உங்கள் பிரத்தியேகப் பிக்சல்களை நிர்வகியுங்கள்

உங்களின் Shopify நிர்வாகியில் உள்ள வாடிக்கையாளர் நிகழ்வுகள் பகுதியில் உங்களின் பிரத்தியேகப் பிக்சல்களை நீங்கள் நிர்வகிக்கலாம். உங்கள் Shopify ஸ்டோரில் பிரத்தியேகப் பிக்சலைச் சேர்ப்பதற்கு முன்பாக, உங்கள் பிரத்தியேகப் பிக்சலுக்கான குறியீட்டை நீங்கள் உருவாக்க வேண்டும்.

பிரத்தியேகப் பிக்சலைச் சேர்

உங்கள் பிரத்தியேகப் பிக்சலுக்கான குறியீட்டை உருவாக்கிய பிறகு, அதை உங்களின் Shopify ஸ்டோரில் சேர்க்கலாம்.

வாடிக்கையாளர் நிகழ்வுகள் இருமுறை கணக்கிடப்படுவதைத் தவிர்க்க, பிரத்தியேகப் பிக்சலைச் சேர்க்கும் முன்பு ஏற்கனவே உள்ள ஏதேனும் பிக்சல்களை அகற்றவும் அல்லது மாற்றியமைக்கவும். ஏற்கனவே உள்ள பிக்சல் குறியீடு, theme.liquid, checkout.liquid (Shopify Plus திட்டத்திலுள்ள ஸ்டோர்களில் மட்டும்) மற்றும் உங்களின் செக்அவுட் அமைப்புகளில் உள்ள கூடுதல் ஸ்கிரிப்டுகள் என அது இருக்கும் எந்த இடத்திலிருந்தும் அகற்றுதல் வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் நிகழ்வுகள் என்பதற்குச் செல்லவும்.

  2. உங்கள் பிக்சலுக்குத் தனித்துவமான பெயரைக் கொடுக்கவும். ஏற்கனவே உள்ள பிரத்தியேகப் பிக்சலின் பெயரை நீங்கள் உள்ளிட்டால், உங்கள் பிக்சலுக்கு வேறு பெயரைக் கொடுக்குமாறு கேட்கப்படுவீர்கள்.

  3. நிகழ்வு எடிட்டரைத் திறக்க, பிக்சலைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. விருப்பத்தேர்வு: வாடிக்கையாளர் தனியுரிமை பிரிவில், நீங்கள் மாற்றியமைக்க விரும்பும் அனுமதி மற்றும் தரவு விற்பனை அமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். செயலிப் பிக்சல் வாடிக்கையாளர் தனியுரிமையை நிர்வகித்தல் குறித்து மேலும் அறிக.

  5. உங்களின் பிரத்தியேக javascript பிக்சல் குறியீட்டை குறியீடு சாளரத்தில் ஒட்டவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் இப்போது உங்களின் பிரத்தியேகப் பிக்சலை இணைக்கத் தயாராக இருந்தால், உங்கள் நிகழ்வுகளைத் தடமறியத் தொடங்க பிக்சலை இணை என்பதைக் கிளிக் செய்யலாம்.

பிரத்தியேகப் பிக்சலை இணை

பிரத்தியேகப் பிக்சல் சேர்க்கப்பட்ட பிறகு, உங்கள் ஸ்டோருடன் பிக்சலை நீங்கள் இணைக்க வேண்டும், அப்போதுதான் வாடிக்கையாளர் நிகழ்வுகளை அதனால் தடமறியத் தொடங்க முடியும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் நிகழ்வுகள் என்பதற்குச் செல்லவும்.

  2. பிரத்தியேகப் பிக்சல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தற்போது இணைக்கப்படாத பிரத்தியேகப் பிக்சல்கள், இணைப்பு துண்டிக்கப்பட்ட பிக்சல்கள் எனும் தலைப்பின் கீழ் காண்பிக்கப்படும். தொடர்புடைய பிரத்தியேகப் பிக்சல் வரியில் இணை என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் பிக்சல் Shopify-இன் சேவை விதிமுறைகள் சார்ந்த சேவைத் தேவைகளைப் பூர்த்திசெய்கிறது என்பதை நீங்கள் உறுதிப்படுத்திய பிறகு, இணை என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரத்தியேகப் பிக்சலின் இணைப்பைத் துண்டி

நீங்கள் பிரத்தியேகப் பிக்சலைச் சேர்த்த நிகழ்வுகளைத் தடமறிவதை நிறுத்த விரும்பினால், உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் இருந்து பிக்சலை நீங்களே நேரடியாகத் துண்டிக்க வேண்டும். பிக்சலின் இணைப்பைத் துண்டிப்பதால், பிக்சல் நீக்கப்படாது.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் நிகழ்வுகள் என்பதற்குச் செல்லவும்.

  2. பிரத்தியேகப் பிக்சல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் இணைப்பைத் துண்டிக்க விரும்பும் பிரத்தியேகப் பிக்சலில் இணைப்பைத் துண்டி என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரத்தியேகப் பிக்சலை நீக்கு

உங்களுக்கு இனி தேவையில்லாத பிரத்தியேகப் பிக்சல்களை நீங்கள் நீக்கலாம். பிரத்தியேகப் பிக்சலை நீக்கிய பின்பு அதை மீண்டும் பெற முடியாது, அதனால் சரியான பிக்சலைத்தான் நீக்குகிறீர்களா என்பதை உறுதிசெய்யவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் நிகழ்வுகள் என்பதற்குச் செல்லவும்.

  2. பிரத்தியேகப் பிக்சல்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் நீக்க விரும்பும் பிரத்தியேகப் பிக்சல் வரியில் உள்ள ... பொத்தானைக் கிளிக் செய்யவும்.

  4. நீக்கு என்பதைக் கிளிக் செய்து, பின்பு தோன்றும் உரையாடல் பெட்டியில் நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளை நிர்வகி

உங்கள் ஸ்டோரில் உள்ள ஒவ்வொரு பிரத்தியேகப் பிக்சல்களுக்குமான வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளை நீங்கள் நிர்வகிக்கலாம். பிக்சல்கள் எப்போது, எந்தெந்த நோக்கங்களுக்காகத் தரவைச் சேகரிக்கின்றன என்பதை உங்களின் வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளே தீர்மானிக்கின்றன. நீங்கள் சேகரிக்கும் வாடிக்கையாளர் தரவு உங்கள் இணையதளத்தில் உள்ள வாடிக்கையாளரின் நடத்தை குறித்த நுண்ணறிவுகளை வழங்க உதவும். குக்கீ அடிப்படையிலான வாடிக்கையாளர் தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வின் தாக்கம் குறித்து மேலும் அறிக.

பின்வரும் வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகள் உங்கள் பிரத்தியேகப் பிக்சல்களுக்குப் பொருந்தும்:

  • மார்க்கெட்டிங், பகுப்பாய்வு மற்றும் விருப்பத்தேர்வுகள் சார்ந்த நோக்கங்களுக்காக உங்கள் பிரத்தியேகப் பிக்சல் தரவைச் சேகரிப்பதற்குப் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் வாடிக்கையாளர் அனுமதி தேவையா என்பதைத் தீர்மானிக்க அனுமதி அமைப்பு உங்களை அனுமதிக்கிறது. உங்கள் அனுமதி அமைப்பின் அடிப்படையில் தரவைச் சேகரிப்பதற்கான வாடிக்கையாளர் ஒப்புதலைக் கோருவதற்கு, உங்கள் ஸ்டோரில் குக்கீ பேனரைச் சேர்க்க வேண்டும்.
  • குறிப்பிட்ட அதிகார வரம்புகளில் வழங்கப்பட்டுள்ளபடி, வாடிக்கையாளர் தமது தரவு விற்கப்படுவதிலிருந்து விலகுவதைத் தேர்வுசெய்துள்ள பட்சத்தில், உங்களின் பிரத்தியேகப் பிக்சல் தரவை எவ்வாறு சேகரிக்கிறது என்பதை நிர்வகிக்க தரவு விற்பனை அமைப்பு உங்களை அனுமதிக்கிறது. தரவு விற்பனையிலிருந்து விலகுதல் குறித்து மேலும் அறிக.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் நிகழ்வுகள் என்பதற்குச் செல்லவும்.

  2. பிரத்தியேகப் பிக்சல்கள் தாவலைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் நிர்வகிக்க விரும்பும் பிரத்தியேகப் பிக்சலைக் கிளிக் செய்யவும்.

  4. விருப்பத்தேர்வு: வாடிக்கையாளர் தனியுரிமை பிரிவில், அனுமதி என்பதைக் கிளிக் செய்து, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • உங்களின் பிரத்தியேகப் பிக்சல் தரவைச் சேகரிப்பதற்கு வாடிக்கையாளர் அனுமதியைக் கோர, தேவைப்படுகிறது என்பதைத் தேர்ந்தெடுத்து, எந்தெந்த தரவு நோக்கங்களுக்கு வாடிக்கையாளர் அனுமதி தேவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • உங்களின் பிரத்தியேகப் பிக்சல் தரவைச் சேகரிப்பதற்கு வாடிக்கையாளர் அனுமதி தேவையில்லை எனில், தேவைப்படாது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. விருப்பத்தேர்வு: வாடிக்கையாளர் தனியுரிமை பிரிவில், தரவு விற்பனை என்பதைக் கிளிக் செய்து, உங்களின் பிரத்தியேகப் பிக்சலுக்கு அமைக்க விரும்பும் தரவு விற்பனைச் சேகரிப்பு அனுமதிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.