காகச் செக்அவுட்டில் உள்ள மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் பதிவுப் பெட்டியை இது முன்பே தேர்ந்தெடுக்கும். மின்னஞ்சல் சந்தாதாரர்கள் வாடிக்கையாளர் பட்டியலில் இருக்கும், கணக்கைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கான பெட்டியையும் இது முன்பே தேர்ந்தெடுக்கும். மின்னஞ்சல் சந்தைப்படுத்தலில் இருந்து விலகிய, மின்னஞ்சல் சந்தாதாரர்கள் வாடிக்கையாளர் பட்டியலில் இல்லாத கணக்குகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்குச் செக்அவுட்டில் பெட்டி முன்பே தேர்ந்தெடுக்கப்படாது.

  5. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

உங்கள் முகப்புப் பக்கத்திலிருந்து வாடிக்கையாளர் மின்னஞ்சல்களைச் சேகரித்தல்

உங்கள் முகப்புப் பக்கத்திலிருந்து வாடிக்கையாளர் மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரிக்க, உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் செய்திமடல் பதிவுப் பிரிவைச் சேர்க்கவும். செய்திமடல் பதிவு மூலம், உங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து மின்னஞ்சல் முகவரிகளைச் சேகரித்து அவற்றை Shopify நிர்வாகியில் உள்ள வாடிக்கையாளர்கள் பக்கத்தில் மின்னஞ்சல் சந்தாதாரர்கள் என்ற வாடிக்கையாளர் பிரிவில் சேமிக்கலாம். உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்களின் பயணத்தைக் கருத்தில் கொண்டு, உங்கள் முகப்புப்பக்கம் மற்றும் செக்அவுட் போன்ற முக்கிய இடங்களில் மின்னஞ்சல் முகவரியைச் சேகரிப்பதற்கான விருப்பத்தை வழங்கவும்.

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் செய்திமடல் பிரிவைச் சேர்ப்பது குறித்த உதவிக்கு, தீம் ஆவணத்தைப் பார்க்கவும்.

போட்டிகள் மற்றும் ஸ்வீப்ஸ்டேக்குகள் ஆகியவை சந்தாதாரர் பட்டியலை விரைவாக உருவாக்குவதற்கான சிறந்த வழிகளாகும், ஆனால் வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல் சந்தைப்படுத்தலுக்கும் பதிவுசெய்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள டபுள் ஆப்ட்-இன் வசதியை வழங்குவதை உறுதிசெய்யவும்.

சமீபத்தில் நீங்கள் பல புதிய சந்தாதாரர்களைப் பெற்றிருந்தால், அவர்களுக்கு வரவேற்பு மின்னஞ்சலை அனுப்புவதற்காக, புதிய சந்தாதாரர்களுக்கு என வாடிக்கையாளர் பிரிவை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கவும். புதிய சந்தாதாரர்களைக் கொள்முதல் செய்ய ஊக்குவிப்பதற்கு, வரவேற்பு மின்னஞ்சல்களில் தள்ளுபடிக் குறியீடு மற்றும் உங்கள் ஸ்டோருக்கான இணைப்பைச் சேர்க்கவும். உங்கள் மின்னஞ்சல் பட்டியலிலிருந்து சந்தாதாரர்கள் விலகுவதற்கும் வரவேற்பு மின்னஞ்சல்கள் ஒரு நட்பான வழியாகும்.

வாடிக்கையாளர் பட்டியல்களை இறக்குமதி செய்தல்

நீங்கள் வாடிக்கையாளர் பட்டியலை இறக்குமதி செய்யலாம், ஆனால் முதலில் அந்தப் பட்டியலில் உள்ள அனைத்துப் பெயர்களையும் மின்னஞ்சல் முகவரிகளையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும். நீங்கள் மின்னஞ்சல் கேம்பெயின்களை அனுப்பும்போது பிழைகளைத் தவிர்க்க இது உதவும்.

பங்கு அடிப்படையிலான மின்னஞ்சல் முகவரிகள்

பங்கு அடிப்படையிலான மின்னஞ்சல் முகவரிகள் info@ அல்லது support@ போன்ற சொற்களுடன் தொடங்கும். இந்த மின்னஞ்சல் முகவரிகள் வழக்கமாக ஒரு தனிநபருக்கு அல்லாமல், ஒரு குழுவிற்கு அனுப்பப்படும். பங்கு அடிப்படையிலான மின்னஞ்சல் முகவரிகள் கண்காணிக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், அவற்றை நீங்களே கைமுறையாக அகற்றுமாறு பரிந்துரைக்கிறோம். காலப்போக்கில் இது உங்கள் ஓப்பன் ரேட்டைப் (open rate) பாதிக்கலாம்.

எனது மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் பட்டியலில் சந்தா செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே எனது மின்னஞ்சல்கள் அனுப்பப்படுமா?

ஆம், உங்கள் வணிகத்திலிருந்து மின்னஞ்சல்களைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு மட்டுமே நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப முடியும். வாடிக்கையாளர் பக்கத்தில் சந்தைப்படுத்தல் பிரிவு உள்ளது, இது வாடிக்கையாளரின் சந்தைப்படுத்தல் விருப்பத்தேர்வுகளைக் காட்டுகிறது. உங்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் சந்தைப்படுத்தலை ஏற்காத எந்தவொரு வாடிக்கையாளரையும் Shopify Messaging வடிகட்டும்.

Shopify Messaging இல் உள்ள உங்கள் வாடிக்கையாளர் குழுவில் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கையும், உங்கள் Shopify நிர்வாகியின் வாடிக்கையாளர்கள் பிரிவில் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் மாறுபடலாம். காலப்போக்கில் அனுப்புநர் நற்பெயரையும் டெலிவரி திறனையும் பராமரிப்பதற்கு, தொடர்ந்து பவுன்ஸ் ஆகும் சந்தாதாரர் மின்னஞ்சல் முகவரிகளுக்கு Shopify Messaging மூலம் மின்னஞ்சல் அனுப்ப முடியாது.

குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவுக்கு மின்னஞ்சல் கேம்பெயினை அனுப்புதல்

குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு இலக்குவைக்கப்பட்ட மின்னஞ்சல் கேம்பெயின்களை அனுப்புவது, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான உள்ளடக்கத்தை டெலிவரி செய்ய உதவுகிறது. எடுத்துக்காட்டாக, பின்வரும் வகையான மின்னஞ்சல் கேம்பெயின்களை அனுப்ப வாடிக்கையாளர் பிரிவுகளை நீங்கள் பயன்படுத்தலாம்:

  • வாடிக்கையாளர்களின் கொள்முதல் வரலாற்றின் அடிப்படையில் அவர்களுக்குக் குறிப்பிட்ட தயாரிப்புகளைப் பரிந்துரைக்கலாம்.
  • சமீபத்தில் கொள்முதல் செய்யாத வாடிக்கையாளர்களை மீண்டும் ஈடுபடுத்தலாம்.
  • உங்கள் மிகவும் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கிப் பரிசளிக்கும் மின்னஞ்சலை அனுப்பலாம்.
  • இடம் சார்ந்த விளம்பரங்களைக் கொண்டு குறிப்பிட்ட பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொள்ளலாம்.

நீங்கள் Shopify Messaging கேம்பெயினை உருவாக்கும்போது, பெறுநர் புலத்தில் உள்ள கீழ்தோன்றும் மெனுவிலிருந்து வாடிக்கையாளர் பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம். சில மின்னஞ்சல் வார்ப்புருக்களில் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு அடுத்து பரிந்துரைக்கப்பட்ட பேட்ஜ் காட்டப்படும்.

மாற்றாக, உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள பிரிவுகள் பக்கத்திலிருந்தும் மின்னஞ்சல் கேம்பெயினை உருவாக்கலாம்.

தொடங்குவதற்கு முன், மின்னஞ்சல் சந்தாதாரர்களை உள்ளடக்கிய வாடிக்கையாளர் பிரிவை உருவாக்க வேண்டும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. பிரிவுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப விரும்பும் பிரிவைக் கிளிக் செய்யவும்.

  4. பிரிவைப் பயன்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. மின்னஞ்சல் என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. மின்னஞ்சல் கேம்பெயினை உருவாக்கவும்.

மொபைல்
  1. Shopify செயலியில், மெனு ஐகானைத் தட்டவும்.

  2. வாடிக்கையாளர்கள் மெனுவில், கீழ்நோக்கிய அம்பு ஐகானைத் தட்டி, பிரிவுகள் என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப விரும்பும் பிரிவைத் தட்டவும்.

  4. + என்பதைத் தட்டவும்.

  5. மின்னஞ்சல் என்பதைத் தட்டவும்.

  6. மின்னஞ்சல் கேம்பெயினை உருவாக்கவும்.

டபுள் ஆப்ட்-இன்

உங்களிடமிருந்து மின்னஞ்சல் சந்தைப்படுத்தலைப் பெற விரும்புகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த, மின்னஞ்சலில் உள்ள இணைப்பை வாடிக்கையாளர்கள் கிளிக் செய்வதை டபுள் ஆப்ட்-இன் கோருகிறது. யாராவது தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் சந்தா செலுத்தும்போது, உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் தானாகவே அனுப்பப்படும். சில நாடுகளில், டபுள் ஆப்ட்-இன் சட்டப்படி அவசியமாகும், மேலும் ஈடுபாடு கொண்ட சந்தாதாரர்களைப் பெறுவதற்கும் இது சிறந்த நடைமுறையாகும். நீங்கள் டபுள் ஆப்ட்-இன் வசதியைச் செயல்படுத்துவதற்கு முன்பு, உங்கள் அஞ்சல் பட்டியலில் சந்தா செலுத்திய வாடிக்கையாளர்கள் தங்களின் நிலையை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

உங்கள் Shopify நிர்வாகியில் அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் டபுள் ஆப்ட்-இன் மின்னஞ்சலைத் தனிப்பயனாக்கலாம். சட்டக் காரணங்களுக்காக, இந்த மின்னஞ்சலில் எந்தவொரு சந்தைப்படுத்தல் உள்ளடக்கமும் இருக்கக் கூடாது.

நீங்கள் டபுள் ஆப்ட்-இன் வசதியைச் செயல்படுத்தினால், பின்தொடர் உறுதிப்படுத்தலுக்காகத் தங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்க வேண்டும் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்வதற்கு உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள செய்திமடல் படிவத்தின் உறுதிப்படுத்தல் செய்தியைப் புதுப்பிக்க வேண்டும். உறுதிப்படுத்தல் செய்தியைப் புதுப்பிப்பது, மேலும் பல விருப்பத் தேர்வுகளை (opt-ins) உறுதிசெய்ய உதவும். எடுத்துக்காட்டாக, உங்கள் உறுதிப்படுத்தல் செய்தி "உங்கள் சந்தாவை உறுதிப்படுத்த உங்கள் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்!" என்பது போல் இருக்கலாம்.

உங்கள் Shopify நிர்வாகியில் ஆன்லைன் ஸ்டோர் > கிடைமட்ட மெனு பொத்தான் > இயல்புநிலை தீம் உள்ளடக்கத்தைத் திருத்து என்பதற்குச் சென்று உறுதிப்படுத்தல் செய்தியை நீங்கள் திருத்தலாம். உங்கள் தீமைப் பொறுத்து, புலமானது செய்திமடல் படிவம் பிரிவின் கீழ் உறுதிப்படுத்தல் என்றோ அல்லது பதிவுசெய்க பிரிவின் கீழ் வெற்றிகரமான பதிவு என்றோ பெயரிடப்பட்டிருக்கும்.

டபுள் ஆப்ட்-இன் வசதியின் பலன்கள் யாவை?

சந்தைப்படுத்தல் மின்னஞ்சல்களைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்களை விருப்பம் தெரிவிக்க (opt-in) அல்லது விலக (opt-out) அனுமதிப்பது, உங்கள் மின்னஞ்சல் பேட்ச்சில் விருப்பமில்லாத அல்லது தவறான மின்னஞ்சல் முகவரிகள் சேர்க்கப்படுவதைத் தடுத்து, அதிக ஈடுபாடு கொண்ட சந்தாதாரர் பட்டியலை உருவாக்க உதவும். சில பயனர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட உறுதிப்படுத்தல் இணைப்பைக் கிளிக் செய்ய மறந்துவிடுவார்கள் என்பதால், உங்கள் பட்டியலை உருவாக்குவதற்கு அதிக நேரம் ஆகலாம், ஆனால் உங்களிடமிருந்து மின்னஞ்சல்களைப் பெறுவதில் உண்மையான ஆர்வமுள்ள சந்தாதாரர்கள் உங்கள் வணிகத்திற்கு மிகவும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள்.

உங்கள் சந்தாதாரர்கள் பட்டியலிலிருந்து ஒருவரை அகற்றுதல்

ஆர்வமுள்ள பார்வையாளர்களைப் பராமரிக்க, உங்கள் சந்தாதாரர்கள் பட்டியலைத் தொடர்ந்து சீரமைக்க வேண்டும். உங்கள் Shopify நிர்வாகியின் வாடிக்கையாளர்கள் பக்கத்திலிருந்து மின்னஞ்சல் சந்தாதாரரை நீங்கள் கைமுறையாக அகற்றலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் அகற்ற விரும்பும் குறிப்பிட்ட வாடிக்கையாளரைக் கிளிக் செய்யவும்.

  3. வாடிக்கையாளர் பிரிவில், கிடைமட்ட மெனு > சந்தைப்படுத்தல் அமைப்புகளைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. சந்தைப்படுத்தல் மின்னஞ்சல்களைப் பெற வாடிக்கையாளர் ஒப்புக்கொண்டார் என்ற தேர்வுப்பெட்டியின் தேர்வை நீக்கவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.