ஃப்ளாஷ் விற்பனைகள்

ஃப்ளாஷ் விற்பனைகள் குறுகிய காலக்கட்டத்தில் அதிகளவிலான விற்பனையை வழங்கலாம், ஆனால் செக்அவுட்களில் அதிக அளவிலான அதிகரிப்பை எதிர்பார்க்கும்போது அவற்றுக்குத் தயாரிப்பு தேவைப்படலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீங்கள் ஒரு ஃப்ளாஷ் விற்பனையை நடத்தும்போதும் சில நிமிடங்களில் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் செக்அவுட்டைத் தொடங்குவார்கள் என நீங்கள் எதிர்பார்க்கும்போதும் மட்டுமே சிறப்புத் தயாரிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, Shadi வழக்கமாக ஒரு நாளைக்கு 10,000 பார்வையாளர்களையும் 100 ஆர்டர்களையும் பெறுவார். அவர் ஒரு ஃப்ளாஷ் விற்பனையை நடத்துகிறார், 24 மணிநேரப் பின்னணியில் 50,000 பார்வையாளர்களையும் 1000 ஆர்டர்களையும் எதிர்பார்க்கிறார். இந்த விற்பனைக்கு எந்தவொரு சிறப்புத் தயாரிப்பும் தேவையில்லை. பின்னர், Shadi இன் தொழில் ஒரு பெரிய வலையமைப்பில் இடம்பெறுகிறது, அதன் மூலம் பயனடைய அவர் ஒரு ஃப்ளாஷ் விற்பனையை அமைக்கிறார். சரக்கு இருப்பிற்காகப் போட்டியிடும் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் தேவை கணிசமாக அதிகரிக்கும் என்றும் ஒவ்வொரு முறை சரக்கு இருப்பு சேர்க்கப்படும்போதும் நிமிடங்களில் விற்றுத்தீர்ந்துவிடும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். அது கணிசமான அதிகரிப்பு என்பதால் ஃப்ளாஷ் விற்பனை சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய அதற்குச் சில தயாரிப்புகள் தேவைப்படுகின்றன.

முன்கூட்டியே திட்டமிடுங்கள்

உங்கள் ஃப்ளாஷ் விற்பனை உங்களுக்கு முன்கூட்டியே தயாரிப்புத் தேவைப்படுகிற அளவுக்குப் போதுமான ஆர்டர்களை உருவாக்கும் என நீங்கள் தீர்மானித்தால், கூடிய விரைவில் திட்டமிடத் தொடங்குங்கள். சாத்தியமாகும்போது, உங்களுக்குப் போதுமான நேரம் இருப்பதை உறுதிசெய்ய உங்களின் தயாரிப்புகளை வாரங்களுக்கு முன்பே தொடங்குங்கள்.

முன்பார்வைத் தயாரிப்புகளைத் தயார்ப்படுத்துங்கள்

உங்கள் ஃப்ளாஷ் விற்பனையின்போது வழங்கவிருக்கும் தயாரிப்புகளின் முன்னோட்டத்தை வழங்க விரும்பினால், நிகழ்வு தொடங்கும் போது நீங்கள் உண்மையில் விற்பனைக்காக வழங்கவிருக்கும் தயாரிப்புகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமான முன்னோட்டத் தயாரிப்புகளை உருவாக்குங்கள். உங்களிடம் இருக்கும் சரக்கு இருப்பைக் கொண்டு உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் தயாரிப்புகளை வெளியிடும்போது, வாடிக்கையாளர்கள் அந்தத் தயாரிப்புகளை வைத்து செக்அவுட்டை முடிக்க முடியும். சில தீம் மாற்றங்களால் கார்ட்டில் சேர் செயல்களை மறைக்க முடியும் என்றாலும், வாடிக்கையாளர்கள் வாங்குவதைத் தடுக்க இவற்றை நம்பியிருக்கக் கூடாது.

சர்வதேச விற்பனைக்கான தயாரிப்புத் தகவலை மதிப்பாய்வு செய்யுங்கள்

நீங்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்து, சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலித்தால், உங்கள் விற்பனை நிறைவடையும் வரை சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகள் வசூலிப்பதை முடக்குவது குறித்துப் பரிசீலிக்கவும். உங்கள் விற்பனையின்போது சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளை வசூலிப்பது என நீங்கள் முடிவெடுத்தால், பின்வரும் தகவல் இருப்பதை உறுதிசெய்ய உங்கள் விற்பனைத் தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்யவும்:

உங்கள் விற்பனைத் தயாரிப்புகளில் இந்தப் புலங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதை உறுதிசெய்வது சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிச் செலவுகளை மதிப்பிட உதவுகிறது. உங்கள் தயாரிப்பில் HS குறியீடு அல்லது தயாரிப்பு வகை இல்லையெனில், அந்தத் தயாரிப்புக்கான சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரி ஆகியவை கணக்கிடப்படாது.

தனிப்பட்ட பயன்முறையைச் செயல்படுத்து

உங்கள் ஃப்ளாஷ் விற்பனையின்போது வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்குவதில் ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டால், தனிப்பட்ட பயன்முறையைச் செயல்படுத்துவதன் மூலம் உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான அணுகலைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தலாம். புதிய பார்வையாளர்கள் உங்கள் ஸ்டோரில் புதிய செக்அவுட்டை உருவாக்குவதை இது தடுக்கும், மேலும் ஏற்கனவே செக்அவுட் செயல்முறையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களின் கொள்முதலை முடிக்க முடியும்.

நிகழ்வு சார்ந்த சேகரிப்புகள் மற்றும் தயாரிப்புப் பக்கங்களைக் கொண்ட ஒரு தீமை உருவாக்குங்கள்

உங்களின் விற்பனைப் பொருட்களுக்காகப் பிரத்தியேகமாக ஒரு சேகரிப்பை உருவாக்குங்கள், அத்துடன் உங்களால் முடிந்தால், உங்களின் தயாரிப்புப் பக்கங்களைச் சிறப்பித்துக் காட்டும் வகையிலும் எளிதாக்கும் வகையிலும் ஒரு தீமை உருவாக்குங்கள். விற்பனையின்போது முறைப்படுத்தப்பட்ட சேகரிப்புகளையும் தயாரிப்புப் பக்கங்களையும் காண்பிப்பது, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிதான மற்றும் வேகமான செக்அவுட் அனுபவத்தை வழங்குகிறது. குறிப்பாக, பின்வரும் அமைப்புகளை முடக்குவது குறித்துப் பரிசீலியுங்கள்:

  • சேகரிப்பு வடிகட்டல் மெனுக்கள்
  • பரிந்துரைக்கப்படும் தயாரிப்புகள்
  • சமூக வலைப்பின்னல் ஃபீட்கள்
  • ஸ்லைடுஷோ அல்லது கரோசல் பார்வைகள்
  • பாப்-அப்கள் அல்லது அப்செல் செயல்பாடுகள்

பேமெண்ட்டுகளைக் கைமுறையாகப் பெறுங்கள்

நீங்கள் பேமெண்ட்டுகளைத் தானாகவே பெற்றால், ஃப்ளாஷ் விற்பனை நடைபெறும் காலத்தில் உங்கள் அமைப்புகளை பேமெண்ட்டுகளைக் கைமுறையாகப் பெறும் வகையில் மாற்றுவதற்குப் பரிசீலியுங்கள். பேமெண்ட்டுகளைக் கைமுறையாகப் பெறுவதன் மூலம் அதிக விற்பனை அல்லது ரத்துசெய்யப்பட்ட ஆர்டர்கள் நிகழ்வில் ஏற்படக்கூடிய அதிகப்படியான கிரெடிட் கார்டு கட்டணங்கள் தவிர்க்கப்படுவதோடு, பேமெண்ட் நிறைவடைந்து நிறைவேற்றச் செயல்முறை தொடங்குவதற்கு முன்னதாக ஆர்டர்கள் சட்டபூர்வமானவை தானா என்பதை மதிப்பாய்வு செய்து சரிபார்க்க உங்களை இது அனுமதிக்கிறது.

மூன்றாம் தரப்புச் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யுங்கள்

பெரிய அளவிலான ஃப்ளாஷ் விற்பனைகளுக்கு, உங்கள் ஸ்டோருக்கு வரும் டிராஃபிக்கில் ஏற்படும் அதிகரிப்பை உங்கள் மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்புகளால் கையாள முடிகிறதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

செயலிகள்

உங்கள் செக்அவுட் செயல்முறையில் மூன்றாம் தரப்புச் செயலிகளைச் சேர்த்தால், நீங்கள் எதிர்பார்க்கும் ஆர்டர்களின் அளவு மற்றும் உங்கள் விற்பனையின் கால அளவு குறித்த மதிப்பீட்டைக் கூறி டெவலப்பர்களைத் தொடர்புகொள்ளுங்கள். அவர்களின் செயலியால் எதைக் கையாள முடியும் என்பது குறித்த தகவலை அவர்களால் வழங்க முடியும். நீங்கள் எதிர்பார்க்கும் செக்அவுட்களின் அளவைச் செயலியால் ஆதரிக்க முடியுமா என்பதில் அவர்களுக்குச் சந்தேகம் இருந்தால், உங்கள் விற்பனை நடைபெறும் காலத்தில் அந்தச் செயலியை முடக்குவது குறித்துப் பரிசீலியுங்கள்.

ஷிப்பிங் செயலிகள்

அதிக அளவு டிராஃபிக் ஏற்படும் நிகழ்வுகளின்போது ஷிப்பிங் செயலிகள் பொதுவாகச் சரியாகச் செயல்படுவதில்லை. ஷிப்பிங் கட்டணங்கள் வழங்கப்படாவிட்டால் செக்அவுட்டை முடிக்க முடியாது என்பதால், உங்கள் விற்பனை நடைபெறும் காலத்தில் ஷிப்பிங் செயலிகளையும் கேரியரால் கணக்கிடப்படும் கட்டணங்களையும் முடக்குவதற்குப் பரிசீலியுங்கள். அதற்குப் பதிலாக, உங்கள் Shopify நிர்வாகியிலேயே நேரடியாகத் தனிப்பயன் நிலையான கட்டணங்களை அமைக்கவும். எடுத்துக்காட்டாக, உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கணக்கிடப்பட்ட ஷிப்பிங் கட்டணங்களை வழங்கும் ஒரு ஷிப்பிங் செயலி உங்கள் Shopify நிர்வாகியில் நிறுவப்பட்டிருந்தால், அந்தச் செயலியை முடக்கிவிட்டு, அதற்குப் பதிலாகத் தனிப்பயன் நிலையான கட்டணங்களைப் பயன்படுத்துவது குறித்துப் பரிசீலியுங்கள். தனிப்பயன் நிலையான கட்டணங்களைப் பயன்படுத்தினால், ஷிப்பிங் கட்டணங்கள் கணக்கிடப்படும் வரை உங்கள் வாடிக்கையாளர்கள் காத்திருக்கத் தேவையில்லை, அவர்கள் உடனே செக்அவுட்டை முடிக்கலாம்.

தனிப்பயன் செயலிகள்

உங்கள் ஸ்டோரில் தனிப்பயன் செயலிகளை நிறுவியிருந்தால், அவை முடிந்தவரை திறமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும், API அழைப்பு வீதம் போதுமானதாக உள்ளதா என்பதையும் உறுதிசெய்ய நீங்கள் அவற்றை மதிப்பாய்வு செய்ய வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கும் அளவை ஒரு செயலியால் கையாள முடியுமா என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை எனில், உங்கள் நிகழ்வு நடைபெறும் காலத்தில் அதனை முடக்குவது குறித்துப் பரிசீலியுங்கள்.

கட்டண வழங்குநர்கள்

நீங்கள் Shopify Payments என்பதைப் பயன்படுத்தவில்லை எனில், நீங்கள் எதிர்பார்க்கும் விற்பனை அளவை உங்கள் கட்டண வழங்குநரால் ஆதரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த அவரைத் தொடர்புகொள்ளவும். உங்களின் முதன்மைக் கட்டண வழங்குநரால் ஆர்டர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை எனில், இரண்டாவது கட்டண வழங்குநரை அமைப்பது குறித்துப் பரிசீலியுங்கள். செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்பதை உறுதிப்படுத்த, உங்கள் வழங்குநர்களை முன்கூட்டியே சோதித்துப்பார்ப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

வெளிப்புறக் கட்டண வழங்குநர்கள்

வெளிப்புறக் கட்டண வழங்குநர் என்பது வாடிக்கையாளர்களை Shopify-க்குப் புறம்பாகத் தங்களின் பேமெண்ட்டை முடிக்கச் செலுத்தும் ஒரு சேவையாகும், அத்துடன் இது தாமதமாகச் செலுத்துதல் அல்லது பகுதி பேமெண்ட்டுகளை அனுமதிக்கும் கட்டண விருப்பங்களை உள்ளடக்கியது. செக்அவுட்டை மூன்றாம் தரப்புச் சேவைக்கு அனுப்பி, மீண்டும் பூர்த்தி செய்யப்பட்ட கட்டணத் தகவலுடன் திரும்பப் பெறத் தேவைப்படும் நேரத்தின் காரணமாக, இந்தக் கட்டண விருப்பங்கள் வியாபாரப் பொருட்களின் அதிக விற்பனைக்கு வழிவகுக்கலாம். நீங்கள் வெளிப்புறக் கட்டண விருப்பத்தை வழங்கினால், உங்கள் விற்பனை நடைபெறும் காலத்தில் அதனை முடக்குவது குறித்துப் பரிசீலியுங்கள்.

தொடர்புடைய இணைப்புகள்