அதிகரித்த விற்பனையை நிர்வகித்தல்
ஆர்டர் அளவுகள் அதிகரிக்கும்போது, உங்களின் செயல்பாடுகளுக்கு அழுத்தம் ஏற்படலாம். தேவையைக் கையாளவும், உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கவும் பின்வரும் உத்திகளைப் பயன்படுத்தவும். அனைத்து உத்திகளும் உங்கள் வணிகத்திற்குப் பொருந்தாது என்பதால், உங்கள் வணிகத் தேவைகளுக்கு ஏற்ற தீர்வுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தப் பக்கத்தில்
ஆர்டர்களை வரம்பிடுதல்
ஒரு நாளில் நீங்கள் அனுமதிக்கும் விற்பனையின் அளவை வரம்பிடுவது, உங்கள் ஆர்டர்களை நிர்வகிக்கக்கூடிய அளவில் வைத்திருக்க உதவுகிறது. இது உங்கள் தயாரிப்புகளை மேலும் பிரத்தியேகமானதாக உணரவைக்கலாம், அத்துடன் மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங்கிற்கும் உதவும்.
ஒரு வாடிக்கையாளர் ஒரே கார்ட்டில் ஆர்டர் செய்யக்கூடிய தயாரிப்புகளின் எண்ணிக்கையை வரம்பிடுவதே மற்றொரு தீர்வாகும்.
இருப்பினும், ஆர்டர்களை வரம்பிடுவது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் ஏதேனும் ஒரு வகையில் ஆர்டர்களை வரம்பிட்டால், அந்த வரம்பு வாடிக்கையாளர்களுக்குத் தெளிவாக இருப்பதையும், அவர்களால் ஏன் ஆர்டர் செய்ய முடியவில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வதையும், எதிர்காலத்தில் அவர்கள் எவ்வாறு ஆர்டர் செய்யலாம் என்பதற்கான படிகளை நீங்கள் வழங்குவதையும் உறுதிசெய்துகொள்ளுங்கள். உங்கள் முகப்புப்பக்கத்தில் உள்ள பேனர், உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் உள்ள பத்தி அல்லது உங்கள் ஸ்டோரின் மெனுக்களில் நீங்கள் சேர்க்கக்கூடிய உங்கள் இணையதளப் பக்கத்தின் மூலம் இந்த வரம்பைக் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தலாம்.
ஆர்டர்களை வரம்பிட, பின்வரும் தீர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் 'கார்ட்டில் சேர்' பொத்தானை மேனுவலாக அகற்றுதல்
ஒரு நாளில் நீங்கள் விரும்பிய எண்ணிக்கையிலான ஆர்டர்களைப் பெற்ற பிறகு, உங்கள் ஸ்டோரில் உள்ள கார்ட்டில் சேர் பொத்தானை அகற்றலாம். கார்ட்டில் சேர் பொத்தான்களை அகற்றுவதற்கான படிகள், நீங்கள் பயன்படுத்தும் தீமின் வகையைப் பொறுத்து மாறுபடும்:
- நீங்கள் Shopify-ஆதரவுடைய தீமைப் பயன்படுத்தினால், 'கார்ட்டில் சேர்' பொத்தான்களை மறைத்தல் என்பதைப் பார்க்கவும்.
- நீங்கள் மூன்றாம் தரப்புத் தீமைப் பயன்படுத்தினால், அந்தத் தீமின் டெவலப்பரையோ மூன்றாம் தரப்பு டெவலப்பரையோ தொடர்புகொள்ளவும்.
மறுநாள் தொடக்கத்தில் அல்லது நீங்கள் கூடுதல் ஆர்டர்களைப் பெறத் தயாராக இருக்கும்போது, அந்தப் பொத்தானை மீண்டும் சேர்ப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஷிப்பிங் மண்டலங்களை மேனுவலாகச் சரிசெய்தல்
ஒரு நாளில் நீங்கள் விரும்பிய எண்ணிக்கையிலான ஆர்டர்களைப் பெற்ற பிறகு, வாடிக்கையாளர்கள் ஷிப்பிங் கட்டணங்களைத் தேர்ந்தெடுக்கும் திறனை அகற்றுவதன் மூலம், அவர்கள் பௌதிகத் தயாரிப்புகளுக்கு ஆர்டர் செய்வதைத் தடுக்கலாம். ஒரு வாடிக்கையாளரால் ஷிப்பிங் கட்டணத்தைத் தேர்ந்தெடுக்க முடியாவிட்டால், அவரால் ஆர்டர் செய்ய முடியாது.
உங்கள் செக்அவுட்டில் ஷிப்பிங் கட்டணங்கள் எதுவும் கிடைக்காதபோது, உங்கள் தீமின் பிழைச் செய்தியை மாற்றுவது இந்த வரம்பைக் குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான கூடுதல் வழியாகும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > ஷிப்பிங் மற்றும் டெலிவரி என்பதற்குச் செல்லவும்.
உங்கள் பொதுவான ஷிப்பிங் கட்டணங்கள் உட்பட ஒவ்வொரு ஷிப்பிங் சுயவிவரத்திற்கும், ஒவ்வொரு ஷிப்பிங் மண்டலத்திலும் உள்ள கட்டணங்களை அகற்றவும்:
- ஷிப்பிங் சுயவிவரத்திற்கு அடுத்துள்ள நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள ஒவ்வொரு ஷிப்பிங் கட்டணத்திற்கும் அடுத்துள்ள
பொத்தானைக் கிளிக் செய்து, பின்னர் அழி என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் மண்டலங்களை அழிக்க வேண்டாம்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: ஷிப்பிங் கட்டணங்கள் எதுவும் கிடைக்காதபோது உங்கள் தீமின் பிழைச் செய்தியைச் சரிசெய்யவும்:
- ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
பொத்தான் > இயல்புநிலை தீம் உள்ளடக்கத்தைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- செக்அவுட் மற்றும் சிஸ்டம் தாவலைக் கிளிக் செய்யவும்.
- நாட்டிற்கான கட்டணங்கள் இல்லை என்ற அறிவிப்பு மற்றும் ஷிப்பிங் முறை கிடைக்கவில்லை ஆகிய புலங்களைத் தேடி, திருத்தவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மறுநாள் தொடக்கத்தில் அல்லது நீங்கள் கூடுதல் ஆர்டர்களைப் பெறத் தயாராக இருக்கும்போது, உங்கள் ஷிப்பிங் கட்டணங்களை மீண்டும் சேர்ப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
நீங்கள் ஷிப்பிங் மண்டலங்களை அகற்றும்போது, அன்றைய தினத்திற்கு நீங்கள் மேற்கொண்டு விற்பனை எதையும் செய்யவில்லை என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்திற்கு ஆர்டர் செய்ய முயற்சிக்கக் கூடாது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில், உங்கள் இணையதளத்தில் பேனர் ஒன்றைச் சேர்ப்பதைக் கருத்தில்கொள்ளவும்.
உங்கள் சரக்கு இருப்பு நிலைகளை தினசரி அதிகபட்சமாக அமைக்கவும்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தயாரிப்பின் எவ்வளவு சரக்கு இருப்பை உங்களால் நிர்வகிக்க முடியும் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், ஒவ்வொரு நாளும் காலையில் உங்கள் சரக்கு இருப்பை அந்த அளவிற்கு நீங்கள் அமைக்கலாம். அத்துடன் அதிக விற்பனையை அனுமதிக்க வேண்டாம் என உங்கள் தயாரிப்புகளை நீங்கள் அமைத்தால், சரக்கு இருப்பு தீர்ந்த பிறகு வாடிக்கையாளர்களால் ஆர்டர் செய்ய முடியாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > சரக்கு இருப்பு என்பதற்குச் செல்லவும்.
தயாரிப்புகள் விற்றுத் தீர்ந்ததும் அவற்றின் விற்பனையை நிறுத்துமாறு அமைக்கவும்:
- பக்கத்தில் உள்ள அனைத்துத் தயாரிப்புகளையும் தேர்ந்தெடுக்க, மேலேயுள்ள தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஸ்டோரில் 50க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இருந்தால், இந்த ஸ்டோரில் உள்ள அனைத்துச் சரக்கு இருப்பையும் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- மொத்தத் திருத்தியில் அந்த நெடுவரிசையைச் சேர்க்க, மொத்தமாகத் திருத்து > நெடுவரிசைகள் > கையிருப்பில் இல்லாதபோதும் விற்பனையைத் தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- கையிருப்பில் இல்லாதபோதும் விற்பனையைத் தொடர் நெடுவரிசையில் உள்ள உங்கள் தயாரிப்புகள் தேர்வுநீக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் சரக்கு இருப்பு நிலைகளை அமைக்கவும்:
- உங்களிடம் சில பக்கத் தயாரிப்புகள் மட்டுமே இருந்தால், நிர்வாகியில் ஒவ்வொரு தயாரிப்பிற்குமான சரக்கு இருப்பு நிலைகளை அமைக்கவும்:
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > சரக்கு இருப்பு என்பதற்குச் செல்லவும்.
- ஒரு நாளில் நீங்கள் விற்கக்கூடிய அளவிற்கு இருப்பு அளவைத் திருத்தவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களிடம் பல பக்கத் தயாரிப்புகள் இருந்தால், ஒரு CSV கோப்பைப் பயன்படுத்திச் சரக்கு இருப்பு நிலைகளை அமைக்கவும்:
- ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு பக்கத் தயாரிப்புகளை (50 தயாரிப்புகள் வரை) நீங்கள் ஏற்றுமதி செய்தால், CSV கோப்பை உங்கள் உலாவி பதிவிறக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கத் தயாரிப்புகளை (51 அல்லது அதற்கும் மேற்பட்ட தயாரிப்புகள்) நீங்கள் ஏற்றுமதி செய்தால், CSV கோப்பு உங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். நீங்கள் கடையின் உரிமையாளர் இல்லை என்றால், கோப்பு கடையின் உரிமையாளரின் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும்.
- Google Sheets போன்ற ஒரு விரிதாள் நிரலில் CSV கோப்பைத் திறக்கவும்.
- கோப்பின் நகலை எடுக்கவும். அசல் சரக்கு இருப்பு நிலைகளை நீங்கள் மீட்டெடுக்க விரும்பும்போது, உங்கள் Shopify ஸ்டோரில் பதிவேற்ற அசல் கோப்பு தேவைப்படும்.
- நீங்கள் நகலெடுத்த கோப்பில், ஒவ்வொரு தயாரிப்பிற்கும் மாறுபாட்டிற்குமான சரக்கு இருப்பை அமைத்து, கோப்பைச் சேமிக்கவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் > சரக்கு இருப்பு என்பதற்குச் செல்லவும்.
- இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
- புதுப்பிக்கப்பட்ட CSV கோப்பைச் சேர்த்து, கோப்பைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களிடம் சில பக்கத் தயாரிப்புகள் மட்டுமே இருந்தால், நிர்வாகியில் ஒவ்வொரு தயாரிப்பிற்குமான சரக்கு இருப்பு நிலைகளை அமைக்கவும்:
ஒரு தயாரிப்பிற்கான உங்கள் சரக்கு இருப்பு தீர்ந்துவிடும்போது, வாடிக்கையாளர்களால் அத் தயாரிப்புகளுக்கு மேற்கொண்டு எந்த ஆர்டர்களையும் செய்ய முடியாது. உங்கள் தயாரிப்புகள் எப்போது மீண்டும் கிடைக்கும் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில், நீங்கள் அத் தயாரிப்புகளின் சரக்கு இருப்பை மீண்டும் சேர்க்கும்போது மின்னஞ்சலைப் பெற வாடிக்கையாளர்களை விருப்பம் தெரிவிக்க அனுமதிக்கும் செயலி ஒன்றை நிறுவுவதைக் கருத்தில்கொள்ளவும். கிடைக்கக்கூடிய செயலிகளை உலாவிப் பார்க்க, Shopify App Store என்பதைப் பார்க்கவும்.
உங்கள் சரக்கு இருப்பு நிலைகளைப் பூஜ்ஜியமாக அமைக்கவும்
ஒரு நாளில் நீங்கள் விரும்பிய எண்ணிக்கையிலான ஆர்டர்களைப் பெற்ற பிறகு, உங்கள் ஒவ்வொரு தயாரிப்பிற்குமான சரக்கு இருப்பை அகற்றுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்வதைத் தடுக்கலாம்.
இந்த முறை வேலை செய்ய, உங்கள் தீமில் உள்ள எந்த அமைப்புகளும், உங்கள் சேகரிப்புகளில் உள்ள நிபந்தனைகளும், அல்லது உங்கள் ஸ்டோரில் உள்ள செயலிகளும் கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளை மறைக்கவில்லை என்பதை உறுதிசெய்யவும். கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளை நீங்கள் மறைத்து, உங்கள் சரக்கு இருப்பு நிலைகளைப் பூஜ்ஜியமாக அமைத்தால், வாடிக்கையாளர்களால் உங்கள் இணையதளத்தில் உள்ள எந்தத் தயாரிப்புகளையும் பார்க்க முடியாது. கையிருப்பில் இல்லாத தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் வாங்குவதை உங்கள் தயாரிப்பு அமைப்புகள் தடுப்பதையும் நீங்கள் உறுதிசெய்ய வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் > சரக்கு இருப்பு என்பதற்குச் செல்லவும்.
தயாரிப்புகள் விற்றுத் தீர்ந்ததும் அவற்றின் விற்பனையை நிறுத்துமாறு அமைக்கவும்:
- பக்கத்தில் உள்ள அனைத்துத் தயாரிப்புகளையும் தேர்ந்தெடுக்க, மேலேயுள்ள தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஸ்டோரில் 50க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இருந்தால், இந்த ஸ்டோரில் உள்ள அனைத்துச் சரக்கு இருப்பையும் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- மொத்தத் திருத்தியில் அந்த நெடுவரிசையைச் சேர்க்க, மொத்தமாகத் திருத்து > நெடுவரிசைகள் > கையிருப்பில் இல்லாதபோதும் விற்பனையைத் தொடர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- கையிருப்பில் இல்லாதபோதும் விற்பனையைத் தொடர் நெடுவரிசையில் உள்ள உங்கள் தயாரிப்புகள் தேர்வுநீக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் சரக்கு இருப்பு நிலைகளைப் பூஜ்ஜியமாக அமைக்கவும்:
- உங்களிடம் சில பக்கங்களில் மட்டுமே தயாரிப்புகள் இருந்தால், சரக்கு இருப்பு நிலைகளை
0என நிர்வாகியில் அமைக்கவும்:- பக்கத்தில் உள்ள அனைத்துத் தயாரிப்புகளையும் தேர்ந்தெடுக்க, மேலேயுள்ள தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்யவும்.
- அளவுகளைப் புதுப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
- அமை என்பதைக் கிளிக் செய்து,
0என உள்ளிட்டு, பின்னர் சேமி என்பதைக் கிளிக் செய்யவும். - ஒவ்வொரு தயாரிப்புப் பக்கத்திற்கும் இந்தப் படிகளை மீண்டும் செய்யவும்.
- உங்களிடம் பல பக்கங்களில் தயாரிப்புகள் இருந்தால், சரக்கு இருப்பு நிலைகளை
0என ஒரு CSV கோப்பைப் பயன்படுத்தி அமைக்கவும்:- ஏற்றுமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு பக்கத் தயாரிப்புகளை (50 தயாரிப்புகள் வரை) நீங்கள் ஏற்றுமதி செய்தால், CSV கோப்பை உங்கள் உலாவி பதிவிறக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட பக்கத் தயாரிப்புகளை (51 அல்லது அதற்கும் மேற்பட்ட தயாரிப்புகள்) நீங்கள் ஏற்றுமதி செய்தால், CSV கோப்பு உங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். நீங்கள் கடையின் உரிமையாளர் இல்லை என்றால், கோப்பு கடையின் உரிமையாளரின் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும்.
- Google Sheets போன்ற ஒரு விரிதாள் நிரலில் CSV கோப்பைத் திறக்கவும்.
- கோப்பின் நகலை எடுக்கவும். அசல் சரக்கு இருப்பு நிலைகளை நீங்கள் மீட்டெடுக்க விரும்பும்போது, உங்கள் Shopify ஸ்டோரில் பதிவேற்ற அசல் கோப்பு தேவைப்படும்.
- நகலெடுக்கப்பட்ட உங்கள் கோப்பில், ஒவ்வொரு தயாரிப்பு மற்றும் மாறுபாட்டிற்கான சரக்கு இருப்பை
0என அமைத்து, கோப்பைச் சேமிக்கவும். - உங்கள் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் > சரக்கு இருப்பு என்பதற்குச் செல்லவும்.
- இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
- புதுப்பிக்கப்பட்ட CSV கோப்பைச் சேர்த்து, கோப்பைப் பதிவேற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களிடம் சில பக்கங்களில் மட்டுமே தயாரிப்புகள் இருந்தால், சரக்கு இருப்பு நிலைகளை
அசல் சரக்கு இருப்பை நீங்கள் மீட்டெடுக்க விரும்பும்போது, நீங்கள் பதிவிறக்கிய அசல் CSV கோப்பைப் பதிவேற்றவும்.
நீங்கள் உங்கள் சரக்கு இருப்பை அகற்றினால், தயாரிப்பில் மீண்டும் சரக்கு இருப்பைச் சேர்க்கும்போது வாடிக்கையாளர்கள் மின்னஞ்சலைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவிக்க அனுமதிக்கும் செயலி ஒன்றை நிறுவுவது குறித்துப் பரிசீலிக்கவும். கிடைக்கக்கூடிய செயலிகளை உலாவ, Shopify App Store ஐப் பார்க்கவும்.
கார்ட்டில் அதிகபட்ச வரம்பை அமைக்கும் செயலியைச் சேர்க்கவும்
வாடிக்கையாளர் ஒரு ஆர்டரில் தங்களின் கார்ட்டில் சேர்க்கக்கூடிய தயாரிப்புகளின் அளவைக் கட்டுப்படுத்த, கார்ட்டில் அதிகபட்ச வரம்பை அமைக்கும் செயலி உதவும்.
படிகள்:
- Shopify App Store க்குச் செல்லவும்.
- உங்கள் வணிகத்திற்குச் சிறந்த முறையில் பொருந்தும் செயலியைக் கண்டறியவும்.
- செயலியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- செயலியை நிறுவுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும்.
ஆதரவுக் கோரிக்கைகளின் அதிகரிப்புக்குத் தயாராகுங்கள்
ஆர்டர்கள் அதிகரிப்பது பெரும்பாலும் ஆதரவுக் கோரிக்கைகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். நீங்கள் மின்னஞ்சல் வார்ப்புருக்கள் அல்லது மேக்ரோக்களை உருவாக்கக்கூடிய ஒரு வாடிக்கையாளர் சேவைத் தளத்தைப் பயன்படுத்துவது, உங்கள் ஆதரவைச் சிறப்பாக நிர்வகிக்க உதவும். உங்கள் இணையதளத்தில் உள்ள FAQ இல், எழக்கூடிய ஆதரவுக் கேள்விகளுக்கு முன்கூட்டியே பதிலளிப்பதும் உங்களின் ஆதரவுக் கோரிக்கைகளை நிர்வகிப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். வாடிக்கையாளர்கள் விரைவாகப் பதில்களைப் பெற FAQ-கள் உதவுகின்றன, மேலும் ஆதரவுப் பரிமாற்றங்களின் போது வாடிக்கையாளர்கள் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள நீங்கள் வழங்கக்கூடிய ஒரு URL ஐயும் இது வழங்குகிறது.
வாடிக்கையாளர் சேவைத் தளங்கள்
பல வாடிக்கையாளர் சேவைத் தளங்கள் கிடைக்கின்றன, மேலும் சிலவற்றை Shopify App Store இல் காணலாம். இவை நேரடியாக Shopify உடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன, மேலும் உங்கள் ஆதரவுக் கோரிக்கைகளை நிர்வகிப்பதற்கான ஒரு சிறந்த வழியாகவும் இருக்கும்.
ஷிப்பிங் அறிவிப்புகள், பணத்தைத் திரும்பப்பெறும் கோரிக்கைகள் அல்லது தயாரிப்பு சார்ந்த கேள்விகள் போன்ற பொதுவான கேள்விகளுக்கு வார்ப்புருக்களை உருவாக்கவும். எதிர்பார்க்கப்படும் மறுமொழி நேரங்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாடிக்கையாளருக்குப் பதில் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைக் கொண்ட ஒரு தானியங்கு பதிலமைப்பை அமைக்கவும்.
FAQ பக்கத்தை உருவாக்கவும்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் > பக்கங்கள் என்பதற்குச் செல்லவும்.
பக்கத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒரு தலைப்பைச் சேர்த்து, பக்கத்தின் உள்ளடக்கத்தை நிரப்பவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் இணையதளத்தின் மெனுவில் FAQ பக்கத்தைச் சேர்க்க, மெனு உருப்படியைச் சேர் என்பதைப் பார்க்கவும்.
FAQ செயலியைப் பதிவிறக்கவும்
தேடல் செயல்பாடு மற்றும் தாவல்களைக் கொண்ட தளவமைப்புகள் போன்ற தனித்துவமான அம்சங்களுடன் விரிவான FAQ பக்கங்களை உருவாக்கச் செயலிகள் உங்களுக்கு உதவும். FAQ பக்கத்தை உருவாக்க நீங்கள் ஒரு செயலியைப் பயன்படுத்த விரும்பினால், Shopify App Store ஐப் பார்வையிடவும்.
பொருத்தமான ஷிப்பிங் எதிர்பார்ப்புகளை அமைக்கவும்
வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை எப்போது எதிர்பார்க்கலாம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதை உறுதிசெய்யவும். சரியான எதிர்பார்ப்புகளை அமைப்பது நீங்கள் பெறும் ஆதரவுக் கோரிக்கைகளின் அளவைக் குறைக்கலாம், உங்கள் பிராண்டின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கலாம் மற்றும் உங்கள் வணிகத்திலிருந்து ஆர்டர்களைச் செய்யும்போது வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக உணர உதவலாம்.
உங்கள் இணையதளத்தில் ஒரு பேனரைச் சேர்க்கலாம், புதிய பக்கத்தை உருவாக்கலாம், அல்லது உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஷிப்பிங் கொள்கையைச் சேர்க்கலாம், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் உங்கள் ஷிப்பிங் தகவலைக் கண்டறியலாம்.
ஒரு நிறைவேற்ற வசதியைப் பயன்படுத்தவும்
உங்கள் ஆர்டர்களைப் பொதியாக்கம் செய்து ஷிப்பிங் செய்வது பெரிய தாமதங்களை ஏற்படுத்துவதை நீங்கள் கண்டால், உள்ளூர் கிடங்கு ஒன்றுடன் இணைந்து பணியாற்றுவதைப் பரிசீலிக்கவும். நீங்கள் அவர்களை ஒரு தனிப்பயன் நிறைவேற்றச் சேவையாக சேர்க்கலாம், இதன் மூலம் அவர்கள் உங்கள் ஆர்டர்களை மின்னஞ்சல் மூலம் பெற்று, உங்கள் சார்பாகப் பொதியாக்கம் செய்து ஷிப்பிங் செய்ய முடியும்.
Shopify இல் ஷிப்பிங் லேபிள்களை வாங்கி அச்சிடவும்
நீங்கள் கனடா அல்லது அமெரிக்காவில் இருந்தால், உங்கள் Shopify நிர்வாகியில் ஷிப்பிங் லேபிள்களை வாங்கி அச்சிடலாம், மேலும் உங்கள் ஷிப்மென்ட்கள் அஞ்சல் செய்யத் தயாராக இருக்கும்போது அவற்றை எடுக்குமாறு ஷிப்பிங் கேரியரைக் கோரலாம். இது அஞ்சல் நிலையத்திற்குச் சென்று வருவதற்கான உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம், அத்துடன் அஞ்சல் நிலையத்தை விடக் குறைவான ஷிப்பிங் கட்டணங்களையும் வழங்குகிறது.
புதிய பணியாளர்களைப் பணியமர்த்தவும்
உங்கள் வணிகத்திற்கான சில பணிகளைச் செய்யப் புதிய பணியாளர்களைப் பணியமர்த்துவது உங்கள் அன்றாட நேரத்தை மிச்சப்படுத்தும், மேலும் புதிய பணியாளர்கள் வழக்கமாகக் கொண்டுவரும் நிபுணத்துவத்துடன் சேர்ந்து, இது ஊதியச் செலவுகளை ஈடுசெய்வதற்கும் மேலான பலன்களைத் தரும். எடுத்துக்காட்டாக, உங்கள் தயாரிப்புகளைப் பொதியாக்கம் செய்ய ஒரு நாளில் உங்களுக்கு நான்கு மணிநேரம் தேவைப்பட்டால், அந்த நான்கு மணிநேரத்தை நீங்கள் விடுவித்தால் உங்களால் எத்தனை புதிய ஆர்டர்களைச் செயல்படுத்தி ஏற்க முடியும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
ஒரு ஆன்லைன் ஸ்டோரை நடத்தும்போது, பல பணிகளைத் தொலைவிலிருந்து செய்ய முடியும். சந்தைப்படுத்தல், இணையதள வடிவமைப்பு, வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் இணையதள மேலாண்மை போன்றவற்றை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்ய முடியும், இது உலகெங்கிலும் உள்ளவர்களைப் பணியமர்த்த உங்களை அனுமதிக்கிறது.
உங்கள் Shopify ஸ்டோரில் நீங்கள் பணியாளர்களைச் சேர்க்கலாம், மேலும் நிர்வாகியில் அவர்களுக்குத் தேவையான பகுதிகளுக்கு மட்டுமே அணுகலை வழங்கப் பணியாளர் அனுமதிகளைப் பயன்படுத்தலாம்.
தொடங்குவதற்கு, ஃப்ரீலான்ஸ் பணியாளர்களைத் தேடுவதைப் பரிசீலிக்கவும், இதன் மூலம் அவர்கள் உங்கள் வணிகத்திற்கு என்ன நன்மைகளைக் கொண்டு வருவார்கள் என்பதை நீங்கள் ஆராயலாம்.