சமூக ஊடகங்களில் இடுகையிடுதல்
சமூக ஊடகங்களில் இடுகையிடுவது உங்கள் ஆன்லைன் ஸ்டோரை விளம்பரப்படுத்தவும் வாடிக்கையாளர்களுடன் இணையவும் ஒரு சிறந்த வழியாக இருக்கும். உங்கள் பிராண்டை உருவாக்க உதவவும், உங்கள் SEO-ஐ மேம்படுத்தவும் உங்கள் ஸ்டோருக்கான டிராஃபிக்கை அதிகரிக்கவும் உங்கள் வணிகத்திற்குச் சமூக ஊடகக் கணக்குகளை நீங்கள் உருவாக்கலாம்.
சமூக ஊடகங்களில் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு நீங்களும் உங்கள் வாடிக்கையாளர்களும் பயன்படுத்தக்கூடிய பொத்தான்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள தயாரிப்புப் பக்கங்களிலும் வலைப்பதிவு இடுகைகளிலும் அடங்கும்.
இந்தப் பக்கத்தில்
சமூக ஊடகங்களில் உங்கள் தயாரிப்புப் பக்கத்தைப் பகிர்தல்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து சமூக ஊடகத் தளங்களில் உங்கள் தயாரிப்புப் பக்கத்தை நேரடியாகப் பகிரலாம். நீங்கள் உங்கள் தயாரிப்புப் பக்கத்தின் இணைப்பை நகலெடுத்து, பிற சமூக ஊடகத் தளங்களிலோ வேறெங்கிலுமோ பகிரவும் முடியும்.
பின்வரும் சமூக ஊடகத் தளங்களில் உங்கள் தயாரிப்புப் பக்கத்தை நேரடியாகப் பகிரலாம்:
சமூக ஊடகங்களில் உங்கள் தயாரிப்புப் பக்கத்தைப் பகிர்வதற்கு முன்பு, உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான தனிப்பட்ட பயன்முறையைச் செயலிழக்கச் செய்ய வேண்டும். உங்கள் தயாரிப்புப் பக்கத்தைப் பகிர்வதற்கு முன், சமூக ஊடகக் கணக்கில் நீங்கள் உள்நுழையவில்லை என்றால், உள்நுழையுமாறு உங்களிடம் கேட்கப்படும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
சமூக ஊடகங்களில் நீங்கள் பகிர விரும்பும் தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.
பகிர் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் தயாரிப்புப் பக்கத்தைப் பகிர விரும்பும் சமூக ஊடகத் தளத்தைக் கிளிக் செய்யவும். இணைப்பை நகலெடு என்பதைக் கிளிக் செய்து, எந்தவொரு சமூக ஊடகத் தளத்திலும் உங்கள் தயாரிப்புப் பக்கத்தின் இணைப்பை மேனுவலாக ஒட்டலாம்.
வலைப்பதிவு இடுகைகளைச் சமூக ஊடகங்களில் பகிர்தல்
வலைப்பதிவில் உங்கள் வணிகம் மற்றும் தயாரிப்புகள் குறித்து இடுகையிடும்போது ஆன்லைனில் உங்கள் இருப்பை அதிகரிக்கிறீர்கள். இது தேடுபொறிகள் உங்கள் தளத்தைக் கண்டறிய உதவுகிறது. உங்கள் Shopify ஆன்லைன் ஸ்டோரில் வலைப்பதிவைச் சேர்ப்பது குறித்து மேலும் அறிக.
உங்களுக்கு ஏற்கனவே ஆன்லைன் பார்வையாளர்கள் இருந்து, அங்கு விற்பனையைத் தொடங்க விரும்பினால், மற்ற தளங்களில் உள்ள வலைப்பதிவு இடுகைகளில் உங்கள் Shopify தயாரிப்புகளைச் சேர்க்க வாங்கு பொத்தான் விற்பனைச் சேனலைப் பயன்படுத்தவும்.
சமூக ஊடகங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்த, உங்கள் தயாரிப்புகளைப் பகிர்வதோடு நின்றுவிடக்கூடாது. பிராண்ட் விசுவாசத்தை உருவாக்கவும் உங்கள் வணிகம் குறித்து வாடிக்கையாளர்களைப் பேச ஊக்கப்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்குப் பொருத்தமான வலைப்பதிவு உள்ளடக்கத்தை உருவாக்கிப் பகிரவும்.
பகிர்தல் பொத்தான்கள் வெளியிடப்பட்ட வலைப்பதிவு இடுகைகளில் காட்டப்படும்.
உங்கள் சமூக ஊடகப் புரொஃபைல்களை இணைத்தல்
உங்கள் பிராண்ட் உத்தியில் சமூக ஊடகச் சந்தைப்படுத்தல் உள்ளடங்கியிருந்தால், சமூக ஊடகங்களில் வாடிக்கையாளர்கள் உங்கள் வணிகத்துடன் ஈடுபட நீங்கள் உதவ விரும்பலாம். சில தீம்கள் சமூக ஊடகப் பொத்தான்களுடன் வருவதால் வாடிக்கையாளர்களை உங்கள் சமூக ஊடகப் புரொஃபைல்களுக்கு நேரடியாக அனுப்பலாம். இந்த அம்சத்தைக் கொண்ட தீம்களைப் பார்க்க, நீங்கள் Theme Store இல் சமூக ஊடகங்களைத் தேடலாம்.
மேலும் பல சமூக ஊடக அம்சங்களைச் சேர்த்தல்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் வேறு சமூக ஊடக அம்சங்களைச் சேர்க்க, உங்கள் தேவைக்கு ஏற்றதைச் செய்யும் செயலியை Shopify App Store இல் தேடவும் அல்லது உங்கள் தீம் குறியீட்டைத் தனிப்பயனாக்கவும்.