உங்கள் ஸ்டோரை AI-க்கு உகந்ததாக்குதல்

AI-ஆல் இயக்கப்படும் தேடுபொறிகளும் ஷாப்பிங் உதவியாளர்களும் வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளைக் கண்டறியவும் ஒப்பிடவும் உதவும். உங்கள் ஸ்டோரை AI-க்காக உகந்ததாக்குவதன் மூலம், AI தேடல் முடிவுகளில் உங்கள் தயாரிப்பின் தெரிவுநிலையை மேம்படுத்தலாம்.

மனிதர்களுக்கும் AI-க்கும் ஏற்றவாறு தயாரிப்புப் பக்கங்களை வடிவமைத்தல்

உங்களின் தயாரிப்பு விவரப் பக்கங்கள் (PDPகள்) மனிதர்களான வாடிக்கையாளர்களுக்கும் உங்கள் உள்ளடக்கத்தைக் க்ரால் செய்து பகுப்பாய்வு செய்யும் AI சிஸ்டங்களுக்கும் பயன்பட வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்காக PDPகளை வடிவமைக்கும்போது கவனிக்க வேண்டிய பரிந்துரைகள்

மிக முக்கியமான தகவல்களைத் தெளிவாகவும் எளிதாக ஸ்கேன் செய்யும் வகையிலும் வைத்திருக்க, பின்வரும் பரிந்துரைகளைச் சரிபார்க்கவும்:

  • தெளிவான, சுருக்கமான தயாரிப்புத் தலைப்புகளைப் பயன்படுத்தவும்.
  • முக்கியப் பலன்களைத் தனித்துக்காட்டும் சிறப்பான தயாரிப்புச் சுருக்கங்களை எழுதவும்.
  • விலை, கிடைக்கும் தன்மை மற்றும் முக்கிய அம்சங்கள் போன்ற அத்தியாவசிய விவரங்களைத் தெளிவாகக் காட்டவும்.
  • விளக்கமான மாற்று உரையுடன் உயர்தரப் படங்களைப் பயன்படுத்தவும்.

AI சிஸ்டங்களுக்காக PDPகளை வடிவமைக்கும்போது கவனிக்க வேண்டிய பரிந்துரைகள்

AI சிஸ்டங்கள் க்ரால் செய்யக்கூடிய வகையில் PDPகளை உருவாக்கும்போது, உங்கள் தயாரிப்புத் தகவல் முழுமையாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் PDPகளில் சரியான தகவல்கள் இருப்பதை உறுதிசெய்ய, பின்வரும் பரிந்துரைகளைச் சரிபார்க்கவும்:

  • விரிவான தயாரிப்புக் குறிப்புகள் மற்றும் தொழில்நுட்ப விவரங்களைச் சேர்க்கவும்.
  • ஒத்த தயாரிப்புகளுடனான ஒப்பீட்டுத் தகவல்களைச் சேர்க்கவும்.
  • தொடர்புடைய முக்கியச் சொற்களுடன் முழுமையான தயாரிப்பு விளக்கங்களை வழங்கவும்.
  • கட்டமைக்கப்பட்ட தரவு மற்றும் தயாரிப்புப் பண்புக்கூறுகளைச் சேர்க்கவும்.
  • தேவைக்கேற்ப அளவீட்டு வழிகாட்டிகள், தயாரிப்புப் பொருள் தகவல் மற்றும் பராமரிப்பு வழிமுறைகளைச் சேர்க்கவும்.

AI சிஸ்டம் க்ரால் செய்வதற்கான விரிவான உள்ளடக்கத்தைச் சேர்க்க விரும்பினால், அதேசமயம் அது வாடிக்கையாளர்களுக்குப் பொருந்தாது எனில், அதை உங்கள் PDP-இன் (தயாரிப்பு விவரப் பக்கம்) கீழ்ப்பகுதியில் சேர்க்கலாம்.