Shopify Messaging மூலம் WhatsApp சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை உருவாக்குதல்

உங்கள் ஸ்டோரிலிருந்து WhatsApp சந்தைப்படுத்தலைப் பெற விருப்பம் தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மெசேஜ்களை அனுப்ப, Shopify Messaging-இல் WhatsApp சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் மெசேஜைத் தொடங்க ஒரு வார்ப்புருவைப் பயன்படுத்தவும், பின்னர் அதை உங்கள் பார்வையாளர்களுக்கு ஏற்பத் தனிப்பயனாக்கவும்.

வாடிக்கையாளர்கள் செக்அவுட், கார்ட் அல்லது தயாரிப்பு உலாவுதலைக் கைவிடும்போது நீங்கள் தானாகவே மெசேஜ்களை அனுப்பலாம். சந்தைப்படுத்தல் தன்னியக்கமாக்கல்கள் குறித்து மேலும் அறிக.

WhatsApp சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை உருவாக்கத் தயார்செய்தல்

உங்களது முதல் WhatsApp சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை உருவாக்குவதற்கு முன், பின்வரும் செயல்களை நிறைவுசெய்யவும்:

Shopify Messaging-க்கான WhatsApp மெசேஜ் வார்ப்புருக்கள்

WhatsApp சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை உருவாக்கும்போது, பின்வரும் வார்ப்புருக்களிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்:

Shopify Messaging-இல் கிடைக்கும் WhatsApp சந்தைப்படுத்தல் மெசேஜ் வார்ப்புருக்கள்
வார்ப்புருவிளக்கம்
மீண்டும் இருப்பில் உள்ளதுபிரபலமான ஒரு உருப்படி மீண்டும் கிடைக்கிறது என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கவும்.
வெற்று WhatsAppதொடக்கத்திலிருந்து பிரத்தியேக மெசேஜை எழுதுவதற்கான ஒரு வெற்றுத் தொடக்கப் புள்ளி.
வரவிருக்கும் விற்பனைவிற்பனை அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமான விளம்பரத்தை அறிவிக்கவும்.
தயாரிப்புக் காட்சிபுதிதாக வந்த ஒரு தயாரிப்பு அல்லது சிறப்புத் தயாரிப்பை முன்னிலைப்படுத்திக் காட்டவும்.
விஐபி-க்களுக்கு (VIP) பிரத்யேகமானதுசிறந்த வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டிய அணுகல் அல்லது பிரத்யேகச் சலுகைகளை அளித்து வெகுமதியளிக்கவும்.

WhatsApp சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை உருவாக்குதல்

Shopify Messaging-ஐப் பயன்படுத்தி ஒரு WhatsApp சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் வார்ப்புருவிற்கு Meta ஒப்புதல் அளித்ததும், ஒரு மெசேஜைச் சோதித்து, அதை அனுப்புவதற்கு நீங்கள் திட்டமிடலாம்.

நீங்கள் WhatsApp பிரச்சாரத்தை உருவாக்கும்போது, விரைவான பதிலளிப்புப் பொத்தான் ஒன்றையும் சேர்க்கலாம்; இதன்மூலம், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட முக்கியச் சொற்களைக் கொண்ட மெசேஜ்களுடன் உங்கள் பிரச்சாரத்திற்குப் பதிலளித்தால், அவர்கள் உங்கள் ஸ்டோரிலிருந்து ஒரு தானியங்குப் பதிலைப் பெறுவார்கள். முக்கியச் சொல் பதில்களை அமைப்பது பற்றி மேலும் அறிக.

உங்கள் ஸ்டோர் பெயர் மற்றும் குழுவிலகுவதற்கான URL ஆகியவை ஒவ்வொரு பிரச்சாரத்திலும் இயல்பாகவே சேர்க்கப்படும். WhatsApp சந்தைப்படுத்தலுக்கு விருப்பம் தெரிவித்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உங்களால் WhatsApp சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை அனுப்ப முடியும். மேலும் தகவலுக்கு, WhatsApp-க்கான சந்தைப்படுத்தல் ஒப்புதலை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Messaging என்பதற்குச் செல்லவும்.

  2. மெசேஜை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. WhatsApp என்பதைத் தேர்ந்தெடுத்து, ஒரு WhatsApp வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. மெசேஜ் பெயர் புலத்தில், உங்கள் பிரச்சாரத்திற்கான பெயரை உள்ளிடவும். இந்தப் பெயர் உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படாது.

  5. இவருக்கு அனுப்பு கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, மெசேஜை அனுப்புவதற்கான வாடிக்கையாளர் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. விருப்பத்தேர்வு: உங்கள் மெசேஜில் ஒரு ஹெடரைச் சேர்க்க, ஹெடர் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

  • உரை மட்டுமே உள்ள ஹெடரை உருவாக்க, உரை என்பதைத் தேர்ந்தெடுத்து, 60 எழுத்துகள் வரையிலான உங்கள் ஹெடர் உரையை உள்ளிடவும்.
  • ஒரு பட ஹெடரை உருவாக்க, படம் என்பதைத் தேர்ந்தெடுத்து, ஒரு படக் கோப்பைப் பதிவேற்றவும்.
  • தயாரிப்பு ஹெடரை உருவாக்க, தயாரிப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஹெடருக்கான தயாரிப்பைத் தேர்வுசெய்ய தயாரிப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. Body பிரிவில், உங்கள் மெசேஜுக்காக 1,024 எழுத்துகள் வரை சேர்க்கவும்.
  2. பொத்தான்கள் பிரிவில், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து பொத்தான் வகையைத் தேர்ந்தெடுத்து, பின்வருமாறு பொத்தானை உள்ளமைக்கவும்:
  • பிரத்தியேகம்: லேபிள் மற்றும் URL புலங்களில், உங்கள் பட்டன் லேபிளையும் URL-ஐயும் உள்ளிடவும்.
  • ஃபோன் எண்ணுக்கு அழை: லேபிள் மற்றும் ஃபோன் எண் புலங்களில், உங்கள் பட்டன் லேபிளையும் ஃபோன் எண்ணையும் உள்ளிடவும்.
  • தள்ளுபடிக் குறியீடு: லேபிள் புலத்தில், உங்கள் பட்டன் லேபிளை உள்ளிட்டு, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு தள்ளுபடிக் குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
  • விரைவான பதிலளிப்பு: வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் அனுப்ப விரும்பும் விரைவான பதிலளிப்பைப் பொறுத்து, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
    • உங்கள் முக்கியச் சொல் பதிலளிப்புகள் அமைப்புகளில் நீங்கள் உருவாக்கிய, முன்பே உள்ள விரைவான பதிலளிப்பைப் பயன்படுத்த, முக்கியச் சொல் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
    • புதிய முக்கியச் சொல்லைச் சேர்க்க, முக்கியச் சொல் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து புதிய முக்கியச் சொல்லைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுத்து, முக்கியச் சொல் மற்றும் பதிலளிப்பு ஆகியவற்றை உள்ளிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. விருப்பத்தேர்வு: மற்றொரு பொத்தானைச் சேர்க்க, பொத்தானைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, முந்தைய படியை மீண்டும் செய்யவும். உங்கள் மெசேஜில் 2 பிரத்தியேகப் பொத்தான்கள் மற்றும் 1 தள்ளுபடிக் குறியீட்டுப் பொத்தான் உட்பட 10 பொத்தான்கள் வரை சேர்க்கலாம். பல விரைவான பதிலளிப்புப் பொத்தான்களைச் சேர்த்தால், அவை மெசேஜின் மேல் அல்லது கீழ் பகுதியில் ஒன்றாகத் தொகுக்கப்பட வேண்டும்.
  2. ஒப்புதலுக்கு அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும். Meta-விடமிருந்து ஒப்புதல் பெற 24 மணிநேரம் வரை ஆகலாம். உங்கள் வார்ப்புரு அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் WhatsApp பிரச்சாரத்தைத் திட்டமிடலாம் அல்லது சோதிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட WhatsApp பிரச்சாரத்தைத் திட்டமிடுங்கள் அல்லது சோதியுங்கள்

Meta உங்கள் WhatsApp வார்ப்புருவை அங்கீகரித்ததும், நீங்கள் ஒரு சோதனை மெசேஜை அனுப்பலாம் அல்லது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு WhatsApp மூலம் பிரச்சாரத்தை அனுப்பத் திட்டமிடலாம். ஒரு வாரத்திற்கு 25 சோதனை மெசேஜ்கள் வரை அனுப்பலாம்.

உங்கள் பிரச்சாரத்தைத் திட்டமிடும்போது, மதிப்பிடப்பட்ட செலவு காட்டப்படும். WhatsApp சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களுக்கான விலை நிர்ணயம் மற்றும் பில்லிங் பற்றி மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், செயலிகள் > Messaging என்பதற்குச் செல்லவும்.

  2. எனது வார்ப்புருக்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. விருப்பத்தேர்வு: திட்டமிடுவதற்கு முன்பு உங்கள் மெசேஜைச் சோதிக்க, சோதனையை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் சோதனை மெசேஜை யாருக்கு அனுப்ப விரும்புகிறீர்களோ அந்த ஃபோன் எண்களை உள்ளிட்டு, அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் பிரச்சாரத்தைத் திட்டமிடத் தயாராக இருக்கும்போது, திட்டமிட்டு அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. உரையாடல் பெட்டியில், அனுப்பும் தேதி மற்றும் அனுப்பும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. திட்டமிடு என்பதைக் கிளிக் செய்யவும்.