தனியுரிமைச் சட்ட இணக்கம்

Shopify Audiences ஆனது தற்சமயம் அமெரிக்கா மற்றும் கனடாவில் Shopify Plus திட்டத்திலுள்ள ஸ்டோர்களுக்குக் கிடைக்கிறது, மேலும் California Consumer Privacy Act (CCPA) போன்ற பிராந்தியத்தின் பொருந்தக்கூடிய தனியுரிமைச் சட்டங்கள் மற்றும் விர்ஜினியா, கொலராடோ, ஓரிகான், கனெக்டிகட், டெக்சாஸ் மற்றும் உட்டா உள்ளிட்ட (ஆனால் அவை மட்டுமல்லாது) பல கூடுதல் மாகாணங்களில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய நுகர்வோர் தனியுரிமைச் சட்டங்களுக்கு நீங்கள் இணங்க அனுமதிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டது.

பொருந்தக்கூடிய அமெரிக்க மாகாணத் தனியுரிமைச் சட்டங்களின் கீழ் உங்கள் கடமைகளைப் புரிந்துகொள்ளவும் நிறைவேற்றவும் உதவ பின்வரும் தகவல் வழங்கப்படுகிறது. இந்தச் சட்டங்கள் அந்தந்த மாகாணங்களில் வசிப்பவர்களுக்குத் தங்களின் தனிப்பட்ட தகவல்களைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட உரிமைகளை வழங்குகின்றன. உங்களின் இணையதளம் அந்த மாகாணங்களில் வசிப்பவர்களுக்குக் கிடைத்தால் அல்லது அவர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பது, செயலாக்குவது, விற்பனை செய்வது அல்லது பகிர்வதில் நீங்கள் ஈடுபட்டிருந்தால், இந்தச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தக்கூடும். இது தகவலுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது, Shopify உங்களக்குச் சட்ட ஆலோசனை வழங்க முடியாது, எனவே உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், வழக்கறிஞரை அணுகவும்.

தனியுரிமைக் கொள்கை

பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்குத் தேவைப்படுவதன்படி, தனிப்பட்ட தகவல்களை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள், பகிர்கிறீர்கள், விற்கிறீர்கள் அல்லது வெளியிடுகிறீர்கள் என்பது உங்கள் தனியுரிமைக் கொள்கையில் இடம்பெற்றிருக்க வேண்டும். Audiences போன்ற செயலிகள் மற்றும் அம்சங்களை இயக்கும் மேம்படுத்தப்பட்ட சேவைகளைப் பயன்படுத்தும்போது, Shopify சேவை விதிமுறைகள் மற்றும் தரவுச் செயலாக்க இணைப்பு ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இங்கே மேலும் அறிக.

Shopify Audiences வாடிக்கையாளர் விலகல்

குறிப்பிட்ட சில அமெரிக்க மாகாணத் தனியுரிமைச் சட்டங்களின் கீழ், வெவ்வேறு வணிகர்களுடனான அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் இலக்குவைக்கப்பட்ட விளம்பரத்திற்காக அவர்களின் தனிப்பட்ட தகவல்களின் "விற்பனை" அல்லது "பகிர்வு" போன்றவற்றிலிருந்து வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரில் வழங்கப்பட்ட இணைப்பிலிருந்து விலக முடியும். Shopify Audiences மூலம், வாடிக்கையாளர் விலகல்களை நீங்களே கைமுறையாகவோ அல்லது தானியங்கியாகவோ நிர்வகிக்கலாம்.

வாடிக்கையாளர் தகவலைப் பகிர்வதைத் தானாகவே விலக்கு

உங்கள் Shopify நிர்வாகி அமைப்புகளிலிருந்து ஒரு தரவு விற்பனை விலகல் பக்கத்தை அமைக்கவும். ஒரு பார்வையாளர் தங்கள் தரவைப் பகிர்வதிலிருந்து விலக இந்தப் பக்கத்தைப் பயன்படுத்தும்போது, இந்த விலகல் Shopify Audiences உடன் ஒத்திசைக்கப்படும்.

வாடிக்கையாளர் தகவலைப் பகிர்வதைக் கைமுறையாக விலக்கு

நீங்கள் மூன்றாம் தரப்புத் தனியுரிமைச் செயலியைப் பயன்படுத்தினால் அல்லது ஒரு வாடிக்கையாளர் தங்களின் தனிப்பட்ட தகவல்களின் விற்பனை அல்லது பகிர்விலிருந்து விலக உங்களைத் தொடர்புகொண்டால், Shopify Audiences செயலிக்குள் அந்த வாடிக்கையாளரை நீங்கள் கைமுறையாக விலக்க வேண்டும். நீங்கள் கைமுறையாக விலக்கும் ஒரு வாடிக்கையாளர் முன்பு உருவாக்கப்பட்ட பார்வையாளர்களிலிருந்து அகற்றப்பட மாட்டார். இருப்பினும், எதிர்காலப் பார்வையாளர்களுக்காக உங்கள் ஸ்டோரால் அவர்களின் தரவு இனி பகிரப்படாது.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Audiences என்பதற்குச் செல்லவும்.

  2. வாடிக்கையாளர் விலகல் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வாடிக்கையாளர் மின்னஞ்சல் என்பதில், நீங்கள் விலக்க விரும்பும் வாடிக்கையாளரின் மின்னஞ்சலை உள்ளிடவும்.

  4. சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.