தரவுத் தனியுரிமை
Shopify இல், உங்களுடைய மற்றும் வாடிக்கையாளர்களின் தனியுரிமைக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. நீங்கள் Shopify Audiences ஐப் பயன்படுத்தும்போது, உங்களுடைய மற்றும் உங்கள் வாடிக்கையாளர்களின் தரவுத் தனியுரிமை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் உதவுகிறோம்.
பகிரப்படும் தரவின் மீது உங்களுக்கும் உங்கள் வாடிக்கையாளர்களுக்கும் கட்டுப்பாடு இருப்பதையும் உங்கள் தரவு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தப் பின்வரும் படிகள் எடுக்கப்பட்டுள்ளன:
| படிகள் | விவரங்கள் |
|---|---|
| சட்டரீதியான இணக்கம் | Shopify Audiences சேவையானது தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள Shopify Plus திட்டத்திலுள்ள ஸ்டோர்களுக்குக் கிடைக்கிறது. மேலும், இச்சேவை கிடைக்கும் பிராந்தியத்தின் பொருந்தக்கூடிய தனியுரிமைச் சட்டங்களுக்கு ஸ்டோர்கள் இணங்க அனுமதிக்கும் வகையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. |
| புனைப்பெயரிடப்பட்ட தரவு மற்றும் ஹாஷ் செய்யப்பட்ட ஆடியன்ஸ்கள் | ஆடியன்ஸ் உருவாக்கப்படும்போது, விளம்பரத் தளத்திற்கு அனுப்பப்படும் முன்பு ஆடியன்ஸுக்குள் அடங்கியுள்ள வாடிக்கையாளர் தரவு ஹாஷ் செய்யப்படுகிறது. விளம்பரத் தளம் அதன் சொந்த ஹாஷ் செய்யப்பட்ட தகவலை, ஹாஷ் செய்யப்பட்ட ஆடியன்ஸுடன் ஒப்பிடுகிறது. இரு தரப்பினரின் ஹாஷ் செய்யப்பட்ட தகவலும் பொருந்தும்போது, உத்தேசிக்கப்பட்ட ஆடியன்ஸுக்கு விளம்பரத்தை வழங்க முடியும். |
| பங்கேற்பதற்கான விருப்பம் | Audiences-க்கு Audiences செயலியை நிறுவியிருக்க வேண்டியதும் உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள வாடிக்கையாளர் தனியுரிமை அமைப்புகளில் Shopify Network Intelligence என்பதை இயக்கியிருக்க வேண்டியதும் அவசியமாகும். நீங்கள் Shopify Network Intelligence-ஐ முடக்கினால், Audiences போன்ற மேம்படுத்தப்பட்ட சேவைகள் தேவைப்படும் செயலிகள் மற்றும் அம்சங்களுக்கான உங்கள் அணுகலும் முடக்கப்படும். |
| ரகசியப் பங்கேற்பு | உங்கள் பிசினஸின் ரகசியத் தகவலைப் பாதுகாக்க, வேறு எந்தெந்த ஸ்டோர்கள் Shopify Audiences ஐப் பயன்படுத்துகின்றன என்பதை எந்த ஸ்டோராலும் கண்டறிய முடியாது. எந்தவொரு ஸ்டோரும் மற்றொரு ஸ்டோரின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் தளத்திலிருந்து ஆடியன்ஸை உருவாக்குவது சாத்தியமில்லை. |
| தரவை அணுகுதல் | வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றி Shopify வைத்துள்ள சில தனிப்பட்ட தரவின் நகலைப் பெறுவதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர். இதற்காக, அவர்கள் இங்கே கோரலாம். |
| தரவை அழித்தல் | வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றி Shopify வைத்துள்ள சில தனிப்பட்ட தரவை அழிப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர். இதற்காக, அவர்கள் இங்கே கோரலாம். |
| தரவைத் தவிர்த்தல் | பல்வேறு வணிகர்களிடம் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் செயல்பாட்டின் அடிப்படையில் அவர்களுக்கு இலக்குவைக்கப்பட்ட விளம்பரங்களைக் காட்ட, அவர்களின் தரவு பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. இதற்காக, அவர்கள் இங்கே கோரலாம். |
| இலக்குவைக்கப்பட்ட விளம்பரங்களுக்கான தரவின் "விற்பனை" அல்லது "பகிர்வு" என்பதிலிருந்து விலகுவதற்கான உரிமை | நீங்கள் Shopify Network Intelligence ஐ இயக்கி Audiences சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் வாடிக்கையாளர்கள் இலக்குவைக்கப்பட்ட விளம்பரத்திற்காகத் தங்களின் தனிப்பட்ட தகவல் "விற்பனை" அல்லது "பகிர்வு" செய்யப்படுவதிலிருந்து விலகிக் கொள்ளும் வசதியைக் கொண்டிருக்க வேண்டும். அதிலிருந்து விலகிக் கொள்ளும் வாடிக்கையாளர்களின் தரவு Audiences-க்கு பயன்படுத்தப்படாது. உங்கள் Shopify நிர்வாகி அமைப்புகளிலிருந்து தரவுப் பகிர்விலிருந்து விலகுவதற்கான பக்கத்தை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி இங்கே மேலும் அறிக. |