WhatsApp சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களுக்கான விலை நிர்ணயம் மற்றும் பில்லிங்

Shopify Messaging-ஐப் பயன்படுத்தி WhatsApp செய்திகளை நீங்கள் அனுப்பும்போது, ஒரு செய்திக்கு எனத் தனி கட்டணம் வசூலிக்கப்படும், மேலும் அதற்கான பில் மாதாந்திர அடிப்படையில் அனுப்பப்படும். உங்கள் பிராந்தியத்தில் சந்தைப்படுத்தல் செய்திகள் மற்றும் சேவைச் செய்திகளுக்கு வெவ்வேறு கட்டணங்களில் பில் செய்யப்படும்.

WhatsApp செய்திக் கட்டணங்களின் வகைகள்

WhatsApp செய்தியனுப்பலுக்கு உங்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம், நீங்கள் அனுப்பும் செய்தியின் வகையைப் பொறுத்தது.

சந்தைப்படுத்தல் செய்திகள்

பின்வரும் வகையான WhatsApp செய்திகளுக்கு, உங்கள் பிராந்தியத்திற்கான சந்தைப்படுத்தல் செய்திக் கட்டணம் வசூலிக்கப்படும்:

  • WhatsApp சந்தைப்படுத்தல் பிரச்சாரம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் அனுப்பும் செய்திகள்
  • புதிய சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படும் உறுதிப்படுத்தல் செய்திகள்
  • கோரிக்கைகளை அனுப்பும் வாடிக்கையாளர்களின் INFO அல்லது HELP போன்ற முக்கியச் சொற்களுக்கான தானியங்குப் பதில்கள்

நீங்கள் வாரத்திற்கு 25 சோதனைச் செய்திகள் வரை இலவசமாக அனுப்பலாம்.

சேவைச் செய்திகள்

உங்களின் செய்திகளில் ஒன்றிற்கு வாடிக்கையாளர் பதிலளிக்கும்போது, 24 மணிநேர வாடிக்கையாளர் சேவைச் சாளரம் திறக்கப்படும். வாடிக்கையாளர் சேவைக் கோரிக்கைகளுக்கான உங்களின் பதில்கள் சேவைச் செய்திகளாகக் கருதப்படும். வாடிக்கையாளர் அளிக்கும் ஒவ்வொரு அடுத்தடுத்த பதிலும் 24 மணிநேர வாடிக்கையாளர் சேவைச் சாளரத்தின் நேர அளவீட்டை மீட்டமைக்கும்.

உங்களின் WhatsApp கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பிளாட்ஃபார்ம்களிலும், ஒரு WhatsApp Business கணக்கிற்கு மாதத்திற்கு 1,000 சேவைச் செய்திகளை இலவசமாக அனுப்பலாம். 1,000 இலவச செய்திகள் என்ற வரம்பிற்குப் பிறகு நீங்கள் அனுப்பும் எந்தவொரு சேவைச் செய்திக்கும், உங்கள் பிராந்தியத்திற்கான சேவைச் செய்திக் கட்டணத்தில் பில் செய்யப்படும்.

ஒரு செய்திக்கான விலை

ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு WhatsApp சந்தைப்படுத்தல் செய்தி மற்றும் சேவைச் செய்திக்கான விலை அறிய, பின்வரும் அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்.

ஒவ்வொரு பிராந்தியத்திற்குமான WhatsApp சந்தைப்படுத்தல் மற்றும் சேவைச் செய்திகளுக்கான விலை நிர்ணயம்
நாடு அல்லது பிராந்தியம்ஒரு சந்தைப்படுத்தல் செய்திக்கான விலைஒரு சேவைச் செய்திக்கான விலை
அர்ஜென்டினா$0.124 USD$0.0260 USD
பிரேசில்$0.125 USD$0.0068 USD
கனடா$0.050 USD$0.0034 USD
சிலி$0.178 USD$0.0200 USD
கொலம்பியா$0.031 USD$0.0008 USD
எகிப்து$0.129 USD$0.0036 USD
பிரான்ஸ்$0.172 USD$0.0300 USD
ஜெர்மனி$0.248 USD$0.0550 USD
ஹாங்காங்$0.146 USD$0.0260 USD
ஹங்கேரி$0.172 USD$0.0350 USD
இந்தியா$0.024 USD$0.0014 USD
இந்தோனேசியா$0.082 USD$0.0250 USD
இஸ்ரேல்$0.071 USD$0.0053 USD
இத்தாலி$0.126 USD$0.0300 USD
மலேசியா$0.172 USD$0.0140 USD
மெக்சிகோ$0.076 USD$0.0085 USD
நெதர்லாந்து$0.290 USD$0.0500 USD
நைஜீரியா$0.103 USD$0.0067 USD
பாகிஸ்தான்$0.095 USD$0.0100 USD
பெரு$0.141 USD$0.0200 USD
போலந்து$0.172 USD$0.0122 USD
கத்தார்$0.068 USD$0.0120 USD
ரஷ்யா$0.160 USD$0.0400 USD
சவூதி அரேபியா$0.100 USD$0.0107 USD
சிங்கப்பூர்$0.146 USD$0.0160 USD
தென்னாப்பிரிக்கா$0.076 USD$0.0076 USD
ஸ்பெயின்$0.112 USD$0.0200 USD
துருக்கியே$0.022 USD$0.0009 USD
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்$0.100 USD$0.0157 USD
ஐக்கிய இராச்சியம்$0.106 USD$0.0220 USD
ஆப்பிரிக்காவின் பிற பகுதிகள்$0.045 USD$0.0040 USD
ஆசிய பசிபிக் பகுதியின் பிற பகுதிகள்$0.146 USD$0.0113 USD
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பிற பகுதிகள்$0.172 USD$0.0212 USD
லத்தீன் அமெரிக்காவின் பிற பகுதிகள்$0.148 USD$0.0113 USD
மத்திய கிழக்கின் பிற பகுதிகள்$0.068 USD$0.0091 USD
மேற்கு ஐரோப்பாவின் பிற பகுதிகள்$0.118 USD$0.0171 USD
மற்றவை$0.121 USD$0.0077 USD

Shopify Messaging WhatsApp கட்டணங்களைப் பார்த்தல்

எந்தவொரு WhatsApp சந்தைப்படுத்தல் செலவுகளும் உங்கள் Shopify பில்லில் WhatsApp ஆகச் சேர்க்கப்படும். ஒவ்வொரு WhatsApp பிரச்சாரத்தின் செலவு குறித்த விவரங்களைப் பார்க்க, உங்கள் Shopify நிர்வாகியின் பில்லிங் பிரிவில் உள்ள உங்கள் பில்லுக்கு விவரங்களைப் பார் என்பதைக் கிளிக் செய்யவும்.

மாதாந்திரச் செலவு வரம்பை அமைத்தல்

உங்களின் மொத்த Shopify Messaging செலவுகள் நீங்கள் அமைத்த தொகையை எட்டும்போது மின்னஞ்சல் அறிவிப்பைப் பெற, நீங்கள் மாதாந்திரச் செலவு வரம்பை அமைக்கலாம். இந்த வரம்பு மின்னஞ்சல், SMS மற்றும் WhatsApp ஆகியவற்றில் உள்ள உங்களின் ஒருங்கிணைந்த செலவுக்குப் பொருந்தும்.

உங்கள் மாதாந்திரச் செலவு எச்சரிக்கையைப் பார்க்கும்போது, சேனல் மற்றும் ஆதாரம் வாரியாக உங்கள் செலவுகள் பிரிக்கப்படும், இதன்மூலம் உங்கள் மாதாந்திரச் செலவுகள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.