SMS மார்க்கெட்டிங் பிரச்சாரங்களுக்கான சிறந்த நடைமுறைகள்
SMS பிரச்சாரத்தை உருவாக்கும் முன், பிரச்சாரத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், வாடிக்கையாளர் விலகல் நிகழ்வதற்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் சிறந்த நடைமுறைகள், செய்தி எழுத்துகளின் எண்ணிக்கை குறித்த பரிசீலனைகள், அமைதி நேரங்கள் ஆகியவற்றைச் சரிபார்க்கவும். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது பிரச்சாரத்தின் செயல்விளைவை அதிகரிக்கவும், செய்தியைப் பிரித்தல் அல்லது வடிகட்டுதல் காரணமாக ஏற்படும் செலவுகளைக் குறைக்கவும், அதிகத் தொடர்பு விகிதங்களைப் பராமரிக்கவும் உதவுகிறது. அதிகத் தொடர்பு, குறைந்த விலகல் விகிதங்கள் ஆகியவை கேரியர்களிடம் உங்கள் நற்பெயரையும் வலுவாக்குகின்றன. கேரியர் வடிகட்டுதல் எவ்வாறு செயல்படுகிறது, உங்கள் செய்திகள் வாடிக்கையாளர்களைச் சென்றடைவதை எவ்வாறு உறுதிசெய்வது என்பதைப் பற்றி அறிய, உங்கள் SMS டெலிவரி திறனை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் என்பதைப் பார்க்கவும்.
இந்தப் பக்கத்தில்
SMS மார்க்கெட்டிங் பிரச்சாரத்தை உருவாக்குவதற்கான சிறந்த நடைமுறைகள்
SMS பிரச்சாரத்தை உருவாக்குவதற்கான பின்வரும் சிறந்த நடைமுறைகளைச் சரிபார்க்கவும்:
- உங்கள் பிரச்சாரம் உங்கள் ஸ்டோரை அனுப்புநராகத் தெளிவாக அடையாளப்படுத்துகிறது என்பதையும், இது ஒரு மார்க்கெட்டிங் தகவல் தொடர்பு என்பதையும், இது எளிதான, உள்ளூர்மயமாக்கப்பட்ட விலகல் விருப்பத்தை வழங்குகிறது என்பதையும் உறுதிசெய்யவும்.
- உங்கள் இலக்குச் சந்தையின் உள்ளூர் மொழியில், அல்லது ஆங்கிலம் உங்கள் சந்தையில் தரநிலையான மொழியாக இருந்தால் ஆங்கிலத்தில் SMS செய்திகளை அனுப்பவும்.
- வாடிக்கையாளர் தொடர்பை மேம்படுத்தவும், விலகல்களைக் குறைக்கவும், ஒரு தெளிவான நடவடிக்கைக்கு-அழைத்தலுடன் செய்திகளைச் சுருக்கமாக வைத்திருக்கவும்.
- அதிக செய்திச் செலவுகள், ஸ்பேம் வடிகட்டுதல் ஆகியவற்றைத் தவிர்க்க, உங்கள் பிரச்சாரங்களை ஒற்றைச் செய்திக்கான எழுத்து வரம்புகளுக்குள் வைத்திருக்க முயலவும்.
- உங்கள் Shopify Messaging பகுப்பாய்வில் முழுமையான கிளிக் மற்றும் விற்பனைக் கண்காணிப்பை உறுதிசெய்யவும், உங்கள் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருக்கவும், ஒரு பிரச்சாரத்தை உருவாக்கும்போது உங்கள் இணைப்புகளைச் சுருக்கவும்.
- அமைதி நேரங்களில் செய்திகளை அனுப்புவதைத் தவிர்க்கவும்.
- நீங்கள் ஒரு புதிய அனுப்புநராக இருந்தால், அல்லது ஒரு புதிய பிரச்சாரத்தை உருவாக்குகிறீர்கள் எனில், பின்வருவனவற்றைச் செய்வதற்குப் பரிசீலிக்கவும்:
- உங்கள் சந்தாதாரர்களுக்கு உங்கள் பிரச்சாரம் எப்படிக் காட்டப்படும் என்பதைப் பார்க்க, அதைத் திட்டமிடுவதற்கு முன் ஒரு சோதனைச் செய்தியை அனுப்பவும்.
- முழு வாடிக்கையாளர் பிரிவிற்கும் அனுப்பும் முன் பிரச்சாரத்தின் செயல்திறனைக் கண்காணிக்க ஏதுவாக, உங்கள் பிரச்சாரத்தை முதலில் உங்கள் பார்வையாளர்களில் ஒரு சிறிய சதவீதத்தினருக்கு அனுப்பவும்.
SMS எழுத்து வரம்புகளைப் புரிந்துகொள்ளுதல்
SMS செய்திகள் உங்கள் செலவுகள், செய்தி டெலிவரி ஆகிய இரண்டையும் பாதிக்கும் எழுத்து வரம்புகளைக் கொண்டுள்ளன. அனுப்பப்படும் ஒவ்வொரு செய்திக்கும் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதால், உங்கள் செய்திகளைச் சுருக்கமாக வைத்திருப்பது உங்கள் வாடிக்கையாளர்களுக்கான வாசிப்புத் திறனை மேம்படுத்துவதோடு, செலவுகளையும் குறைக்கிறது.
ஒவ்வொரு செய்திக்குமான எழுத்து வரம்புகள்
எழுத்து வரம்பு நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகளின் வகையைப் பொறுத்தது:
- நிலையான எழுத்துகள்: ஒவ்வொரு செய்திக்கும் 160 எழுத்துகள்
- தரநிலையற்ற எழுத்துகள்: எமோஜிகள், சிறப்பு எழுத்துகள், உச்சரிப்புக் குறியிட்ட எழுத்துகள் உட்பட ஒவ்வொரு செய்திக்கும் 70 எழுத்துகள்
உங்கள் பிரச்சாரத்தை உருவாக்கும்போது செய்தி எடிட்டரில் எழுத்துகளின் எண்ணிக்கை காட்டப்படும். ஒரு வாடிக்கையாளரின் தரவில் உள்ள First name போன்ற தனிப்பயனாக்கல் மாறி, தரநிலையற்ற எழுத்துகளைக் கொண்டிருந்தால், அனுப்பப்பட்ட செய்தியின் எழுத்துகளின் எண்ணிக்கை எடிட்டரில் காட்டப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம். நிலையான எழுத்துகளை மட்டுமே கொண்ட தனிப்பயனாக்கங்கள் எழுத்துகளின் எண்ணிக்கையைப் பாதிக்காது.
நிலையான, தரநிலையற்ற எழுத்துகள்
நிலையான எழுத்துகள் GSM-7 எழுத்துத் தொகுப்பிலிருந்து வருகின்றன, அதில் பின்வரும் எழுத்துகள் அடங்கும்:
- லத்தீன் எழுத்துகள் (A–Z பெரிய, சிறிய எழுத்துகள்)
- எண்கள் (0–9)
- சில கிரேக்க எழுத்துகள்
- சில குறியீடுகள், பிற எழுத்துகள்
தரநிலையற்ற எழுத்துகள் என்பவை எமோஜிகள், யூனிகோட் எழுத்துகள், À, á, â, ç, ê, É, È, Ì, î, í, Ò, ô, ó, Ù, மற்றும் ú உட்பட, GSM-7 எழுத்துத் தொகுப்பில் இல்லாத எந்த எழுத்துகளுமாகும்.
உங்கள் செய்தியில் தரநிலையற்ற எழுத்துகள் உள்ளனவா எனச் சரிபார்க்க Twilio இன் மெசேஜிங் செக்மெண்ட் கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். முடிவு GSM-7 என வந்தால், உங்கள் செய்தி நிலையான எழுத்துகளை மட்டுமே கொண்டுள்ளது என்று பொருள், UCS-2 என வந்தால் அதில் குறைந்தது ஒரு தரநிலையற்ற எழுத்து உள்ளது என்று பொருள்.
ஒவ்வொரு செய்திக்குமான எழுத்து வரம்பை மீறுதல்
உங்கள் பிரச்சாரம் எழுத்து வரம்பை மீறினால், அது தானாகப் பல செய்திகளாகப் பிரிக்கப்படும்:
- பிரச்சாரத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு செய்திக்கும் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். எடுத்துக்காட்டாக, 200 எழுத்துகள் கொண்ட பிரச்சாரம் 2 செய்திகளாகக் கணக்கிடப்படும்.
- ஒவ்வொரு செய்தியும் உங்கள் மொத்தச் செய்திச் செலவுகளில் கணக்கிடப்படும்.
- லக்சம்பர்க்கைத் தவிர ஆதரிக்கப்படும் அனைத்து நாடுகளிலும் உள்ள உங்கள் வாடிக்கையாளர்கள், உள்ளடக்கத்தை ஒரு தொடர்ச்சியான செய்தியாகப் பெறுவார்கள். லக்சம்பர்க்கில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான ஒற்றைச் செய்தி எழுத்து வரம்பை மீறும் செய்திகள் பல செய்திகளாகப் பிரிக்கப்படும், அத்துடன் அவை ஒரே தொடர்ச்சியான செய்தியாகக் காட்டப்படாது.
செலவுகளைக் குறைக்க, நீங்கள் ஒரு பிரச்சாரத்தை உருவாக்கும்போது பின்வருவனவற்றைச் செய்யலாம்:
- உங்கள் செய்தியில் உள்ள URL-களைச் சுருக்க, இணைப்புகளைச் சுருக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- சிறப்பு எழுத்துகளை மாற்ற, தனிப்பயனாக்கப்பட்ட மதிப்புகளில் é மற்றும் ç போன்ற சிறப்பு எழுத்துகளை மாற்று என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக, "ç" என்பது "c" ஆக மாறும்.
உங்கள் செய்தியில் சிறப்பு எழுத்துகளை மாற்ற வேண்டாம் என நீங்கள் தேர்வுசெய்தால், எழுத்துகளின் எண்ணிக்கை 70 ஆக இருக்கும், மேலும் உங்கள் அனுப்பும் செலவுகள் அதிகரிக்கலாம். SMS மார்க்கெட்டிங் பிரச்சாரங்களுக்கான விலை நிர்ணயம் மற்றும் பில்லிங் பற்றி மேலும் அறிக.
SMS மார்க்கெட்டிங் அமைதி நேரங்கள்
தேவையற்ற நேரங்களில் வாடிக்கையாளர்களுக்கு சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகள் அனுப்பப்படுவதைத் தடுக்கும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்குவதை அமைதி நேரங்கள் உறுதி செய்கின்றன. இடத்தைப் பொறுத்து மாறுபடும் அமைதி நேரங்களில், உங்களால் விளம்பரச் செய்திகளை அனுப்ப முடியாது.
அமைதி நேரங்கள் உங்கள் வாடிக்கையாளர்களின் உள்ளூர் நேர மண்டலத்தை அடிப்படையாகக் கொண்டவை. அமைதி நேரங்களில் அனுப்பப்படும் செய்திகள் கைவிடப்படும், பின்னர் அமைதி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் முயற்சிக்கப்படும்.
கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியம்
கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் தினமும் 20:00 முதல் 08:00 வரை அமைதி நேரங்களாகும்.
அமெரிக்கா
அமெரிக்காவில் தினமும் 21:00 முதல் 08:00 வரை அமைதி நேரங்களாகும். இருப்பினும், பின்வரும் மாகாணங்களுக்கு விதிவிலக்குகள் உள்ளன:
| மாகாணம் | அமைதி நேரங்கள் |
|---|---|
| அலபாமா, புளோரிடா, லூசியானா, மேரிலாந்து, மிசிசிப்பி, ஓக்லஹோமா, ஓரிகான், டென்னசி, வாஷிங்டன் | தினமும் 20:00 முதல் 08:00 வரை |
| கனெக்டிகட், நெவாடா | தினமும் 20:00 முதல் 09:00 வரை |
| டெக்சாஸ் | திங்கள் முதல் சனி வரை 21:00 முதல் 09:00 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் 21:00 முதல் 12:00 வரையும் |