SEO தொடர்பான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இப்பக்கத்தில்
- தேடுபொறி முடிவுகளில் எனது தளம் ஏன் காண்பிக்கப்படவில்லை?
- எனது தளம் Google-ஆல் அட்டவணையிடப்பட்டுள்ளதா என்பதை நான் எப்படிக் கண்டறிவது?
- தேடுபொறிகளுக்காக எனது தளம் உகப்பாக்கப்பட்டுள்ளதா என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?
- எனது பக்கங்களில் தலைப்பு அல்லது H1 டேக்குகள் போன்ற கூறுகள் விடுபட்டுள்ளதா என்பதை நான் எப்படி உறுதிப்படுத்துவது?
- விடுபட்ட தலைப்பு அல்லது H1 போன்ற விடுபட்ட பக்கக் கூறுகளை நான் எப்படிப் பிழைதிருத்துவது?
- SEO பற்றி நான் எங்கு மேலும் அறிந்துகொள்ளலாம்?
தேடுபொறி முடிவுகளில் எனது தளம் ஏன் காண்பிக்கப்படவில்லை?
தேடுபொறி முடிவுகளில் உங்கள் ஆன்லைன் ஸ்டோர் காண்பிக்கப்படாமல் இருக்கப் பல காரணங்கள் இருக்கலாம்:
- உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மிகவும் புதியதாக இருக்கலாம். தேடுபொறிகள் வழக்கமாகப் புதிய தளங்களை அட்டவணையிடும், ஆனால் உங்கள் தளம் புதியதாக இருந்தால், அது இன்னும் அட்டவணையிடப்படாமல் இருக்கலாம். Google Search Console-இல் உங்கள் தளவரைபடத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் இந்தச் செயல்முறையை நீங்கள் விரைவுபடுத்த முயலலாம்.
- உங்கள் ஆன்லைன் ஸ்டோர் தனிப்பட்ட பயன்முறையில் உள்ளது. உங்கள் ஸ்டோரை அறிமுகப்படுத்துவது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
- நீங்கள் இன்னும் ஒரு சோதனைக் கணக்கில் இருக்கிறீர்கள். தேடுபொறிகள் சோதனை ஸ்டோர்களை அட்டவணையிடாது. நீங்கள் தயாரானதும், ஒரு Shopify திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் சமீபத்தில் வேறொரு பிளாட்ஃபார்மில் இருந்து இடமாறியுள்ளீர்கள், மேலும் உங்கள் பழைய இணையதளத்தின் திசைதிருப்பல்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. உங்கள் ஸ்டோரை Shopify-க்கு இடமாற்றும்போது உங்களின் தேடுபொறித் தரவரிசையைத் தக்கவைத்துக்கொள்வது எப்படி எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் முக்கியச் சொற்களையும் தொடர்புடைய உள்ளடக்கத்தையும் தொடர்ந்து சேர்க்க வேண்டும். தேடுபொறி முடிவுகளில் உங்கள் ஆன்லைன் ஸ்டோர் முன்னிலையில் வராமல் இருப்பதற்கு இதுவே பொதுவான காரணமாகும். ஒரு உள்ளடக்க உத்தியை உருவாக்குவதும், உங்கள் ஸ்டோரைத் தனித்துவமாக்குவதற்கான வழிகளைக் கண்டறிவதும் நீண்ட கால அடிப்படையில் உதவும்.
எனது தளம் Google-ஆல் அட்டவணையிடப்பட்டுள்ளதா என்பதை நான் எப்படிக் கண்டறிவது?
உங்கள் தளம் Google-ஆல் அட்டவணையிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, தளத் தேடலைப் பயன்படுத்தி Google-இல் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை நீங்கள் தேடலாம்.
Google தேடலில், yourshopifystore.com என்பதை உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் URL-ஐக் கொண்டு மாற்றி, site:yourshopifystore.com என உள்ளிடவும். தேடல் முடிவுகளில் உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் பக்கங்கள் தோன்றினால், Google உங்கள் தளத்தை அட்டவணையிடுகிறது என அர்த்தம்.
உங்கள் தளம் அட்டவணையிடப்பட்டுள்ளதா என்பதை எப்படிக் கண்டறிவது என்பது குறித்து Google Search Console உதவி பக்கத்திலிருந்து மேலும் அறியவும்.
தேடுபொறிகளுக்காக எனது தளம் உகப்பாக்கப்பட்டுள்ளதா என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?
உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தேடுபொறி உகப்பாக்கத்தைப் பகுப்பாய்வு செய்ய பல இலவச மற்றும் கட்டணக் கருவிகள் உள்ளன, அல்லது Shopify App Store-இல் SEO-ஐச் சோதிக்கக்கூடிய செயலிகளை நீங்கள் தேடலாம்.
எனது பக்கங்களில் தலைப்பு அல்லது H1 டேக்குகள் போன்ற கூறுகள் விடுபட்டுள்ளதா என்பதை நான் எப்படி உறுதிப்படுத்துவது?
உங்கள் பக்கங்களில் எந்தெந்தக் கூறுகள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்வதற்கான மிகவும் நம்பகமான முறை, தேடுபொறிகள் உங்கள் பக்கங்களை எவ்வாறு வழங்குகின்றன என்பதைச் சரிபார்ப்பதே ஆகும். அவர்கள் வழங்கும் URL ஆய்வுக் கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் இதைச் செய்ய முடியும். தேடுபொறிகளுக்கு உங்கள் பக்கங்கள் எப்படிக் காண்பிக்கப்படுகின்றன என்பதையும், உங்கள் பக்கம் எதிர்பார்த்தபடி வழங்கப்படுகிறதா என்பதையும் சரிபார்க்க இந்தக் கருவி உங்களை அனுமதிக்கிறது.
எடுத்துக்காட்டாக, Google Search Console-இல் உங்கள் ஸ்டோரைச் சரிபார்த்த பிறகு, Google உங்கள் பக்கத்தை எவ்வாறு வழங்குகிறது என்பதைச் சரிபார்க்க, அவர்களின் URL ஆய்வுக் கருவியை நீங்கள் பயன்படுத்தலாம். அங்கிருந்து, ஒரு குறிப்பிட்ட பக்கக் கூறைக் கண்டறிய தேடல் செயல்பாட்டைப் பயன்படுத்தலாம்.
தலைப்பு அல்லது H1 டேக் விடுபட்டது போன்ற SEO சிக்கல் ஒரு பக்கத்தில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த இந்த முறைகள் பயனுள்ளதாக இருக்கும்.
விடுபட்ட தலைப்பு அல்லது H1 போன்ற விடுபட்ட பக்கக் கூறுகளை நான் எப்படிப் பிழைதிருத்துவது?
ஒரு பக்கத்தின் ஒரு பகுதி எதிர்பார்த்தபடி வழங்கப்படாதபோது, அதற்குக் காரணம் வழக்கமாகத் தீம் கோப்புகளில் செய்யப்பட்ட திருத்தங்களாகவே இருக்கும். இந்தத் திருத்தங்களைக் குறியீட்டு எடிட்டருக்குள் நேரடியாகவோ அல்லது ஒரு செயலியின் மூலம் தானாகவோ செய்திருக்கலாம்.
தீம் கோப்புகளை மதிப்பாய்வு செய்வதில் உங்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை எனில், மூலகாரணத்தை நீங்களே கண்டறிய முடியும். இல்லையெனில், Shopify ஆதரவைத் தொடர்புகொள்வது உதவியாக இருக்கும்.
விடுபட்ட பக்கத் தலைப்பை ஆராய்தல்
Shopify-ஆல் உருவாக்கப்பட்ட அனைத்து Online Store 2.0 தீம்களும், தீம் பிளாக்குகளை ஆதரிக்கும் தீம்களும் இயல்பாகவே சரியான தலைப்பு டேக்கைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பக்கத்தில் தலைப்பு டேக் விடுபட்டிருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், அது பெரும்பாலும் தனிப்பயன் குறியீடு அல்லது ஒரு செயலியால் ஏற்பட்டிருக்கலாம்.
பொதுவான சிக்கல்களில் உள்ளடங்குபவை:
- பொருத்தமான liquid கோப்பிலிருந்து
<title>கூறைத் தவறுதலாக அகற்றியிருப்பது - சில பக்க வகைகளில் தலைப்பு டேக் இருப்பதைத் தவிர்க்கும் நிபந்தனை தர்க்கத்தைப் பயன்படுத்தியிருப்பது
- சில பக்க வகைகளுக்குப் பொருந்தாத புதிய தலைப்பு டேக் தர்க்கத்தை ஒரு செயலி அறிமுகப்படுத்துவது
விடுபட்ட பக்கத்தின் H1 தலைப்பை ஆராய்தல்
Shopify-ஆல் உருவாக்கப்பட்ட அனைத்து Online Store 2.0 தீம்களும், தீம் பிளாக்குகளை ஆதரிக்கும் தீம்களும் இயல்பாகவே சரியான <h1> டேக்கைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பக்கத்தில் H1 தலைப்பு விடுபட்டிருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், அது பெரும்பாலும் தனிப்பயன் குறியீடு அல்லது ஒரு செயலியால் ஏற்பட்டிருக்கலாம்.
<h1> டேக்கை உருவாக்கும் குறியீடு, பக்க வகையைப் பொறுத்தது.
SEO பற்றி நான் எங்கு மேலும் அறிந்துகொள்ளலாம்?
SEO பற்றி அறிந்துகொள்ள ஆன்லைனில் பல வளங்கள் உள்ளன. மிகவும் பொருத்தமான உள்ளடக்கத்தைக் கண்டறிவதற்கான புதிய உத்திகளைத் தேடுபொறி உருவாக்குநர்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்துவதால், மிகவும் சமீபத்திய தகவல்களைப் பார்க்கவும்.
ஆன்லைனில் SEO பற்றி அறிந்துகொள்ள உதவும் சில இடங்கள் இங்கே:
Moz-இன் SEO-க்கான தொடக்கநிலை வழிகாட்டி
Search Engine Land-இன் SEO-க்கான வழிகாட்டி