Shopify Audiences செயலியில் உள்ள பார்வையாளர்களின் வகைகள்

Shopify Audiences செயலியானது உங்கள் விளம்பரப் பிரச்சாரங்களை இலக்காகக் கொள்ள நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல தளங்கள் சார்ந்த குறிப்பிட்ட வகையான பார்வையாளர்களை உருவாக்கி ஏற்றுமதி செய்கிறது.

Meta பார்வையாளர்கள்

Meta இற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பார்வையாளர்களில் Facebook மற்றும் Instagram ஆகியவை அடங்கும்.

Meta உடன் பார்வையாளர்களைப் பயன்படுத்துவது பற்றிய கூடுதல் தகவலுக்கு, Meta Ads இற்கான ஆவணத்தைப் பார்க்கவும்.

Meta பார்வையாளர்களின் வகைகள்
பார்வையாளர் வகைவிளக்கம்
Retargeting Boostஉங்கள் பிராண்டில் ஈடுபாடுகொண்ட அதிக நபர்களைச் சென்றடைய, ஏற்கனவே உள்ள மறுஇலக்கு விளம்பரத் தொகுப்புகளில் இந்தப் பார்வையாளரைச் சேர்க்கவும். இவர்கள் உங்கள் ஸ்டோரிலிருந்து இன்னும் எதையும் வாங்கவில்லை. இந்தப் பார்வையாளர் கூடுதலாக வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களுடன் ஒவ்வொரு 1-7 நாட்களுக்கும் Meta இல் தானாகவே புதுப்பிக்கப்படும்.
வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களைத் தேடல்உங்கள் புதிய அல்லது ஏற்கனவே உள்ள வாய்ப்புள்ள வாடிக்கையாளர் விளம்பரத் தொகுப்புகளில் இந்தப் பார்வையாளரைச் சேர்க்கவும். இவர்கள் உங்கள் தயாரிப்புகளை அல்லது நிரப்புத் தயாரிப்புகளை வாங்கியவர்களைப் போன்றவர்கள். இந்தப் பார்வையாளர் கூடுதலாக வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களுடன் ஒவ்வொரு 7-14 நாட்களுக்கும் Meta இல் தானாகவே புதுப்பிக்கப்படும்.
Meta ஒத்த பார்வையாளர்கள்உங்கள் புதிய அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களைத் தேடும் விளம்பரத் தொகுப்புகளில் இந்தப் பார்வையாளர்களைச் சேர்க்கவும். இந்த ஒத்த பார்வையாளர்கள், Retargeting Boost பார்வையாளர்களை ஒரு மூலமாகப் பயன்படுத்துகின்றனர். இந்த நபர்களைப் போன்றவர்களை விளம்பரத் தளம் கண்டறிகிறது. இதில் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 3% Meta பயனர்கள் அடங்குவர். இந்தப் பார்வையாளர்களின் மதிப்பிடப்பட்ட அளவு 9.1 மில்லியனாகும். இந்தப் பார்வையாளர்களை Meta நிர்வகித்து, புதுப்பிக்கிறது.
தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் Plusஇந்தப் பார்வையாளர்களில், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள உங்களின் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் அடங்குவர். பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் இந்தப் பார்வையாளர்களை நீங்கள் பயன்படுத்தலாம்:
  • தற்போதுள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொள்வதைத் தவிர்க்கவும், செயல்திறனை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களைத் தேடும் பிரச்சாரங்களில் இருந்து தற்போதுள்ள வாடிக்கையாளர்களை விலக்கவும்.
  • தற்போதுள்ள வாடிக்கையாளர்களை மீண்டும் ஈடுபடுத்த, அவர்களை மறுசந்தைப்படுத்தல் பிரச்சாரங்களில் சேர்க்கவும்.
  • இலக்கிடலை மேம்படுத்த, உங்கள் Advantage+ பிரச்சாரங்களில் இந்தப் பார்வையாளர்களைப் பரிந்துரையாகச் சேர்க்கவும்.

Google பார்வையாளர்கள்

Google-க்காக ஏற்றுமதி செய்யப்பட்ட பார்வையாளர்களில் பின்வரும் Google சேவைகள் அடங்கும்:

  • Google தேடல்
  • Google Shopping
  • Gmail
  • YouTube
  • Google காட்சி நெட்வொர்க்

Google-உடன் பார்வையாளர்களைப் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவலுக்கு, Google Ads ஆவணங்களைப் பார்க்கவும்.

Google பார்வையாளர்களின் வகைகள்
பார்வையாளர் வகைவிளக்கம்
வாடிக்கையாளர்களைத் தேடும் அடிப்படைசரியான வாடிக்கையாளர்களை இலக்காகக் கொள்ள Google-க்கு உதவ, Performance Max பிரச்சாரங்களில் இந்தப் பார்வையாளர்களை ஒரு மூலமாகச் சேர்க்கவும். இந்த நபர்கள் உங்கள் தயாரிப்புகள் அல்லது நிரப்புத் தயாரிப்புகளை வாங்கியவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு 1-7 நாட்களுக்கும் கூடுதல் சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் இந்தப் பார்வையாளர்கள் Google-இல் தானாகவே புதுப்பிக்கப்படுவார்கள்.
தற்போதுள்ள வாடிக்கையாளர்கள்இந்தப் பார்வையாளர்களில், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள உங்களின் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் அடங்குவர். பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் இந்தப் பார்வையாளர்களை நீங்கள் பயன்படுத்தலாம்:
  • தற்போதுள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொள்வதைத் தவிர்க்கவும், செயல்திறனை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களைத் தேடும் பிரச்சாரங்களில் இருந்து தற்போதுள்ள வாடிக்கையாளர்களை விலக்கவும்.
  • தற்போதுள்ள வாடிக்கையாளர்களை மீண்டும் ஈடுபடுத்த, அவர்களை மறுசந்தைப்படுத்தல் பிரச்சாரங்களில் சேர்க்கவும்.
  • இலக்கிடலை மேம்படுத்த, உங்கள் Performance Max பிரச்சாரங்களில் இந்தப் பார்வையாளர்களை ஒரு சிக்னலாகச் சேர்க்கவும்.

Criteo பார்வையாளர்கள்

Criteo-உடன் பார்வையாளர்களைப் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவலுக்கு, Criteo Commerce Media Platform ஆவணங்களைப் பார்க்கவும்.

Criteo பார்வையாளர்களின் வகைகள்
பார்வையாளர் வகைவிளக்கம்
Retargeting Boostஉங்கள் பிராண்டுடன் ஈடுபாடு கொண்ட அதிகமான நபர்களைச் சென்றடைய, ஏற்கனவே உள்ள மறுஇலக்கிடல் விளம்பரத் தொகுப்புகளில் இந்தப் பார்வையாளர்களைச் சேர்க்கவும். இந்த நபர்கள் உங்கள் ஸ்டோரில் இருந்து இன்னும் எதையும் வாங்கவில்லை. ஒவ்வொரு 1-7 நாட்களுக்கும் கூடுதல் சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் இந்தப் பார்வையாளர்கள் Criteo-இல் தானாகவே புதுப்பிக்கப்படுவார்கள்.
வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களைத் தேடல்உங்கள் புதிய அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களைத் தேடும் விளம்பரத் தொகுப்புகளில் இந்தப் பார்வையாளர்களைச் சேர்க்கவும். இந்த நபர்கள் உங்கள் தயாரிப்புகள் அல்லது நிரப்புத் தயாரிப்புகளை வாங்கியவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு 7-14 நாட்களுக்கும் கூடுதல் சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் இந்தப் பார்வையாளர்கள் Criteo-இல் தானாகவே புதுப்பிக்கப்படுவார்கள்.
Criteo ஒத்த பார்வையாளர்கள்உங்கள் புதிய அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களைத் தேடும் விளம்பரத் தொகுப்புகளில் இந்தப் பார்வையாளர்களைச் சேர்க்கவும். Criteo விளம்பரங்களுக்கான Criteo ஒத்த பார்வையாளர்கள் என்பது, Retargeting Boost பார்வையாளர்களை ஒரு மூலமாகப் பயன்படுத்தி Criteo உருவாக்கும் ஒத்த பார்வையாளர்கள் பிரிவு ஆகும்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 1,00,000 வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய Criteo ஒத்த பார்வையாளர்கள் பிரிவை Shopify Audiences தானாகவே உருவாக்குகிறது. இந்தப் பார்வையாளர்களை Criteo நிர்வகித்து, புதுப்பிக்கிறது.
தற்போதுள்ள வாடிக்கையாளர்கள்இந்தப் பார்வையாளர்களில், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள உங்களின் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் அடங்குவர். பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் இந்தப் பார்வையாளர்களை நீங்கள் பயன்படுத்தலாம்:
  • தற்போதுள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொள்வதைத் தவிர்க்கவும், செயல்திறனை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களைத் தேடும் பிரச்சாரங்களில் இருந்து தற்போதுள்ள வாடிக்கையாளர்களை விலக்கவும்.
  • தற்போதுள்ள வாடிக்கையாளர்களை மீண்டும் ஈடுபடுத்த, அவர்களை மறுசந்தைப்படுத்தல் பிரச்சாரங்களில் சேர்க்கவும்.

Pinterest பார்வையாளர்கள்

Pinterest-உடன் பார்வையாளர்களைப் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவலுக்கு, Pinterest Ads ஆவணங்களைப் பார்க்கவும்.

Pinterest பார்வையாளர்களின் வகைகள்
பார்வையாளர் வகைவிளக்கம்
Retargeting Boostஉங்கள் பிராண்டுடன் ஈடுபாடு கொண்ட அதிகமான நபர்களைச் சென்றடைய, ஏற்கனவே உள்ள மறுஇலக்கிடல் விளம்பரக் குழுக்களில் இந்தப் பார்வையாளர்களைச் சேர்க்கவும். இந்த நபர்கள் உங்கள் ஸ்டோரில் இருந்து இன்னும் எதையும் வாங்கவில்லை. ஒவ்வொரு 1-7 நாட்களுக்கும் கூடுதல் சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் இந்தப் பார்வையாளர்கள் Pinterest-இல் தானாகவே புதுப்பிக்கப்படுவார்கள்.
வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களைத் தேடல்உங்கள் புதிய அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களைத் தேடும் விளம்பரக் குழுக்களில் இந்தப் பார்வையாளர்களைச் சேர்க்கவும். இந்த நபர்கள் உங்கள் தயாரிப்புகள் அல்லது நிரப்புத் தயாரிப்புகளை வாங்கியவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு 7-14 நாட்களுக்கும் கூடுதல் சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் இந்தப் பார்வையாளர்கள் Pinterest-இல் தானாகவே புதுப்பிக்கப்படுவார்கள்.
Pinterest ஒத்த பார்வையாளர்கள்உங்கள் புதிய அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களைத் தேடும் விளம்பரக் குழுக்களில் இந்தப் பார்வையாளர்களைச் சேர்க்கவும். Pinterest விளம்பரங்களுக்கான ஒத்த பார்வையாளர்கள் என்பது, Retargeting Boost பார்வையாளர்களை ஒரு மூலமாகப் பயன்படுத்தி Pinterest உருவாக்கும் செயல்பாடு ஒத்த பார்வையாளர்கள் (Actalike audience) ஆகும்.
அமெரிக்காவில் உள்ள 10% Pinterest பயனர்களை உள்ளடக்கிய Pinterest செயல்பாடு ஒத்த பார்வையாளர்களை Shopify Audiences தானாகவே உருவாக்குகிறது. இந்தப் பார்வையாளர்களை Pinterest நிர்வகித்து, புதுப்பிக்கிறது.
தற்போதுள்ள வாடிக்கையாளர்கள்இந்தப் பார்வையாளர்களில், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள உங்களின் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் அடங்குவர். பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் இந்தப் பார்வையாளர்களை நீங்கள் பயன்படுத்தலாம்:
  • தற்போதுள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொள்வதைத் தவிர்க்கவும், செயல்திறனை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களைத் தேடும் பிரச்சாரங்களில் இருந்து தற்போதுள்ள வாடிக்கையாளர்களை விலக்கவும்.
  • தற்போதுள்ள வாடிக்கையாளர்களை மீண்டும் ஈடுபடுத்த, அவர்களை மறுசந்தைப்படுத்தல் பிரச்சாரங்களில் சேர்க்கவும்.

Snapchat பார்வையாளர்கள்

Snapchat-உடன் பார்வையாளர்களைப் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவலுக்கு, Snapchat Ads ஆவணங்களைப் பார்க்கவும்.

Snapchat பார்வையாளர்களின் வகைகள்
பார்வையாளர் வகைவிளக்கம்
Retargeting Boostஉங்கள் பிராண்டுடன் ஈடுபாடு கொண்ட அதிகமான நபர்களைச் சென்றடைய, ஏற்கனவே உள்ள மறுஇலக்கிடல் விளம்பரத் தொகுப்புகளில் இந்தப் பார்வையாளர்களைச் சேர்க்கவும். இந்த நபர்கள் உங்கள் ஸ்டோரில் இருந்து இன்னும் எதையும் வாங்கவில்லை. ஒவ்வொரு 1-7 நாட்களுக்கும் கூடுதல் சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் இந்தப் பார்வையாளர்கள் Snapchat-இல் தானாகவே புதுப்பிக்கப்படுவார்கள்.
வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களைத் தேடல்உங்கள் புதிய அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களைத் தேடும் விளம்பரத் தொகுப்புகளில் இந்தப் பார்வையாளர்களைச் சேர்க்கவும். இந்த நபர்கள் உங்கள் தயாரிப்புகள் அல்லது நிரப்புத் தயாரிப்புகளை வாங்கியவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு 7-14 நாட்களுக்கும் கூடுதல் சாத்தியமான வாடிக்கையாளர்களுடன் இந்தப் பார்வையாளர்கள் Snapchat-இல் தானாகவே புதுப்பிக்கப்படுவார்கள்.
Snapchat ஒத்த பார்வையாளர்கள்உங்கள் புதிய அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களைத் தேடும் விளம்பரத் தொகுப்புகளில் இந்தப் பார்வையாளர்களைச் சேர்க்கவும். Snapchat விளம்பரங்களுக்கான ஒத்த பார்வையாளர்கள் என்பது, Retargeting Boost பார்வையாளர்களை ஒரு மூலமாகப் பயன்படுத்தி Snapchat உருவாக்கும் ஒத்திருக்கும் ஒத்த பார்வையாளர்கள் (Similarity Lookalike audience) ஆகும்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள வாடிக்கையாளர்களை உள்ளடக்கிய Snapchat ஒத்திருக்கும் ஒத்த பார்வையாளர்களை Shopify Audiences தானாகவே உருவாக்குகிறது. இந்தப் பார்வையாளர்களை Snapchat நிர்வகித்து, புதுப்பிக்கிறது.
தற்போதுள்ள வாடிக்கையாளர்கள்இந்தப் பார்வையாளர்களில், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள உங்களின் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் அடங்குவர். பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் இந்தப் பார்வையாளர்களை நீங்கள் பயன்படுத்தலாம்:
  • தற்போதுள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொள்வதைத் தவிர்க்கவும், செயல்திறனை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களைத் தேடும் பிரச்சாரங்களில் இருந்து தற்போதுள்ள வாடிக்கையாளர்களை விலக்கவும்.
  • தற்போதுள்ள வாடிக்கையாளர்களை மீண்டும் ஈடுபடுத்த, அவர்களை மறுசந்தைப்படுத்தல் பிரச்சாரங்களில் சேர்க்கவும்.

TikTok பார்வையாளர்கள்

TikTok-உடன் பார்வையாளர்களைப் பயன்படுத்துவது குறித்த கூடுதல் தகவலுக்கு, TikTok Ads ஆவணங்களைப் பார்க்கவும்.

TikTok பார்வையாளர்களின் வகைகள்
பார்வையாளர் வகைவிளக்கம்
TikTok ஒத்த பார்வையாளர்கள்உங்கள் புதிய அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களைத் தேடும் விளம்பரக் குழுக்களில் இந்தப் பார்வையாளர்களைச் சேர்க்கவும். TikTok விளம்பரங்களுக்கான ஒத்த பார்வையாளர்கள் என்பது, Shopify Audiences-இன் ஒத்த பார்வையாளர்களின் அடிப்படையை (Lookalike Seed audience) மூலமாகப் பயன்படுத்தி TikTok உருவாக்கும் குறுகிய ஒத்த பார்வையாளர்கள் (Narrow Lookalike audience) ஆகும்.
அமெரிக்காவில் உள்ள TikTok பயனர்களின் குறுகிய ஒத்த பார்வையாளர்கள் அளவை உள்ளடக்கிய TikTok ஒத்த பார்வையாளர்களை Shopify Audiences தானாகவே உருவாக்குகிறது. இந்தப் பார்வையாளர்களை TikTok நிர்வகித்து, புதுப்பிக்கிறது.