தேடலைப் பாதிக்கும் சிக்கல்

சில பயனர்களால் இப்போது தேடலைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். இதை நாங்கள் விசாரித்து வருகிறோம்.

SMS மார்க்கெட்டிங் பிரச்சாரங்களுக்கான விலை நிர்ணயம் மற்றும் பில்லிங்

Shopify Messaging-ஐப் பயன்படுத்தி நீங்கள் SMS பிரச்சாரங்களை அனுப்பும்போது, ஒரு குறுஞ்செய்திக்கான கட்டணம் விதிக்கப்பட்டு மாதாந்திர அடிப்படையில் பில் செய்யப்படும். ஒரு குறுஞ்செய்திக்கான கட்டணத்துடன், உங்கள் பிராந்தியம் மற்றும் நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளின் வகைகளைப் பொறுத்து பிற கட்டணங்களும் விதிக்கப்படும். நீங்கள் அமெரிக்கா அல்லது கனடாவுக்கு SMS மார்க்கெட்டிங் குறுஞ்செய்திகளை அனுப்பினால், உங்கள் டோல்-ஃப்ரீ எண்ணுக்கு மாதாந்திரக் கட்டணம் விதிக்கப்படும்.

ஒரு SMS குறுஞ்செய்திக்கான கட்டணங்கள்

ஒவ்வொரு பெறுநருக்கும் அனுப்பப்படும் SMS மார்க்கெட்டிங் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உங்களுக்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் டென்மார்க்கில் வசித்து, டென்மார்க்கில் உள்ள பெறுநர்களுக்கு 1,000 குறுஞ்செய்திகளை அனுப்பினால், உங்களுக்கு $80 USD பில் செய்யப்படும்.

நீங்கள் உருவாக்கும் SMS பிரச்சாரம் ஒரு செய்திக்கான எழுத்து வரம்புகளைத் தாண்டினால், வாடிக்கையாளருக்கு அது ஒரே தொடர்ச்சியான செய்தியாகக் காட்டப்படும், ஆனால் ஒவ்வொரு பெறுநருக்கும் பல செய்திகளுக்கான கட்டணம் உங்களிடம் வசூலிக்கப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் பிரச்சாரம் 100 பெறுநர்களுக்கு 2 செய்திகளாகப் பிரிக்கப்பட்டால், உங்களிடம் 200 செய்திகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

தானியங்குச் செய்திக் கட்டணங்கள்

உங்களின் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களுக்கு மட்டுமின்றி, பின்வரும் வகையான தானியங்குச் செய்திகளுக்கும் ஒவ்வொரு SMS-க்கும் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்:

  • புதிய சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படும் உறுதிப்படுத்தல் செய்திகள்
  • செயல்படுத்தப்பட்டிருக்கும் போது அனுப்பப்படும் இரட்டை விருப்பத்தேர்வுச் செய்திகள்
  • "INFO" அல்லது "HELP" போன்ற கோரிக்கைகளை வாடிக்கையாளர்கள் அனுப்பும்போது அதில் உள்ள முக்கியச் சொற்களுக்கு அனுப்பப்படும் பதில்கள்

சோதனைச் செய்திகள்

நீங்கள் ஒரு வாரத்திற்கு 25 சோதனைச் செய்திகள் வரை இலவசமாக அனுப்பலாம். நீங்கள் பல செய்திகளாக அனுப்பப்படும் பிரச்சாரத்தைச் சோதித்தால், ஒவ்வொரு செய்தியும் உங்களின் இலவசச் சோதனைச் செய்திகளில் கணக்கிடப்படும்.

ஒரு செய்திக்கான விலை

ஆதரிக்கப்படும் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு SMS-க்கான விலை பின்வரும் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டிற்குமான SMS மார்க்கெட்டிங் பிரச்சாரச் செய்திகளின் விலை நிர்ணயம்
நாடுஒரு SMS-க்கான விலை (USD மதிப்பில்)
ஆஸ்திரியா$0.092 USD
கனடா$0.025 USD
டென்மார்க்$0.08 USD
பின்லாந்து$0.108 USD
இத்தாலி$0.075 USD
லக்ஸம்பர்க்$0.13 USD
போலந்து$0.041 USD
போர்ச்சுகல்$0.045 USD
ஸ்பெயின் (இடைநிறுத்தப்பட்டது)$0.06 USD
ஸ்வீடன்$0.072 USD
யுனைடெட் கிங்டம்$0.06 USD
அமெரிக்கா$0.012 USD

டோல் ஃப்ரீ எண் கட்டணங்கள்

அமெரிக்கா மற்றும் கனடாவில் SMS மார்க்கெட்டிங்கிற்குப் பயன்படுத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு டோல் ஃப்ரீ எண்ணுக்கும் மாதாந்திரக் கட்டணமாக $2.15 USD பொருந்தும். உங்களின் டோல் ஃப்ரீ எண் செயல்படுத்தப்பட்ட பிறகு அதற்கான பில்லிங் தொடங்கும்.

உங்கள் டோல் ஃப்ரீ எண் இனி உங்களுக்கு வேண்டாம் எனில், உங்கள் இலக்கு SMS நாடுகளில் இருந்து கனடா மற்றும் அமெரிக்காவை அகற்றிவிடவும்.

Shopify Messaging SMS கட்டணங்களைப் பார்த்தல்

ஏதேனும் SMS மார்க்கெட்டிங் செலவுகள் இருந்தால், அவை Messaging ஆக உங்கள் Shopify பில்லில் சேர்க்கப்படும். ஒவ்வொரு SMS பிரச்சாரத்தின் செலவு குறித்த விவரங்களைப் பார்க்க, உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > பில்லிங் என்பதற்குச் சென்று, அதற்கான பில்லிங் காலத்திற்கான விவரங்களைப் பார் என்பதைக் கிளிக் செய்யவும்.

மாதாந்திரச் செலவு வரம்பை அமைத்தல்

உங்கள் மொத்த Shopify Messaging செலவுகள் நீங்கள் அமைத்த தொகையை எட்டும்போது மின்னஞ்சல் அறிவிப்பைப் பெற, மாதாந்திரச் செலவு வரம்பை அமைக்கலாம். இந்த வரம்பு உங்கள் மின்னஞ்சல், SMS மற்றும் WhatsApp போன்றவற்றின் ஒட்டுமொத்தச் செலவுக்கும் பொருந்தும்.

உங்களின் மாதாந்திரச் செலவு விழிப்பூட்டலைப் பார்க்கும்போது, உங்கள் மாதாந்திரச் செலவுகள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில் உங்களின் செலவுகள் ஒவ்வொரு சேனல் மற்றும் ஆதாரம் வாரியாகப் பிரித்துக் காண்பிக்கப்படும்.